
யூதா நிருபத்திலிருந்து நாம் அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்
03-04-2025
எஸ்றா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான காரியங்கள்
10-04-2025யோனா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

வில்லியம் ஃபோகஸ்டீன்
யோனாவின் வாழ்க்கை வேதாகமத்தில் மிகவும் பரீட்சயமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். சபையில் உள்ள ஒரு குழந்தையிடம் யோனாவைப்பற்றி நீங்கள் கேட்டீர்களென்றால் நிச்சயமாக நீங்கள் உறுதியான பதில்களை பெறுவீர்கள். ஆபகூக் போன்ற வேறெந்த தீர்க்கதரிசியை பற்றி நீங்கள் கேட்டால் இந்தளவுக்கு பதில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்!. இப்புத்தகம் மறக்கமுடியாத ஒன்றாக இருந்தாலும், சரியாக புரிந்துக்கொள்ளாத ஒன்றாகவும் உள்ளது. பிடிவாதமான தீர்க்கதரிசியோ அல்லது பெரிய மீனோ இதன் முக்கிய நோக்கங்கள் அல்ல. மாறாக, இப்புத்தகம் ஓர் கேள்வியுடன் முடிவடைந்து, தேவனின் மகிமை மற்றும் கிருபையின் வெளிச்சத்தில் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்தை கவனமாக ஆராய்வதற்கு இப்புத்தகம் அழைப்பு விடுக்கிறது.
1.கீழ்ப்படிதலோடு தேவனை பின்பற்ற யோனா நமக்கு உதவுகிறது.
கீழ்ப்படிய வேண்டிய தேவனுக்கு எவ்வாறு எதிர்மறையான மறுமொழி அளிக்கக்கூடாது என்பதற்கான ஓர் பயிற்சியாக யோனா உள்ளது. தேவன் சர்வ இறையாண்மையுள்ளவர் என்பதை யோனா காண்பிக்கிறது. இந்த தேவன் ஆலோசனைகளை கொடுக்கமால் மாறாக கட்டளையை கொடுக்கிறார். அந்நிய மாலுமிகளும், கப்பல் பிரயாணிகளும் கூட “ஆ கர்த்தாவே உமக்கு சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் “ (யோனா 1:14) என்று தேவனின் சர்வ வல்லமையை ஒப்புக்கொள்கிறார்கள். தேவன் இறையாண்மையோடு செயலாற்றுகிறார். “கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெருங்காற்றை வரவிட்டார்.” (யோனா 1:4). “ஒரு பெரிய மீனை கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்.” (யோனா 1:17). யோனாவின் இந்த நிகழ்ச்சிகளானது இவையனைத்தும் தேவனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதை காண்பிக்கிறது.
தேவனின் கட்டளைகள் தெளிவானதாக உள்ளது. அவரது எளிமையான கட்டளை ஒரு சிறு குழந்தைக்கு சொல்வது போல் உள்ளது: “நீ எழுந்து,” போய்”, பிரசங்கி.” யோனா கீழ்ப்படியாமல் போனது அவனுக்கு சரியான தகவல் இல்லாததாலோ அல்லது அவன் அவசரப்பட்டதாலோ அல்லது வெளிப்புற தாக்கங்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாலோ அல்ல. மாறாக அவனுக்குள் கீழ்படிகின்ற மனப்பக்குவம் இல்லை, அவனது மீறுதல் மாபெரும் அழிவை தூண்டியது. நாமும் கூட தேவனின் கட்டளைகளுக்கு எதிராக கலகம் செய்து ஆசீர்வாதங்களை புறந்தள்ளி, அவரது கோபமுற்ற கரங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மெய்யான கிறிஸ்தவத்தின் அடையாளமாக கீழ்ப்படிதல் இருக்கையில், தேவன் மீது அன்பு கொண்ட இருதயத்திலிருந்து அர்ப்பணிப்பு பாய்ந்தோடுகிறது. யோனா தனது எபிரெய கோத்திரத்தை பற்றி பெருமிதம் கொண்டான், நல்ல இறையியலையும் பேசினான், ஆனால் தேவன் மீது தான் பயமுள்ளவன் என்பதை மிகைப்படுத்தினான் (யோனா 1:9). அவனது இருதயத்திலும் செயல்களிலும், அவன் “கர்த்தரின் சமுகத்தை விட்டு விலகி ஓடிப்போனான். (யோனா 1:3,10).” ஆவிக்குரிய வாழ்க்கையில் யோனா பெலவீனனாக காணப்பட்டான். பெரிய மீனின் வயிற்றுக்குள் அவனது தற்புகழ்ச்சி ஜெபம் கலந்த கதறல் முதல் இப்புத்தகத்தின் கடைசியில் அவனிடம் காணப்பட்ட கோபம் ஆகிய இவைகள் நினிவேக்கு எந்த மனந்திரும்புதல் அவசியமோ, யோனாவுக்கும் அதே விதமான மனமாற்றம் தேவைப்பட்டது.
காற்று, புயல், அலைகள், செடிகள், உயிரினங்கள் மற்றும் கப்பலில் இருந்த அந்நிய மக்கள் ஆகியவைகளின் கீழ்ப்படிதல், பிறரை விட தன்னை உயர்நதவனாக எண்ணிக்கொண்டிருக்கும் யோனாவின் விருப்பத்திற்கு நேர் எதிர்மாறாக அமைந்துள்ளது.
2. யோனா புத்ககம் ஓர் ஊழிய கையேடு
இது ஆச்சர்யமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், யோனா தேவனின் பணியை பற்றியது. இரட்சிக்கப்படாத மக்களுக்காக தேவன் பரிதாபபட்டதினால்தான் நினிவே மக்கள் மீது வரவிருக்கும் தேவனின் கோபத்தைப் பற்றி எச்சரிக்க யோனாவை தேவன் அனுப்பினார். (யோவான் 4:2,11). ஆனால் தேவன் ஒரு தவறான தீர்க்கதரிசியை தெரிந்துக்கொண்டார் என்பது போல தோன்றும். இந்த புத்தகத்தில் யோனாவை பற்றி முன்மாதிரியான காரியம் எதுவும் இருப்பதுபோல தெரியவில்லை, ஆனாலும் இதுதான் இப்புத்தகத்தின் முக்கிய அம்சம். யோனாவின் இந்த ஊழிய தயக்கம், இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு “ஜாதிகளுக்கான ஒளி” யான தேவனின் சுவிசேஷம் தாமதமாக தோன்றுவது போல காண்பித்து அவமானத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது (ஏசாயா 49:6). தேவனிடம் இருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொண்ட நாம், இரக்கமுள்ள தேவனின் இந்த நற்செய்தியை இவ்வுலகிற்கு அறிவிக்கவேண்டும்.
மிக முக்கியமாக, யோனாவின் தோல்வி அவன் ஓர் மிஷனரி ஹீரோ அல்ல என்பதை நிரூபிக்கிறது. தேவனே இங்கு ஹீரோவாக இருக்கிறார். யோனாவின் இந்த தயக்கம், இஸ்ரவேல் மக்கள் தங்களை விருப்பத்தோடு தேடுகின்ற, இழந்து போனவர்களை இரட்சிக்கின்ற, யோனாவை காட்டிலும் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகிய ஒருவரை எதிர்நோக்கி காத்திருப்பதற்கு ஆயத்தப்படுத்துகிறது. (லூக்கா 19:10). கிறிஸ்து ஒருவரால் மாத்திரமே, “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்” (ஆதி 12:3) ஆசீர்வதிக்கப்படுவதற்கான தேவனின் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற முடியும். நினிவேவின் மறுமலர்ச்சியானது, பெந்தகோஸ்தேவையும், மக்கள் மீதான பிசாசின் பிடிப்பை தளர்த்தப்படுவதையும் எதிர்நோக்கியிருந்தது. தேவனின் விலையேறப்பெற்ற பரிசாகிய கிறிஸ்துவினால், “பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரம் ஆயிரமாகவும்” உள்ள மீட்கப்பட்ட மக்கள் ஒருநாள் “மகிமையை பெற்றுக்கொள்ள பாத்திரராகிய அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை” போற்றி பாடுவார்கள். (வெளி 5:11-12). மெய்யாகவே, “இரட்சிப்பு கர்த்தருடையது” தான் (யோனா 2:9).
இழந்துபோன மக்கள் மீதான தேவனின் அன்பு நிறைந்த இருதயத்தை யோனா வெளிப்படுத்துகிறது. இந்த தீர்க்கதரிசி இதை சுயமாக செய்யாமல், கிறிஸ்துவின் மாதிரியை காண்பிக்கிறது. யோனா தேவ பக்தியின் மாதிரி என்பதால் அல்ல, மாறாக யோனா காட்டும் கிறிஸ்து அவனைப்போலவே நமக்கும் தேவைப்படுவதால் இப்புத்தகத்தில் நாம் கவனம் செலுத்துக்கடவோம்.
3. யோனா கிறிஸ்துவைப் பற்றியது.
இயேசு தன்னைப்பற்றி பேசியவைகளுக்கு அடையாளத்தை கேட்ட நபர்களுக்கு, கிறிஸ்து யோனாவை அடையாளமாக காண்பிக்கிறார். (மத் 12:39). யோனாவின் முக்கிய சத்தியத்தை விளக்கப்படுத்தி, கிறிஸ்து தன்னுடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலோடு ஒப்பிடுகிறார். யோனாவை கடலில் வீசியபடியால், யோனா இறந்துவிட்டார் என மாலுமிகள் நம்பினபடியால் யோனா அடையாளமாக இறந்தான் (யோனா 1:14). கப்பலை உடைத்து போகச்செய்யும் உக்கிரமான புயலிலிருந்து யோனா தப்பித்திருக்கக்கூடாது அல்லது மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்திருக்க்கூடாது. (யோனா 1:4). மீனானது யோனாவின் நீரின் கல்லறையாக இருந்தது. மீனின் வயிற்றிலிருந்து கரையில் வாந்தியெடுக்கப்பட்ட யோனா புதிய வாழ்க்கையை துவங்கினான். புறஜாதிகளை வெறுத்து சுயநல வசதியை விரும்பிய பழைய யோனா “பழைய மனுஷனை” (எபே 4:22) பிரதிபலிக்கிறார். புதிய யோனா, அவன் முழுவதும் பூரணமானவனாக இல்லையென்றாலும் “புதிய மனுஷனை” (எபே 4:23-24) பிரதிபலிக்கிறார். கிறிஸ்துவும் மரித்து உயிர்த்தெழுந்தார். அவரோடு கொண்டிருக்கும் ஐக்கியம் மட்டுமே நாம் புதிய சிருஷ்டிகளாக மாறி தேவனின் ஆசீர்வாதத்துக்குள் நுழைவதற்கான ஒரே வழியாகும். (ரோமர் 6:8).
யோனாவின் அடையாள மரணமும் உயிர்த்தெழுதலும், நினிவே மக்களுக்கு மனந்திரும்புதல் பற்றிய செய்தியை உறுதிப்படுத்தியது. கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு நாம் கீழ்ப்படியால் இருப்போமென்றால் நாம் மன்னிக்கப்படமுடியாது: “யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள், இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.”
(லூக்கா 11:32).
யோனா கிறிஸ்துவைப் பற்றியது (லூக்கா 24:44-47). தேவனுக்கு முன்பாக நம்மை நிறுத்துவதற்கும், நமது தேவ பக்தியுள்ள வாழ்க்கையை துவங்குவதற்கும் தேவைப்படும் கீழ்ப்படிதலை கிறிஸ்துவில் மட்டுமே நாம் அடைகிறோம். நாம் பிறர் மீது இரக்கத்தைக் காண்பிக்க தேவைப்படும் தேவனின் இரக்கத்தையும் நாம் கிறிஸ்துவுக்குள் மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.