
உங்கள் சபையிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது எப்படி?
07-10-2025
அடங்காத பிள்ளையை நான் எப்படி கையாள்வது?
14-10-2025மன்னிப்பைப் பற்றி நமது பிள்ளைகளுக்கு கற்பித்தல்
(Teaching Our Children about forgiveness)
மைக்கேல் ஓஸ்டீன்
பெற்றோர்கள் உவமைகளாக உள்ளனர். நமது வாழ்க்கையின் கதைகள் நமது குழந்தைகளுக்கு அநேக பாடங்களை கற்றுத் தருகிறது. நமது வாழ்வு கற்பிக்கின்ற நாம் நம்புகின்ற மாபெரும் சுவிசேஷ கதை என்னவென்றால் அது மன்னிப்பைப் பற்றியது. தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் மன்னிக்கிறார், மற்றும் தேவனுடைய மன்னிப்பின் உயிருள்ள சாட்சி நம்மில் உள்ள மன்னிக்கும் இருதயம், அது வெறுமனே மன்னிப்பைப் பெறுவது மாத்திரமல்ல அதைக் கொடுக்கவும் செய்யும். நாம் நமது பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தில் மன்னிப்பைப் பற்றி கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும், ஆனாலும் நமது வாழ்வின் மூலம் அவர்களுக்கு நாம் மன்னிப்பின் உவமைகளாக மாறவேண்டும்.
மன்னிப்பைப் பற்றிய திடுக்கிடும் உவமைகளில் ஒரு உவமை எதிர்மறையாக சொல்லப்பட்டுள்ளது: மன்னியாத ஊழியக்காரனின் உவமை. இந்த உவமையில் அதிகமாக கடன்பட்டிருக்கும் ஓர் ஊழியக்காரன் அதிகமாக மன்னிக்கப்பட்டுள்ளான், ஆனால் அவன் தான் மன்னிக்கப்பட்டதின் அளவில் ஓர் சிறிய அளவை இன்னொருவரிடம் மன்னியாமல் கேட்கிறான் (மத்தேயு 18:21-35). இந்த உவமையானது, மன்னிக்கப்பட்ட ஒருவன் மன்னியாமல் இருக்கிற ஓர் பொருத்தமற்ற காரியத்தை வலியுறுத்துகிறது, ஆனால் உண்மை என்னவெனில், இயேசு இங்கு இவ்வித முரண்பாட்டை வலியுறுத்தவதின் காரணம் நாம் மன்னிக்கப்படுவதின் மூலம் பிறரை மன்னிக்கிறவர்களாக மாறுகிறோம் என்பதை நமக்கு கற்பிக்கிறார். எனவேதான் மன்னிப்பை பற்றி நமது குழந்தைகளுக்கு கற்பிக்கையில், நாம் கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல் மூலமாக மன்னிக்கப்பட்டுள்ளோம் என்ற நற்செய்தியோடு நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்கிறோம்.
அப்போஸ்தல விசுவாச பிரமாணத்தை விளக்கும் ஹைடல்பெர்க் கேள்விபதில், சுவிசேஷத்தில் மன்னிப்பின் தன்மையை நாம் புரிந்துக்கொள்வதற்கு உதவுகிறது:
கேள்வி: பாவமன்னிப்பை பற்றி நீங்கள் என்ன விசுவாசிக்கிறார்கள்?
அ. தேவன், கிறிஸ்துவின் பரிகார பலியின் மூலமாய் எனது எந்த பாவங்களையும் அல்லது எனது வாழ்நாள் முழுவதும் நான் போராடவேண்டிய எனது பாவ இயல்பையும் இனி நினைவுகூறமாட்டார் என்பதை விசுவாசிக்கிறேன்.
மாறாக, நான் நியாயத்தீர்ப்புக்குட்படாதபடிக்கு அவரது கிருபையினால் தேவன் கிறிஸ்துவின் நீதியை எனக்கு கொடுத்திருக்கிறார். (கே/ப 56).
இங்கு சொல்லப்பட்டதைப்போல, நமது மன்னிப்பானது விலையேறப்பெற்றதும், கிறிஸ்துவுககுள் என்றென்றும் பாதுகாக்கப்பட்டதுமாகவும் உள்ளது. எனவே நமது பிள்ளைகளுக்கான அடுத்த பாடம் என்னவென்றால், சுவிசேஷத்தில் இதுவே நமது மன்னிப்பாக இருக்குமென்றால், எப்பொழுது பிறரை மன்னிக்க தருணம் ஏற்படுகிறதோ அங்கேயும் இது இவ்வாறாகவே இருக்க வேண்டும்.
பிறரை மன்னிப்பது அவர்களுடையது போலவே இருக்கவேண்டும் என்பதை நம் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம்:
- கிறிஸ்துவின் பரிகார பலியின் மூலமாக தேவன் நம்மை மன்னித்ததை போல, கிறிஸ்துவுக்காக அவரை மேன்மைப்படுத்தும் விதமாக நமது மன்னிப்பும் இருக்க வேண்டும்.
- நமது மன்னிப்பு பிறரின் தப்பிதங்களை மறப்பதாக இருக்க வேண்டும், தேவன் எவ்வாறு நமது பாவங்களை நினையாதிருக்கிறாரோ அதேபோல் நாமும் கடந்த கால பாவங்களை நினைக்கக்கூடாது.
- நமது மன்னிப்பு தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும், “நமது வாழ்நாள் முழுவதும் போராடுகின்ற பாவ இயல்பை எவ்வாறு தேவன் மன்னித்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல்.”
- நமது மன்னிப்பு தயவு நிறைந்ததாக இருக்க வேண்டும், நாம் நமது கடமைகளை விட்டுவிட்டாலும் தேவன் அவரது கிருபையால் நமக்கு கிறிஸ்துவின் நீதியை வழங்கியிருக்கிறார்.
- நமது மன்னிப்பு மற்றவர்களை நம்மைப் பற்றி பயத்திலிருந்து விடுவிக்க வேண்டும், ஏனெனில் நாம் கடவுளுக்கு முன்பாக மீண்டும் “நியாத்தீர்ப்புக்கு ஆளாகாமல் “ இருப்பதற்கு நாம் கடந்தகால பாவங்களை அவர்கள் மீது சுமத்தக்கூடாது.
ஒரு பெற்றோராக இது நமக்கு ஓர் பயங்கரமான காரியம்: நம் குழந்தைகள் நற்செய்தியையும் மன்னிப்பு என்றால் என்ன என்பதையும் அறிந்தவுடன், நாம் மன்னிக்காத ஊழியர்களைப் போல செயல்படும்போது நம்மில் உள்ள முரண்பாடுகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை பெற்றோர்களால் இதில் நாம் விழுந்துபோவோமென்றால், இது கடந்த காலத்தை நமது பிள்ளைகளுக்கு ஞாபகப்படுத்தும். அவர்களை குற்றப்படுத்தி, நமது விரக்தியின் குரலை உயர்த்தி அல்லது அவர்களின் கீழ்ப்படிதலை கையாளுவதற்கு, ஒரு வேளை இவ்வாறு நாம் சொல்லலாம், “நீங்கள் எப்போதும் இதையே செய்துக் கொண்டிருக்கிறீர்கள்..” என்று. எப்பொழுது நாம் இவ்வாறு பேசுகிறோமோ அப்பொழுது நாம் அந்த “மன்னிக்காத ஊழியக்காரனின்” உவமைகளாக மாறுகிறோம்.
நம் குழந்தைகளிடம் மன்னிப்பதில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் நமது குடும்பங்களில் இத்தகைய ஓர் பரந்த சூழல் உண்டானபிறகு,இனி ஒருவருக்கொருவர் விரோதமாக பாவம் செய்யக்கூடாது என்ற ஒப்புரவாகுதலை கொண்டுவரும் அமைதியை விடாமுயற்சியுடன் நாம் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நாம் மன்னிப்பின் நேர்மறையான உவமைகளாக இருக்கவேண்டும். மன்னிக்கும் ஊழியர்களின் உவமைகளாக இருக்கும் பெற்றோர்கள் மன்னிப்பைப் பற்றி வெளிப்படையாக இருப்பார்கள், மேலும் நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்கும்போது நம் குழந்தைகள் மன்னிப்பைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளிடம் தவறாமல் மன்னிப்பு கேளுங்கள். உங்களைப் போலவே, பாவத்திற்கும் அநீதிக்கும் எதிர்வினையாற்றும் இதயங்கள் அவர்களுக்கு உண்டு. ஒப்புக்கொள்ளப்படாத பாவங்கள் உங்களிடையே வர அனுமதிக்காதீர்கள், உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு எதிராக பாவம் செய்யும்போது, மன்னிப்பு கேட்கவும் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இது அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருப்பதை உள்ளடக்கியுள்ளது, இதனால் அவர்கள் தங்கள் பாவங்களைப் பற்றி பேச வசதியாக உணருகிறார்கள். அவர்கள் இளமையாக இருக்கும்போது, அவர்களின் பாவத்தைக் கூறி, “மன்னிக்கவும்” என்று சொல்வதை விட மன்னிப்பு கேட்பது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். “நீ என்னை மன்னிப்பாயா?” என்று கேட்க நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, பாவம் மற்றும் சமரசம் பற்றி மிகவும் வலுவான ஒன்று தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் பிள்ளைகள் யாரையாவது மன்னிக்க சிரமப்படும்போது, அதைப் பற்றி அவர்களுடன் சேர்ந்து ஜெபியுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தாலும், யாரையும் கோபப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், அவர்கள் மன்னிக்கும் இதயங்களை வளர்த்துக் கொள்ள அவர்களுடன் தினமும் ஜெபியுங்கள். அவர்களின் இதயங்களுடன் மறைமுகமாகத் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழிகளில் ஜெபம் ஒன்றாகும். உங்கள் நேரடி அறிவுறுத்தலைக் கேட்க அவர்கள் விரும்பாதபோது இது மிகவும் உதவியாக இருக்கும். ஆவியால் அவர்களின் இதயங்கள் மென்மையாக்கப்பட ஜெபத்தை ஒரு மறைமுக வழியாகப் பயன்படுத்துங்கள்.
குடும்பம் என்பது அற்புதமான ஒன்று. அது சில சமயங்களில் நிலையற்றதாகவும் இருக்கலாம். ஒரு குடும்பமாக ஒன்றாக ஜெபிக்கும் வழக்கமான பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இது உணவு நேரத்தில் ஜெபிப்பதைப் போல எளிதாக இருக்கலாம். இந்த வழக்கமான பழக்கம், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே இருந்தாலும், தவிர்க்க முடியாத பதட்டங்கள் ஏற்படும் போதெல்லாம் கர்த்தருக்கு முன்பாகச் செல்ல நமக்கு வாய்ப்பளிக்கிறது. எப்பொழுது சண்டை வெடிக்கிறதோ, அப்பொழுது இயேசு நம்மை சமாதனம் செய்ய அழைக்கிறார். சச்சரவுகளை தெளிவுபடுத்துவதற்கான ஒரு வழி ஜெபத்தில் உதவி கேட்பதுதான். உணவு நேரத்தில் நன்றி செலுத்தும் ஜெபத்தின் சாதாரணத்தன்மையைப் பற்றிய ஏதோ ஒன்று அத்தகைய கோரிக்கைகளை ஆச்சரியப்படுத்துகிறது, ஆனால், மிக முக்கியமாக, அது சாதாரணமானதுதான்.
நம் குழந்தைகளிடம் மன்னிப்பதில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் நமது குடும்பங்களில் இத்தகைய ஓர் பரந்த சூழல் உண்டானபிறகு, இனி ஒருவருக்கொருவர் விரோதமாக பாவம் செய்யக்கூடாது என்ற ஒப்புரவாகுதலை கொண்டுவரும் அமைதியை விடாமுயற்சியுடன் நாம் பாதுகாக்க வேண்டும். எனவே இவ்வாறு செய்யும்போது நாம் மன்னிக்கிறோம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


