30-10-2025

அன்பின் பிணைப்பு

நமது பாவங்கள் மூலமாக முதலில் நாம் கிறிஸ்துவை காயப்படுத்தாமல் இகழாமல், அவமானப்படுத்தாமல், நமது சகோதரரில் யாரும் நம்மால் காயப்படுத்தப்படவோ, வெறுக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, அவதிக்கப்படவோ அல்லது எந்த வகையிலும் புண்படுத்தப்படவோ முடியாது; கிறிஸ்துவுடன் ஒருமித்து நடவாமல் நம் சகோதரரோடு ஒருமித்து நடக்கமுடியாது; நமது சகோதரரை நேசியாமல் கிறிஸ்துவை நேசிக்க முடியாது; நமது சொந்த சரீரத்தை நாம் கவனித்துக் கொள்வது போலவே நம்முடைய சகோதரர்களின் சரீரங்களையும் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் அவர்கள் நம் சரீரத்தின் அவயவங்கள்; நமது சரீரத்தில் ஓரிடத்தில் ஏற்படும் வலியானது மற்ற எல்லா இடங்களிலும் உணர்வை ஏற்படுத்துவது போல, நமது சகோதரரில் ஒருவர் எந்தவொரு தீமையினால் பாதிக்கப்படும்போது நமது இரக்கத்தினால் அவர்கள் தொடப்பட்டிருக்கவேண்டும்.