Why Does Character Matter in Ministry?

ஊழியத்தில் குணநலன் ஏன் முக்கியமானது?

03-09-2026
Why Does Character Matter in Ministry?

ஊழியத்தில் குணநலன் ஏன் முக்கியமானது?

03-09-2026

ஆபிரகாம் யார்?

Who Was Abraham?

முற்பிதாவாகிய ஆபிரகாம் 2000 கிமு வில் வாழ்ந்த வேத வரலாற்றில் ஓர் முக்கியமான நபராவார். ஆபிரகாம் அற்புதமான விசுவாசத்திற்கென்று மாதிரியாக காண்பிக்கப்பட்ட தேவனுடைய மீட்பின் வரலாற்றின் மையமாவார். ஆதியாகமத்தில் உள்ள நீதியுள்ள வம்ச அட்டவணையில் ராஜ வம்சத்தை நிறுவுவதன் மூலம் தேசங்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை முன்னறிவிக்கும் தெய்வீக வாக்குறுதிகளை பெற்ற முக்கிய அங்கமாவார். இந்த ஆசீர்வாதமானது இயேசு கிறிஸ்துவின் வருகையில் மாபெரும் நோக்கத்தின் உச்சத்தை அடைகிறது.

தேவனின் வாக்குத்தத்தங்களால் வடிவமைக்கப்பட்ட ஆபிரகாமின் வாழ்க்கை 

ஆபிரகாமின் வரலாறு ஆதியாகமம் 11- ல் தொடங்குகிறது , அங்கு அவர் கல்தேயரின் ஊர் பட்டணத்தில் வசிக்கும் தேராகின் மகனான ஆபிராம் என்று அறியப்படுகிறார். தேவன் அவரை அழைத்தபோது, ஆபிராம் முழு மனிதகுலத்திற்கும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறார். ஆதியாகமம் 12:1-3- ல் விவரிக்கப்பட்டுள்ள இந்த விசேஷ அழைப்பு, ஆபிராமின் மூலம் பூமியின் எல்லாக் குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்ற குறிப்பிடத்தக்க உறுதிமொழியில் உச்சக்கட்டத்தை அடைகிறது.

உண்மையான கீழ்ப்படிதலுடன், ஆபிரகாம் தனக்குப் பழக்கமான சூழலை விட்டுவிட்டு, அறியப்படாத இடத்திற்குப் பயணிக்கிறார். இது கடவுளுடனான ஒரு ஆழமான உறவின் தொடக்கமாக அமைந்தது. தீர்க்கதரிசியான ஏசாயா மூலமாக, கடவுள் அந்த முற்பிதாவை அன்புடன் “என் சிநேகிதனான ஆபிரகாம்” 

(ஏசாயா 41:8) என்று குறிப்பிடுகிறார்.

ஆபிரகாமின் வாழ்க்கை வரலாறு பல சவால்கள், அலைச்சல்கள் மற்றும் தெய்வீக சந்திப்புகளால் நிறைந்துள்ளது. அவர் கானானுக்குப் பயணம் செய்கிறார், பஞ்சத்தை அனுபவிக்கிறார், எகிப்தில் தங்கியிருக்கிறார், மேலும் அண்டை மக்களுடனான சிக்கலான உறவுகளைக் கையாளுகிறார். அவர் ராஜாக்களுடன் பழகினாலும், ஒரு பரதேசியின் வாழ்க்கை முறையை வாழ்ந்தார். இதனால், எபிரேயர் நூலின் ஆசிரியர், ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.  என்கிறார் 

(எபிரேயர் 11:10). 

அவருடைய மனைவி சாராய் (பின்னர் சாரா என்று அழைக்கப்பட்டவள் ), மலட்டுத்தன்மையை எதிர்கொள்கிறாள், இது அவளுக்குப் பதற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. ஆபிரகாமின் சந்ததியினர் நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவர்களாக இருப்பார்கள் என்றும், இறுதியில் கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றும் தேவன் அவருக்கு உறுதியளிக்கிறார் ( ஆதி. 15 ). ஆயினும், ஆண்டுகள் செல்லச் செல்ல, சாராய் மலடியாய் இருக்கிறாள். பொறுமையிழந்த சாராய், தன் வேலைக்காரியான ஆகாரை ஆபிராமுக்குக் கொடுக்கிறாள், அவள் மூலமாக இஸ்மவேல் பிறக்கிறான் ( ஆதி. 16 ). இருப்பினும், ஆபிரகாமின் உண்மையான வாரிசு சாரா மூலமாகவே வருவான் என்று தேவன் உறுதிப்படுத்துகிறார்.

வாக்குத்தத்தத்தின் மகனான ஈசாக்கின் பிறப்பு, ஆதியாகமத்தில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது. இருப்பினும், ஈசாக்கைப் பலியிடுமாறு தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டபோது, அவருடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது (ஆதி 22). மனதை நொறுக்கும் அத்தகைய கட்டளைக்குப் பிறகும் கீழ்ப்படிய ஆபிரகாம் காட்டிய விருப்பம், தேவன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. கடைசி நொடியில், தேவன் தலையிட்டு, பலிக்காக ஒரு ஆட்டுக்கடாவை அளித்து, ஆபிரகாமின் சந்ததியில் ஒருவன் மூலமாகப் பூமியிலுள்ள எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்ற தனது உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் ( ஆதி. 22:18 ). ஆபிரகாமின் வாழ்க்கை குறைபாடுகள் அற்றதல்ல. சந்தேகம், வஞ்சகம் மற்றும் தார்மீகக் குழப்பம் ஆகியவற்றின் நிகழ்வுகளை ஆதியாகமம் ஆவணப்படுத்துகிறது. ஆயினும்கூட, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசமே, அவருடைய நீடித்த மரபுக்குச் சான்றாக விளங்குகிறது.

பல வம்சங்களின் தகப்பன்: விருத்தசேதன உடன்படிக்கை 

ஆபிரகாமின் வாழ்வில் தேவன் இடைப்பட்ட நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று விருத்தசேதனத்தின் உடன்படிக்கையை நிறுவுவது தான் (ஆதி 17). இந்த உடன்படிக்கையின் மையமாக இருப்பது, ஆபிரகாமை “பல தேசங்களுக்குத் தந்தையாக” மாற்றுவதாகக் கடவுள் அளித்த வாக்குறுதியாகும்; இது ராஜ மரியாதைக்குரிய ஒரு வாக்குறுதியாகும். இதற்கு முன்னர், மற்றொரு உடன்படிக்கையின் மூலம், ஆபிரகாம் ஒரு தேசத்திற்குத் தந்தையாக இருப்பார் என்றும், அவருடைய சொந்த சந்ததியினர் கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றும் கடவுள் உறுதியளித்திருந்தார் ( ஆதி. 15 ). குறிப்பிடத்தக்க வகையில், விருத்தசேதன உடன்படிக்கையானது, பல தேசங்களை உள்ளடக்கும் வகையில் ஆபிரகாமின் தந்தைத்துவத்தை உருவகமாக விரிவுபடுத்துகிறது. ஆபிரகாம் அவர்களுக்கு ஆவிக்குரிய தந்தையாக இருப்பார். ஆபிரகாமைப் போன்ற விசுவாசம் கொண்டவர்கள் அவருடைய பிள்ளைகளாக இருப்பார்கள் ( கலா. 3:1-9 ). 

ஆபிரகாம் வெறுமனே விசுவாசத்தினால் சுமத்தப்படும் நீதிக்கு மாத்திரமல்ல, தேவனுடைய கட்டளைக்கு விசுவாச கீழ்ப்படிதலினால் வடிவமைக்கப்பட்ட வாழ்விற்கும் மாதிரியாக திகழ்கிறார்.

ஆதியாகமம் 17-ஆம் அதிகாரத்தில் , தேவன் ஆபிரகாமுக்கு, அந்நியர்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள் உட்பட, தன் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் “உடன்படிக்கையின் அடையாளமாக” விருத்தசேதனம் செய்யும்படி அறிவுறுத்துகிறார் ( ஆதி. 17:10–14 ). ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களின் பின்னணியில் பார்க்கும்போது, விருத்தசேதனமானது, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வழியாகத் தொடரும் தனித்துவமான வம்சாவளியானது, தீய சக்திகளை வென்று, பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதன் மூலம் தேசங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கும் ஒரு ராஜாவில் முடிவடையும் என்ற தேவனுடைய வாக்குறுதியின் தொடர்ச்சியான நினைவூட்டலாகச் செயல்படுகிறது. இவற்றை மனதில் கொண்டு, மத்தேயு நற்செய்தியானது, ஆபிரகாமிலிருந்து தொடங்கும் ஒரு அரச வம்சாவளியுடன் ஆரம்பித்து, ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இயேசுவில் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது ( மத். 1:1–17 ).

விசுவாசத்தினால் உண்டாகும் நீதி: ஆபிரகாமின் நிலைத்திருக்கும் மரபு 

ஆபிரகாமின் வாழ்க்கை வரலாறு, விசுவாசத்தின் மூலம் வழங்கப்படும் நீதியின் கருத்தை விளக்குகிறது. ஆதியாகமம் 15:6 கூறுகிறது, “அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.” இந்த வசனம் பிற்கால இறையியல் சிந்தனைக்கு ஒரு மூலக்கல்லாக அமைகிறது, குறிப்பாக பவுலின் எழுத்துக்களில், ஆபிரகாம் விசுவாசத்தின் முன்மாதிரியாகக் காட்டப்படுகிறார் ( ரோமர் 4 ).

ஆபிரகாமின் சாதனைகளோ அல்லது பரிபூரணமோ தேவனிடத்தில் அவருக்கு நீதியுள்ள நிலையைப் பெற்றுத்தரவில்லை, மாறாக தேவனுடைய வார்த்தையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் அதன்படி செயல்படுவதற்கான விருப்பமுமே அதற்குக் காரணம். சட்டத்திற்குக் கீழ்ப்படிதலைக் காட்டிலும் விசுவாசத்தில் வேரூன்றிய, நீதியைப் பற்றிய இந்த ஆழமான புரிதல், இயேசு கிறிஸ்துவின் சீடர்களுக்கு ஒரு வழிகாட்டும் கொள்கையாகத் தொடர்கிறது.

ஆயினும், ஆபிரகாமின் விசுவாசம் செயலற்றதல்ல; அது அவரை நீதியுடன் செயல்பட வழிநடத்துகிறது. தன் தாய்நாட்டை விட்டுச் செல்லவும், காணப்படாத வாக்குத்தத்தங்களை நம்பவும், தேவனுடைய கட்டளைக்காகத் தன் பிரியமான மகனைப் பலியிடவும் அவர் காட்டிய விருப்பம், அது சாதிக்கும் காரியங்களால் வெளிப்படும் ஒரு விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது ( யாக்கோபு 2:20–24- ஐக் காண்க ). ஆபிரகாம், விசுவாசத்தால் அருளப்பட்ட நீதிக்கு மட்டுமல்ல, தேவனுடைய கட்டளைகளுக்கு விசுவாசத்தால் தூண்டப்பட்ட கீழ்ப்படிதலால் வடிவமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

முடிவு

ஆபிரகாம் என்பவர், என்றும் நிலைத்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கையைக் கொண்ட ஒரு ஆளுமை ஆவார். அவருடைய கதை ஒரு தொலைதூரக் கதையை விட மேலானது; அது, உலகத்திற்கான தேவனுடைய மீட்புத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு குலப்பிதாவுக்கும் தேவனுக்கும் இடையிலான ஓர் உறவாகும். இயேசு கிறிஸ்துவில் நிறைவேறவிருக்கும் தெய்வீக வாக்குறுதிகளைப் பெற்றவராகவும், விசுவாசத்தின் மூலம் பெறப்படும் நீதியின் முன்மாதிரியாகவும் விளங்கும் ஆபிரகாமின் மரபு, ஒவ்வொரு கோத்திரம் மற்றும் தேசத்தைச் சேர்ந்த எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து, சவால் விடுத்து, அவர்களை ஒன்றிணைத்து வருகிறது.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டி. டெஸ்மண்ட் அலெக்சாண்டர்

டி. டெஸ்மண்ட் அலெக்சாண்டர்

Dr. T. டேஷ்மண்ட் அலெக்சாண்டர் வடக்கு அயர்லாந்தில் உள்ள Union theological College ல் வேத இறையியலின் பேராசிரியராகவும் மற்றும் முதுகலை படிப்பின் இயக்குனராகவும் உள்ளார். The New Dictionary of biblical Theology ன் இணை ஆசிரியராகவும், From Paradise to the promise land, From Eden to the new Jerusalem உள்ளிட்ட அநேக புத்தகங்களின் ஆசியராகவும் உள்ளார்.