
கிறிஸ்தவ வாழ்வில் நம்பிக்கையின் பங்கு
14-04-2026
கிறிஸ்தவ வாழ்விற்கான ஓர் தீர்மானம்
21-04-2026எல்லா மதங்களின் ஆராதனையையும் தேவன் ஏற்றுக்கொள்கிறாரா?
தற்போதைய நவீன உலகில், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பாலும் ஒரு கருத்தை உறுதிபடக் கூறுகிறார்கள்: அதாவது, கடவுளை வழிபடும் எந்த ஒரு நபருடைய பக்தியும் நேர்மையானதாக இருக்குமானால், எல்லா மதங்களின் ஆராதனையையும்
தேவன் ஏற்றுக்கொள்கிறார் என்பதே அக்கருத்து. இருப்பினும், இத்தகைய கருத்திற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, வேதாகமம் இதற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்துகிறது.
பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையிலேயே இது தெளிவாகக் காணப்படுகிறது: “என்னையல்லாமல் உங்களுக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” (யாத். 20:2). பண்டைய காலத்தில் இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கிழக்கு பகுதியானது அனைத்து வகையான மதங்களாலும் “தேவர்களாலும்”சூழப்பட்டிருந்தது . தேவன் இந்த பிற மதங்களை நிராகரிக்கிறார். ஏன்? ஏனெனில் இந்த பிற மதங்களின் “தேவர்கள்” உண்மையில் பிசாசுகள் (demons), மற்றும் அந்தப் பிசாசுகளை வழிபடுவது அருவருப்பானது (லேவி. 17:7; உப. 32:16–17). இதே கருத்தையே அப்போஸ்தலனாகிய பவுலும் புதிய ஏற்பாட்டில் போதிக்கிறார் (1 கொரி. 10:20).
இயேசு தனது சோதனையின் போது, உபாகமம் 6:13-ஐ சாத்தானிடம் மேற்கோள் காட்டி: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்று கூறினார் (மத். 4:10). இது ஒரு “மதம் சார்ந்த தனித்துவமான கொள்கையாகும்” (religious exclusivism) ஆகும். இயேசு கிறிஸ்துவின் மானுடபிறப்பில், தேவனோடிருந்தவரும் தேவனாயிருந்தவருமான அந்த வார்த்தை, மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் (யோவான் 1:1, 14). அவரே இப்போது தேவனுக்கும் மனுஷருக்கும் இடையில் இருக்கிற ஒரே மத்தியஸ்தர் (1 தீமோ. 2:5). அவரைத் தவிர வேறு யாருமில்லை.
தேவன் எல்லா மதங்களின் வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டிருந்தால், கிறிஸ்துவின் மானுடப்பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு எந்தத் தேவையுமிருந்திருக்காது. தேவன் எல்லா மதங்களையும் அங்கீகரித்திருந்தால், கிறிஸ்துவின் சிலுவைப் பலி அவசியமற்றதாகி இருக்கும்.
இயேசு தாமே கிறிஸ்தவத்தின் இந்தத் தனித்துவத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). “ஒருவனும்” என்றால் ஒருவருமே இல்லை என்று அர்த்தம். இதனால்தான் பேதுரு பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய் இயேசுவைக் குறித்து இவ்வாறு பிரகடனம் செய்தார்: “அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12). இரட்சிப்பைத் தேடுகிறவர்களுக்கு, அவரைத் தவிர வேறு எவருமில்லை.
தேவன் எல்லா மதங்களின் வழிபாட்டையும் அங்கீகரித்திருந்தால், இயேசு கிறிஸ்துவின் மானுட பிறப்பு, மரணம், மற்றும் உயிர்த்தெழுதலுக்கான எந்தவித அவசியமும் இருந்திருக்காது. ஏனெனில் முதலாம் நூற்றாண்டிலேயே ஏராளமான மதங்கள் புழக்கத்தில் இருந்தன. மட்டுமல்ல” இயேசுகிறிஸ்துவின் மகா பிரதான கட்டளைக்கும்” (Great Commission) உலக நாடுகளுக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும் எந்தத் தேவையுமிருந்திருக்காது. தேவன் எல்லா மதங்களையும் ஏற்றுக்கொண்டால், இயேசு கட்டளையிட்ட சுவிசேஷப் பணி என்பது வெறும் நேரத்தை வீணடிக்கும் செயல்போல் காணப்படும்.
தேவன் தாம் கிருபையாக வழங்கிய அந்த ஒரே மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. படைத்தவரை வழிபடுவதற்குப் பதிலாக, படைப்புகளை வழிபடும் மதங்களை அவர் ஏற்பதில்லை. தேவன் தவறான வழிபாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும், எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் மதங்களை விட்டு மனந்திரும்பி, கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, இவர் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


