பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனம் அனைத்திற்கும் அஸ்திபாரமான உறுதி மொழியை முன்வைக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி 1:1). வேதத்தின் இந்த முதல் வாக்கியத்தில் மூன்று அடிப்படையான காரியங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: 1) ஆதி ஒன்று இருந்தது; 2) தேவன் ஒருவர் இருக்கிறார்; 3) சிருஷ்டிப்பு இருக்கிறது.