How Can the Church Care for Its Disabled Members?

சபை தனது மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை எவ்வாறு பராமரிக்க முடியும்?

27-08-2026
How Can the Church Care for Its Disabled Members?

சபை தனது மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை எவ்வாறு பராமரிக்க முடியும்?

27-08-2026

மரணத்தில் கிறிஸ்தவனின் ஆறுதல் எது?

What Is the Christian’s Comfort in Death?

கடவுளுடைய வார்த்தை மரணத்தை அது தேவனுக்கு எதிரான மனிதன் செய்த கலகத்தின் பயங்கரமான விளைவாக காண்பிக்கிறது. நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழுவதற்கு முன்பே, தம்முடைய பரிசுத்தமான சட்டத்தை மீறுவதன் விளைவு மரணம் தான் என்பதை நம் படைப்பாளராகிய தேவன் ஆதாமுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எச்சரித்திருந்தார்: “ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:17).

தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறின பிறகு ஆதாமும் ஏவாளும் எவ்விதமான மரணத்தினால் பாதிக்கப்பட்டார்கள்?

ஆதாம் ஏவாள் மற்றும் தந்திரமான சர்ப்பம் ஆகியோர் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பை செலுத்திய பிறகு, மற்றும் ஆதாமின் முதல் மீறுதலினால் முழு படைப்புகளையும் சபித்த பிறகு உடனடியாக தேவன் அவர்களை ஜீவ விருட்சத்தின் கனியை புசிதாது என்றென்றும் உயிரோடிராதபடிக்கு,  ஏதேன்தோட்டத்தை விட்டு துரத்தினார் (ஆதி 3:22-24). படைக்கப்பட்ட உயிரினங்களாக இருந்ததால், ஆதாமும் ஏவாளும் சரீர மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர், மேலும் அந்தத் தண்டனையின் உடனடிச் செயல், அவர்களுடைய சிருஷ்டிகரின் ஜீவனுள்ள பிரசன்னத்திலிருந்து ஒரு இயற்கைக்கு மாறான பிரிவின் வடிவத்தை எடுத்தது. எல்லா இயற்கைக்கு மாறான பிரிவுகளையும் போலவே, இதுவும் வேதனை அளித்தது.

மரணத்திற்கு ஒரு கொடுக்கு உண்டு, அந்தக் கொடுக்கு பாவத்தின் காரணமாக தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல் ஆகும், ஆனால் நற்செய்தியில் ஆறுதல் உண்டு. இரட்சிப்பின் நற்செய்தி என்னவென்றால், நியாயத்தீர்ப்பை விதித்து, பூமியைச் சபித்த தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவில் அதற்கான பரிகாரத்தையும் அளிக்கிறார்; அவர், மரணத்துக்குரிய வஞ்சகனின் தலையை நசுக்குகிற ஸ்திரீயின் வாக்குத்தத்த வித்து ஆவார் ( ஆதி. 3:15 ). அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது போல: “மரணத்தின் கொடுக்கு பாவமே, பாவத்தின் வல்லமை நியாயப்பிரமாணமே. ஆனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு ஜெயத்தைக் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” ( 1 கொரி. 15:56-57 ). கிறிஸ்துவே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் சமாதானம் செய்கிற மாபெரும் சமாதானக்காரர் ( கொலோ. 1:20-22 ) மற்றும் பாவத்தையும் மரணத்தையும் வென்ற மாபெரும் வெற்றியாளர் ஆவார்.

மரணத்திலும் கூட மிகுந்த ஆறுதல் உண்டு, ஆனால் அது கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து ஒருபோதும் கிடையாது. நாம் மரணத்தைப் பற்றி, குறிப்பாக மரணம் நெருங்கும் வேளையில், தியானிக்கும்போது கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதலின் மூன்று பரிமாணங்களை வேதாகமம் வல்லமையாக எடுத்துக்காட்டுகிறது.

1.கிறிஸ்து மரணத்தின் மீது மேலான அதிகாரமிக்கவர்

முதலாவது, கிறிஸ்து மரணத்தின் மீது மேலான அதிகாரமிக்கவர். ஏசாயா மரணத்தை, எல்லா மனிதனையும் மூடும் மூச்சுத்திணற வைக்கும் காரிருளின் போர்வை என்கிறார்,

சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். 

(ஏசாயா 25:7)

ஆனால் கிறிஸ்து அந்த மரணத்தைக் காட்டிலும் பெரியவர்:

அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார், கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார், கர்த்தரே இதைச் சொன்னார். (ஏசாயா 25:8).

இது தேவனிடம் இருந்து வரும் நிச்சயமான வார்த்தையும் பிரகடனமும் ஆகும்: அவர் வெறுமனே மரணத்தின் வல்லமையை செயலிழக்க செய்யமாட்டார், ஆனால் அவர் மரணத்தையே என்றென்றும் விழுங்கிவிடுவார், இது நம்மை இரணடாவது குறிப்பிற்கு கொண்டுச் செல்கிறது.

2. கிறிஸ்து மனிதனுடைய பகைமையின் பிரச்சனையை தீர்க்கும் யார்.

இரண்டாவதாக, கிறிஸ்து தமது ஜனத்தின் நிந்தையை சிலுவையில் நாம் சிந்திய இரத்தத்தின் பலியில் நீக்கினார். எபிரெய நிருபம் இவ்வாறு கூறுகிறது:

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். 

(எபிரேயர் 9:27-28).

கிறிஸ்து மனிதகுலத்தின் பிரிவினையின் பகைமையை தீர்த்துவிட்டார். மேலும், கிறிஸ்து தேவனுடைய நீதியான கோபத்தைத் தணித்து, தமது இரத்தத்தால் நம்முடைய பாவங்களைக் கழுவித் தீர்த்தது மட்டுமல்லாமல், சிலுவையில் நமக்காகச் சாபமானார் ( கலா. 3:13 ). அவர் தமது இரத்தத்தால் நம்மை விலைகொடுத்து, நம்முடைய பாவத்திற்கான தண்டனையைச் செலுத்தி, நம்மைத் தமக்கே உரிய விலையுயர்ந்த உடைமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். நாம் நமக்கே உரியவர்கள் அல்ல, நிச்சயமாக மரணத்தின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவர்களும் அல்ல. கிறிஸ்துவுக்குள் நாம் தேவனுக்கு உரியவர்கள்.

3. நாம் கிறிஸ்துவில் பாதுகாப்பாக இருக்கிறோம்.

மூன்றாவதாக, தேவனுடைய வல்லமையால் நாம் இருளின் (மரணத்தின்) ராஜ்யத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய அற்புதமான ஒளிக்கும் (ஜீவனுக்கும்) கொண்டுவரப்படுகிறோம்: “அவர் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்து, தம்முடைய பிரியமான குமாரனின் ராஜ்யத்திற்குக் கொண்டுவந்தார்; அவரில் நமக்கு மீட்பும் பாவ மன்னிப்பும் உண்டு” ( கொலோ. 1:13-14 ). மேலும், சரீர மரணம் உட்பட எதுவும் நம்மை அவருடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. இயேசு சொன்னார்:

“ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். 

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.” 

(யோவான் 10:26-29).

வாழ்விலும் மரணத்திலும் நாம் கிறிஸ்துவில் பாதுகாப்பாகவே இருக்கிறோம்.

முடிவுரை

மரணத்தில் மாபெரும் இரகசியம் உள்ளது. மேலும் நாம் நித்தியத்திற்குள் செல்லும் நேரம் வரும்போது என்ன அனுபவிப்போம் என்பதை பற்றிய தெளிவற்ற சிந்தனைகள் ஒருவேளை நம்மை குழப்பமாக்க கூடும். ஒரு எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மரணத்தின் மாபெரும் மர்மம் அது வாழ்க்கையின் மிகவும் குழப்பமான சிறிய மர்மங்களை எவ்வாறு விளங்குகிறது! வாசகரே அந்த குறுகிய காலத்தில் நாம் அவை அனைத்தையும் தொடுவோம் அதன் பிறகு சிம்மாசனத்தின் ஒளியில் மாபெரும் வெளிப்பாடு வரும்.” ஆனால் ஒரு கிறிஸ்தவரைப் பொறுத்தவரை, மரணத்திற்குப் பிறகு நமக்குக் காத்திருப்பது, ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் நித்திய பேரின்பம் என்பதே ஆறுதலான வாக்குறுதியாகும், அவருடைய “வலது கரத்தில் நித்திய பேரின்பங்கள் உண்டு” ( சங்கீதம் 16:11 ).

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

சாகரி க்ரோம்

சாகரி க்ரோம்

ரெவரெண்ட் ஜக்காரே க்ராஃப், தென் கரோலினாவின் உட்ரூஃபில் உள்ள அந்தியோக்கியா பிரஸ்பிடேரியன் தேவாலயத்தின் போதகராகவும், 'தி கன்ஃபெஷனல் பிரஸ்பிடேரியன் ஜர்னல்' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் , மற்றும் 'பிரஸ்பிடேரியன் பாலிட்டி' வலைத்தளத்தின் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார்.