
பிளவுபட்ட நமது இருதயத்திற்கான மருந்து
28-10-2025
கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்
04-11-2025அன்பின் பிணைப்பு
(The Bond of Love)
கெய்த் மேத்திசன்
நமது பாவங்கள் மூலமாக முதலில் நாம் கிறிஸ்துவை காயப்படுத்தாமல் இகழாமல், அவமானப்படுத்தாமல், நமது சகோதரரில் யாரும் நம்மால் காயப்படுத்தப்படவோ, வெறுக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, அவதிக்கப்படவோ அல்லது எந்த வகையிலும் புண்படுத்தப்படவோ முடியாது; கிறிஸ்துவுடன் ஒருமித்து நடவாமல் நம் சகோதரரோடு ஒருமித்து நடக்கமுடியாது; நமது சகோதரரை நேசியாமல் கிறிஸ்துவை நேசிக்க முடியாது; நமது சொந்த சரீரத்தை நாம் கவனித்துக் கொள்வது போலவே நம்முடைய சகோதரர்களின் சரீரங்களையும் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் அவர்கள் நம் சரீரத்தின் அவயவங்கள்; நமது சரீரத்தில் ஓரிடத்தில் ஏற்படும் வலியானது மற்ற எல்லா இடங்களிலும் உணர்வை ஏற்படுத்துவது போல, நமது சகோதரரில் ஒருவர் எந்தவொரு தீமையினால் பாதிக்கப்படும்போது நமது இரக்கத்தினால் அவர்கள் தொடப்பட்டிருக்கவேண்டும். எனவே இந்த சிந்தனை நமது மனதில் ஆழமாக பதிக்கப்பட்டிருக்குமென்றால், திருவிருந்தின் நியமித்திலிருந்து நாம் அநேக பயன்களை அடைவோம். அகஸ்டின் இவற்றை “அன்பின் பிணைப்பு” என்று நல்ல காரணத்துடன் அடிக்கடி அழைக்கிறார்.
ஜான் கால்வினை பொறுத்தவரை, கர்த்தருடைய பந்தியின் பிரதான பலன், நமது விசுவாசத்தையும் கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தையும் பெலப்படுத்துவது ஆகும். கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியம் என்பது சக விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று. அகஸ்டினைத் தொடர்ந்து கால்வினும் கர்த்தருடைய பந்தியின் சக விசுவாசிகளை நோக்கிச் செல்லும் இந்த அம்சத்தை “அன்பின் பிணைப்பு” என்றே அழைக்கிறார். இந்த பந்தி விசுவாசிகளை ஒருமுகப்படுத்தி ஒருவரையொருவர் நேசிப்பதற்கு உற்சாகப்படுத்தும் ஒன்றாக உள்ளது. கிறிஸ்துவின் சரீரம் ஒன்றே, அதில் நம் அனைவரையும் பங்குப் பெற செய்கிறார் என்று பவுல் கூறுகிறார். எனவே நாம் அனைவரும் ஒரே சரீரமாகவே இருக்கிறோம் (1 கொரி 10:17). கால்வின் கூற்றுப்படி, கர்த்தரின் பந்தியில் பெரும் அப்பம் நாம் கொண்டிருக்கவேண்டிய ஒற்றுமையின் விளக்கத்தை வழங்குகிறது. அப்பத்தில் உள்ள பல பொருட்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அப்பத்தை உருவாக்குவது போல, நாம் பிரிவினைகள் இல்லாமல் ஒன்றாக இணைக்கப்படவேண்டும்.
நாம் கர்த்தருடைய பந்திக்காக ஒன்றுகூடும்போது, அது சரீரத்தின் ஒருமையை நமக்கு நினைவூட்ட வேண்டும், மேலும் கிறிஸ்துவில் நம் சகோதர சகோதரிகளின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள நம்மால் முடிந்ததைச் செய்ய இரக்கத்திற்கென்று நம்மை அது தூண்ட வேண்டும்.
ஆனால் இதன் அர்த்தம் என்ன? கிறிஸ்தவ விசுவாசிகளாக நாம் கர்த்தருடையப் பந்தியில் பங்குகொள்ள ஒன்றுகூடும்போது, கிறிஸ்துவின் மரணத்தை மட்டுமல்ல, கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ, அவர்களை, கிறிஸ்துவுக்குள் நம் சகோதர சகோதரிகளையும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை கால்வின் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசு நம்மை நேசிக்கிறாரா? அவர்களையும் நேசிக்கிறார். அவர் நமக்காக மரித்தாரா? அவர் அவர்களுக்காகவும் மரித்தார். நாம் கிறிஸ்துவின் ஒரே சரீரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோமா? அவர்களும் அப்படித்தான். நாம் தேவனுடைய புத்திர சுவிகாரத்தின் பிள்ளைகளா? அவர்களும் அப்படித்தான். அப்படியானால், கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்களை நாம் எப்படி நேசிக்கவும் பராமரிக்கவும் தவற முடியும்? கர்த்தருடைய பந்தியானது இந்த உண்மையை நம் இதயங்களிலும் மனங்களிலும் பதிய வைக்கிறது.
“முதலிடத்தை தேடுங்கள்” என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கும் இந்த கலாச்சார சூழலில் கால்வின் அறிவுரை மிகவும் அவசியமானது. இந்த கலாச்சாரம் நம்முடையது தான், இதில் இந்த முதலிடத்தை நாடும் புத்தியானது எல்லா இடங்களிலும் ஊடுருவியுள்ளது. நமது கலாச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் முதலிடத்தை அடைய வேண்டும் என்ற வெறித்தனமான தேடலில் மற்றவர்கள் மீது காலடி எடுத்து வைப்பதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். பவுல் “மற்றவர்களை நம்மை விட மேன்மையாக எண்ணுங்கள்” என்று சொன்னாலும், சுய பெருமை மற்றும் சுய புகழ்ச்சி கிறிஸ்தவர்களிடையே கூட பொதுவானதாகவே உள்ளது (பிலி. 2:3 ). நாம் முன்னேறும் வரை யாரை காயப்படுத்துகிறோம் அல்லது ஒதுக்கித்தள்ளுகிறோம் என்பது முக்கியமல்ல என்ற சிந்தனை நம்மிடம் பரவியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களிடையே இந்த மனப்பாங்கு இருக்கக்கூடாது.
இன்னும் மோசமானது என்னவென்றால், நம்மிடையே துன்பப்படுபவர்களிடம் காண்பிக்காமல் இருக்கும் நமது அக்கறையின்மை. நாம் ஆராதிக்க ஒன்றுகூடும்போது, வேதனையுள்ளவர்களுடன் சேர்ந்து நாம் ஆராதிக்கிறோம். சிலர் வியாதிப்பட்டிருக்கிறார்கள். சிலர் துக்கப்படுகிறார்கள். சிலர் தங்கள் குடும்பங்களை பராமரிக்க போராடுகிறார்கள். சிலருக்கு குடும்பம் இல்லை. ஆனால் பெரும்பாலும், நாம் இவற்றைக் கவனிப்பதில்லை. மற்றவர்களின் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக நம் சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம். இருப்பினும், சரீரத்தின் ஒரு ஆலயம் வலியில் இருக்கும்போது, அது முழு உடலையும் பாதிக்கிறது என்பதை கால்வின் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் கர்த்தருடைய பந்திற்காக ஒன்றுகூடும்போது, அது சரீரத்தின் ஒற்றுமையை நமக்கு நினைவூட்ட வேண்டும், மேலும் கிறிஸ்துவில் உள்ள நம் சகோதர சகோதரிகளின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள நம்மால் முடிந்ததைச் செய்ய முடியும் என்பதற்காக இரக்கத்திற்காக அது நம்மைத் தூண்ட வேண்டும்.ம்பங்களில் இத்தகைய ஓர் பரந்த சூழல் உண்டானபிறகு, இனி ஒருவருக்கொருவர் விரோதமாக பாவம் செய்யக்கூடாது என்ற ஒப்புரவாகுதலை கொண்டுவரும் அமைதியை விடாமுயற்சியுடன் நாம் பாதுகாக்க வேண்டும். எனவே இவ்வாறு செய்யும்போது நாம் மன்னிக்கிறோம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


