லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
14-08-2025

குடும்பத்தில் சீஷத்துவம்

சீஷத்துவத்தைப் பற்றிப் பேசும் எந்த ஒரு வேதப்பகுதியும், இயேசு உயிர்த்தெழுந்து தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த பிரதான கட்டளையைவிட (28:19-20)அதிக கவனத்தை ஈர்க்கமுடியாது.
12-08-2025

நான் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்?

ஒரு புயல் வீசும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு உயிர்காக்கும் மிதவைப்பொருள் (lifebelt) வீசப்படுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். விரக்தியுடன், அவன் அதைப் பிடித்துக்கொள்கிறான், அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறான், அதற்குள் வருகிறான்.
07-08-2025

இளைஞர்களுக்கு இறையியலைக் கற்பிப்பதற்கான மூன்று வழிகள்.

ஒருவேளை நீங்கள் வாலிபர் ஊழியமோ அல்லது கல்லூரி ஊழியமோ செய்வீர்களென்றால், “இரவு உணவும் உபேதசங்களும்” அல்லது “இன்று இறையியல்” என்ற அறிவிப்பை அளிப்பீர்களென்றால், இது கூட்டத்தை கூட்டுவதற்கான வழியாக இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். இறையியல் சிந்தனைக்கான ஆர்வத்தை தடுக்கின்ற பொழுதுபோக்கிலும் இரண்டு நிமிட காணொளிகள் போன்ற சமூகவலைதளங்களிலும், ஆழமாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை இறையியல் படிப்பில் ஈடுபடுத்துவது கடினமான ஒன்று.
05-08-2025

ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்?

ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்? ஜெபம் ஏன் ஒரு கிருபையின்  சாதனம் என்ற கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Shorter Catechism) ஜெபம் ஒரு கிருபையின் சாதனம் என்று எளிமையாகக் கூறுகிறது: "வெளிப்பிரகாரமான மற்றும் சாதாரண சாதனங்கள் மூலமாக ஆண்டவராகிய கிறிஸ்து நமக்கு மீட்பின் நன்மைகளை கொடுக்கும்படியாய் அவருடைய நியமங்களை வைத்திருக்கிறார்.
31-07-2025

எவ்வாறு இயேசு உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்?

சில வாரங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்தபோது, மரங்கள் சூரியனை நோக்கி எவ்வாறு வளருகிறது என்பதை கவனித்தேன்: அதன் மையத்தில், மரங்களும், அதன் ஓரங்களில் நீண்ட கிளைகளும் தங்களுக்கு உயிர் ஆதாரமாக இருக்கும் சக்தியை நோக்கிச் செல்கின்றன.
29-07-2025

இயேசு எப்படி “மெய்யான திராட்சச்செடி” யாக இருக்கிறார்?

யோவான் சுவிசேஷத்தில் இயேசுவின் "நானே" என்ற கூற்றுகளில் ஏழாவதும் கடைசியுமான, "நானே மெய்யான திராட்சச்செடி" (யோவான் 15:1)  என்னும் கூற்று எல்லாவற்றிலும் மிகவும் நூதனமான ஒன்றாக (ஒருவேளை இதை வாசிக்கும் புற ஜாதி மக்களுக்கு) இருக்கலாம்.
24-07-2025

எவ்வாறு இயேசு வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்?

சில வருடங்களுக்கு முன்பாக, கல்வியாளர் ஒருவர் வரலாற்று சிறப்புமிக்க கல்லூரியின் வளாகத்தில் சகிப்புத்தன்மை கொண்ட சூழலை ஆதரிப்பதை குறித்து தனது கருத்தை முன்வைத்தார். பின்னர், அவர் தனது பல்கலைக்கழகம் சகிப்பின்மையை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் கூறினார். இந்த கருத்துக்களின் முரண்பாட்டை நினைவில் கொள்ளுங்கள்.
22-07-2025

இயேசுகிறிஸ்து  எப்படி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்?

பிரசங்கி புத்தகத்தின் அதின் ஞானமுள்ள ஆசிரியர், "விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்" (பிரசங்கி 7:2) என்று தேவபக்தியை வளர்க்கக்கூடிய ஒரு பிரதான இடத்தை  பற்றிப் பேசுகிறார், அந்த இடம் நம்மை ஆச்சரியப்படுத்த கூடும். மேலும், "ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்" (பிரசங்கி 7:4) என்றும் அவர் நினைவுபடுத்துகிறார்.
17-07-2025

இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்?

இந்த மகத்துவமான கேள்விக்கான பதில் இதுதான்: இயேசு நல்ல மேய்ப்பன் காரணம் அவரே அதை கூறியுள்ளார். யோவான் சுவிசேஷத்தில், “நானே நல்ல மேய்ப்பன்” என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 10:11).