How-to-Read-the-Prophets
தீர்க்கதரிசன புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது?
19-06-2025
Historical-Narrative
வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?
26-06-2025
How-to-Read-the-Prophets
தீர்க்கதரிசன புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது?
19-06-2025
Historical-Narrative
வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?
26-06-2025

வேதாகமத்தை நினைவு கூர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதின் அவசியம்

Remembering-and-Practicing-the-Bible_

டாக்டர். ரையன் எம். மெக்ரா

வேதாகமத்தைக் கற்றுக்கொள்வது என்பது, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது போன்றது. இரண்டையும் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி, முழுமையாக அதில் மூழ்கிவிடுவதுதான். நம் குழந்தைகள் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ளும்போது, மீண்டும் மீண்டும் கேட்பது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிறார்கள். அதேபோல, நாம் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது, வேதவாக்கியங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கான சிறந்த வழிகள் யாதெனில், அதைத் தவறாமல் வாசிப்பது, அதை நம் இருதயத்துக்குள் வைத்து ஜெபிப்பது, அதை குடும்ப வாழ்க்கையுடன் தொடர்பு படுத்துவது மற்றும் அதை பிரசங்கிக்கக் கேட்பது போன்றவையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் வேதவாக்கியங்களை அன்றாட வாழ்வில் எவ்வளவு அதிகமாக தொடர்புபடுத்தி நடைமுறைப்படுத்துகிறோமோ , அவ்வளவு அதிகமாக அந்த சத்தியத்தை நாம் நினைவுகூர்ந்து அதை பொக்கிஷமாக எண்ணி வாழக்கூடும். 

  1. முழு வேதாகமத்தையும் தவறாமல் வாசித்தாக வேண்டும்.

முதலாவதாக, நாம் முழு வேதாகமத்தையும் தவறாமல் வாசிக்க வேண்டும். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது சொல்லகராதி, இலக்கணம் மற்றும் பொருளடக்கம். சுவாரஸ்யமானது என்னவென்றால், சங்கீதம் 1 விசுவாசிகளை தேவனுடைய நியாயப்பிரமாணத்தை இரவும் பகலும் தியானிக்கும்படி அறிவுறுத்தவில்லை; நாம் அதைச் செய்கிறோம் என்று அந்த சங்கீதம் மேற்கோள் காட்டுகிறது (சங். 1:2). ஆயினும், அநேக விசுவாசிகள் வேதவாக்கியங்களை எப்படி தியானிப்பது என்பதை அறியாதவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் அவ்விதமாக தியானிப்பதற்கு எங்கே தொடங்க வேண்டும்? வெளிப்படையான முதல்படி எதுவென்றால், அதை வாசிப்பதுதான்.

அநேக கிறிஸ்தவர்கள் முழு வேதாகமத்தையும் படிப்பதில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. நாம் எவ்வளவு படித்திருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான் நாம் சுவிசேஷ புத்தகங்கள் அல்லது ரோமர் 8 போன்ற பிடித்தமான பகுதிகளிலே அதிக நாட்டம் கொண்டிருப்பது தெரியவரும். இருப்பினும், முழு வேதாகமமும் தேவனுடைய வார்த்தை என்ற காரணத்தினால், தேவனுடைய வார்த்தையின் ஒவ்வொரு பகுதியையும் நாம் பொக்கிஷமாக கருத  வேண்டும். சங்கீதம் 119 இல் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின் மீது காணப்பட வேண்டிய முழு இருதயத்தின் அன்பை வெளிப்படுத்துகிறது, ஏனெனில் சங்கீதக்காரன் நியாயப்பிரமாணத்தை கொடுத்த கர்த்தர் மீது முழு இருதயத்தோடு அன்பு கூறுவதையே இலக்காகக் கொண்டிருந்தான். தேவன் எப்படிப்பட்டவர், அவர் யார் என்பதைப் பற்றிய முழுமையான வடிவமைப்பை பெற, நமக்கு முழு வேத வாக்கியங்களும் அவசியமாய் இருக்கிறது. இதைச் செய்வதற்கான சிறந்த வழி வாசிப்பதற்கான ஒரு நல்ல திட்டத்தை  வைத்திருப்பதுதான்.

பல வாசிப்புத் திட்டங்கள் இருந்தாலும், சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு அதிகாரங்களைப் படிப்பதன் மூலம் சுமார் ஒரு வருடத்தில் முழு வேதாகமத்தையும் வாசித்து முடிக்க முடியும். நாம் வேதவாக்கியங்களின் ஒவ்வொரு பகுதியையும் அடிக்கடி படிக்கும்போது,  வேதாகமத்தின் சொல்லகராதி, இலக்கணம் ஆகியவற்றோடு சிந்தித்து பார்த்து புரிந்து கொள்ளும்போது , அதனுடைய பகுதிகளே ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி விளக்கப்படுத்துவதை காணலாம். நாம் தினமும் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்காமல், தேவனுடைய புத்தகத்தை சீராகப் படிக்காமல் இருந்தால், அப்போல்லோவைப் போல நாம் எப்படி “வேதவாக்கியங்களில் வல்லவர்களாக” (அப். 18:24, KJV) மாற முடியும்? 

  1. நம்முடைய வேத வாசிப்பை பயன்படுத்தி ஜெபிக்க வேண்டும்.

வேதவாக்கியங்களை வாசிப்பது வெறும் தனிப்பட்ட “பக்தியின்” வெளிப்பாடாக மட்டும் இருக்கக்கூடாது. அது தேவனைத் தேடும் ஆராதனைக்குரிய ஒரு செயலாகும். இதை நாம் முதன்மையாக ஜெபத்தின் மூலம் வெளிப்படுத்துகிறோம். தேவனுடைய நியாயப்பிரமாணத்திலிருந்து அதிசயமான காரியங்களைக் காண தேவன் நம் கண்களைத் திறக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் (சங். 119:18),  வேதம் வெளிப்படுத்தக்கூடிய சத்தியங்களையும் பயன்படுத்தி நாம் ஜெபிக்க வேண்டும். “இந்த பகுதி தேவனைப் பற்றி எனக்கு என்ன வெளிப்படுத்துகிறது?” என்று கேள்விகளை எழுப்புவதன் மூலமாக, எளிதான மற்றும் கடினமான பகுதிகள் இரண்டையும் நாம் பயனுள்ளதாக மாற்ற முடியும்.

உதாரணமாக, சங்கீதம் 90:1-2 இல் தேவன் எல்லா தலைமுறைகளிலும் நமக்கு  அடைக்கலமானவர் என்றும்,  “நீரே அனாதியாய் என்றென்றைக்கும்” தேவனாயிருக்கிறீர் என்றும் கூறுகிறது. “ஆண்டவரே, நானும் என் பிள்ளைகளும் உமக்குள்ளும், நீர் எங்களுக்குள்ளும் வாழுகிறதினாலும் நீர் நித்தியமானவராக இருக்கிறதினாலும், உம்முடைய வாக்குத்தத்தங்களை நீர் என்றென்றைக்கும் எங்களுடைய குடும்பத்திற்கு நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராக இருப்பதினாலும் உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்” என்று நாம் ஜெபிக்க முடியாதா? ஜெபத்தின் மூலம் தேவனுடைய மகிமையைத் தேடும் போது, 1 நாளாகமம் முதல் 9 அதிகாரங்களில் வரக்கூடிய வம்ச வரலாறு வழியாகக் கூட, நாம் தேவன் பக்கமாக இழுக்கப்பட்டு அவரை ஆராதிக்க முடியும். ஏனெனில் அந்த அதிகாரங்கள் நமக்கு வெறும் பெயர்ப்பட்டியலாக இராமல் , தன்னுடைய ஜனங்களுக்கு தேவன் செய்த உடன்படிக்கையின் உண்மைதன்மையின் வெளிப்பாடாகவும்  இருக்கிறது.

  1. நம்முடைய வழக்கமான குடும்ப ஆராதனையில் வேதவார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

கர்த்தரை நேசிப்பது என்பது நாம் உட்கார்ந்திருக்கும்போதும், எழுந்திருக்கும் போதும், நடக்கும்போதும் நம் பிள்ளைகளுக்கு அவருடைய வார்த்தையை குறித்து பேசுவதிலே அடங்கி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும் (உபா. 6:6-7). இதைச் செய்வதற்கான மிக சிறந்த வழி, நம் தனிப்பட்ட வழிபாட்டை குடும்ப ஆராதனையாக விரிவுபடுத்துவதே. அதாவது வேதவாக்கியங்களை ஒன்றாக சேர்ந்து வாசிப்பது, ஜெபிப்பது மற்றும் பாடுவது. எதுவுமே செய்யாதிருப்பதை விட, குடும்ப வழிபாட்டை சுருக்கமாகவும் எளிமையாகவும் வைத்திருப்பது இவ்விதமான நேரங்களை பயனுள்ளதாகவும்,  சிறந்ததாகவும் ஆக்குகிறது.

வேதாகமத்தை நாம் தனியாகவோ, மற்றும் நம் குடும்பங்களிலும், வாசிப்பதும்,ஜெபிப்பதும் நாள் முழுவதும் வேதாகமத்தைப் பற்றிய உரையாடலுக்கு இயல்பாக வழிவகுக்கும். திருமணமானவர்கள் தேவனுடைய வார்த்தையில் மூழ்கும்போது, அவர்களுக்கு இருக்கும் குழந்தைகள் அதில் சேர்த்துக்கொள்ளும் போது, அவர்களுடைய பிள்ளைகளும் வேதவாக்கியங்களை அறியவும், நினைவில் வைக்கவும் அது பெரிதும் உதவும். தேவபக்திக்குரிய  பழக்கங்களை  உருவாக்கும் போது, இது இயல்பாகவே அவர்களுடைய அன்றாட பேச்சிலும் வெளிப்படும். எந்த அளவிற்கு நாம் அவர்களுக்கு இருதயத்தில் வேத வசனங்களை உட்புகுத்துகிறோமோ, அந்த அளவிற்கு அவர்களுடைய இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுவதைப் போல வேதம் அவர்கள் நாவில் வழிந்தோடும்.

  1. வேதாகமப் பிரசங்கத்தை அடிக்கடி கேட்க வேண்டும்.

ஒரு உண்மையான வேதபூர்வமான பிரசங்கத்தில், நாம் கிறிஸ்துவின் சத்தத்தை கேட்கிறோம் (ரோமர் 10:14-17; எபே. 2:17). தேவன் தன்னுடைய குமாரனைப்பற்றி கொடுத்த சாட்சியை பிரகடனம் செய்யும் ஒவ்வொரு பிரசிங்கிகளுடனும்  ஆவியானவரின் வல்லமை துணையாக இருக்கிறது (1 கொரி. 2:1-5). வேதாகம பாடங்களையும், இணையதள பிரசங்கங்களையும் கேட்பது நல்லது என்றாலும், பொதுவான ஆராதனையில் கிறிஸ்துவோடும் அவருடைய ஜனங்களோடும் ஐக்கிய படுவது மிகச் சிறந்தது. நாம் தேவனுக்கு நன்றி செலுத்தும் வண்ணமாக, உயிர்த்தெழுந்த மற்றும் பரலோகத்திற்கு ஏறிய கிறிஸ்து இருக்கும் பரலோகத்திற்கு நேராக நம்முடைய  இருதயங்களை திருப்பும்படியாய் தேவன் நமக்கு  வாரந்தோறும் கூடி வரத்தக்கதாக ஓய்வுநாளைக் கொடுத்திருக்கிறார் .

தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆராதனையானது   நம்முடைய வாழ்க்கை முழுவதும் வேத வசனங்களில் நாம் மூழ்கியிருக்க நமக்கு உதவி செய்தாலும், அதனுடைய உச்சகட்டத்தை பெறுவதற்கு பொதுவான  ஆராதனையே பெரிதளவில் உதவி செய்கிறது. ஏனெனில் இந்த பொதுவான ஆராதனையின் மூலமாகவே ஆவியானவர் குறிப்பாக அவருடைய வார்த்தையை நம்முடைய இருதயங்களில் பதியவைத்து, தேவனுடைய வார்த்தையைப் பயிற்சி செய்யவும், அதை பயிற்சி செய்வதன் மூலம் நினைவில் வைக்கவும் நமக்கு உதவி செய்கிறார்.

கிறிஸ்தவ கோட்பாடுகளை பற்றிய தனது புத்தகத்தில் போதகர்.அகஸ்டின் அறிவுறுத்தியது போல, வேதாகமத்தைப் படிப்பதற்கான சிறந்த வழி எதுவென்றால் படிப்பதன் மூலமாக தேவனை தேடுவதிலும் அனுபவிப்பதிலும் கவனத்தை செலுத்துவதினாலேயே என்று மேற்கோள் காட்டுகிறார். வேதத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் உள்ள வார்த்தைகள் கர்த்தரைச் சுட்டிக்காட்டும் “அடையாளங்கள்” ஆகும். ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போதும், கேட்கும்போதும் நம்முடைய விருப்பமாக காணப்பட வேண்டியது திரித்துவ தேவனை பற்றியதான விஷயமேயாகும். வேதவாக்கியங்களைக் கற்றுக் கொள்வதற்கு நம்முடைய முழு ஆத்துமாவையும் நாம் அர்ப்பணிக்க வேண்டும். நாம் அவருடைய வார்த்தையைப் படிக்கும்போது, தேவனுடைய குமாரனை மகிமைப்படுத்துவதற்கு எனக்கு உதவி செய்யும் என்று ஆவியானவருடைய துணையை நாடுகிறோமா? நாம் அவருடைய நேசத்திற்குரிய பிள்ளைகளாக, நம்முடைய சரீரத்தினாலும், ஆத்துமாவினாலும் தேவனை மகிமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோமா? வேதாகமத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வழிவகைகளை பயன்படுத்தி, அதை ஜெபத்தின் மூலமாக  நடைமுறைப்படுத்தி நினைவு கூறவும்  நாம் நாட்டம் கொள்கிறோமா?இந்தக் கட்டுரை வேதாகம வியாக்கியான கலை  (Hermeneutics) தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ரியான் மெக்ரா
ரியான் மெக்ரா
டாக்டர் ரியான் எம். மெக்ரா, கிரீன்வில் பிரஸ்பைடிரியன் இறையியல் கருத்தரங்கில் மோர்டன் எச். ஸ்மித் சிஸ்டமேடிக் தியாலஜி பேராசிரியராகவும், ஆர்த்தடாக்ஸ் பிரஸ்பைடிரியன் சர்ச்சில் ஒரு ஊழியராகவும் உள்ளார். அவர் தி டே ஆஃப் வோர்ஷிப், தி ஆர்க் ஆஃப் சேஃப்டி மற்றும் எ டிவைன் டேபஸ்ட்ரி உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.