How to Read the Psalms of Ascents

ஆரோகண சங்கீதங்களை வாசிப்பது எப்படி?

04-06-2026
How to Read the Psalms of Ascents

ஆரோகண சங்கீதங்களை வாசிப்பது எப்படி?

04-06-2026

கிரியைகளின் உடன்படிக்கை என்றால் என்ன?

What Is the Covenant of Works?

சில நேரங்களில் படைப்பின் உடன்படிக்கை அல்லது ஜீவனின் உடன்படிக்கை என்று அழைக்கப்படும் கிரியைகளின் உடன்படிக்கையில், ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசிப்பதைத் தடைச் செய்தார் (ஆதி 2:15-17). இந்த உடன்படிக்கைக்கு முழுமையான கீழ்ப்படிதல் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாழ்வை உறுதிப்படுத்தியிருக்கும். அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக எண்ணப்பட்டு நித்திய ஜீவனை சுதந்தரித்திருப்பார்கள்.

கிரியைகளின் உடன்படிக்கையை நாம் ஆதாமின் உடன்படிக்கை என்று அழைக்கிறோம் காரணம் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கு இங்கு மனிதனின் கீழ்படிதல் ஓர் காரணியாகயிருந்தது. பலுகிப் பெருகி, பூமியை ஆளுகை செய்து, விலக்கப்பட்ட விருட்சத்தை விட்டு விலகியிருந்த கீழ்ப்படிதலின் நற்கிரியைகள், ஆதாமுக்கும் அவனுடைய சந்ததியினருக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்திருக்கும் (ஆதி. 1:28; 2:15-17).

நாம் அறிந்தப்படி, ஆதாமும் ஏவாளும் கிரியைகளின் உடன்படிக்கையை மீறி, அவர்களையும், இயேசுவைத் தவிர அவர்களுடைய சந்ததியினர் அனைவரும் பாவத்தில் வீழ்ச்சியடைந்தார்கள். ஆதாமின் மூலமாக, கிரியைகளின் உடன்படிக்கையைக் காக்கும் நமது பெலனை நாம் இழந்துப்போனோம் ( ரோமர் 3:9-20), ஆனால் அதற்காக அந்த உடன்படிக்கை நிராகரிப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல. நாம் இன்னும் அதை கடைப்பிடிப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம், ஆனால் நமது இயலாமையின் காரணமாக, நமக்கு பதிலாக வேறொருவர் அதைக் காப்பார் என்பதே நமது ஒரே நம்பிக்கையாகும் ( கலாத்தியர் 3:10-14 ).

நமது பிரதிநிதியாக ஆதாம் தோல்வியடைந்த இடத்தில், தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படிவதற்கு இயேசு நம்மைப்போல வரவேண்டியிருந்தது.

நித்திய ஜீவனை தமது மக்கள் அடைவதற்கு இயேசு இரண்டாம் ஆதாமாக வர வேண்டியிருந்தது. அதாவது, நமது பிரதிநிதியாக ஆதாம் தோல்வியடைந்த இடத்தில், தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படிவதற்கு இயேசு நம்மைப்போல வரவேண்டியிருந்தது. பவுல் இதை தெளிவாக போதிக்கிறார் (1 கொரி 15:45), ஆனால் இது ஒத்த சுவிசேஷங்களாகிய மூன்று சுவிசேஷங்களில் அவரது சோதனையிலும் உள்ளார்ந்து காணப்படுகிறது. 

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, வனாந்தரத்துக்கு கொண்டுபோகப்பட்டு ஆதாமை சோதிக்க சர்பத்தை பயன்படுத்தின சாத்தானை அங்கு சந்தித்தார். முதலாம் ஆதாம் தேவனின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை சார்ந்துக்கொள்வதற்கு பதிலாக தனது சுய ஞானத்தைச் சார்ந்துக்கொண்டான். இரண்டாம் ஆதாம் துன்பத்தின் வாயிலாகப் சர்பத்தை அடக்குவதே கடவுளின் சித்தமாக இருந்த நிலையில், சாத்தான் இயேசுவைத் தவறான நேரத்தில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவோ, அல்லது உடனடியாகவும் எவ்விதத் துன்பமுமின்றியும் தமது ஆட்சியைத் தொடங்கவோ தூண்டியபோது, கடவுளின் சித்தத்தைக் கைவிடுமாறு அங்கு சோதிக்கப்பட்டார் (மத் 4:1-11). எப்படியாயினும், முதலாம் ஆதாமைப் போல் அல்லாமல், இயேசு சாத்தானின் சோதனைகளை மேற்கொண்டு, சாத்தானின் இறுதி தோல்விக்கான வழியை சிலுவையில் ஏற்படுத்தினார். (கொலோ 2:13-15).

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

லிகோனியர் இதழ்

லிகோனியர் இதழ்

ஆர்.சி. ஸ்ப்ரூல் நிறுவிய லிகோனியர் ஊழியங்கள், முடிந்தவரை பலருக்கு கடவுளின் பரிசுத்தத்தை அதன் முழுமையுடன் அறிவிக்கவும், கற்பிக்கவும், பாதுகாக்கவும் உள்ளன.