
யோசுவா புத்தகத்திலிருந்து நீங்கள் அறியவேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.
04-02-2025
பரிசுத்தமாகுதலை பற்றி அறிந்துக் கொள்ளவேண்டிய ஐந்து காரியங்கள்
11-02-2025கால்வின் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

1. ஜான் கால்வின் அவரது திருச்சபை, ஊழியம் மற்றும் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்
இருபத்து ஒன்பது வயதான ஜான் கால்வின் (1509-1564) ஜெனீவாவில் தனது ஊழியத்தை ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள் தனது திருச்சபை, ஊழியம் மற்றும் குடும்பத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் நகரத்தை விட்டு வெளியேறும்படியான அறிவிப்பு அவருக்கு வந்தது. அந்த ஏப்ரலில் அவரும் வில்லியம் பேரலும் ஜெனிவாவிலிருந்து புறப்பட்டபோது அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்தார்கள். அவர்களுடைய எண்ணங்களெல்லாம் இந்த கசப்பான அனுபவத்திற்கு இடையிலிருக்கும் திருச்சபை போராட்டத்தில் இருந்தன. ஜூரிக் மற்றும் பெர்னை ஜெனீவாவில் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு அவர்களிடம் எவ்வாறு கூறலாம் என்று திட்டமிட்டனர். ஆனாலும், கால்வினுக்கு அறியாமல் தேவன் தனது பராமரிப்பில் அவர்களின் முயற்சிகளை தடுத்தார். அதற்கு பதிலாக, கால்வினின் எதிர்கால போதக பணிக்கு அடித்தளமாக இருக்கும் போதக பயிற்சியின் சூழ்நிலையை தேவன் ஆயத்தம்பண்ணினார்.
2. ஜான் கால்வின் தனது ஊழியத்தில் அநேக தோல்விகளை கண்டார்.
கால்வினின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக அறிந்த சிலர், அவர் ஜெனீவாவில் சபை ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் திருவிருந்தை உண்மையோடு அனுசரிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை அறிந்திருந்தாலும், வெகு சிலருக்கே கால்வினின் தோல்வியுற்ற இந்த முயற்சியின் மூலம் தேவன் கால்வினை மாற்றினார் என்பது தெரியும். நாடு கடத்தப்பட்டவுடன், கால்வின் ஆரம்பத்தில் பாசலில் குடியேறினார், ஆனால் மார்ட்டின் புயூசரால் ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு வருமாறு அழைக்கப்பட்டார் (1491-1551). புயூசர் கால்வினை விட 20 வருடங்கள் மூத்தவராக இருப்பினும் கால்வினோடு அன்போடு நட்புக்கொண்டு, ஊழிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது மாத்திரமல்ல, தனது வீட்டில் அன்போடு ஏற்றுக்கொண்டு தனது அருகாமையில் அவருக்கான வீடு ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்தார். ஒரு வருடத்திற்கு முன் கால்வின் அவருக்கு ஒரு எதிர்ப்புள்ள, கடுமையான கடிதத்தை எழுதியிருந்தும் அந்த கடிதத்தை மிகவும் மென்மையாக புயூசர் கையாண்டார். புயூசரில், கால்வின் தனக்கு தேவையான வழிகாட்டியையும் போதகரையும் கண்டார்.
3. கால்வின் அகதிகளுக்கு போதகராக பணியாற்றினார்.
கால்வின் ஜெனீவாவிற்கு வந்த 1538 ம் ஆண்டில்தான் புயூசர் தனது சிறு புத்தகமாகிய “ஆத்துமாக்கள் மீதான உண்மையான கரிசனை” என்ற புத்தகத்தை முடித்திருந்தார். உணவுநேர உரையாடல்களில் இருவரும் போதக பணியைக்குறித்தும், திருச்சபை வாழ்க்கை முறையை பற்றியும் கலந்துரையாடினர் என்பதில் சந்தேகமில்லை. புயூசர் ஸ்ட்ராஸ்பர்கில் இருக்கும்போது ஊழியத்தில் உள்ள போராட்டங்களை நன்கு அனுபவப்பட்டிருந்தார். திருச்சபையிலும் தனது ஊழியத்திலும் கிறிஸ்துவை மையப்படுத்திய வளர்ச்சியை கொண்டுவருவதற்கு பொறுமையின் ஒரு பகுதியாக அவரது எழுத்துக்கள் இருந்தன. தேவனின் தெய்வீக பராமரிப்பின்படி கால்வினின் ஊழிய வாய்ப்பு அந்நகரத்தில் அவரது போதனைகளையும் தாண்டி சென்றது. அவர் பிரெஞ்சு அகதிகள் மத்தியில் போதகராக பணியாற்றினார். அதில் அநேக ஊக்கங்கள் இருந்தாலும் அநேக உபத்திரவங்களையும் கால்வின் அனுபவித்தார். கால்வினின் நெருங்கிய நண்பரும், மைத்துனரும் தனது மனந்திரும்புதலுக்கு உதவின பியர் ராபர்ட் ஒலிவேட்டன் அப்போது மரித்துப் போனார். கால்வினின் புகழ்பெற்ற புத்தகமாகிய “The institutes of the Christian Religion” என்ற புத்தகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த கால்வினின் பிரெஞ்சு பழைய நண்பரான லூயிஸ் டு டில்லட் மீண்டும் ரோமன் கத்தோலிக்க மதத்துக்கு திரும்பினார். 1540 ல் ஐடலெட் டி ப்யூர் ஐ திருமணம் செய்ததின் மூலம் ஒரு புதிய மகிழ்ச்சி கால்வினுக்கு ஏற்பட்டது. “எனது வாழ்வின் மிகசிறந்த உற்ற துணையாளர்” என்று கால்வின் கூறினார்.
4. கால்வின் தன்னை வெளியேற்றிய திருச்சபைக்கு மீண்டும் விருப்பத்துடன் திரும்பினார்
கால்வினுக்கு திருமணமான அதே ஆண்டில், ஸ்ட்ஸ்பர்க்கில் புதிய ஊழியத்தின் மத்தியில், “இந்த ஆண்டு என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு” என்று நினைத்த நேரத்தில் எதிர்பாரா ஓர் அழைப்பு அவருக்கு வந்தது. மீண்டும் வந்து போதகராக பணியாற்றுவதற்கு ஜெனிவா விரும்பி அழைப்பு விடுத்தது. அவர் சற்று தயங்கினார், “வானத்தின் கீழே நான் அதிகம் பயப்படுகிற இடம் ஒன்றுமில்லை… ஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை நான் சிலுவையில் அடிக்கப்படுவதை விட , ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான மரணத்துக்கு அடிபணிவதையே விரும்புவேன்.” என கால்வின் குறிப்பிட்டார். இந்த குறுகிய சில ஆண்டுகளில் ஜெனீவா மட்டும் மாறவில்லை கால்வினின் வாழ்க்கையிலும் மாற்றம் இருந்தது. புயூசின் ஊக்கத்தாலும் தனது பயத்தினாலும், தனக்கு வந்த ஜெனீவாவின் போதக அழைப்பை கால்வின் ஏற்றுக்கொண்டார். சில விஷயங்களில் ஜெனிவா நகரம் மாறினது, சபையிலும் சமுதாயத்திலும் சீர்திருத்தத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. திருவிருந்து பற்றிய உண்மையான பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு பதினான்கு நீண்ட வருட ஊழியம் தேவைப்பட்டது. திருச்சபையின் பெலவீனத்தை குறித்து கால்வின் தொடர்ச்சியாக கவலைப்பட்டிருந்தாலும், தனது வாழ்க்கையில் தேவன் கருவியாக பயன்படுத்தின புயூசரின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் மூலமாக கால்வினுக்கு திருச்சபை மீதான எதிர்கால பார்வையும், பொறுமையும், அன்பும் இருந்தது.
5. மகிழ்ச்சிகள் மற்றும் சோதனைகள் வழியாக கால்வின் தேவனின் பராமரிப்பை நோக்கிப் பார்த்தார்.
ஒன்பது வருடங்களுக்கு பிறகு, தனது ஜெனிவா ஊழியம் நன்றாக சென்றுக்கொண்டிருக்கையில் தனது மனைவியை அடக்கம் செய்த சில மாதங்களுக்கு பின், பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின நிருபத்தை போதித்தார், “பவுல் வெறுமனே தேவனின் கிருபையை தனது இரட்சிப்பின் ஆரம்பத்துக்கு மட்டும் சூட்டாமல், ஆரம்ப முதல் முடிவு வரை இரட்சிப்பிற்கு தேவனின் கிருபையைத் தவிர வேறொன்றுமில்லை என்றார்.” சந்தோஷமான நாட்களுக்கு பின்னும் முகம் சுளிக்க வைக்கும் பராமரிப்பிற்கு பின்பும், தனது பணிக்காகவும் மகிமைக்காகவும் நம்மை வணையும் இரட்சகரின் சிரித்த முகம் உள்ளது என்பதை மகிழ்ச்சி மற்றும் சோதனைகள் ஊடாக கால்வின் ஆழமாக கற்றுக்கொண்டார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.