
எனது வேலை ஸ்தலத்தில் நான் எவ்வாறு கிறிஸ்தவனாக இருப்பது?
02-10-2025
மன்னிப்பைப் பற்றி நமது பிள்ளைகளுக்கு கற்பித்தல்
09-10-2025உங்கள் சபையிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது எப்படி?
சைமொனெட்டா கார்
How to Support the Caregivers in Your Church – Simonetta Carr
பல ஆண்டுகளுக்கு முன்பு, சில வாலிபர்கள் கூட்டமாக உற்சாகத்துடன், வலிமைமிக்கவர்களாக எங்கள் திருச்சபைக்கு வந்தனர். எங்களுடைய “ஊழியங்கள்” தேவையுள்ளவர்களுக்கு எப்படி ஊழியத்தில் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது என்பதை பற்றிய அதிகாரப்பூர்வமான வரைமுறைகள் செய்யப்படாததால், அந்த வாலிபர்கள் அதை செய்ய அறியாதிருந்தனர். ஆராதனைக்கு முன்பாக எங்களுடைய போதகர் இதை குறித்து கீழ்க்கண்டவாறு பேசினார்: “உங்களில் ஒருவர் யாராவது தேவையுள்ளவர்களுக்கு
ஊழியம் செய்ய விரும்பினால் , உங்களுக்கு ஒரு முறையான கூட்டமைப்போ அல்லது அதற்கான தலைப்போ தேவையில்லை. எங்களிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வயதானவர்களையும், வீட்டிலேயே அடைந்து கிடப்பவர்களையும், அல்லது உடல் அல்லது மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கலாம்” என்று அறிவித்தார்.
சில நாட்களுக்குள், ஒரு வாலிபன் கடுமையான மனநலப் பிரச்சனையுடன் வாழ்ந்து வந்த என் மகனைச் சந்திக்க வந்தான். பின்னர் இன்னொரு இளைஞனும் அவனுடன் சேர்ந்துகொண்டான். அந்த மூவரும் நண்பர்களானார்கள். என் ஆத்துமாவுக்கு ஒரு அருமருந்தாக அது இருந்தது. என் மகனின் நிலை என் உணர்ச்சிகளை வெகுவாக பாதித்ததோடு மட்டுமல்லாமல், சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளாதபடிக்கு என்னை தடுத்தது. மற்றவர்களோடு உரையாடுவதில் அவனுக்கு காணப்படும் தயக்கத்தை பெரும்பாலானோர், அவன் தனியாக இருப்பதையே விரும்புகிறான் என்று புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அவ்விதமான சிந்தனைப்போக்கு, உண்மைக்கு வெகு தொலைவில் காணப்படுகிறது.
அப்போது, இருபது வயது மகனுக்கு நண்பர்களை தேடும்படி, அளவுக்கு அதிகமான பாதுகாப்பை கொடுக்கும் ஒரு தாயைப்போல நான் கொண்டிருந்த சங்கடமான உணர்வுகளை நான் நினைவு கூறுகிறேன். என்னுடைய போதகரின் இந்த அறிவிப்பு என் பிரச்சனையைத் தீர்த்து வைத்தது.
சபைகளில் ஆதரவைத் தேடும் பல பராமரிப்பாளர்களின் (caregiveers) கதைகளில் நானும் ஒருவர். அவர்களின் தேவைகள் அவர்களின் சூழ்நிலைகளைப் போலவே வேறுபடுகின்றன. ஆனால் அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஊக்கப்படுத்துவதையும், உண்மையான புரிந்து கொள்ளுதலையும் விரும்புகிறார்கள்.
தொடர்ச்சியாக ஊக்கப்படுத்துதல்
பெரும்பாலான சபைகள் உடனடியான தேவைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கின்றன. அவர்கள் நோய்வாய்ப்பட்டு உபத்திரவபடுகிறவர்களுக்கும், வேலையை அல்லது வீட்டை இழந்தவர்களுக்கும்,அல்லது அன்பான ஒரு நபரின் இறப்பிற்கு அடக்கம் செய்ய வேண்டிய பொருள் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளனர். ஆனால் ஒருவரை பராமரிப்பது என்பது பெரும்பாலும் ஒரு நீண்ட கால அழைப்பு மட்டுமல்ல, சபையின் ஆரம்பகால உற்சாகமான உதவியின் அவசரமான தேவைகளுக்கு பிறகும் தொடர்ந்து செய்யவேண்டிய சவால்கள் நிறைந்த ஒரு பணியாகும்.
போதகர்கள் அவர்களுடைய ஆதரவை தேவையுள்ளவர்களுக்கு தொடர்ந்து கொடுப்பதற்கு அநேக காரியங்களை செய்ய முடியும். பராமரிப்பாளர்களையும், அவர்களுக்கு அன்பானவர்களையும் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொது ஜெபங்களில் நினைவுகூறுவதுடன், வருகை தருவது, கடிதங்கள் அனுப்புவது, அழைத்துப் பேசுவது மற்றும் வெளிப்படையாக தேவைப்படும் உதவிகளை செய்வது போன்றவற்றை சபையாரும் தொடர்ந்து செய்ய அவர்களை ஊக்குவிக்கலாம்.
என்னுடைய போதகர், ” நாம் நம்முடைய சொந்த மகிழ்ச்சி என்கிற வட்டத்திலிருந்து வெளியேறும்படி அன்பு நம்மை அழைக்கிறது” என்பதை அடிக்கடி நினைப்பூட்டுவார். ” உங்களுக்கு அசௌகரியங்கள் உண்டு” என்றும் அவர் கூறினார். மேலும் அவருடைய வாழ்க்கையும் அவருடைய வார்த்தைகளை ஆதரித்தது. ஒரு தேவை இருந்த இடத்தில், அவர் அங்கு இருந்தார் – ஒருபோதும் அவர் வெளிப்படையாகச் சோர்வடையவில்லை – தேவைப்படுபவர்களைச் சந்திப்பது அவருடைய நாளின் சிறப்பம்சமாக இருந்தது.
“நீண்ட காலப் பராமரிப்பு தேவைப்படும் சூழ்நிலையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு, அவர்களுடைய வாழ்க்கை பயணத்தின் தொடக்கத்தில் மட்டும் அவர்களை ஆறுதல்படுத்தினால் போதாது” என்று வெள்ளை அணுக்கள் நோய்க்கு (leukaemia) எதிராகப் பல மாதங்களாக போராடிய தனது ஒன்பது வயது மகன் குறித்து ஏமி என்கிற தாய் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும், “நவீனகால-மராத்தான் ஓட்டப்பந்தய வீரனைப் போலவே, போகும் வழியில் தண்ணீர் மற்றும் ஆற்றலைத் தரும் பானங்களை(Gatorade) கொடுக்கும் இடைவேளை எங்களுக்கு தேவை. எங்களைப் போன்றவர்களை
உற்சாகப்படுத்தவும், நீங்கள் எங்கள் பக்கம் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு நினைவூட்டவும் வழியில் தாறுமாறான இடங்களில் கைத்தாளங்களுடன் நிற்கும் மக்கள் எங்களுக்கு தேவை. இது ஒரு நீண்ட, சோர்வான பயணம், அதனால் எங்களை மறந்துவிடாதீர்கள்” என்றார்.
மறப்பது எளிது, ஏனென்றால் எல்லாரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டு இருக்கிறோம். மற்றும் பராமரிப்பாளர்கள் தங்களுடைய போராட்டங்களையும், அனுதின பராமரிப்பின் செயல்களையும் வெளிப்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்யவோ அல்லது தங்களோடு அன்பாக இருக்கிறவர்களை புண்படுத்தவோ விரும்பாததால் அவைகளை தங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். பராமரிப்பாளர்களையும், அவர்களுடைய பராமரிப்பில் இருக்கும் அன்புக்குரியவர்களையும் நினைவில் வைத்துக்கொள்வதும், சபையில் அவர்களோடு உரையாடுவதும், அவர்கள் ஆராதனை மற்றும் திருச்சபை ஐக்கியத்தில் இல்லாதபோது அவர்களை வீடு தேடிச்சென்று பார்ப்பதும், விசாரிப்பதும் நமது சபைகளிலுள்ள ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும்.
உண்மையான புரிதல்
நாம் நம்முடைய சௌகரியமான சூழலில் இருந்து வெளியேறி நமது சபைகளிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவ முடிந்தாலும், நம்முடைய பரபரப்பான வாழ்க்கை சூழல் பெரும்பாலும் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதைத் தடுக்கின்றன. பல ஆண்டுகளாக மனநலக்குறைவு மற்றும் புற்று நோயால் போராடி வரும் தன்னுடைய கணவனை பராமரித்த வந்த ட்ரினா, சபைமக்கள் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு மட்டும் தங்கள் ஜெபங்களை ஏறெடுக்க ஒரு எல்லையை வைத்து கொண்டதினால் ஏற்பட்ட வருத்தமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதேசமயம் அவளும், அவளுடைய கணவரும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் தீவிரமான மனநல குறைபாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளியாகவே கிருபையுள்ள தேவன் இதை (புற்று நோயை) அனுமதித்திருக்கிறார் என்று நினைத்தனர். அவரும் அவருடைய குழந்தைகளும் அங்கிருக்கும்போது அவர்களுக்காக யாரும் ஜெபிக்கவில்லை.
“எங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவைப்பட்டது, மேலும் வலியை நீக்கக்கூடிய சூழலும், வாழ்க்கையின் இறுதி காலத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளும் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்தும் எங்களுக்குக் கவலைகள் இருந்தன” என்று அவள் கூறினாள். “சபைமக்கள் ஜெபக் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும். மேலும் நோயாளி மற்றும் பராமரிப்பாளர் இருவரும் கேட்கும்படி அவர்களுடைய விஷயங்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஆதரவுக்காக அவர்கள் எதிர்பார்க்கும் மக்களால் அவர்கள் கவனித்து கேட்கப்படுகிறார்கள் என்பதை உணரும்படி செய்ய வேண்டும். மேலும் அவர்களின் ஜெபங்கள் ஜெபிப்பவர்களின் விருப்பங்களுக்குட்பட்டு அல்ல, மாறாக உண்மையான தேவையை பூர்த்தி செய்கிறதாய் அமைய வேண்டும் “.
கடுமையான மனநலப் பிரச்சனை உள்ளவர்களின் பல பெற்றோர்கள், தங்களுக்கும் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் நபருக்கும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், நம்பிக்கை மற்றும் அன்பு போன்ற ஊக்கம் தேவை என்று என்னிடம் கூறியுள்ளனர். “பராமரிப்பாளர்கள், தங்கள் அன்பானவர்களின் சரீர பராமரிப்புக்கு மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையில் ஒரு தொடர்ச்சியான நோக்கத்தைக் நிறைவேற்றும்படி அவர்களுக்கு உதவும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்” என்று ட்ரினா என்னிடம் கூறினார். என்னுடைய கணவன் இன்னமும் தன்னுடைய குடும்பத்தை பராமரித்து ஆசீர்வதிக்ககூடிய பிம்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று அவரிடம் நினைவு படுத்த விரும்புகிறேன்”. நமக்கு அன்பானவர்கள் எப்படி நமக்கு முன்னாக சென்று நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு நன்றி சொல்லுவது அவசியமாகும். என்னுடைய கணவரின் பாடுகளில் எனக்கும், அதை நெருக்கமாகக் கண்டவர்களுக்கும் என்ன பாடத்தை கற்றுத் தருகிறது என்பதை நான் மீண்டும் மீண்டுமாக நினைவு கூறுகிறேன்.” பாராட்டுக்குரிய இந்த வேலையில் சபையும்அதற்கு உதவ முடியும்.
அன்பு, புரிந்து கொள்ளுதல் மற்றும் ஊக்கமளித்தல் போன்றவற்றை செய்வதற்கு அதிகமான நேரத்தை நாம் அர்ப்பணிக்க வேண்டும். ஆனால் உடனடியான தீர்வைதேடி தனக்கடுத்த மற்ற காரியங்களில் தலையிட்டு கொள்ளும் இப்பொழுது இருக்கிற சமுதாயத்தில் இது அரிதானதாகவே உள்ளது. நாம் தேவையுள்ள ஒருவரை சந்திக்கும் போது, உடனடியாக நாம் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அல்லது குறைந்தபட்சம் பிரயோஜனமுள்ள ஆலோசனைகளை வழங்க ஆவல் கொள்கிறோம். ஆயினும், ஒரு குறிப்பிட்ட திசையில், தங்களுடைய குழப்பமான சூழ்நிலையில், ஞானமான மற்றும் புத்தியுள்ள ஆலோசனையை தேடி அலையும் அவர்களுக்கு நாம் அவசரமாக செய்யக்கூடிய காரியங்கள் மிக மோசமான சூழ்நிலைக்கு இட்டு செல்லலாம்.
நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால், அவர்களோடு இருப்பதற்கும், கேட்பதற்கும் மற்றும் கவனிப்பதற்கும் ஒரு உண்மையுள்ள நண்பர்களாக அவர்களோடு கூட இருப்பதுதான். பராமரிப்பாளர்களோடும் மற்றும் அவர்களுடைய அன்புக்குரியவர்கள் வாழ்க்கையில் ஈடுபடுவது ஒரு தியாகம் போலத் தோன்றலாம். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது மிகவும் மதிப்புக்குரியதாகவே தோன்றும். “சரீரம் ஒரே அவையவமாக இல்லாமல் அநேக அவயவங்களாக இருக்கிறது” (1 கொரி. 12:14), மேலும் அவயவங்கள் ஒவ்வொன்றும் சபையின் கட்டமைப்பிற்குத் தேவைப்படுகிறது என்று உறுதியாக நாம் நம்புவோமானால், அதற்கேற்றார் போல் நாம் நடக்கக் கடவோம். மேலும் அவ்விதமாக நாம் செயல்படுவோமானால் – அதற்கேற்ற முதிர்ச்சி, அன்பு மற்றும் ஞானத்தில் வளர்வோமாக. ஆமென்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


