
எண்ணாகமம் புத்தகத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.
31-01-2025
கால்வின் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
06-02-2025யோசுவா புத்தகத்திலிருந்து நீங்கள் அறியவேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.

1. யோசுவா புத்தகம் மிக முக்கியமாக கடவுளின் உண்மைத்தன்மையைப் பற்றி கூறுகிறது.
பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் யோசுவா புத்தகத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்று நீங்கள் கேட்டால், எரிகோ போரைப் பற்றிய பதில்தான் பெரும்பாலும் உங்களுக்குக் கிடைக்கும். அந்த எரிகோ நகரத்தின் இடிந்து விழும் சுவர்களின் கதை, புத்தகத்தின் வெற்றி விவரிப்பில் ஒரு முக்கிய நிகழ்வாகும். யோசுவா புத்தகம் இஸ்ரவேல் தனது சத்துருகளுக்கு எதிரான போர் வெற்றியின் கதையையும், இஸ்ரேல் தான் கைப்பற்றிய நிலங்களின் அடுத்தடுத்த கோத்திர விநியோகத்தையும் உள்ளடகியுள்ளது. ஆனால் இறுதியில், யோசுவா புத்தகம் உண்மையில் தேவனையும் அவருடைய உண்மைத்தன்மையையும் பற்றியது. கர்த்தர் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை வாக்குறுதியளித்தார், மேலும் கடவுளின் மக்கள் அந்த ஆரம்ப வாக்குறுதிக்கும் கானானை அவர்கள் உடைமையாக்கியதற்கும் இடையில் குறிப்பிடத்தக்க தாமதத்தை அனுபவித்த போதிலும், கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்று கூட தரையில் விழவில்லை (யோசுவா 23:14) என்பதே அசைக்கமுடியாத நிதர்சனம் .
கடவுள் இஸ்ரவேலுக்கு தாம் சொன்ன எல்லா தேசங்களையும் கொடுத்த பிறகு, 21 ஆம் அதிகாரத்தின் இறுதி வார்த்தைகளை விட வேறு எந்தப் பகுதியும் புத்தகத்தின் முக்கிய நோக்கத்தை சுருக்கமாகக் கூற முடியாது: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.” (யோசுவா 21:45). யோசுவாவைத் தவிர, காலேப் மற்றும் எலியேசர் போன்ற பிற முன்மாதிரியான மனிதர்களும் புத்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இஸ்ரவேல் போர் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்ற அற்புதமான போர்களும் இந்தப் புத்தகத்தில் அடங்கும். ஆனால் இறுதியில், இந்தப் புத்தகம் கடவுளையும் இஸ்ரவேல் மக்களுடனான அவரது உண்மைத்தன்மையையும் பற்றியது.
2. கானானியர்களின் அழிவு இஸ்ரவேலின் இன மேன்மையின் வெளிப்பாடல்ல, மாறாக பாவத்திற்கு எதிரான கடவுளின் நியாயத்தீர்ப்பு.
பொதுவாக யோசுவா புத்தகத்தை வாசிக்கும் மக்கள் கேட்கும் மிகப்பெரிய தார்மீக கேள்வி என்னவென்றால் கானானியர்களின் அழிவு பற்றித்தான். உதாரணமாக, இஸ்ரவேலர் எரிகோவின் சுவர்களின் இடிபாடுகளைத் தாண்டிச் சென்றபோது, நகரத்தில் யாவரையும், அது நபராக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, அவர்கள் விட்டுவைக்கவில்லை. இஸ்ரவேலின் வேவுகாரர்களை மறைத்து வைத்திருந்த ராகாப் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே விதிவிலக்காக காக்கபட்டார்கள். பல விமர்சகர்கள் இஸ்ரேலின் மிருகத்தனத்தை அல்லது இன்னும் மோசமாக, இந்த மரணங்களைக் கோரும் இரக்கமற்ற “பழைய ஏற்பாட்டு கடவுளின்” இரத்தவெறியைக் கண்டித்துள்ளனர் (உபாகமம் 20:16–18 ஐயும் காண்க). இஸ்ரேல் அதன் பின்னணியில் எஞ்சியிருந்த சத்துருக்களின் பரவலான அழிவை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றாலும், அதன் பின்னால் இருந்த புனிதமான இறையியல் மற்றும் நியாயமான காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு நன்கு தெரிந்த இனப்படுகொலை நிகழ்வுகளான ஹோலோகாஸ்ட் அல்லது ருவாண்டா (Holocaust or the Rwandan ) இனப்படுகொலைக்கு மாறாக, கடவுளின் மக்கள் தங்கள் எதிரிகளை இனப்பற்று அல்லது இன வெறியின் உணர்வால் அவர்களை கொல்லவில்லை. இஸ்ரவேலின் போர்வீரர்கள் தங்கள் வாள்களை ஒரே உண்மையான கடவுளின் கையிலுள்ள நியாயத்தீர்ப்பு கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், ஆதலால் பாவம் தண்டிக்கப்படாமல் இருக்க அனுமதிக்க முடியாது. அவருடைய பொறுமையில், அவர் பல நூற்றாண்டுகளாக கானான் மக்களைக் காப்பாற்றி கொண்டுவந்தார், ஆனால் கடைசியில் எமோரியர்களின் அக்கிரமம் நிறைந்தது (ஆதி. 15:16 ஐப் பார்க்கவும்), அதினால் அவர் அவர்களை காப்பாற்ற சித்தமில்லாமல் நியாயந்தீர்க்க சித்தமானார். கடவுளின் பரிசுத்தம் என்பது, கானானியர்களுக்கு மாத்திரமல்ல, இஸ்ரவேலர் அவரோடுள்ள உறவில் பரிசுத்தத்தைத் தொடரத் தவறினால் அதே தண்டனை அச்சுறுத்தலை எதிர்கொண்டது என்பதையும் நமக்கு குறிக்கிறது (யாத். 22:20 ஐப் பார்க்கவும்). உதாரணமாக, ஒரு இஸ்ரவேலரும் அவரது குடும்பத்தினரும் கானானியர்களைப் போலவே அதே முடிவை அனுபவித்தனர். ஆகான் கடவுளின் தெளிவான கட்டளையை மீறி எரிகோவின் சில கொள்ளைப் பொருட்களை எடுத்துக் கொண்டபோது, அவர் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் மரணத்தையும் அழிவையும், தேசத்திற்கு தோல்வியையும் கொண்டு வந்தார் (யோசு. 7 ஐப் பார்க்கவும்). யோசுவா புத்தகத்தில் வெளிப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கடவுள் பாவத்தை அலட்சியப்படுத்துவதில்லை என்பதற்கு தெளிவான சான்றுகளாகும்.
பரிசுத்த வேதாகமத்தை மேலும் படிக்கும்போது, கானானியர்களின் அழிவு கிறிஸ்து இரண்டாம் முறையாக திரும்பி வரும்போது நிகழும் இறுதி நியாயத்தீர்ப்பு நாளுக்கு ஒரு முன்னோட்டமாக இருந்தது என்பதைக் காண்கிறோம் (வெளி. 6:12–17; 19:15–16, 19–21 ஐப் பார்க்கவும்). அந்த நாளில் எல்லா மனிதருக்கும் இருக்கிற ஒரே நம்பிக்கை, நமக்காக கடவுளின் கோபத்தைத் தாங்கிய இயேசுவை விசுவாசிப்பதுதான் (1 பேதுரு 2:24).
3. யோசுவா புத்தகத்தில் 12 கோத்திரங்களுக்கான நிலப் பங்கீட்டின் விவரங்கள் மிகப் பெரிய ஒன்றைச் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
யோசுவா புத்தகத்தில் ஒரு பெரிய பகுதியை, இஸ்ரவேல் கோத்திரங்களிடையே பிரிக்கப்பட்ட நிலத்தின் விவரங்களை விவரிப்பதற்கு அதின் ஆசிரியர் தன்னை அர்ப்பணிக்கிறார். அங்கே யோர்தான் நதியின் விளிம்பையும், அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதியையும், மற்ற மலையிலிருந்து ஏறுவதையும் ஆசிரியர் விவரிக்கும்போது, 13–19 அதிகாரங்களைப் படிப்பது நமக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், கானானிய நிலங்களின் புவியியல் விவரங்கள் கடவுளுக்கு முக்கியமானவை, மேலும் அதின் நிலங்கள் அவருக்கு விலைமதிப்பற்றதாக இருந்ததால்தான், அவர் அவற்றைப் பற்றிய விரிவான, ஈர்க்கப்பட்ட விளக்கத்தை நமக்குக் கொடுத்தார். கர்த்தர் ஏன் இந்த நிலங்களை இவ்வளவு மேன்மையாக மதிப்பிட்டார்? ஏனென்றால் அது கிறிஸ்துவின் மகிமைகளையும் புதிய சிருஷ்டிப்பையும் அடையாளப்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இடமாக இருந்தது.
பழைய ஏற்பாட்டின் பொருட்கூறுகளான ஆசரிப்புகூடாரம் மற்றும் பலி செலுத்தும் முறைமைகள் போன்றவற்றைப் போலவே, நிலமும் சுவிசேஷ சத்தியத்தின் ஒரு மாதிரி அல்லது காட்சிபடமாக இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, கடவுள் அவர்களை அவர்களின் பூமிக்குரிய பரதீசிலிருந்து வெளியேற்றி, அவர்கள் இருந்த நிலத்தை சபித்தார். இருப்பினும், ஒரு நல்ல சிருஷ்டிப்புக்கான தனது திட்டங்களை அவர் முடித்துவிட்டார் என்று அர்த்தமல்ல. இயேசு இரண்டாம்முறை திரும்பி வரும்போது அவர் புதிய வானத்தையும் பூமியையும் சிருஷ்டிப்பார் (2 பேதுரு 3:10–13; வெளி. 21:1). வரவிருக்கும் நித்திய பரலோகத்தின் ஒரு முன்னோட்டமாக, பாலும் தேனும் ஓடும் நிலமான கானான், ஏதேன் தோட்டத்திற்கும் கிறிஸ்துவின் புதிய சிருஷ்டிப்புக்கும் இடையில் அடையாளமாக நமக்கு நிற்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.