Does God Accept the Worship of All Religions?

எல்லா மதங்களின் ஆராதனையையும் தேவன் ஏற்றுக்கொள்கிறாரா?

16-04-2026
What Promise Did Jesus Give Before His Ascension?

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன் அளித்த வாக்குறுதி என்ன?

23-04-2026
Does God Accept the Worship of All Religions?

எல்லா மதங்களின் ஆராதனையையும் தேவன் ஏற்றுக்கொள்கிறாரா?

16-04-2026
What Promise Did Jesus Give Before His Ascension?

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன் அளித்த வாக்குறுதி என்ன?

23-04-2026

கிறிஸ்தவ வாழ்விற்கான ஓர் தீர்மானம்

A Resolution for the Christian Life

புது வருடத்திற்காக இன்று நாம் அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களிலிருந்து ஒரு வசனத்தை பார்க்க போகிறோம். ஒருவேளை இந்த வசனம் உங்களுக்கு பரீட்சியமாக இருக்கலாம் மற்றும் இருதயப் பூர்வமாகவும் நீங்கள் இந்த வசனத்தை அறிந்திருக்கலாம். ஆனால், உங்களுக்கு அது தெரியாவிட்டாலும், அதை உங்களால் மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். இது பவுலின் தனிப்பட்ட தீர்மானம், பிலிப்பியர் 3:10-14.

“இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும், 

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன். 

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். 

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”

இளம் ஊழியனாகிய தீமோத்தேயு தன்னுடன் இருப்பதாக இந்த நிருபத்தின் துவக்கத்தில் பவுல் கூறுகிறார். பவுல் அடிக்கடி தன் கடிதங்களைச் அவர் சொல்லச் சொல்ல மற்றொருவர் எழுதுவார்; மேலும், இந்தக் கடிதத்திற்குத் தீமோத்தேயு அவருக்குச் செயலாளராகப் பணியாற்றியதால்தான் பவுல் அவரைக் குறிப்பிடுகிறாரோ என்று நான் சில சமயங்களில் யோசிப்பதுண்டு. இது “பவுலும் தீமோத்தேயுவும்” என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது; விசுவாசத்தில் தன் குமாரனான அவனிடம், தன் சொந்தப் பெயரை எழுதும்படி கூறியபோது, அவர் அவனுக்கு ஒரு மெல்லிய புன்னகையை அளித்திருப்பாரோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். 

ஒருவேளை இது இவ்வாறுதான் இருக்குமென்றால், பவுல் இந்த பகுதியில், “ஆனால் நான் ஒன்று செய்கிறேன்” என்று சொல்லும்போது, தீமோத்தேயு பவுலை ஓர் விசித்திர பார்வையுடன்  நோக்கிப் பார்த்திருப்பார் என்று நான் எண்ணுகிறேன். பவுல், தான் கூறிய அந்த ஒன்றை தீமோத்தேயுவுக்குப் புரியவில்லையா என்று கேட்டிருந்தால், ஒருவேளை தீமோத்தேயு பின்வருமாறு பதிலளித்திருப்பார்: “பவுலே, நீங்கள் ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்கிறீர்கள் என்று நான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா? எனக்கு உங்களைத் தெரிந்த காலம் முழுவதிலும், நீங்கள் எப்போதும் பல காரியங்களை அதுவும் ஒரே நேரத்தில் செய்துகொண்டேதான் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்யும் அப்போஸ்தலர். நீங்கள் எப்போதும் பிரயாணம் செய்கிறீர்கள்; எப்போதும் பிரசங்கம் பண்ணுகிறீர்கள்; எப்போதும் ஜெபிக்கிறீர்கள்; எப்போதும் பிறரை சந்திக்கிறீர்கள்; எப்போதும் ஆலோசனை கொடுக்கிறீர்கள். ஒரு காரியத்தை மட்டுமே நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை.”

இதுதான் உங்களுக்கு வழிகாட்டும். “நான் உண்மையில் எதற்காக இங்கு இருக்கிறேன்?” என்ற கேள்விக்கு இதுதான் பதிலளிக்க உதவும்.

ஒருவேளை பவுல் தனது இளம் நண்பனாகிய தீமோத்தேயுவைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “ தீமோத்தேயு நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்கு புரிகிறது” என்று கூறியிருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். நான் என்ன செய்கிறேன் எந்தளவுக்கு ஓய்வில்லாமல் இருக்கிறேன் என்பதை உன்னைவிட யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் நீ அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், அநேக விதமான காரியங்களை செய்வதினால் நான் இங்கு ஓய்வில்லாமல் இல்லை. நான் ஒரு காரியத்தை பலவிதங்களில் செய்வதில் மும்முரமாக இருக்கிறேன். இவையனைத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அதிகமாக அறிவதையும் அவரது வாழ்வில் பங்கடைந்து அவரைப் போல மாறுவதையும் பற்றியது. இதுவே நான் செய்யும் அனைத்து காரியங்கள் மற்றும் விழித்திருக்கும் ஒவ்வொரு மணிநேரம் மற்றும் நான் செய்யும் எல்லா செயல்களின் இருதயமும் இரகசியமுமாக உள்ளது. அவையெல்லாம் இந்த ஒரே ஒரு காரியத்தைச் செய்வதற்கான வெவ்வேறு வழிகள் மட்டுமே.

நான் ஸ்காட்லாந்தில் சிறுவனாக இருந்தபோது, ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய இரவிலும் (அதை ‘ஹாக்மேனே’ என்று அழைப்பார்கள்), என் பெற்றோர் என்னை என் அறைக்கு அழைத்துச் சென்று, வரவிருக்கும் ஆண்டிற்கான பத்து புத்தாண்டுத் தீர்மானங்களை எழுதச் சொல்வார்கள். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய பத்து வழிகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்று நினைத்தேன் என்பதை நினைத்துச் சிரிக்கிறேன். இன்று அவற்றை என்னால் இன்னும் எளிதாக எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், உங்களுக்கு உண்மையில் ஒரே ஒரு புத்தாண்டுத் தீர்மானம் மட்டுமே தேவை, மேலும் பவுலின் தீர்மானம் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக நீங்கள் ஒரு இளம் கிறிஸ்தவராகவோ அல்லது இளவயதினராகவோ இருந்தால், உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி ஒருங்கிணைப்பதற்கான வழி இதுதான் என்பதைப் புரிந்துகொள்வதை விட வேறு சில காரியங்கள் உங்களுக்கு அதிக உதவியாக இருக்கும். அதுவே உங்களுக்கு வழிகாட்டும்.அது,  “நான் உண்மையில் எதற்காக இங்கே இருக்கிறேன்?” என்ற மாபெரும் கேள்விக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவும்.

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும், 

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். (பிலிப்பியர் 3:10-14).

என்னவொரு அருமையான புத்தாண்டுத் தீர்மானம் இது!. நான் செய்யும் ஒரே ஒரு காரியம் இதுதான்: நான் கிறிஸ்துவை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

சின்க்ளேர் பி. ஃபெர்குசன்

சின்க்ளேர் பி. ஃபெர்குசன்

டாக்டர் சின்க்ளேர் பி. ஃபெர்குசன், லிகோனியர் ஊழியத்தில் ஆசிரியராகவும், துணைத் தலைவர் மற்றும் சீர்திருத்த இறையியல் செமினரியில் ஒழுங்குமுறை இறையியலுக்கான வேந்தர் பேராசிரியரும் ஆவார். அவர் “sojourners and exiles உட்பட பல லிகோனியர் போதனைத் தொடர்களில் முக்கிய ஆசிரியராகவும், 'the whole Christ' , 'maturity' , மற்றும் 'devote to God's church' உள்ளிட்ட பல புத்தகங்களின் ஆசிரியராகவும், 'Things unseen' என்ற பாட்காஸ்டின் தொகுப்பாளராகவும் உள்ளார் .