what is the gosple
சுவிசேஷம் என்றால் என்ன?
26-11-2024
ஏன் வேலை செய்கிறீர்கள்?
03-12-2024
what is the gosple
சுவிசேஷம் என்றால் என்ன?
26-11-2024
ஏன் வேலை செய்கிறீர்கள்?
03-12-2024

புரட்டஸ்தந்துகளின்  கொள்கைகளில் மிக பிரதானமான தவறான கொள்கை எது?

The Greatest Heresy

நாம் திருச்சபை வரலாற்றிலிருந்து, ஒரு கேள்வியோடு கூட இந்த உபதேசத்தை ஆரம்பிப்போம். சபை வரலாற்றில் ரோமன் கத்தோலிக்க ஆயர் திரு.ராபர்ட் பெல்லர்மைன் (1542-2621) என்ற மிக முக்கிய மனிதரை நாம் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இவர் 8 ஆம் போப் ஆன கிளமன்ட் என்பவருடைய தனிப்பட்ட இறையியலாலராகவும், மற்றும் 16ஆம் நூற்றாண்டு ரோமன் கத்தோலிக்க காலத்தில் நடந்த சீர்திருத்தத்தின் நிகழ்வுகளை கண்காணிப்பவராகவும் இருந்த முதன்மையான நபராவார். ஒரு சமயத்தில் ரோமன் கத்தோலிக்கதிற்கு எதிரான புரட்டஸ்தந்துகளின் வாதத்தில் மிக முக்கியமான வாதம் என்ன என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பெல்லர்மைனுடைய இந்த கேள்விக்கான பதிலை உங்களால் கூற முடியுமா? விளக்கப்படுத்த முடியுமா? அல்லது அதை குறித்து உரையாட நீங்கள் தயாரா?

உங்களுடைய பதில் என்னவாக இருக்கப் போகிறது? புரட்டஸ்தந்துகளின் வாதத்தில் மிகவும் முக்கியமானது எது? விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதா? அல்லது வேதம் மட்டுமே என்பதா? அல்லது சீர்திருத்தத்தின் மற்ற கோட்பாடுகளில் ஏதாவது ஒன்றா?

மேற்கூறிய இந்த பதில்களை நியாயமாக உணரக்கூடிய வகையில் உங்களால் விளக்கப்படுத்த முடியுமா? ஆனால் எதுவுமே பெல்லர்மைனுடைய பதிலுக்கு ஈடாகாது. அவர் சொன்னது, புரட்டஸ்தந்துகளின் கொள்கைகளின் வாதத்திலே பிரதானமானது “இரட்சிப்பின் நிச்சயம் (assurance)” என்ற கொள்கைதான்.

ஒரு நொடியில் நீங்கள் இதை குறித்து ஆச்சரியப்படலாம். நீதிமானாக்கப்படுதல் விசுவாசத்தினால் மட்டுமே வரவில்லை என்றால், கிறிஸ்து மட்டுமே அல்லது கிருபை மட்டுமே என்கிற கொள்கை அபத்தமாகி, விசுவாசமானது நம்முடைய கிரியைகளினாலே நிறைவடைகிறது என்று சொல்லலாமே. கிறிஸ்துவினுடைய மீட்பின் பணியானது நிறைவடையாமல் இன்னும் செய்வதற்கு ஏதாகிலும் உள்ளதா? கிருபையானது இறையாண்மையோடு, இலவசமாக கொடுக்கப்படாவிட்டால், நம்முடைய கிரியைகள் எப்பொழுதும் தேவைப்படுகிறதா? மற்றும் நம்முடைய இறுதியான நீதிமானாக்கப்படுதலுக்கு இன்னும் ஏதாயிலும் நாம் செய்ய வேண்டுமா? என்ற கேள்விகளே பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. நம்முடைய கடைசி நாளில் நம்மை நீதிமான்களென்று அறிக்கையிடுவதற்கு நம்முடைய கிரியையும் தேவைப்படுமானால் நாம் இரட்சிப்பினுடைய நிச்சயத்தினுடைய சந்தோஷத்தை அடைவது கூடாத காரியமே. இறையியல் ரீதியாக, கடைசி கால நீதிமானாக்கப்படுதலுக்கு நம்முடைய கிரியைகளும் தேவைப்படுமானால், நம்முடைய நீதிமானாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கு இடமில்லாமல், நிச்சயமற்ற ஒன்றாக மாறிவிடும். மட்டுமல்ல இரட்சிப்பினுடைய நிச்சயத்தை பெற்றுக் கொள்வதும் எவருக்கும் கடினமானதாக ஆகிவிடும். இதற்கு மாறாக கிறிஸ்துவானவர் எல்லாவற்றையும் செய்து முடித்து, கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டால் நம்முடைய கிரியைகளுக்கு எந்த விதமான இடமும் அங்கில்லை. விசுவாசத்தை மட்டும் உடைய வெறுமையான கரங்களால் மட்டுமே நாம் அதை பெற்றுக்கொண்டு, முழு நிச்சயதோடு கூட இரட்சிப்பை ஒவ்வொரு விசுவாசியும் அனுபவிக்க முடியும்.

முழுமையான, இலவசமான, தடையற்ற கிருபை என்கிற இந்த சத்தியமானது மிகுந்த ஆபத்தை விளைவிக்ககூடும் பெல்லர்மைன் கூரியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதனாலேயே சீர்திருத்தவாதிகள் எபிரேய புத்தகத்தை அதிகமாக நேசித்தார்கள் என்பதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதினாலேயே எபிரேயர் 10: 18 ஆம் வசனத்தில் கிறிஸ்துவினுடைய மீட்பின் பணியை இறுதியாக, உயிர்மூச்சாக எண்ணி அந்த நிருபத்தை எழுதி விளக்கப்படுத்துகிறார். மேலும் எபிரேயர் 10: 19 திலும் பவுலை போல ஆகையால் என்று தொடர்ச்சியாக கூறி, 22 ஆம் வசனத்தில் விசுவாசத்தின் பூரண நிச்சயதத்தோடு சேரக்கடவோம் என்று எழுதியிருக்கிறதை பார்க்கிறோம். ஆகையால் என்று பவுல் இங்கே எழுதினதினுடைய தாற்பரியத்தை அறிந்து கொள்ள நாம் முழு நிருபத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இயேசுவே நம்முடைய பிரதான ஆசாரியராக, துர் மனசாட்சி நீங்க தெளிக்கப்பட்ட இருதயத்தையும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரத்தையும் நமக்கு கொடுத்திருப்பதாக அவர் இதை முடிக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தன்னையே பலியாக ஒப்பு கொடுத்திருக்கிறார். நம் பட்சத்தில் இருக்கக்கூடிய ஆசாரியனாக, தன்னுடைய வல்லமைமிக்க, அழிக்க முடியாத மரணத்தினால் அதை உறுதிப்படுத்தியுமிருக்கிறார். அவருக்குள் நமக்கு இருக்கும் விசுவாசத்தினாலே அவர் நீதியுள்ளவராய் இருக்கிறது போல நாமும் தேவனுடைய கிருபாசனத்துக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக என்னப்படுவோம். அவருடைய நீதியினாலே நாம் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய நீதி மட்டுமே நமக்கு உரித்தான ஒன்றாகும். இந்த நீதிமானாக்குதலை நாம் இழந்து போவோம் என்று சொல்வோமானால் கிறிஸ்து பரலோகத்தின் மீட்பை விட்டு விழுந்து போனார் என்று சொல்வது நலமா இருக்குமே. கிறிஸ்து செய்து முடித்த இந்த மீட்பின் பணியை தவிர வேறு எதுவும் நம்மை நீதிமானாக்குவதற்கு அவசியமேயில்லை.

இந்த கண்ணோட்டத்திலேயே, இந்த எபிரேய ஆசிரியர் “தமது மூலமாக தேவனிடத்தில் சேருகிறவர்களை பரிசுத்தப்படுத்தி, ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி இருப்பதாக” எபிரேயர் 10:14லும், மற்றும் “இப்பொழுது நாம் தேவனுக்கு முன்பாக முழு நிச்சயத்தோடு நிற்பதற்கு காரணமும் துர்மானசாட்சி நீங்க தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், அவர் நம்மை மாற்றியிருப்பதினாலேயே” என்று எபிரேயர் 10:22 லும் சொல்லியிருக்கிறார்.

ரோமின் திரு.பெல்லர்மைன் அவர்கள், இதை விசுவாசிக்கிறவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வாழ்வதற்கு அனுமதி பெற்றுள்ளதாக தவறாக போதிப்பதை பார்க்கலாம். ஆனால் கவனியுங்கள் எபிரேய புத்தகத்தில் இருக்கக்கூடிய அடிப்படை சத்தியங்களையும் தாண்டி இந்த முழு இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் அனுபவிக்கும் பொழுது, நான்கு காரியங்களை நாம் சிந்திக்க வேண்டும். முதலாவது கிறிஸ்துவின் மீதான நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருக்க வேண்டும் (வச 23), இரண்டாவதாக, அன்புக்கும், நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படியாக ஒருவரையொருவர் கவனிக்க வேண்டும் (வச24), மூன்றாவதாக, சபை கூடி வருதலை விட்டு விடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி விசுவாசிகளுடன் ஐக்கியத்தை வலுப்படுத்த வேண்டும்(வச25 a). நான்காவதாக, கிறிஸ்துவின் நாளை எதிர்பார்த்தவர்களாய் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் அவர் வரும்படியான நாள் சமீபமாக இருக்கிறதென்பதை அறிந்தவர்களாய் நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, விசுவாசத்தில் பலப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும் (வச25 b).

நல்ல மரம் நல்ல கனிகளை கொடுக்கும், மற்றவைகள் கொடுக்க மாட்டாது. நாம் கிரியைகளினால் இரட்சிக்கப்படவில்லை, ஆனால் நாம் கிரியைகளுக்காக இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நற்கிரியைகளுக்காக நாம் தேவனுக்குள் அவருடைய செய்கையாய் இருக்கிறோம். ஆகையால் நீதிக்குரியவர்கள் போல ஆவிக்குரிய வாழ்க்கையில் கவனமற்று வாழுகிற ஒரு வாழ்க்கைக்கு நாம் செல்லாமல், மறுபடியுமாக எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு கிறிஸ்து நமக்காக செய்து முடித்த கிரியைகளை பற்றும் விசுவாசத்தினுடைய முழு நிச்சயத்தோடு, தேவனுடைய மகிமைக்காக, அவருக்கு பிரியம் உண்டாக வாழும்படியாக, ஒவ்வொருவரையும் தூண்டுகிற மிகப்பெரிய உந்துகோளாக நாம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட முழு நிச்சயமானது தேவனாலே மட்டுமே அவர் நமக்காக என்ன செய்து முடித்தாரோ அதினாலேயே உண்டாயிருக்கிறது.

கிறிஸ்துவின் மூலமாக தேவன் தன்னுடைய இருதயத்தை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதாவாகிய தேவன் நம்மில் அன்பு கூறுவதற்காக, அவரை இணங்க செய்வதற்காக, கிறிஸ்துவினுடைய மரணம் அவருக்கு தேவைப்படவில்லை. மாறாக தேவன் நம்மீது வைத்த அன்பை அவருடைய குமாரன் மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பிதாவாகிய தேவன் நம்மீது நல்லெண்ணம் கொண்டவராக இல்லாமல், ஏதோ தம்முடைய குமாரனின் பின்பாக பதுங்கி இருக்கவில்லை. இதற்காக அவருடைய குமாரனும் தன்னை பலியாக ஒப்புக் கொடுக்கவும் இல்லை. ஆயிரம் முறை சொன்னாலும் அது இல்லவே இல்லை.
பிதாவாகிய தேவன, குமாரனுடைய அன்பினாலும், ஆவியானவருடைய அன்பினாலும் தாமாகவே நம்மை நேசிக்கிறவராக இருக்கிறார்.

இவ்விதமான இரட்சிப்பின் நிச்சயத்தினுடைய சந்தோஷத்தை கொண்டிருக்கிற எவரும் பரிசுத்தவான்களிடத்திலோ அல்லது மரியாளிடத்திலோ செல்ல மாட்டார்கள். இயேசுவை நோக்கி பார்க்கிற எவரும் வேறு எங்குமே நோக்கி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்குள்ளாக நாம் இரட்சிப்பினுடைய முழு நிச்சயத்தையும் அனுபவிக்க முடியும். இது புரட்டஸ்தந்து கொள்கைகளிலே மிகப்பெரிய தவறான போதனையாக உங்களுக்கு தெரிகிறதா? . இப்படிப்பட்ட முக்கியமான வேதபூர்வமான மீட்பின் கொள்கை தவறான போதனையாக தெரியுமானால் அதிகமாய் தெரியட்டும். இந்த மீட்பின் போதனையே கிறிஸ்தவ ஆசீர்வாதத்தின் முழு சந்தோஷத்தையும், தேவனுடைய சத்தியத்தினாலும், கிருபையின் மூலமாகவும் நமக்கு கிடைக்கிரதாக இருக்கிறது.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

சின்க்ளேர் பி. பெர்குசன்
சின்க்ளேர் பி. பெர்குசன்
டாக்டர்.சின்கிளர் B.பெர்குஷன் அவர்கள் லிகொனர் ஊழியங்களின் துணைத்தலைவராக மற்றும் இறையியல் ஆசிரியராக இருக்கிறார். சீர்திருத்த இறையியில் கல்லூரியில் முறைபடுத்தப்பட்ட இறையியல் பாடத்தின் முதன்மை பேராசிரியராக இருக்கிறார். லிகொனர் ஊழியங்களின் பல்வேறு இறையியல் பாடங்களின் தொடர் போதக ஆசிரியராக இருக்கிறார், அதில் கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் (Union with Christ) என்ற பாடமும் முதன்மையானது. அநேக நல்ல இறையியல் புத்தகங்களை எழுதியுள்ளார், குறிப்பாக முழுமையான கிறிஸ்து (The Whole Christ,) , பக்தியுள்ள தேவனின் திருச்சபை (Devoted to God's Church) ஆகியவையும் இதில் அடங்கும்.