Is-God-Always-Please-with-Christians
கிறிஸ்தவர்கள் மீது தேவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாரா?
30-09-2025
How-to-Support-the-Caregivers-in-Your-Church
உங்கள் சபையிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது எப்படி?
07-10-2025
Is-God-Always-Please-with-Christians
கிறிஸ்தவர்கள் மீது தேவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாரா?
30-09-2025
How-to-Support-the-Caregivers-in-Your-Church
உங்கள் சபையிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது எப்படி?
07-10-2025

எனது வேலை ஸ்தலத்தில் நான் எவ்வாறு கிறிஸ்தவனாக இருப்பது?

How Can I Be a Christian in My Workplace?

என்னுடைய இளம் வயதில் ஒரு முறை ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ தொழிலதிபர் என்னிடம் இவ்வாறு கூறினார்: “உங்களுக்கு ஒன்று தெரியுமா அலெக்ஸ், வருமான ஆதாயத்தைத் தவிர மற்றபடி நான் வேலைக்காக செய்வது முற்றிலும் அர்த்தமற்றது.” இவர் ஒரு தாழ்மையான மனிதன், வேலையைப் பற்றி இவரது கண்ணோட்டம் என்னவென்றால், வேலை ஒரு அவசியமான தீமை என்பதே.

இந்த நண்பர் தனது அடையாளத்தை அவருடைய வேலையில் தேடவில்லை என்பது பாராட்டத்தக்கது, நாம் தவிர்க்க வேண்டிய சோதனை இது. பலர் தங்களின் வேலையிலிருந்து எதிர்பார்க்கும் முக்கியத்துவத்தை கிறிஸ்துவால் மட்டுமே நமக்கு தர முடியும். ஆனால், இப்படித்தான் நமது வேலை அர்த்தமற்றது என்று நாம் நினைக்கவேண்டுமா? அல்லது நமது வாழ்வில் விழித்திருக்கும் நேரத்தில் பாதியை செலவிடும் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு வளமான நம்பிக்கையான பார்வையை வேதம் நமக்கு தருகிறதா? ஒரு கிறிஸ்தவராக வேலை செய்வது என்றால் என்ன?

வேலையை ஆராதனையாக செய்யுங்கள்

கிறிஸ்தவனின் வேலையை உலகியல் வேலையோடு வேறுபடுத்திப் பார்ப்பதை நாம் அடிக்கடி கேட்கிறோம். முழு நேர ஊழியம் என்பது மிகவும் தனித்துவமான மற்றும் அவசிமான அமைப்பாகும், இது இரட்டிப்பான கனத்துக்கு ஏற்ற ஒன்று (எபி 13:7, 1 தீமோ 5:17). ஆனால் ஓர் கிறிஸ்தவனுககு அவரது வாழ்வு அனைத்தும் தேவனுடைய முகத்திற்கு முன்பாக வாழ்ந்திருப்பதாகும் (Coram Deo). எனவே எந்த வேலையாயிருப்பினும், அது பிறருடைய பிரயோஜனத்துக்காக இருக்குமென்றால், விசுவாசத்தில் வேரூன்றிய கீழ்ப்படிதலுடன் தேவனுக்கு ஒப்பிவிக்கப்படுமென்றால் அதுவே கிறிஸ்தவ வேலையாகும். 

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” என்று ரோமர் 12:1 நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து வழிநடத்துகிறது. இது ஏதோ ஒருமுறை செயல்பாடு அல்ல, தொடர்ச்சியான ஆராதனை. நமது முழு வாழ்வும் நமக்காக வாழ்ந்து மரித்த கிறிஸ்துவுக்காக இருக்கவேண்டும், “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, …” (2 கொரிந்தியர் 5:15). நாம் தேவ தயவை பெறுவதற்காக இதை செய்வதில்லை, காரணம் நாம் இந்த தயவை ஏற்கனவே பெற்றும் அனுபவித்தும் உள்ளோம்.

நாம் செய்கிற அனைத்தும் முக்கியமானது, ஏனென்றால் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் நமது உணர்வும், செயல்பாடும் நாம் அழைக்கப்பட்டிருக்கிற ஆவிக்குரிய ஆராதனையின் ஒரு பகுதியாக உள்ளது. நமது வேலை ஸ்தலத்தில், நாம் உருவாக்குகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் அந்த எஜமானருக்கே கொடுப்பது போல நாம் பணி செய்யவேண்டும். நாம் மனிதனுக்கு அல்ல மனப்பூர்வமாக தேவனுக்கே ஊழியம் செய்கிறோம் (கொலொ 3:23). பூமிக்குரிய வெகுமதிக்காக அல்ல, தேவனைப் பிரியப்படுத்துவதற்காகவே நமது வேலையில் சிறந்து விளங்குவதை நாம் நோக்கமாக கொண்டுள்ளோம். 

சகோதர சிநேகத்தோடு வேலை செய்யுங்கள்

மார்ட்டின் லூத்தர் இவ்வாறு கூறுகிறார், “ தமது நல்ல வேலைகள் தேவனுக்கு தேவையில்லை ஆனால் நமது சக மனிதர்களுக்கு தேவை.” நாம் சக மனிதர்களை நேசிப்பதற்கென்று அநேக தெளிவான வழிகளை நமது வேலை ஏற்படுத்தித் தருகிறது. பெரும்பாலும் சம்பளத்தை குறிப்பிடுவதற்கே நல்லவேலை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். நியாயமான சம்பளம் வாங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை, சுய சம்பாத்தியத்தையும் மனநிறைவையும் வேதம் ஊக்குவிக்கின்றது (1 தெச 4:11-12, 1 தீமோ 5:8, எபி 13:5) ஆனால் பணமோ அந்தஸ்தோ நம்மை இயக்கக்கூடாது. அப்படியென்றால் எதுதான் நம்மை நடத்தவேண்டும்? தேவன் மீதும் மக்கள் மீதும் உள்ள அன்புதான்.

நமது வேலையில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதற்கு நாடவேண்டும்: பிறரின் வாழ்வை மேம்படுத்தவும், ஒழுக்கத்தை மேம்படுத்தவும், துன்பங்களை நீக்கவும் நாடவேண்டும். இது மிகப்பெரிய கொள்கையின் ஓர் பகுதியாகும்: சமுதாயத்திற்கு கிறிஸ்தவம் நல்லது. இது நம்மை நல்ல கணவனாகவும், மனைவியாகவும், பெற்றோர்களாகவும், குடிமக்களாகவும், பணியாளர்களாகவும் உருவாக்குகிறது. கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் பயனுள்ளவர்களாய் இருப்பதற்கு கிறிஸ்தவம் உதவி செய்கிறது. எல்லா நல்ல வேலைகளும் நல்ல சம்பளத்தை அளிப்பதில்லை. எல்லா வேலைகளிலும் நல்ல தொடர்ச்சியான பாராட்டல்களை கொடுப்பதில்லை. ஆனால் அனைத்து நல்ல வேலைகளும் பயனுள்ளவைகள்.

வேலையை ஓர் அழைப்பாக செய்யுங்கள்

நமது வேலை எதுவாக இருந்தாலும், பிறரின் நன்மைக்காக குறிப்பிட்ட பணிக்காக தேவன் நம்மை அழைத்த அழைப்பில் அவருடைய கரங்களை பார்ப்பது என்பது நமக்கு அதிக மகிழ்ச்சியையும், பொறுப்புணர்வுகளையும் அளிக்கிறது. உங்களது எஜமான் நன்றியற்றவராக இருக்கிறாரா? உங்களது சக பணியாளர்கள் கடினமாக உள்ளார்களா? உங்களது வாடிக்கையாளர்களை இணங்க வைப்பது கடினமாக உள்ளதா? அவ்வாறே இருக்கட்டும். உங்களது வேலை அது தேவனிடமிருந்து கொடுக்கப்பட்ட அழைப்பு. நேர்மை நமது குறிக்கோளாக இருக்குமென்றால், தேவனின் மகிமை நமது நோக்கமாக இருக்குமென்றால், அனைத்து ஏமாற்றங்களையும் மேற்கொள்வதற்கு இவைகள் போதுமானது. இயேசுவே நமது மாதிரியாக இருக்கிறார், “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்பவித்தார்.” (1 பேதுரு 2:23).

ஓர் கிறிஸ்தவனுக்கு அவரது வாழ்வு அனைத்தும் தேவனுடைய முகத்திற்கு முன்பாக வாழ்ந்திருப்பதாகும். (Coram Deo). எனவே எந்த வேலையாயிருப்பினும், அது பிறருடைய பிரயோஜனத்துக்காக இருக்குமென்றால், விசுவாசத்தில் வேரூன்றிய கீழ்ப்படிதலுடன் தேவனுக்கு ஒப்பிவிக்கப்படுமென்றால் அதுவே கிறிஸ்தவ வேலையாகும். 

மகிழ்ச்சிக்குரிய காரியம் என்னவென்றால், நாம் எதற்கு தகுதியானவர்களோ அந்த வேலைகளை நாம் அநேக வழிகளில் சுதந்திரமாக செய்துகொண்டிருக்கிறோம். முடிந்தவரை நடைமுறைக்கு ஏற்றவாறு, நமது திறமை, குணங்கள், வரங்கள் மற்றும் விருப்பங்களை அதிகப்படுத்தும் வேலையை நாம் நாடவேண்டும். அந்த வழியில்தான் நமது வேலை அசட்டைத்தனம் இல்லாததாகவும், டோரதி சேயர்ஸ் கூறியது போல், நாம் “ஆவிக்குரிய, மனம் மற்றும் சரீர திருப்தியை காணும்” விஷயமாகவும், “தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் ஓர் வழிமுறையாகவும் இருக்கும். 

நீங்கள் வேலைத்தேடிக்கொண்டிருப்பீர்களென்றால், உங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, நீங்கள் விரும்பிய வேலையை ஆரம்பிக்கும்போது தேவனுடைய பராமரிப்பை விசுவாசியுங்கள். நமது வேலை அது தேவனுடைய அழைப்பு என்று நினைக்கும்போது, நமது தற்போதைய நிலையில் உண்மையுள்ளவர்களாக இருக்கவும், இப்பொழுது இதற்காகவே தேவன் நம்மை நியமித்திருக்கிறார்.

வேலையை சுவிசேஷ பணியின் மாதிரியாக செய்யுங்கள்

நல்ல வேலைகள் மூலமாக நாம் தேவனின் கிருபையின் சுவிசேஷத்தை அலங்கரிப்பதற்கு சாத்தியமாகிறது (தீத்து 2:9-10). அதாவது, இந்த சுவிசேஷம் பிறரை எளிதில் சென்றடைய வழிவகை செய்கிறோம். வேலைஸ்தலத்தில் நாம் அறியாத, கிறிஸ்தவரல்லாத நபர்களோடு பழகுவதற்கு அது அனுமதிக்கிறது. நமது சக வேலையாட்களோடு அன்பாக இருப்பது, சிலுவையிலும் நமது வாழ்விலும் கிறிஸ்துவின் பணியை அவர்களுக்கு அறிவிக்கச் செய்கிறது. வழிவாசல் திறந்திருக்கும்போதெல்லாம் நாம் பிறரோடு கலந்து அன்பினால் சத்தியத்தைப் பேசி, அவர்களுக்கு மனந்திரும்புதலை அருள நாம் தேவனிடம் மன்றாடவேண்டும்.

கிறிஸ்து இதையே எதிர்பார்க்கிறார், இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.  (மத்தேயு 5:16).

வேலையை பரிசுத்தமாகுதலின் சாதனமாக செய்யுங்கள்

கடைசியாக, வீழ்ச்சியுற்ற அந்த உலகத்தில் நிச்சயமாக நமது வேலை அதிக அளவில் கஷ்டங்களை உள்ளடக்கியதாக இருப்பதினால் அது பரிசுத்தமாக்குதலுக்கான வழிமுறையாகும். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, 

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” (யாக்கோபு 1:2-3). இதை மனதில் கொள்ளுங்கள். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,” (பிலிப்பியர் 1:5) என்பதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

அன்பார்ந்த கிறிஸ்தவர்களே, நீங்கள் வேலை ஸ்தலத்தில் செய்யும் ஒரு பணியும் அவைகள் வீணானது அல்ல. தேவனால் அழைக்கப்பட்ட உங்களது வாழ்வில் இது முக்கிய பகுதியாகும், ஆவிக்குரிய ஆராதனையை ஏறெடுப்பதற்கான ஓர் அரங்கமாகும், நன்மை செய்வதில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பாகும் மற்றும் நற்கிரியைகள் மூலமாக சக மனிதர்களை நேசிப்பதற்கான வழியாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

அலெக்ஸ் செடியின்
அலெக்ஸ் செடியின்
டாக்டர் அலெக்ஸ் செடியக் கலிபோர்னியா பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். அவர் "Thriving at College" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார், மேலும் அவரது வலைப்பதிவை AlexChediak.com இல் படிக்கலாம்.