Teaching Our Children about Forgiveness
மன்னிப்பைப் பற்றி நமது பிள்ளைகளுக்கு கற்பித்தல்
09-10-2025
The Christian Life
கிறிஸ்தவ வாழ்வு
16-10-2025
Teaching Our Children about Forgiveness
மன்னிப்பைப் பற்றி நமது பிள்ளைகளுக்கு கற்பித்தல்
09-10-2025
The Christian Life
கிறிஸ்தவ வாழ்வு
16-10-2025

அடங்காத பிள்ளையை நான் எப்படி கையாள்வது?

Restoring-Broken-Relationships-with-Teenage-and-Adult-Children

மார்கி டிரிப்

How Should I Engage My Rebellious Child? – Margy Tripp

இளம் வயதினர் அல்லது  வளர்ந்த வாலிபர்களுடனான உறவுகளில் பிளவு ஏற்படுவதினால் நம் வாழ்வில் உண்டாகும் அனுபவம் வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய  தாக்கத்தை ஏற்படுத்துகிறதாயிருக்கிறது.  நமது மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வுகளும் கூட பல்ச இழப்புகளை  நினைவுபடுத்துகிறவையாக அமைந்து விடுகின்றன. இது பெற்றோர்களின் இதயத்தை உடைத்து, குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான முறிந்து போன உறவுக்கு அனேக விளக்கங்கள் கூறப்படுகின்றன. 

அனைத்து முறிந்த உறவுகளுக்கும் ஒரு பொதுவான காரணம் உள்ளது: அதாவது நாம் பாவம் செய்கிறோம் மற்றும் நமக்கும் அநேகர் பாவம் செய்கிறார்கள். நமது மிகச் சிறந்த பெற்றோர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, பெற்றோர்கள் இந்த முறிந்து போன உறவை எப்படி ஒப்புரவாக்குவது? இந்த முறிந்த உறவுகளிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதற்கு வேதாகமம் நமக்கு காட்டும் வழிகள் என்ன?

ஒப்புரவாக்குதலுக்கான வலிமையான சத்தியங்கள் வேதாகமம் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. ஒப்புரவாகுதல் என்பது ஒரு நிகழ்வு அல்ல மாறாக இது ஒரு ஆவிக்குரிய பயணம் மற்றும்  தொடர்ச்சியாக நம்மில் நடைபெறுகிற ஒன்றாகும். பாவம் மற்றும் அதனுடைய கலகத்தினால், வளர்ந்த வாலிபர்களுடன் ஏற்படுகிற முறிந்து போன உறவுகளை சீரமைக்க வேதாகமத்திலிருந்து சில ஆலோசனைகளை நாம் சற்று சிந்திப்போம்.

  1. தேவனுடைய நோக்கங்களை நினைவு கூறுங்கள்

 உங்கள் வீட்டில் உள்ள இளம் பருவத்தினர் அல்லது வளர்ந்த வாலிபர்களுடன் ஏற்பட்ட முறிந்து போன உறவை சரிசெய்வதற்காக நீங்கள் ஏறெடுத்த பிரயாசங்கள்  தோல்வியடைந்துவிட்டதாக நினைப்பதற்குப் பதிலாக,  தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்து, பொறுமையுடன் செயல்பட முயலுங்கள். ஒரு பெற்றோராக தேவன் உங்களுக்கு வைத்திருக்கும் அவருடைய நோக்கங்களை நினைவு கூறுங்கள். முதலாவதாக தேவன் நம்மை கிறிஸ்துவைப் போல மாற்றுவதற்காக இந்த சோதனைகளைப் பயன்படுத்துகிறார் என்பதை சிந்தித்து உணருங்கள். நாமாகவே உருவாக்கிய சோதனைகளோ அல்லது மற்றவர்களால் நமக்கு ஏற்பட்டதோ அல்லது சூழ்நிலைகளால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட எதுவாக இருந்தாலும் அந்த சோதனைகளின் மூலமாக நம்மை சுத்திகரிக்கும்படியான வேலையை தேவன் எப்பொழுதும் செய்து கொண்டே இருக்கிறார். தேவனுக்கான உங்கள் கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது. நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை தொடங்கியிருக்கிறீர்கள் ஆனால் தேவன் உண்மையுள்ள பரம பிதாவாக எப்பொழுதும் உங்களுடனே கூட இருக்கிறார். நீங்கள் நம்பிக்கையற்றவர்களாய் காணப்படுவீர்களானால், தேவ ஆவியானவரின் செயல்பாட்டில் நம்பிக்கை வைக்காமல் உங்களுடைய சொந்த முயற்சிகளின் பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றே அர்த்தம். உங்கள் பிள்ளைகளுடனான முறிந்துபோன உறவில் உங்களுக்கு இருக்கும் வலியையும் இழப்பையும்  நான் மறுக்கவில்லை, ஆனால் இந்த விரக்தி அவிசுவாசத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். உங்கள் முயற்சிகள் அல்ல, தேவனுடைய ஆவியானவரே மாற்றத்தைக் கொண்டுவருகிறவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒப்புரவாகுதல் முதலாவது நம்முடைய இருதயத்தில் இருந்து தொடங்க வேண்டும். இவ்விதமான உறவுகளில் முறிவு ஏற்பட்டதற்கு நீங்களும் எவ்வாறு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள தேவனுடைய ஆவியானவர் உங்கள் ஆத்துமாவிற்கு தேவையான வெளிச்சத்தையும், மறுரூபமாகுதலையும்  காண்பிக்கிற வழிகாட்டுதலில் கவனம் செலுத்துங்கள். இதுவே நமது கலக குணத்தை உடைக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒப்புரவாகுதலை துவங்கும்போது, வளர்ந்த வாலிபனாக அல்லது இளம் வாலிபனாக இருக்கக் கூடிய உங்கள் பிள்ளை உங்களுக்கு விரோதமாக கொண்டிருக்கும் நியாயப்படுத்துதலை எடுத்து போட மறவாதிருங்கள். தாழ்மையே ஒப்புர வாக்குதலின்  இருதயமாக இருக்கிறது. ஒப்புரவாக்குதல் என்பது உங்கள் பிள்ளையின் ஆத்தும நலனுக்கானதாக இருக்க வேண்டும். ” கலகம் செய்யும் என்னுடைய பிள்ளையை நான் எப்படிச் சரிசெய்வது?” என்று சிந்திக்க வேண்டாம். மாறாக, ” உங்களை கிறிஸ்துவைப் போல மாற்ற, எப்படி மக்களையும் சூழ்நிலைகளையும் தேவன் பயன்படுத்துகிறார்?” என்பதை சிந்தியுங்கள். ஒப்புரவாக்குதல் என்பது உங்களுடைய இருதயத்தின் உணர்வுகளை சரி செய்து,  அதினால் திருப்தியாக  உங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் பயணித்து, உங்களை நியாயப்படுத்தும்படியாக  செய்வதோ அல்லது உங்கள் மனசாட்சியை சமாதானப்படுத்துவதோ அல்ல. இந்த இக்கட்டான சோதனையை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அது உங்களை தேவனிடம் நடத்துகிறது. இவ்விதமான சோதனைகளின் மத்தியில் அவருடைய நோக்கம் நீங்கள் கிறிஸ்துவின்மேல் கவனம் வைக்க வேண்டும் என்பதுதான். அக்கினியில் உருக்குதல் தூய தங்கத்தை உருவாக்குவது போல, நீங்களும் சோதனைகளால் மறுரூபமாக்கப்படுகிறீர்கள்.

  1. ஜெபமே ஒப்புரவாக்குதலின் முதன்மையான அம்சமாகும். 

தாழ்மைக்காக ஜெபியுங்கள். இவ்விதமாக உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு  நீங்களும் காரணமாக இருப்பீர்களானால்  அதற்காகக் தேவனிடத்தில் மன்னிப்பைக் கேளுங்கள். உங்கள் கணவர், மனைவி மற்றும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். சமாதானம் பண்ணுவதற்கேதுவான இருதயத்தை தேவன் உங்களுக்கு கொடுக்கும்படியாகவும்,  காதுகொடுத்துக் கேட்கும்  விருப்பத்தையும் தேவன் உங்களுக்கு கொடுக்கும்படியாக ஜெபியுங்கள். பயத்துக்கு இடம்கொடுக்காமல் இருக்கவும், நீங்கள் எப்படி தேவனால் நேசிக்கப்பட்டீர்களோ அதேபோல் உங்கள் பிள்ளைகளை நேசிப்பதற்காக  ஜெபியுங்கள். தாழ்மையும் ,ஜெபமும் உங்கள் வாலிப பிள்ளை மற்றும் இளம் பருவத்தினருடன் சமாதானமான உரையாடல்களைத் தொடங்க உங்களைத் தயார்படுத்துகின்றன.

உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளை குறித்து சிந்தியுங்கள். உங்கள் குரலிலும், அணுகுமுறையிலும் தெய்வீக செயல்பாட்டை அவர்கள் காண்பார்களானால், அது காயத்தை விரைவில் ஆற்றும். கிறிஸ்து உங்களை நேசித்த விதமாக நீங்களும் உங்கள் பிள்ளைகளை நேசிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைத் தெரிவித்து அவர்களிடமிருந்து விடைபெற முடிவு செய்யுங்கள்.

பிள்ளைகள் தேவன் மீதான விசுவாசத்தோடும், பெற்றோர்களை நேசிக்கும் அன்போடும் வாழ்வது மிக சிறப்பான ஒன்றாகும். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் குடும்பமாக ஒன்று சேர்ந்து அவரை சேவித்து பணி செய்வது எவ்வளவு அழகானது. தலைமுறை தலைமுறையாக தேவனை பின்பற்றுவது விலையேறப்பெற்ற சிலாக்கியமாகும். ஆனால் இதற்கான எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தும், நாம் துயரமுள்ளவர்களாக, நம்பிக்கையில்லாதவர்களாக  தேவன்  மீதான நம்பிக்கையில்லாமல் தேவனால் பெறக்கூடிய ஆறுதலையும் இழந்து நாம் காணப்படுவோமானால்  அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

தேவன் நாம் ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழும்படியாகவே நம்மை படைத்திருக்கிறார். தேவனுடனான நம்முடைய உறவும், சக மனிதர்களுடனான நம்முடைய உறவும் அன்பு, ஐக்கியம் போன்றவற்றை மையமாக வைத்தே செயல்படுகிறதுமல்லாமல், அதனுடைய நோக்கம் திரித்துவத்திற்குள்ளாக நித்திய நித்தியமாக காணப்படுகிறது.  தேவன் மனித உறவுகளை மையமாக வைத்து  படைத்த குடும்பம் என்கிற அந்த வட்டத்தை விட்டு, நம்முடைய உறவுகளில் பிளவு ஏற்படும்போது  நம்முடைய இருதயம் இயற்கையாகவே வேதனை அடைகிறது. ஆனால் ஒப்புரவாகுதல் என்ற ஒன்றையும் தேவன் படைத்திருப்பதினால் அதற்காக அவரை நாம் துதிப்போமாக. நம்மை நம்முடைய பிதாவாகிய தேவனோடு ஒப்புரவாக்கும்படியாய் செயல்பட்ட நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மானுட பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகளே இதற்கு ஏற்ற வல்லமையான முன்னுதாரணமாகும்.

3.தாழ்மையுடன் நேசியுங்கள் 

நாம் உண்மையான மற்றும் தாழ்மையான கிறிஸ்தவ விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ வேண்டும். தேவன்  உங்களை நேசித்த விதமாக உங்கள் பிள்ளைகளை நீங்களும் நேசிக்க வேண்டும். கிறிஸ்து உங்களுக்குக் காட்டிய அதேவிதமான பரிசுத்த அழகுடன், கிருபையுடன், இரக்கம் மற்றும் உண்மையான புரிதலுடன் உங்களுடைய உறவுகளை அணுகும்படி எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். அழிந்து போகிறவர்கள் மீது கிறிஸ்து காண்பிக்கும் அதே கரிசனையை நீங்கள் காண்பிப்பதை, கலகம் செய்யும் உங்களுடைய பிள்ளை பார்க்கும்படியாக, கேட்கும்படியாக உங்களுடைய நடத்தை காணப்படட்டும். கலகம் செய்யும் உங்கள் பிள்ளை கிறிஸ்து எல்லாரையும் ஏற்றுக்கொள்வதுபோல உங்களையும் ஏற்றுகொள்வதைப் பார்க்க வேண்டும்.

நீங்கள் பலவீனப்பட்டு சோர்ந்துபோகும்போது, தைரியத்தை இழக்காதீர்கள். மத்தேயு 11:28-30-ல்  வருத்தப்பட்டு மற்றும் பாரம் சுமக்கிறவர்களை இயேசு அழைக்கிறார் என்பதை நினைவு கூறுங்கள். இது பாவிகளுக்கான ஒரு அழைப்பு மட்டுமல்ல, விசுவாசிகளுக்கான  அடைக்கலத்தையும் வாக்கு பண்ணுகிறது.

முறிந்தபோன  உறவுகளில் காணப்படும் நம்முடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு தாழ்மையாக இருப்பது கடினம். ஒரு பெற்றோராக நம்முடைய நேர்மையான கடின உழைப்பையும், நம்முடைய நல்ல நோக்கத்தையும், நாம் செய்த நீதியுள்ள மதிப்பிற்க்குரிய தியாகத்தையும் நியாயப்படுத்தாமல் நாம் மனந்திரும்புவதும் கடினம். நம்முடைய பிள்ளைகள் கலகம் செய்யும்போது கிறிஸ்துவினுடைய சுபாவத்தை வெளிப்படுத்துவதும் கடினமே. சவால் நிறைந்த இந்த ஊழியத்தை நாம் எப்படி செய்யப் போகிறோம்? எனவேதான் அப்போஸ்தலனாகிய பேதுரு காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை ஊக்கப்படுத்தி வழி நடத்துவதற்காக தகுந்த நினைவுகூறுதலை கொடுத்திருக்கிறார்:

” தம்முடைய மகிமையினாலும் காருண்யத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டியயாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்தில் உண்டான கேட்டுக்கு தப்பி, திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.” (2 பேதுரு 1:3-4)

ஆசிரியர்: மார்கி டிரிப் ஒரு வேதாகம ஆலோசகர், கிறிஸ்தவ மாநாட்டு பேச்சாளர் மற்றும் ‘It’s Not Too Late: Restoring Broken Relationships with Teenage and Adult Children’ என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.