The Motivation for Love

தேவனுடைய அன்பின் உள்நோக்கம்

30-04-2026
Is the Church Full of Hypocrites

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறதா?

07-05-2026
The Motivation for Love

தேவனுடைய அன்பின் உள்நோக்கம்

30-04-2026
Is the Church Full of Hypocrites

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறதா?

07-05-2026

சோம்பல் மற்றும் உழைப்பு

Sloth and Diligence

கென் ஜோன்ஸ் 

பதினாறாம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் நீடித்த பாரம்பரியத்தைப் பற்றி ஒருவர் சிந்திக்கும்போது, இரட்சிப்பு என்பது விசுவாசத்தின் மூலம் மட்டுமே, கிறிஸ்துவில் மட்டுமே, தேவனுடைய வார்த்தையின்படி மட்டுமே, அவருடைய மகிமைக்காக மட்டுமே போன்ற பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால், சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய மைல்கல் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. அது, “புரட்டஸ்தாந்தின் உழைப்பின் நெறிமுறை”. இந்த வாக்கியம், “நேர்மையான உழைப்புக்கு நேர்மையான ஊதியம்” என்பதோடு தொடர்புடையது. ஆனால் இது புராட்டஸ்டன்ட் உழைப்பின் நெறிமுறை என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், சீர்திருத்தவாதிகளால் வெளிப்படுத்தப்பட்ட அல்லது மீண்டும் நிலைநாட்டப்பட்ட விஷயங்களில் ஒன்று, சட்டப்பூர்வமான எல்லா வேலைகளும் (மத அல்லது திருச்சபை தொடர்பான வேலைகள் மட்டுமல்ல) தேவனால் பரிசுத்தமாக்கப்படுகின்றன என்ற கருத்தாகும். சுருக்கமாக சொன்னால், சீர்திருத்தவாதிகள் உழைப்பின் அவசியத்தைப் பற்றிய வேத உபதேங்களை மீட்டெடுத்தனர்.

வேதாகமத்தில் மனித உழைப்பின் முக்கியத்துவத்தைப் சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்: அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. (நீதிமொழிகள் 20:4). இதை புரிந்துகொள்வதற்கு, சோம்பலையும் மந்தத்தையும் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கும் பல வேதப்பகுதிகளைக் கவனித்தாலே போதுமானது: “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்: சோம்பேறியோ பகுதிகட்டுவான்.” (நீதிமொழிகள் 12:24). “சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்: அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.” (நீதிமொழிகள் 20:4). “சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.”

(நீதிமொழிகள் 21:25). “ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.”(2 தெசலோனிக்கேயர் 3:10-12). அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத்தேயு 5:8- ல் இந்தக் கருத்தை மிகத் தெளிவான வார்த்தைகளில் கூறுகிறார் : “ஒருவன் தன் சொந்த ஐனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1தீமோத்தேயு 5:8).

புரோட்டஸ்டன்ட் பணியின் நெறிமுறையானது, நேர்மையான உழைப்பின் நற்பண்பை மட்டுமல்ல, அந்த உழைப்பில் நாம் காட்டும் விடாமுயற்சியையும் வலியுறுத்துகிறது. “தன்வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.” (நீதிமொழிகள் 18:9). நீதிமொழிகள் புத்தகம் முழுவதும், வேலை செய்பவன் மட்டுமல்ல, விடாமுயற்சியுடன் உழைப்பவனே பாராட்டப்படுகிறான். வேறுவிதமாகக் கூறினால், நமது உழைப்பில் நாம் நமது சிறந்த முயற்சியை வெளிப்படுத்த வேண்டும்.

நமது பணிகளிலிருந்து சற்று நின்று, கிறிஸ்துவையும் நமக்காக அவர் செய்யும் செயல்களையும் தியானிக்கும்போது, நமது நன்றியுணர்வு புத்துயிர் பெறுகிறது; மேலும், நமது வாழ்க்கை மற்றும் வேலையைக் குறித்த நமது கண்ணோட்டங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு அதன் கவனத்தில் நிலைநாட்டப்படுகின்றன.

ஆனால் நமது வீழ்ச்சியினால் சிலர் வேலை செய்ய மறுத்து சோம்பேறிகளாக உள்ளார்கள். மற்றவர்களோ தங்கள் வேலைகளில் மந்தமாகவும், அக்கறையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பாவம், அநேக நபரகளை அவர்கள் வேலைகளை சுயநலமாகவும் மற்றும் பண நோக்கத்திலும் பார்க்கச் செய்கிறது. வேறுவிதமாகக் கூறினால், தாங்கள் தேவனுக்குச் செய்யக்கூடிய சேவையையோ அல்லது அவருக்குச் சேர வேண்டிய மகிமையையோ அவர்கள் சிறிதும் மதிப்பதில்லை. அவர்கள் வேலையை, பணம் சம்பாதிப்பதற்கும் அதன் மூலம் தங்களுக்குரிய பொருட்களைப் பெறுவதற்கும் ஒரு வழியாக மட்டுமே பார்க்கிறார்கள்.

பாவம், சிலரைத் தங்கள் வேலையில் மிகவும் மூழ்கடித்து, தங்கள் குடும்பங்களையும், ஏன் தங்கள் சொந்த ஆத்தும நலனையும் கூடப் புறக்கணிக்கச் செய்கிறது. நம் காலத்தில் பலரிடம் காணப்படும் இந்த முனைப்பான, வேலை வெறி மனப்பான்மையானது, வேதத்தில் கூறப்பட்டுள்ள உழைப்பைப் போல் வேடமிடுகிறது. ஆனால் இது ஓர் சுய ஏமாற்றமாகும். நமது அதிகப்படியான உழைப்பு, கடவுளுடனும் குடும்பத்துடனும் போட்டியிடுவதற்காக அல்ல.

பாவம், சிலர் தாங்கள் செய்யும் வேலையின் காரணமாகத் தங்களைப் பற்றி உயர்வான கண்ணோட்டத்தையும் (அதற்கேற்ப மற்றவர்களைப் பற்றித் தாழ்வான கண்ணோட்டத்தையும்) கொண்டிருக்கச் செய்கிறது. நமது கலாச்சாரம் கவர்ச்சிகரமான வேலைகளால் நிறைந்துள்ளது; அவை, நமது பதவிகளின் காரணமாக நாம் இயல்பாகவே மற்றவர்களை விடச் சிறந்தவர்கள் என்று நம்மை எண்ண வைத்து ஏமாற்றுகின்றன. இது, “கவர்ச்சிகரமான” வேலைகளில் இல்லாதவர்களின் உழைப்பு, குணம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பற்றி இழிவான தீர்ப்புகளை வழங்க வழிவகுக்கிறது.

கிறிஸ்தவர்கள் வேலையைப் பற்றிய இத்தகைய தவறான எண்ணங்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் அத்தகைய எண்ணங்கள் நமக்கு வெளிப்படும்போது மனந்திரும்ப வேண்டும். இந்தக் காரணத்திற்காக, ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் வேலையைப் பற்றிய எந்தவொரு விவாதமும் ஓய்வுநாளை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆதியாகமம் 2:3 கூறுகிறது, “தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்; ஏனெனில் தேவன் தாம் சிருஷ்டிப்பில் செய்த தம்முடைய எல்லா வேலையிலிருந்தும் அதில் ஓய்ந்திருந்தார்.” நமது உழைப்பில் நமது சிருஷ்டிகரை நாம் சிந்தித்து மகிமைப்படுத்துவது போலவே, ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதிலும் நாம் அவரைச் சிந்தித்து மகிமைப்படுத்த வேண்டும். அங்குதான் நமது உழைப்பு சரியான கண்ணோட்டத்தில் வைக்கப்படுகிறது. கிறிஸ்துவே நமது இறுதி ஓய்வும், ஓய்வுநாளும் என்று எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் அறிவிக்கிறார் ( எபி. 3:7–4:10 ). நமது உழைப்பிலிருந்து சற்று ஓய்வெடுத்து, அவரையும் நமக்காக அவர் செய்த செயலையும் நாம் தியானிக்கும்போது, நமது நன்றியுணர்வு புதுப்பிக்கப்படுகிறது, மேலும் வாழ்க்கை மற்றும் வேலை பற்றிய நமது கண்ணோட்டங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கவனத்தில் வைக்கப்படுகின்றன. 

அப்படியானால், புராட்டஸ்டன்ட் வேலை நெறிமுறையின் சில தாக்கங்கள் யாவை? சோம்பல், மந்தம் மற்றும் மெத்தனம் ஆகியவை நம் சிருஷ்டிகருக்கு எதிரான மனிதனின் கலகத்தின் வெளிப்பாடுகளாகவும், அவருடைய மகிமைக்கு அவமானமாகவும் இருக்கின்றன.

நமது வேலையை உலகம் வடிவமைப்பதற்கான எண்ணங்களை நமக்குள் நாம் அனுமதித்தோம் என்றால் மிக எளிதில் நமது வேலைகள் விக்கிரகங்களாக மாற்ற நேரிடும். வேலை செய்தால் மட்டும் போதாது, சோம்பலுக்கும், மந்தத்துக்கும் அல்லது மனிதனை பிரியப்படுத்துவதற்கும் நாம் இடங்கொடாதபடி அதை உழைப்போடு செய்யவேண்டும்.

சோம்பல் மற்றும் மந்தநிலையைப் பற்றிய வலிமையான வேத வசனங்களை நம் இருதயங்களுக்கு கொண்டுச் செல்லவேண்டும். நமது வேலையிலும் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நாம் தேவனுடைய மகிமைக்கென்று வாழவேண்டும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கென் ஜோன்ஸ்

கென் ஜோன்ஸ்

போதகர் கென் ஜோன்ஸ் மியாமியில் உள்ள ஓர் மிஷனரி பாப்திஸ்து சபையின் போதகராவார். Experiencing the Truth: Bringing the Reformation to the African-American Church போன்ற சில புத்தகங்களின் ஆசிரியருமாவார். Saints and Sinners Unplugged என்ற பாட்காஸ்டின் இணைத் தொகுப்பாளராகவும் உள்ளார் .