லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
02-12-2025

ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 

இருபதாம் நூற்றாண்டில், ஜெர்மன் வேதாகம அறிஞர் ருடால்ஃப் புல்ட்மேன் என்பவர், வேதாகமத்தைப் பற்றி ஒரு பெரிய விமர்சனத்தை முன்வைத்தார், வேதம் அநேக புராணக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது, அது நம் காலத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அவற்றை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
27-11-2025

பரதேசியான கிறிஸ்தவ வாழ்க்கை 

அரை நூற்றாண்டுக்கு முன்பு, நான் பள்ளி கூடுகையில், ரால்ப்  வாஹான் வில்லியம்ஸ் (Ralph Vaughan Williams) இசையமைத்த இந்தப் பாடலை பாடினேன்.
25-11-2025

வேதத்தை யார் எழுதியது? 

யார் வேதத்தை எழுதியது? தேவன்தான் எழுதினார். இதை தெளிவாக கூறவேண்டுமென்றால், தெய்வீக ஆசிரியராகிய தேவன் பல்வேறு மனித ஆசிரியர்களைக் கொண்டு அவர் எதை எழுத விரும்பினாரோ அதை துல்லியமாக எழுத அவர்களைப் பயன்படுத்தினார்.
20-11-2025

கால்வினிசம் என்றால் என்ன?

கால்வினிசம் என்பது ஜான் கால்வினுக்கு பிடிக்காத மற்றும் பெரும்பாலும் தவறான புரிதலை ஏற்படுத்தும் ஓர் சொல்லாகும். கர்த்தருடைய பந்தியைப்ற்றிய சீர்திருத்த கோட்பாட்டிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்கு இந்த பதம் ஓர் அவமதிக்கும் வார்த்தையாக லூத்தரன்களிடமிருந்து வந்தது.
18-11-2025

ஆவியின் கனி என்றால் என்ன? 

ஆவியின் கனி என்பது அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 5:22–23-ல் சொல்லிய ஒன்பது நற்குணங்களின் பட்டியலாகும். மனிதனிடத்தில் காணப்படக்கூடிய கோபம், சண்டை, பொறாமை போன்ற  மோசமான மற்றும் பயங்கரமான தோற்றத்தை வெளிப்படுத்தும்  பாவ செய்கைகளின் ("மாம்சத்தின் கிரியைகள்") ஒரு நீண்ட பட்டியலுக்கு எதிராக பதிலளிக்கும் விதமாக  இதனை எழுதுகிறார் (கலா. 5:19–21). மாம்சத்தின் கிரியைகளுக்கு நேர்மாறாக, "ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்."
13-11-2025

சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்

தனது ஜெபவாழ்வில் முழுமையாய் திருப்தியடைந்த ஒரு கிறிஸ்தவனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்: நீங்கள் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் உங்களுடைய வார்த்தைகள் உங்களின் மேற்கூறையை அடைவதற்கு முன்பாகவே சிதறி போவதை போல உணர்கிறீர்கள், தேவன் எனது வார்த்தைகளை கேட்கிறாரா அல்லது நான் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று நீங்கள் யோசிக்க தொடங்குகிறீர்கள்.
11-11-2025

மகிமையை நாடுதல்

உலக மகிமையை நாடுவது (Quest for Glory) நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.  உலக மகிமையானது  நம்முடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோன்றும்போது, அதற்காக நாம் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படுவோம், அல்லது எவ்வளவு தூரம் ஓடுவோம்!
06-11-2025

பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்

1945 ம் ஆண்டு கொளுத்தும் வெயிலில் சிகாகோ தெருக்களில் ஸ்டிக்பால் என்ற விளையாட்டை மிக மும்முரமாக நான் விளையாடிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது.
04-11-2025

கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்

இயேசுவின் பிறப்பைக் குறித்து சிந்திக்க சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி பார்ப்பது மட்டுமல்ல, நம்முடைய முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாள் இருந்த காலத்திற்கே முழுவதுமாகப் பின்னோக்கிச் நாம் செல்ல வேண்டும்.