Who Was Samson?
யார் இந்த சிம்சோன்?
26-02-2026
What Is a Confession of Sin?
பாவ அறிக்கை என்றால் என்ன?
05-03-2026
Who Was Samson?
யார் இந்த சிம்சோன்?
26-02-2026
What Is a Confession of Sin?
பாவ அறிக்கை என்றால் என்ன?
05-03-2026

பாவ மன்னிப்பின் நிச்சயம் என்றால் என்ன?

What Is an Assurance of Pardon?

உலகில் கடவுள் நம்பிக்கையற்ற பலரும் கூட “பிதாவே, நான் பாவம் செய்திருக்கிறேன் என்னை ஆசீர்வதியும்” என்ற ரோம கத்தோலிக்கரின் பிரபலமான வரியை நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்த வாக்கியமானது ரோம கத்தோலிக்கத்தின் ஓர் உறுப்பினர் ஒரு பாதிரியாருடன் தனியாக பாவ அறிக்கை செய்யும்போது, பாவத்தின் யதார்த்தத்தையும் கிருபையின் தேவையையும் படம்பிடிக்கும் வார்த்தைகள் இவை. இதற்கு பிறகு என்ன நடக்கும்? ஒப்புக்கொள்ளப்பட்ட பாவங்களின் பட்டியலுக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த பாதிரியார் மனந்திரும்புதலின் சில படி முறைகளை கூறி இறுதியாக பாவமன்னிப்பை அவர்கள்மீது கூறுவார். சீர்திருத்த கிறிஸ்தவம் ஒரு சில முக்கிய வேறுபாடுகளுடன் பாவத்தை அறிக்கைச் செய்தலையும் மன்னிப்பை பெறுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. 

முதல் வேறுபாடு, நாம் யாரிடம் பாவத்தை அறிக்கைச் செய்கிறோம் என்பதைப் பற்றியது. “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.” (1 தீமோத்தேயு 2:5) என்று வேதம் கூறுகிறபடியால், நமது பாவத்தினால் ஏற்பட்ட பிளவை சரிசெய்ய எவ்வித மனித ஆசாரியனாலும் அல்லது போதகராலும் இயலாது அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே முடியும் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். நேரடியாக நமது பாவங்களை பிதாவிடம் அறிக்கையிட்டு நமது மகத்துவமான பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவின் இரக்கங்களை பெற நாம் கெஞ்சுகிறோம்.

இரண்டாவது வேறுபாடு, நமது பாவ அறிக்கை எங்கு செய்யவேண்டும் என்பதை பற்றியது. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் பாவத்தை தனியாக அறிக்கைச் செய்யக்கூடிய இடத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை கருத்தில் எடுத்து, பாவ அறிக்கையை ஆராதனையின் ஒரு பகுதியாக முன் நிறுத்தினர். பல நூற்றாண்டுகளாக, “சுத்திகரிப்பு” என்கிற பகுதி சீர்திருத்த ஆராதனையின் ஒழுங்கு முறையாக இருந்து வருகிறது. அதாவது, தேவனுடைய வார்த்தை வாசிக்கப்படும்போது, மக்கள் இதற்கு மறுமொழியாக தங்கள் பாவங்களை அறிக்கை செய்வார்கள் பிறகு கிறிஸ்து இயேசுவுக்குள் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு அந்த ஊழியர் மன்னிப்பை அறிவிப்பார்.

ஏன் இது திருச்சபை ஆராதனையின் ஒரு பகுதியாக உள்ளது? பாவத்தை அறிக்கை செய்வதென்பது தனிப்பட்ட மற்றும் இரகசிய காரியமாக தோன்றலாம். ஒருவேளை கடந்த வாரத்தில் உங்கள் பாவங்களை நேருக்கு நேர் பேசும் சபை ஆராதனையில் நீங்கள் சங்கடமாக உணர்ந்திருக்கலாம். எனவே அநேக சபைகளில் மக்கள் தங்களை சங்கடமாக உணரக்கூடாது என்பதற்காகவே பாவ அறிக்கை செய்தலையும் அதைப்பற்றிய பிரமாணத்தை வாசிப்பதையும் நிராகரித்து விட்டார்கள். ஆனால் சீர்திருத்த வாதிகள் வேறொரு பாதையில் சென்றனர். அதற்கான காரணம் ஆராதனை முறையோடு தொடர்புடையது. 

ஆராதனை என்பது தேவனை சந்திப்பது, அங்கு பாவியான மனிதன் பரிசுத்தமுள்ள தேவனின் பிரசன்னத்திற்கு முன் வரமுடியாது. கிறிஸ்து இயேசுவுக்குள் பாவத்தை அறிக்கைச் செய்வதும் கிறிஸ்துவின் நீதியை பிரகடனப்படுத்துவது என்பது சுவிசேஷத்திற்கு அப்பால் ஆராதனை என்பது சாத்தியமற்றது என்பதை நினைவுப் படுத்தும் ஓர் வல்லமையான நினைவூட்டலாகும். மேலும், கிறிஸ்தவ அடையாளங்களை உருவாக்கவும் பலப்படுத்தவும் ஆராதனை உள்ளது. விசுவாசிகளாக நாம் பார்க்கும்போது, நாம் பாவிகளாகவும் உள்ளோம் அதேபோல் பரிசுத்தவான்களாகவும் உள்ளோம் (1 யோவான் 1:8-9). சபை ஆராதனையில் கிறிஸ்து இயேசுவில் நமக்கு கிடைத்த மன்னிப்பை ஊழியர் பிரசங்கிக்கும்போது ஒரு உற்சாகமான தருணம் நிகழ்கிறது, தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு, அவருடைய பார்வையில் விலையேறப்பெற்ற, கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவிகளாகிய நம்மீது நாம் கிறிஸ்துவுக்குள் யார் என்ற அடையாளத்தை பதியவைக்கிறது. 

ஏற்கனவே நாம் மன்னிக்கப்பட்டிருப்பினும், அநேக நேரங்களில் நாம் இதை மறந்து விடுவதால் சந்தேகத்திற்கும் கீழ்படியாமைக்கும் இது நம்மை கொண்டுச்செல்கிறது.

ரோம கத்தோலிக்கர்களுக்கும் சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள பாவ மன்னிப்பைப் பற்றிய மூன்றாவதுவேறுபாட்டிற்கு இது நம்மை கூட்டிச் செல்கிறது: பாவ மன்னிப்பை போதகர் அறிவிக்கும் போது என்ன நடைபெறுகிறது. போதகர் இதைச் செய்யும்போது தானாக எதையாவது இங்கு ஆணையிடுவதில்லை , ஆனால் வேதத்தின்படி ஏற்கனவே உண்மையாக இருப்பதை மட்டுமே அறிவிக்கிறார். அதாவது, “பாவத்தை மன்னித்தல்” (லத்தின் அர்த்தம் “விடுதலையாக்குதல்”) இது ஓர் பாதிரியார் ஒரு நபரின் பாவத்தை மன்னித்து விடுதலையாக்குவதை குறிக்கிறது. ஆனால் பாவங்களை மன்னிக்க மனுஷனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை (மாற்கு 2:7), ஆனால் பாவம் மன்னிக்கப்பட்டதை பிரசங்கிப்பதற்கு உரிமையுண்டு (அப் 13:48). சீர்திருத்த ஆராதனையின் இந்த இக்கட்டான நிகழ்வில், போதகர் தேவனுக்கு பதிலாக தேவனின் இடத்தில் அல்ல மாறாக தேவனுடைய இடத்தில் நின்று, அவரது உதடுகள் வழியாக நமது மன்னிக்கும் மற்றும் இரக்கமுள்ள தேவனின் வார்த்தைகளை நாம் கேட்கிறோம்: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (ரோமர் 8:1). அதனால்தான் பல சீர்திருத்த திருச்சபைகளில் மன்னிப்பை அறிவிப்பதில் சுவிசேஷ மன்னிப்பு மற்றும் அதன் நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்தும் வேதத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பது அடங்கும். இது கடவுளின் வார்த்தையும் வாக்குறுதியும் ஆகும், அதில் நாம் மன்னிப்பின் உறுதியைக் காண்கிறோம்.

இதைக் கருத்தில் கொண்டு, பாவ மன்னிப்பு அறிவிப்பு என்பது சீர்திருத்த ஆராதனையின் முக்கியமான ஒன்றாகும். பாவம் நம்மைத் தாழ்த்துகிறது, ஆனால் நற்செய்தி நம்மை உயர்த்துகிறது ( சங். 32:3–5 ஐப் பார்க்கவும் ). அது நமது நம்பிக்கையின் எரிபொருளாகவும், நமது கீழ்ப்படிதலின் பலமாகவும் இருக்கிறது. ஆராதனை என்பது “சகல கிருபையும் பொருந்திய தேவனை” ( 1 பேதுரு 5:10 ) சந்திக்கும் நேரம், தகுதியற்ற துரோகிகளை அணுகும் கடவுள், தாவீது சொல்வது போல், “என் தலையை உயர்த்துபவர்” ( சங். 3:3 ) ஆவார். அவர் “கோபத்திற்கு மெதுவாகவும், நிலையான அன்பிலும் உண்மையிலும் நிறைந்தவராகவும்” இருக்கும் தேவன் ( யாத். 34:6 ). பொது ஆராதனையில் குறிப்பாக பாவ அறிக்கை நேரத்திலும், மன்னிப்பிலும், அவரது இதயம் முழுமையாக வெளிப்படுகிறது. 

கிறிஸ்துவில் ஏற்கனவே நம்பிக்கை வைத்திருப்பவர்கள், ஒரு போதகர் அதை அறிவிப்பதற்கு முன்பே மன்னிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் நம்மில் அல்லது நமக்கும் கடவுளுக்கும் இடையில் எதுவும் புறநிலையாக மாறாது. ஆனால் நாம் ஏற்கனவே நாம் மன்னிக்கப்பட்டிருப்பினும், அநேக நேரங்களில் நாம் இதை மறந்து விடுவதால் சந்தேகத்திற்கும் கீழ்படியாமைக்கும் இது நம்மை கொண்டுச்செல்கிறது. ஆகையால், மன்னிப்பின் நிச்சயம் என்பது, கடவுளின் மக்களாக நாம் யார் என்பதற்கான ஒரு தேவையான நினைவூட்டலாகும்: “முன்பு நீங்கள் ஒரு ஜனமாயிராதீர்கள், இப்பொழுதோ தேவனுடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; ஒரு காலத்தில் நீங்கள் இரக்கம் பெறாதிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றிருக்கிறீர்கள்” ( 1 பேதுரு 2:10 ).

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஜொனாத்தன் லேண்ட்ரி க்ரூஸ்
ஜொனாத்தன் லேண்ட்ரி க்ரூஸ்
Rev.ஜொனாத்தன் லேண்ட்ரி க்ரூஸ் மெக்சிகனில் உள்ள கலகமாசூவில் அமைந்துள்ள சமூக பிரஸ்பைடீரியன் திருச்சபையின் (Community Presbyterian Church) போதகர் ஆவார். அங்கு அவர் தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் வசிக்கிறார். அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் கீர்த்தனைகள் (hymns) மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: Hymns of Devotion - பக்திப் பாடல்கள் The Christian’s True Identity - ஒரு கிறிஸ்தவனின் உண்மையான அடையாளம் The Character of Christ - கிறிஸ்துவின் குணம் ஆகும்.