
யாத்திராகமம் புத்தகத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்.
29-01-2025
யோசுவா புத்தகத்திலிருந்து நீங்கள் அறியவேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.
04-02-2025எண்ணாகமம் புத்தகத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.

1. எண்ணாகமம் புத்தகமானது வெறும் எண்களை மட்டும் கொண்ட ஒரு புத்தகமல்ல.
எபிரேய வேதத்தில் இந்தப் புத்தகத்திற்கு ‘வனாந்திரத்தில்” என்கிற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பே அந்த புத்தகத்தின் பக்கமாக நம்மை ஈர்க்கக்கூடிய விரிவாக்கத்தை தருகிறது. இந்த புத்தகமானது இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து புறப்பட்டது முதல் சீனாய் மலையையும் கடந்து அவர்கள் சந்தித்த அனுபவங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் ஓரமாக அவர்கள் பாளையம் இறங்கினது வரைக்கும் உள்ள எல்லாவற்றையும் விவரிக்கிறதாக இருக்கிறது. சீனாய் மலையில் இருந்து கானானுக்குள் பிரவேசிக்க சில வாரங்களே அவர்களுக்கு இருந்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த தேசத்தை உளவுபார்க்க அவர்கள் 12 பேரை தெரிந்து கொண்டு அங்கே அனுப்பினார்கள், அதில் அதிகமான பேர் அத்தேசத்தை குறித்து துர்ச்செய்தியை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். அத்தேசத்தில் குடியிருப்பவர்கள் நெடியவர்களும் அவர்களுடைய பட்டணங்கள் அரணிப்பானவைகளுமாக இருப்பதாக அவர்கள் செய்தி பரப்பினார்கள். மேலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்றும் எண்ணினார்கள் (எண்ணா 13- 14). ஆனால் யோசுவாவும் காலேபும் தேவனை நோக்கி பார்த்தவர்களாய் வித்தியாசமாக அதைப் பார்த்தார்கள், அதாவது தேவன் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணுவார் என்றும் அவர் இந்த தேசத்தை சுதந்தரிக்கும்படி செய்வார் என்றும் தைரியமாய் உரைத்தார்கள் ஆனால் சிறு எண்ணிக்கையிலான அவர்களுடைய பேச்சு ஏற்புடையதாய் அந்த மக்களுக்கு இருக்கவில்லை. இதன் விளைவாக தேவன் அந்த ஜனங்களை வனாந்தரத்திலே அடுத்த நாற்பது வருடங்களுக்கு அலைந்து திரிந்து, அவர்களில் தேவனை பரீட்சை பார்த்த அனைவரும் வனாந்தரத்தில் அழியும்படியாக அவர்களை தண்டித்தார். இதன் பின்பாகவே அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்கும்படியாக தேவன் அவர்களை வனாந்தரத்தில் நாற்பது வருடம் அலைந்து திரிய பண்ணினார்.
2. எண்ணாகமம் புத்தகத்தில் காணப்படும் முக்கியமான எண்களில் ஒன்று 2 என்ற எண்ணாகும்.
எண்ணாகமம் புத்தகத்தில் அநேக மக்களின் எண்ணிக்கை இடம்பெற்றிருந்தாலும், மக்கள் தொகையானது இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது (எண். 1; 26). அவ்வளவு நீண்ட பட்டியலின் பெயர்களும் எண்களும் நமக்கு தேவையில்லாத ஒன்றாக காணப்படலாம், எடுத்துக்காட்டாக விளையாட்டில் ஆர்வம் இல்லாத ஒருவருக்கு அதைப்பற்றிய நம்முடைய புள்ளிவிவரம் தேவை இல்லாத ஒன்றாகவும், அதே போல் தொழில் துறையை சார்ந்த புள்ளிவிவரங்கள் அதில் ஈடுபடாத ஒருவருக்கு தேவையற்றதாகவும் இருப்பதைப் போன்று எண்ணாகமம் புத்தகத்தில் இடம்பெறும் பெயர்களும் எண்களும் குறித்ததான முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடும். எப்படியாக இருந்தாலும் இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் திரிந்த வருஷங்களுடைய முழு காரியங்களையும் விளக்க வேண்டியது மிக முக்கிய கடமையாக உள்ளது.
இந்த முழு புத்தகத்திலேயும் 2 என்ற எண்ணானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எண்ணாகமம் புத்தகமானது தேவனை விசுவாசிக்க மறந்த ஒரு ஒரு சந்ததியையும், அதன் விளைவாக அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் வனாந்தரத்திலே அலைந்து திரிந்ததையும் அந்த தேசத்தை ஒட்டி அவர்களுடைய சந்ததியர் எவ்விதமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் விளிம்பில் எவ்விதம் சென்றார்கள் என்பதையும் விளக்குகிறது. அவர்களுடைய இந்த புதிய சந்ததியாரும் அவர்களுடைய பிதாக்களை போலவே அவிசுவாசமுள்ளவர்களாய் காணப்பட்டார்களா? அல்லது அதற்கு மாறாக அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படியாய், அவர்கள் வல்லமையான தேவன் மீதான விசுவாசத்தை பெற்றிருந்தவர்களாய் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்தார்களா?. ஆரம்பத்தில் கானானியர்கள் மீதான அவர்களுடைய வெற்றி ஒரு நல்ல அறிகுறியாகவே தென்பட்டது ஆனால், அவர்களுடைய மனநிலையானது தொடர்ந்து அதில் நிலைப்பட்டதாக இருக்கவில்லை என்பதே இந்தப் புத்தகம் நமக்கும் பெரிய சவாலாக மாற்றி வைத்திருக்கிறது. நாம் எந்த சந்ததியை சார்ந்தவர்கள்?, பிதாக்களைப்போல அவிசுவாச சந்ததியா?, வனாந்தரத்திலே எவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்?, விசுவாச சந்ததியா? யார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள தொடர்ந்து முனைந்து செயல்பட்டார்கள்? (எபி 3:7-19).
3. இந்தப் புத்தகத்தில் 42 என்ற எண்ணானது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாகும்.
முதல் முறையாக எண்ணாகமம் 33 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் இன்னின்ன இடங்களில் பாளையமிறங்கி இருந்தார்கள் என்கிற பெரிய பட்டியல் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையில்லாத இடத்தை அடைத்ததை போன்று நமக்கு தோன்றலாம். நாம் இங்கே தேவனே மோசேயினிடத்தில் அதை விவரமாக எழுதும்படியாக கட்டளை விடுவதை பார்க்கிறோம், ஆகவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புத்தகம் இஸ்ரவேலருடைய வனாந்திர வாழ்க்கையை விவரிக்குமானால் அவர்கள் பாளையமிறங்கின இடத்தை அறிவிப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. தேவன் தன்னுடைய ஜனங்களை விசேஷமான முறையில் எப்படி வனாந்தரத்தில் பாளையம் இறங்கப்பண்ணினார் என்பதை நாம் அறிவது அவசியம்.
இஸ்ரவேல் ஜனங்கள் எங்கே பாளையம் இறங்கினார்களோ அங்கே தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டும்படியாக இந்த இடங்கள் முழு விவரத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது. எண்.33:3 ம் வசனத்தில் ராமசேஷை விட்டு அவர்கள் எப்படி பலத்தகையுடன் புறப்பட்டார்கள் என்றும், 8ஆம் வசனத்தில் ஈரோத்தை விட்டு சமுத்திரத்தின் நடுவாக எப்படி சென்றார்கள் என்றும், 9ஆம் வசனத்தில் ஏலீம் என்ற இடத்திலே அவர்களை தேவன் விசேஷமாக 12 நீரூற்றுகளும் 70 பேரிச்ச மரங்களும் இருந்த இடத்திலே பாளையம் இறங்க பண்ணியிருந்ததையும் விளக்குகிறது. மேற்கூறிய பகுதிகள் எல்லாம் தமது ஜனங்களின் வாழ்வில் தேவனுடைய உண்மைத்தன்மையை நினைவு படுத்துகிறதாயிருக்கிறது
இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த இடங்களே இரண்டாவது முக்கியமான இடங்களாகும். அவைகளில் முக்கியமாக மாரா, சீன் வனாந்தரம், ரெவிதீம் மற்றும் சில இடங்களும் உள்ளடங்கியுள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய பட்டியலில் அவர்களுடைய முரட்டாட்டங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. அது தேவன் அவர்களுடைய பாவத்தை முற்றிலுமாக மன்னித்துவிட்டார் என்பதை குறிக்கிறதாக அமைந்திருக்கிறது. அதை நாம் சங்கீதம் 130: 3,4 ஆகிய வசனங்கள் மூலமாக தெளிவுபடுத்தி கொள்ளலாம். பாவத்தின் மீதான தேவனுடைய மன்னிக்க கூடிய கிருபையின் இருதயத்தை நினைவுபடுத்தும்படியாய் இவ்விதமான இடங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது வகையான இடங்கள் எதுவும் சிறப்பாக நிகழாதது போல் இங்கே இடம்பெற்றுள்ளது. அந்த இடங்களை குறித்து 5 ஆகமங்களில் வேறு எங்கும் குறிப்பிடப்படவும் இல்லை. ஆனால் இவைகள் இங்கே குறிப்பிடப்பட்டதற்கான காரணம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை மாத்திரம் பதிவு செய்வது போதாது அன்றாட நிகழ்வுகளையும் பதிவு செய்வதும் அவசியமாக இருக்கிறது என்பதை காட்டும் படியாகவே உள்ளது. ஆம் நம்முடைய அனுதின வாழ்க்கையில் சாதாரணமாக செய்யும் நிகழ்வுகளான வேலைக்கு செல்லுதல், பிள்ளைகளை பராமரித்தல், துணிகளை துவைத்தல் மனதிற்கு இதமான செடிகளை வளர்த்தல் ஆகிய காரியங்களைப் போன்று அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டும் படியாகவே இந்த இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்விதமான இடங்களும் குறிப்பிடப்பட்டதற்கான ஒரு காரணம் இஸ்ரவேல் மக்கள் பாளையம் இறங்கியிருந்த இடங்களுடைய முழு தொகையானது 42 என்பதை காண்பிக்கும் படியாகவே எழுதப்பட்டுள்ளது. இந்த பெரிய பட்டியலானது பரந்த விசாலமான சிந்தையோடுகூட எழுதப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான இடங்களை மாத்திரம் அது பட்டியலிடாமல் 42 இடங்களையும் காண்பிக்கும்படியாக தெரிந்தெடுக்கப்பட்டு அது குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்? 6x 7 கள் சேர்ந்து 42 என்ற எண்ணானது உருவாகிறது. மற்றொருவிதமாக சொல்ல வேண்டுமானால் இந்த பட்டியலின் கடைசியிலும் எண்ணாகமம் புத்தகத்தினுடைய கடைசியிலும் இஸ்ரவேல் மக்கள் ஏழாம் நாளில் அதாவது ஓய்வு நாளில் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள்ளாக பிரவேசித்தார்கள் என்று முடிகிறதை பார்க்கிறோம். அதில் ஒரு ஆழமான ஆவிக்குரிய சத்தியம் அடங்கியிருக்கிறது.
நம்மில் அநேகருக்கு நம்முடைய வனாந்திர வாழ்க்கையில் நாம் பாளையம் இறங்கியிருந்த இடங்களை பட்டியலிடுவது சற்று கடினமே. ஒருவேளை நம்மில் 42 என்ற எண்ணிற்கான பட்டியலை நாம் நெருங்குமுன்பாகவே நம்முடைய வாழ்க்கையை நாம் முடிக்க நேரிடும். எப்படியானாலும் நாம் எல்லாருக்கும் நம்முடைய வனாந்தர வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உண்மையுள்ளவராக இருந்து நம்மை வழிநடத்தி நம்முடைய வனாந்தர பாதையில் நம்மோடுகூட நடக்கிறவராக இருக்கிறார் என்றும், தேவனுடைய உண்மைத் தன்மையும் அவருடைய மன்னிக்கிற குணமும் நம்மால் நினைவு கூறாமலும் இருக்க இயலாது என்பது மெய்யான ஒன்றே. நமது வாழ்வில் எப்பொழுதெல்லாம் தேவைப்படுமோ அப்பொழுதெல்லாம் அவர் நம்மை தூக்கி தன்னுடைய தோளின்மேல் போட்டு நல்ல மேய்ப்பனாக நம்மை சுமக்கிறவராகவும் கூட இருக்கிறார். இஸ்ரவேல் மக்களுக்கும், நமக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மெய்யான நித்திய பரம தேசத்தை சுதந்தரிக்கும்படியாக தேவன் தாமே நம்மை பாதுகாத்து வழிநடத்துவாராக, ஆமென்!.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.