5 Things You Should Know About Fighting Sin

பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் அறிய வேண்டிய 5 பிரதான காரியங்கள்

12-02-2026
5 Things You Should Know About Moses

மோசேயைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய ஐந்து பிரதான காரியங்கள்

19-02-2026
5 Things You Should Know About Fighting Sin

பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் அறிய வேண்டிய 5 பிரதான காரியங்கள்

12-02-2026
5 Things You Should Know About Moses

மோசேயைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய ஐந்து பிரதான காரியங்கள்

19-02-2026

பரிசுத்தத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

5 Things You Should Know About Holiness

1.கடவுளின் பரிசுத்தத்தின் முக்கியத்துவம்.

“சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” (ஏசாயா 6:3; வெளி 4:8). ஏசாயா கர்த்தரின் சிங்காசனத்திற்கு முன்பாக கொண்டுவரப்பட்டப்போது பரலோகத்தில் அறிவிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை. பரலோக சிருஷ்டிகள் கடவுளின் தெய்வீக இயல்பையும் ஒப்பற்ற தூய்மையையும் கண்டு பிரமிப்பில் நிற்கின்றன. நாம் சர்வவல்லவரைச் சந்தித்து அவர் இருப்பது போலவே அவரை பார்த்து உணரும்போது, நாமும் இதேபோல் பதிலளிக்கிறோம். நமது பாவங்கள் அவரின் பிரகாசமான பரிசுத்த ஒளியால் வெளியரங்கமாக்கப்படுகிறது (ஏசாயா 6:5) அங்கு பாவத்தின் மீதான பயங்கரமான நியாயத்தீர்ப்பை நாம் அறிந்துக்கொள்கிறோம்‌. இருப்பினும் அவரது பரிசுத்த தன்மையிலிருந்து மகிமையான இரட்சிப்பானது, நிச்சயமாகவும் உறுதியாகவும் வெளிப்படுகிறது (ஏசாயா 6:6-7).

இருப்பினும் அநேக நேரங்களில், தேவனின் பரிசுத்தமானது முக்கியமற்றதாகவும், ஆர்வமற்ற சத்தியமாகவும் பார்க்கப்படுகிறது. பாவத்தினால் நமது கண்கள் குருடாக்கப்பட்டிருக்கையில், அவரது பரிசுத்தத் தன்மை நமக்கு ஓர் பொருட்டாகவே தெரியாது. இருப்பினும், தேவன் பரிசுத்தராகவே இருக்கிறார், மேலும் அவரது அனைத்து கிரியைகளுமான படைப்பு, இரட்சிப்பு, நியாயத்தீர்ப்பு ஆகியவைகள் அவரது பரிசுத்த குணாதிசயத்தின் அடிப்படையிலேயே உள்ளது. அதை அறிந்தாலும் அறியவில்லையென்றாலும், தேவனது பரிசுத்தம் மிகமிக முக்கியமான ஒன்று. அது அனைவரது மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஒன்று தேவன் நியாயத்தீர்ப்பைச் செலுத்தும்போது பாவத்துக்கான தண்டனையில் அல்லது “பரிசுத்தமும், நீதியுமுள்ள நபராகிய” (அப் 3:14) இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக வரும் இரட்சிப்பில்.

2. இரட்சிப்பிற்கு பரிசுத்தம் அவசியம்.

தேவனோடு சேர்ந்து நடப்பதற்கும், நியாயத்தீர்ப்புக்கென்று ஆயத்தப்படுவதற்கும் நமக்கு பரிசுத்தம் அவசியம். நமது பாவத்தன்மை என்பது நமது சுயத்தினால் பரிசுத்தமாகுதலை அடையமுடியாது. ஆனால் இங்கு ஓர் நற்செய்தி உண்டு, தேவன் பரிசுத்தத்தை நமக்கு அளிக்கவும் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு நம்மில் அதை நடப்பிக்கவும் சித்தம் கொண்டார் (ரோமர் 15:16). அதேநேரத்தில், “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.” (எபிரேயர் 12:14). அதாவது நமது பரிசுத்தமாகுதலில் நாம் வளரவேண்டும். தேவன் பரிசுத்தத்தை நமக்கு அளித்தாலும், தொடர்ச்சியாக நாமும் நம்மில் தேவன் செயல்படும்படிக்கு நாடவேண்டும். நாம் பரிசுத்தமாகும்படி தேவன் நமக்கு சித்தத்தையும் பலத்தையும் அளிக்கையில், நாம் அவரை பிரயப்படுத்துவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும் (பிலி 2:12-13). இது பாவத்தை தொடர்ச்சியாக அறிக்கை செய்வதையும், பாவத்திலிருந்து திரும்புவதையும், தேவனின் நீதியின் பாதைகளில் நடப்பதையும் உள்ளடக்கியிருக்கிறது. நம்மீது தேவன் கொண்டுள்ள தகப்பனின் அகக்றையினால், அவரோடு தனிப்பட்ட நெருங்கிய ஐக்கியம் கொள்ளவும், அங்கு நமது தேவைகளுக்காக அவரிடம் தாராளமாக செல்லவும் தேவன் விருப்பம் கொண்டிருக்கிறார். நாம் அடிக்கடி தேவனுக்கு உண்மையில்லாதவர்களாக இருந்தாலும், அவர் தொடங்கிய நற்கிரியைகளை முடிப்பார் என்று நாம் தைரியமாக இருக்கலாம் (பிலி 1:6).

3. பரிசுத்தமே இரட்சிப்பின் மையமாக உள்ளது.

இரட்சிப்பில் கடவுளின் பரிசுத்தம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, இருப்பினும் இது பெரும்பாலும் அநேகரால் கவனிக்கப்படுவதில்லை. கிறிஸ்துவில், கடவுளின் பரிசுத்தம் என்பது நமது பாவத்தின் வெளிப்பாடு மற்றும் பாவத்திலிருந்து இரட்சிப்பு இரண்டையும் குறிக்கிறது. முக்கியமாக, கடவுளின் பரிசுத்தம் ஒரு கிறிஸ்தவரின் இரட்சிப்பைப் பாதுகாக்கிறது என்று அவருடைய வார்த்தை அடிக்கடி உறுதியளிக்கிறது ( ஏசா. 6:1–7 ; சக. 3 ; ரோமர் 5:10 ).

கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் மறுபிறப்பு பற்றிய வேதவசனங்களின் மூலம் கடவுளின் பரிசுத்தம் கிறிஸ்தவ இரட்சிப்பின் மையமாக உள்ளது என்பதை நாம் மேலும் உறுதிப்படுத்துகிறோம். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். “சங்கீதம் 16:10. இந்த வசனம் நமது வாழ்க்கையிலும் மரணத்திலும் உள்ள அவரது பரிசுத்தத்தைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவரது பரிசுத்த ஆவியினால் காணப்பட்டது (ரோமர் 1:4). தேவனின் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் மறுபிறப்பை அடைகிறோம் (யோவான் 3:5-8). நமது இரட்சிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவனுடைய பரிசுத்தம் இடம்பெறுகிறது. கிறிஸ்துவில் நமக்கு அருளப்பட்ட தேவனின் கிருபையின் ஊடாக அவரது பரிசுத்தத்தை நமது இரட்சிப்பாக எண்ணமுடியும்.

4. பரிசுத்தம் என்பது “மற்றவரை விட பரிசுத்தமாக” இருப்பது அல்ல.

“உன்னை விடப் புனிதமானவர்” என்ற ஆங்கிலச் சொற்றொடர், அண்டை வீட்டாரிடம் ஒழுக்க ரீதியாக உயர்ந்த முறையில் நடந்துகொள்பவரை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பரிசுத்தம் அல்ல, ஆனால் அதற்கு முரணானது. ஒரு மனிதனில் பரிசுத்தம் என்பது கடவுளை உருவகப்படுத்துவதாகும், அவர் இயேசு வெளிப்படுத்தியபடி, “சாந்தமானவர், மனத்தாழ்மையுள்ளவர்” ( மத். 11:29 ). பரிசுத்தத்தில் பரிபூரணரான கிறிஸ்து, சிலுவையில் சாபமாக்கப்பட்டு, தானாக முன்வந்து தாழ்ந்த இடங்களை எடுத்துக் கொண்டார். நமக்காக அவர் நம் பாவங்களின் அவமானத்தைச் சுமந்தார். அவருடைய போதனையை உண்மையாகப் பின்பற்றுவது என்பது மற்றவர்களுடனான உறவில் உயர்ந்த இடத்தை அல்ல, தாழ்ந்த இடத்தை எடுத்துக்கொள்வதாகும் ( லூக்கா 14:10–11; 22:24–30 ; யோவான் 13:14–17 ; 1 பேதுரு 5:6 ). 

இத்தகைய மனப்பான்மை சுயநீதிக்கு சொந்தமானது. பரிசேயன் மற்றும் வரி வசூலிப்பவன் பற்றிய இயேசுவின் உவமையில் ( லூக்கா 18:9–14 ), சுயநீதியுள்ள பரிசேயன் தான் கடவுளுக்கு அருகில் இருப்பதாக நம்பினான், தன்னைத் தன் அண்டை வீட்டாரை விட ஒழுக்க ரீதியாக உயர்ந்தவனாகக் கருதினான். வரி வசூலிப்பவனைப் போல இல்லாததற்காக அவன் கடவுளுக்கு நன்றி கூறினான், ஆனால் கடவுளிடம் இரக்கத்தைக் கேட்டு நீதிமானாக வீட்டிற்குச் சென்றது வரி வசூலிப்பவனே. பரிசுத்தம், ஒழுக்க குணாதிசயங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால் இவை கிறிஸ்துவின் மாதிரியையும் அவரது போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு, ஆவிக்குரிய பெருமை இல்லாமல் எப்போதும் தாழ்மையையே கொண்டிருக்கும்.

5. கிறிஸ்துவர்கள் பரிசுத்தத்தில் வளருவதற்கு தெய்வீக பராமரிப்பு உதவுகிறது.

பரிசுத்தத்தில் தேவ சாயலாக வளருவதற்கு தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தமாகிய வேதம் இருக்கையில், அவரது தெய்வீக பராமரிப்பும் பரிசுத்தத்தில் வளர நமக்கு உதவுகிறது. அவரது பராமரிப்பில், கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ள நம்மை கொண்டு வருகிறார். அவரது பராமரிப்பில், அவருடைய பரிசுத்தத்தில் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்மை சிட்சிக்கிறார். தற்காலத்தில் இது துன்பமாக இருந்தாலும், நீதியின் கனிகளுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறது (எபி 12:10-11). தேவன் நமக்கு அவரது பரிசுத்த ஆவியானவரையும், அவரது பரிசுத்த வேதாகமத்தையும், அவரது பரிசுத்த சபையையும் கொடுத்து பரிசுத்தத்தின் வழியை நமக்கு போதிக்கிறார். நமது பரிசுத்த வளர்ச்சிக்காக தேவன் வாரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்: “ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நிலைப்பாடாக.” (யாத் 20:8), “அதை அவர் பரிசுத்தப்படுத்தினார்” (யாத் 20:11). கர்த்தருடைய நாளைப் பற்றி தேவன் என்ன கூறுகிறார் என்பதை நாம் சிந்திக்கையில், வரவிருக்கும் வாரத்திற்காக நாம் பெலனடைந்து, நமது பரலோக தகப்பன் நமக்காக கிருபையுடன் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும் பரிசுத்த நகரத்தில் நமது இரட்சகரைக் காண நெருங்கிச் செல்கிறோம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஜான் பெர்குசன்

ஜான் பெர்குசன்

Dr. ஜான் பெர்குசன் ஸ்காட்லாந்து இன்வெர்னஸில் உள்ள பிரஸ்பிடீரியன் சபையில் ஊழியராக உள்ளார்.