18-11-2025
ஆவியின் கனி என்பது அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 5:22–23-ல் சொல்லிய ஒன்பது நற்குணங்களின் பட்டியலாகும். மனிதனிடத்தில் காணப்படக்கூடிய கோபம், சண்டை, பொறாமை போன்ற மோசமான மற்றும் பயங்கரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் பாவ செய்கைகளின் ("மாம்சத்தின் கிரியைகள்") ஒரு நீண்ட பட்டியலுக்கு எதிராக பதிலளிக்கும் விதமாக இதனை எழுதுகிறார் (கலா. 5:19–21). மாம்சத்தின் கிரியைகளுக்கு நேர்மாறாக, "ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்."








