Salvation in Scripture

வேதத்தில்  இரட்சிப்பு

14-05-2026
Salvation in Scripture

வேதத்தில்  இரட்சிப்பு

14-05-2026

சீர்திருத்த இரட்சிப்பியல் ஏன் அவசியம்?

Why Reformed Soteriology Matters

இந்த சிறிய கட்டுரைகள் சார்ந்த தொடரில் நாம் பார்த்தது போல், வேதாகமத்தின் மெய்யான இரட்சிப்பியல் கோட்பாட்டை பேணிக்காப்பதென்பதை சாதாரணமாக எண்ணக்கூடாது. பழைய ஏற்பாட்டில் அநேக இஸ்ரவேலர்கள் மோசேயின் உடன்படிக்கையின் தன்மையை தவறாக புரிந்துக்கொண்டு கிரியைகளினால் இரட்சிப்பு என்ற கொள்கையில் விழுந்துவிட்டனர். சிலர் வெளிப்படையான விக்கிரகாரதனையில் விழுந்துபோயினர். பவுல் தனது ஊழியத்தின்போது, தம்மால் போதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமாக விலகிப் போய் வேறோரு சுவிசேஷத்துக்கு திரும்புவதின் மீதான தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார் (கலா 1:6).

ஆதி சபைகளில், பெலாஜியனிசமும் செமி-பெலாஜியனிசமும் ஒருபோதும்  முழுமையாக மறையாத ஒரு பிரச்சனையாக உருவெடுத்தன. ஆரம்பத்தில் இரண்டும் கண்டிக்கப்பட்டபோதிலும், பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளை நாம் அடையும்போது, செமி-பெலாஜியனிசமே மேலோங்கிய பார்வையாக இருந்தது, மேலும் சிலர் முழுமையான பெலாஜியனிசத்தை நோக்கியும் நகர்ந்தனர். பல்வேறு அந்நிய நம்பிக்கையின் தாக்கத்தினால், இரட்சிப்பு என்பது ரோம கத்தோலிக்க பாதிரியாரால் வழங்கப்பட்ட திருநியமங்கள் மூலமாக மனிதனின் தன்மை உயர்த்தப்படும் என்பதைப்போல புரிந்துக் கொள்ளப்பட்டது. இவ்விதமான இரட்சிப்பைப் பற்றிய ரோம கத்தோலிக்கரிகளின் தவறான புரிதல் மத்திய காலகட்டத்தில் மிகவும் பரவியிருந்தது. இன்றும் நீதிமானாக்கப்படுதல் என்ற கோட்பாடானது, அது நிராகரிப்படுவதின் மூலமாகவோ அல்லது திருத்தப்படுவதின் மூலமாகவோ தொடர்ந்து மிகப்பெரிய தாக்குதல்களுக்கு கீழே காணப்படுகிறது.

1.வேத அடிப்படையிலான போதனைக்கு இது உண்மையுள்ளதாக இருப்பதினால் சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியமானது.

1.வேத அடிப்படையிலான போதனைக்கு இது உண்மையுள்ளதாக இருப்பதினால் சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியமானது.

கிரியையினால் இரட்சிப்பு மற்றும் கிருபையினால் இரட்சிப்பு இடையே உள்ள வித்தியாசங்களை இந்த உபதேசம் தெளிவாக காண்பித்து வலியுறுத்துகிறது. இது பெலெஜியன் மற்றும் செமி பெலஜியன் கோட்பாடுகளை நிராகரித்த செயின்ட் அகஸ்டினின் கொள்கைகளை கடைபிடிக்கிறது. மேலும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் ஊடுருவியிருந்த நீதிமானாக்கப்படுதல் பற்றிய இருப்பியல் சார்ந்த தவறான கருத்தாக்கத்தையும் இது நிராகரித்து, கடவுளின் மீட்பளிக்கும் கிருபையைப் பற்றிய வேதாகம உடன்படிக்கை சார்ந்த புரிதலுக்குத் திரும்பியது.

2. சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது நூற்றுக்கணக்கான சீர்திருத்த இறையியலாளர்கள் மற்றும் போதகர்களின் பல ஆண்டுகால முழுமையான மற்றும் விரிவான வேத வியாக்கினப் பணிகளில் வேரூன்றியிருக்கிறது.

2. சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது நூற்றுக்கணக்கான சீர்திருத்த இறையியலாளர்கள் மற்றும் போதகர்களின் பல ஆண்டுகால முழுமையான மற்றும் விரிவான வேத வியாக்கினப் பணிகளில் வேரூன்றியிருக்கிறது.

இது, ஏதோவொரு பிரபலமான ஒருவர் நன்கு சிந்திக்காமல் முன்மொழிந்த ஒன்றல்ல. பல ஆண்டுகால கவனமான வேத விளக்கப் பணிகளின் விளைவாக, வீழ்ச்சிக்கு முந்தைய நிலைக்கும் வீழ்ச்சிக்குப் பிந்தைய நிலைக்கும் இடையிலான வேறுபாட்டை மிகத் தெளிவாக விளக்கிய ஒரு விரிவான உடன்படிக்கை இறையியலால் உருவானது. அது, கிரியைகளுக்கும் கிருபைக்கும் இடையிலும், நியாயப்பிரமாணத்துக்கும் சுவிசேஷத்துக்கும் இடையிலும் உள்ள வேதாகம வேறுபாட்டைத் திருச்சபை நினைவுகூர வலியுறுத்தியது.

சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியமானது, காரணம் இது வேத சுவிசேஷத்தை நாம் காத்துக்கொள்ள நம்மை உந்துகிறது, மேலும் பல நூற்றாண்டுகளாக சபைகளை பாதித்து வந்த பல ஆபத்துக்களைத் தவிர்க்கவும் நமக்கு உதவுகிறது.

3. சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது மற்ற எல்லா இறையியல் கோட்பாடுகளின் மையங்களுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

3. சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது மற்ற எல்லா இறையியல் கோட்பாடுகளின் மையங்களுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

இது திரித்துவக் கோட்பாடு, தெய்வீக ஆணை, படைப்பு, தெய்வீகப் பராமரிப்பு, மனிதன் மற்றும் அவனது வீழ்ச்சி பற்றிய கோட்பாடு, கிறிஸ்துவின் ஆளுமை மற்றும் பணி, இரட்சிப்பின் ஒழுங்குமுறையில் இரட்சிப்பின் பிரயோகம் , திருச்சபை மற்றும் அதன் திருநியமங்கள், மற்றும் கடைசி நாட்கள் ஆகியவற்றுக்கு இடையேயான வேதத் தொடர்புகளைப் காக்கிறது. உதாரணமாக, அர்மினிய இரட்சிப்பியல் கோட்பாட்டைப் போலல்லாமல், சீர்திருத்த இரட்சிப்பியல் கோட்பாடு தனது இறையியல் அமைப்பில் முரண்பாடுகளையும் சுயமுரண்பாடுகளையும் அறிமுகப்படுத்துவதில்லை. இரட்சிப்பைக் குறித்து பிதா ஒரு நோக்கத்தையும், குமாரன் முற்றிலும் வேறுபட்ட நோக்கத்தையும் கொண்டிருப்பதாக இதில் இல்லை.

4. கடைசியாக, சுவிசேஷம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், சீர்திருத்த இரட்சிப்பு கோட்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது.

4. கடைசியாக, சுவிசேஷம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், சீர்திருத்த இரட்சிப்பு கோட்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆதாம் மற்றும் ஏவாளின் அனைத்து குமாரர்களும் குமாரத்திகளும் பாவத்தில் மரித்திருக்கிறார்கள், தேவனுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள், தேவனாகவே ஏதாவது செய்கிற வரைக்கும் எவ்வித நம்பிக்கையும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஏனெனில் கிறிஸ்துவின் தன்மையிலும் அவரது பணியின் மூலமாகவும் தேவன் ஒன்றை செய்தார் மற்றும் இந்த சுவிசேஷத்தை நாம் அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டுமிருக்கிறோம். பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் சுவிசேஷத்தை பற்றி கூறுகிறார். இதுவே அந்த செய்தி 

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.

(1 கொரிந்தியர் 15:3-7). 

வீழ்ச்சியுற்ற மனு குலத்தின் இரட்சிப்புக்கான ஒரே வழி இயேசு மட்டுமே. அவர் இல்லாமல் ஒருவராலும் பிதாவிடம் வர முடியாது (யோவான் 14:6).

டார்ட் கவுன்சில் (Canons of Dort) இவ்விதமாக விளக்குகிறது:

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவில் விசுவாசம் கொள்கிற யாராக இருப்பினும் அவர்கள் ஒருபோதும் அழியாமல் நித்திய ஜீவனை கொண்டிருக்கிறார்கள் என்பதே சுவிசேஷத்தின் வாக்குத்தத்தமாகும். இந்த வாக்குத்தத்தமானது, மனந்திரும்பவும் விசுவாசிக்கவும் வேண்டும் கட்டளையோடு இணைந்து, தேவன் தனது நல்ல விருப்பத்தின்படி அனுப்பும் அனைத்து தேசங்களின் மக்களுக்கும் அறிவிக்கப்படவும், பிரகடனப்படுத்தப்படவும் வேண்டும்.

சீர்திருத்த இரட்சிப்பியல் முக்கியமானது, காரணம் இது வேத சுவிசேஷத்தை நாம் காத்துக்கொள்ள நம்மை உந்துகிறது, மேலும் பல நூற்றாண்டுகளாக சபைகளை பாதித்து வந்த பல ஆபத்துக்களைத் தவிர்க்கவும் நமக்கு உதவுகிறது. தேவனுக்கு மட்டுமே மகிமை!

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன் Dr. கெய்த் மேத்திசன் சேன் போர்ட் ல் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பேராசிரியராக உள்ளார். The Lord's Supper உள்ளிட்ட அநேக புத்தகங்களின் ஆசிரியருமாவார்.