
ஜான் கால்வினின் சபையின் சீர்திருத்தத்தின் அவசியம்
25-01-2025
எண்ணாகமம் புத்தகத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.
31-01-2025யாத்திராகமம் புத்தகத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்.

நான் யாத்திராகமம் புத்தகத்தைக் கற்பிக்கும்போது, அதின் ஆசிரியர் மோசே எகிப்திய கலாச்சாரத்தில் எவ்வளவு ஆழமாக மூழ்கி அதை எழுதியிருக்கிறார் என்பது என் மாணவர்களில் பலருக்கு பெரும்பாலும் தெரியாமல் இருக்கிறது என்பதுதான் நான் காணும் உண்மைகளில் ஒன்று. இந்த வகையான சிந்தனை இன்றைய திருச்சபைகளிலும் பெரும்பாலும் காணப்படுகிறது என்று நான் நம்புகிறேன். யூத மற்றும் கிறிஸ்தவ சரித்திரம் இரண்டும் மோசே தான் யாத்திராகமத்தின் ஆசிரியர் என்று ஒப்புக் கொள்கின்றன. மோசே எகிப்தின் மொழியையும், எகிப்திய மக்களின் இறையியலையும், அவர்கள் நிலத்தின் வாழ்க்கை முறையையும் நன்கு அறிந்திருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மோசே எகிப்தைப் பற்றி தொலைவில் இருந்து எழுதவில்லை, எகிப்திய கலாச்சாரத்தின் உள்ளுணர்வுகளைப் பற்றி அவர் தனிப்பட்ட முறையில் அறிந்தும், பண்டைய எகிப்தின் எல்லா செயல்பாடுகளும் அவருக்கு ஆழமான பரிச்சயமுமாக இருந்தது. மேலும் இந்த உண்மையை பிரதிபலிக்கும் வண்ணமாக யாத்திராகம புத்தகத்தில் உள்ள மூன்று பகுதிகளை நான் சுருக்கமாக விளக்கபடுத்த விரும்புகிறேன்.
1. யாத்திராகமம் புத்தகத்தில் ஆழமான கருப்பொருள் இணை ஒற்றுமைகள் உள்ளன, சில நேரங்களில் அவை நம்மால் தவறவிடப்படலாம். உதாரணமாக –
யாத்திராகமம் 2:1–10 இல், மோசேயின் தாயார் யாக்கொபெத் குழந்தையை “ஒரு நாணற்பெட்டியில்” (யாத்திராகமம் 2:3, NIV) வைத்ததாகவும், இதனால் அவரை நைல் நதியின் கரையில் உள்ள நாணல்களுக்குள்ளே வைத்ததாகவும் நாம் வாசிக்கிறோம். “ஒரு நாணற்பெட்டியில்” என்ற எபிரேய வார்த்தைக்கு இரண்டு எகிப்திய வார்த்தைகள் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது. முதலாவது கோம், அதாவது ” papyrus, பாப்பிரஸ் (நாணல்)” என்பதற்கான எகிப்திய வார்த்தை, அதாவது எகிப்திய நைல்நதி நீரில் காணப்படும் நீண்ட நாணல்கள். இரண்டாவது சொல் “tevah, தேவா (மார்பு, சவப்பெட்டி, பேழை)” என்று பொருள்படும் எகிப்திய வார்த்தை. இதே வார்த்தை பழைய ஏற்பாட்டில் உள்ள மற்றொரு நிகழ்வில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, அதில் “கர்த்தர் நோவாவிடம், ‘நீங்களும் உங்கள் முழு குடும்பமும் பேழைக்குள் (tevah, தேவா) செல்லுங்கள்’ என்று கூறினார்” (ஆதியாகமம் 7:1, NIV). இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இங்கே நாம் காண்பது ஒரு பெரிய கருப்பொருள் ஒப்புமை இணையாகும்: நோவாவும் மோசேயும் தண்ணீர் சோதனைகளுக்கு உட்படுகிறார்கள், அதில் அவர்கள் இருவரும் ஒரு பேழைக்குள் நுழைந்து, உயிர் பிழைத்து, பின்னர் தங்கள் மக்களுக்கு மீட்பர்களாக மாறுகிறார்கள். (நோவாவும் யாக்கொபேத்தும் பேழைகளை அழிவுகரமான கூறுகளிலிருந்து பாதுகாக்க “pitch- பிட்ச் (பிசினும்,கீலும்)” கொண்டு மூடினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் [ஆதியாகமம் 6:14 ஐப் பார்க்கவும்].)
இதே பகுதியின் யாத்திராகமம் 2:10 வது வசனத்தில், மோசேயை தனது சொந்த மகனாக வளர்த்த பார்வோனின் மகள் மோசேக்கு பெயரிட்டதைப் பற்றி வாசிக்கிறோம். அவள் அந்தக் குழந்தைக்கு “மோசே” என்று பெயரிட்டாள் அந்த குழந்தை ‘தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது’ அதனால் அதற்கு மோசே என்று பெயரிடுகிறதை பார்க்கிறோம். எகிப்திய மொழியில் இந்த பெயருக்கான அர்த்தம் ‘இன்னாருடைய மகன்’ (son of) என்பதாகும். எகிப்தியர் இதை அடிக்கடி வேறு வார்த்தைகளுடன் இணைத்து பயன்படுத்துகின்றனர்: உதாரணமாக Thutmosis (son of Thut) துட்மோசிஸ் (துட்டின் மகன்) மற்றும் அஹ்மோசிஸ் (Ahmosis- son of Ah) ஆவின் மகன் ஆகியவை நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள். இருப்பினும், மோசேயைப் பொறுத்தவரை, அவரது பெயருக்கு மரபணு வகை (இன்னாரின் மகன்) என்று எதுவும் அவர்களுக்கு இல்லை; ஆனால் அவரது பெயருக்கு “மகன்” என்று பொருள்படும். மோசே உண்மையில் எகிப்தின் மகன் அல்ல என்பதை வலியுறுத்த அதின் ஆசிரியர் பயன்படுத்திய சிலேடை சொல்லாக இது இருக்கலாம்; பின்னர் அவர் எகிப்தை நிராகரித்து அவர் இஸ்ரவேலின் மகன் என்பதை உறுதிப்படுதியதை நாம் புதிய ஏற்பாட்டில் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கிறோம் (எபி. 11:24–25 ஐப் பார்க்கவும்).
2. யாத்திராகமத்தில் தேவனின் வாதைகள் அவருடைய வல்லமையை மட்டுமல்ல, எகிப்தின் கடவுள்களுடன் ஒப்பிட்டு அவருடைய வல்லமையின் மகத்துவத்தை காட்டுகின்றன.
மக்கள் அடிக்கடி கவனிக்காத யாத்திராகமம் புத்தகத்தைப் பற்றிய இரண்டாவது உண்மை என்னவென்றால், எகிப்தை அழிக்கும்படியான வாதைகளில் இஸ்ரவேலின் தேவனுக்கும் எகிப்தின் தேவர்களுக்கும் நடுவில் நடக்கும் பெரிய யுத்தத்தையே. நைல் நதியை அடித்து அதன் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதிலிருந்து முதலாம் வாதையானது துவங்குகிறது. தேவன் எகிப்தியர்களுக்கு ஏன் இவ்விதமான ஒரு நியாயத்தீர்ப்பை தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும்(யாத் 7: 14-25). பண்டைய காலத்து எகிப்தியர்கள் நைல் நதியையே தங்களுடைய முதன்மையான வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். அந்த நதியினுடைய தண்ணீரானது நிலங்களை நிரப்பி நன்மையை கொண்டு வருவதினால் அது தெய்வீகத் தன்மை உள்ளதாக அதற்கு உருவம் கொடுத்து அதையே கடவுளாக (the god Hapi) – ‘ஹாப்பி’ என்கிற பெயரினால் அவர்கள் அதை கொண்டாடினார்கள். நைல் நதியினுடைய தண்ணீரை ரத்தமாக மாற்றியதால் தேவன் எகிப்தியருடைய தெய்வீகத் தன்மையை அங்கே அவமாக்குகிறார். மனிதனுடைய முக்கியமான வாழ்வாதாரமானது சர்வ வல்லமை கொண்ட தேவனுடைய கரத்திலிருந்தே வருகிறதே ஒழிய அது வெறுமனே எகிப்தியர்களுடைய தவறான புறமத தெய்வீக நம்பிக்கையினால் உருவாகவில்லை என்று இந்த வாதையின் மூலமாக தேவன் அதை விளக்கப்படுத்துகிறார். தேவன் அனுமதிக்கும் மற்ற வாதைகளில் பெரும்பான்மையானவைகள் எகிப்தியருடைய தெய்வீக நம்பிக்கையை அவமாக்கும்படியாகவே தேவன் அனுப்புகிறதை காணலாம். இதிலும் நாம் அநேக கருப்பொருள் இணை ஒற்றுமைகள் உள்ளதை அறியலாம்.
3. யாத்திராகமம் புத்தகமானது எகிப்தியருடைய இலக்கியங்களை வேண்டுமென்றே குறிப்பிட்டு சொல்வதை நோக்கமாக கொண்டிருப்பதை காணாலாம். அதில் ஒரு காட்சியை உங்களுக்கு விளக்கப்படுத்த விரும்புகிறேன்.
வேதத்தை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு இங்கே காணப்படும் மூன்றாவது முக்கியமான பாடம் என்னவென்றால், மோசே யாத்திராகமம் புத்தகத்தை எழுதும் போது பண்டைய காலத்து எகிப்தியருடைய இலக்கியத்தை கூர்ந்து கவனித்து அதை எழுதியிருக்கிறார். ஸ்தேவான் அப்போஸ்தலர் 7:22 இல் “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டான்” என்று மேற்கோள் காட்டுகிறார். தேவன் செய்த மிகப் பெரிய, பிரம்மிப்பூட்டும் செங்கடலை பிளக்கும் நிகழ்வானது, எகிப்தியருடைய காலத்தில் அவர்களுடைய ஆசாரியர்களும் இதே போன்று திரளான தண்ணீரை பிரித்ததை போன்ற கற்பனை கதையானது காணப்பட்டது என்பது சுவாரசியமான ஒன்றே. இந்த கற்பனை கதையிலும் எகிப்திய மன்னனான (Snofru) ஸ்னோப்ரூ ஒரு சமயத்தில் ஒரு ஆற்றில் படகு சவாரி செய்த போது, இந்தப் படகை இயக்கிய பெண்களில் ஒருவர் தன்னுடைய வசீகரமான மீன் வடிவிலான துடுப்பை ஒரு ஆற்றிலே தவறவிட்டதாகவும், அதை அந்த ராஜா தன்னுடைய ஆசாரியர்களுக்கு தெரிவித்த போது அவர்கள் அந்த அழகிய துடுப்பை கண்டுபிடிக்கும்படியாய் அந்த ஆற்றின் ஒரு பக்கத்து தண்ணீரை மற்றொரு பக்கத்தின் மேல் நிற்கும்படியாக செய்து அந்த துடுப்பை தரையிலிருந்து எடுத்ததாகவும் அந்த கற்பனை கதையானது அமைந்திருந்தது. அந்த துடுப்பை எடுத்த பின்பு அவர்கள் பழைய நிலைக்கே அந்த ஆற்றினுடைய தண்ணீரை மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. மோசே, செங்கடலை தேவன் பிளந்த அந்த நிகழ்வை விளக்குவது, எகிப்தியருடைய கட்டுக் கதைகளை நொறுக்குவதை போன்று அமைந்திருக்கிறது. எகிப்தியருடைய ஆசாரியர்கள் அற்பமான பொருளை தேடும்படியாக ஆற்றினுடைய திரளான தண்ணீரை பிரித்ததை காட்டிலும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் செங்கடலை இரண்டாக பிளந்து வெட்டாந்த்தந்திரையில் ஒரு பெரிய தேசத்தையே அதனூடே கடக்கச் செய்தது மிகப்பெரிய நிகழ்வாகும். இவ்விதமான வல்லமையான கிரியைகளை நடப்பிக்க எந்த தேவனால் கூடும்? என்பதைப்போல மகிமையாய் எழுதபட்டிருக்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.