Love's Attributes

அன்பின் குணாதிசயங்கள்

25-06-2026
What Do Christians Believe About Divine Revelation

தெய்வீக வெளிப்பாட்டைக் குறித்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?

02-07-2026
Love's Attributes

அன்பின் குணாதிசயங்கள்

25-06-2026
What Do Christians Believe About Divine Revelation

தெய்வீக வெளிப்பாட்டைக் குறித்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?

02-07-2026

கிறிஸ்து எப்பொழுது மரித்தார்?

When Did Jesus Die?

உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருடமும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நினைவு கூறும் பொருட்டு, ஈஸ்டர் என்ற விடுமுறையை கொண்டாடுகிறார்கள். நசரேயனாகிய இயேசுவின் மரணம், வெறுமனே மதம் சார்ந்த நினைவு கூறுதல் மட்டுமல்ல, அது ஓர் வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். வேதாகமத்துக்கு வெளியே, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைப் பற்றிய பல இலக்கியக் குறிப்புகள் முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் உள்ளன. (எடுத்துக்காட்டாக: டாசிடஸ், ஜோசப்பஸ், ஃபைலோ மற்றும் தல்முத்).

நவீன காலங்களில் நாம் எதிர்பார்ப்பது போல ஒருவேளை கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கான நாளை வேதம் பட்டியலிடவில்லை என்றாலும், நேரத்தையும், இடத்தையும் தெளிவாக, தவிர்க்க முடியாத அளவிற்கு வேதம் கூறுகிறது. இந்த வரலாற்று உண்மையின் பின்னணியை புரிந்து கொண்டு “இயேசு மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தாரா?” என்ற கேள்விக்கு நாம் பதில் அளிக்க இதே தர்க்கத்தையே பயன்படுத்துகிறோம். நாசரேத்தின் இயேசுவின் வரலாற்று மரணம், கி.பி. 33 ஆம் ஆண்டு, ஏப்ரல் 3-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, ஒன்பதாம் மணி நேரத்தில், எருசலேமின் நகர வாசலுக்கு வெளியே உள்ள கொல்கதாவில் அவர் சிலுவையில் அறையப்பட்டதென்று பரவலாக நம்பப்படுகிறது. கிரேக்க மொழியில் “மண்டையோட்டின் இடம்” என்று பொருள்படும் கொல்கொத்தா, ரோமானியர்களால் குற்றவாளிகளைச் சிலுவையில் அறைவதற்கான ஒரு சாதாரண இடமாக இருந்தது.

பொது வெளியில் எல்லாருடைய கண்களுக்கு முன்பாக நடைபெற்ற கிறிஸ்துவின் மரணத்தின் முக்கியத்துவம் கவனம் கொள்ளவேண்டும். இயேசுவைக் கொல்லத் தீட்டப்பட்ட சதியையும், பஸ்கா பண்டிகையின்போது மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கைதியான பரபாஸுக்காக அவர் மாற்றம் செய்யப்பட்டதையும் நற்செய்தி நூல்கள் வெளிப்படுத்துகின்றன (காண்க: மத்தேயு 27 ; மாற்கு 14–15 ; லூக்கா 23 ; யோவான் 11; 19 ). யூதேயாவின் ஐந்தாவது ஆளுநரான பொந்தியு பிலாத்து, மிரட்டப்பட்டாரோ அல்லது உடந்தையாக இருந்தாரோ, இயேசுவை உடனடியாக மரணதண்டனைக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்டார். இந்த மரணதண்டனை முறையானது, இரகசியத்தன்மைக்கும் மரணத்தைப் பற்றிய மாயைகளுக்கும் இடமளிக்காத வகையில் உருவாக்கப்பட்டது. திறந்தவெளியில் அவமானத்தை மக்கள் பார்க்கும்படி, மரிக்கும் வரைக்கும் கொடுக்கப்படும் பலவிதமான சித்திரவதைகளை இந்த தண்டனை கொண்டிருந்தது. 

மேலும் இயேசுவின் மரணத்தின் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை சுவிசேஷங்கள் பதிவு செய்கின்றது. அவருக்கு அருகில் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களின் கூற்றுக்களை ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். (மத்தேயு 27:38-44; லூக்கா 23:32-43). இயேசுவின் கடைசி வார்த்தைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் தம் ஆவியை ஒப்புக்கொடுத்த போது, கடைசி சத்தத்துடன் முடிந்தது என்ற வார்த்தையும் இதில் அடங்கும் (யோவான் 19:30;மத் 27:50). “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்று அறிக்கை செய்த கிறிஸ்துவின் கடைசி மூச்சைக் கண்ட நூற்றுக்கதிபதியின் செயல்பாட்டை மாற்று பதிவு செய்கிறார் (மாற்கு 15:39).

நசரேயனாகிய இயேசுவின் வரலாற்று மரணம், கி.பி 33 ம் ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் காலவரிசையை சில வாதங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. அவற்றுள், இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, மாறாக சுயநினைவை இழந்தார் என்று கூறும் மயக்கக் கோட்பாடும் அடங்கும். இது சாத்தியமானதாக இருந்தாலும்கூட, நாசரேத்தின் இயேசு ஏதோ ஒரு கட்டத்தில் உண்மையில் மரித்தார் என்பதை காலத்தின் யதார்த்தம் நமக்கு உணர்த்துகிறது. சிலுவையில் அவர் பகிரங்கமாக மரித்ததன் காலமும் முறையும் எவ்வளவு முக்கியம் என்பதை வரலாற்று மற்றும் நற்செய்திக் குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இயேசுவின் மரணம் மிகக் கடுமையானதாக இருந்தபோதிலும், அது தற்செயலானதோ அல்லது கடவுளின் இறையாண்மைக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதோ அல்ல; மாறாக, “அக்கிரமக்காரர்களுக்காக கிறிஸ்து குறித்தக் காலத்தில் மரித்தார்” (ரோமர் 5:6 ).

இதன் மூலம், சிலுவையில் இயேசுவின் மரணம் ஒரு சரீர நிகழ்வு மட்டுமல்ல, அது ஆவிக்குரிய உண்மையையும் வெளிப்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவருடைய மரணம் ஒரு தியாக மற்றும் உடன்படிக்கை மரணமாக தனித்துவமானது . இதுவே நற்செய்தி. இயேசு வெறுமனே ஒரு நல்ல மனிதரோ அல்லது ஞானமுள்ள போதகரோ அல்ல; அவர் இரண்டாம் ஆதாம் . அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறார், அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். 

(ரோமர் 5:19). நூற்றுக்கதிபதி உணர்ந்துகொண்டதைப் போல், இயேசு கடவுள்-மனிதராக இருப்பதால், தம்முடைய சரீரத்தில் அவர் செலுத்தும் பலி, அவருடன் இணைந்திருப்பவர்களுக்கு நித்தியமானது. 

இயேசுவின் மரணம் இன்னும் பல கேள்விகளை எழுப்ப வேண்டும்: இயேசு யார்? உலகம் ஏன் இன்னும் அவருடைய மரணத்தைப் பற்றிப் பேசுகிறது? எல்லா ஜீவராசிகளும் ஏன் மரணத்திற்கு உட்படுத்தப்படுகின்றன? வேதாகமம் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து, நமது சொந்த மரணத்தைப் பற்றி சிந்திக்க நமக்கு உதவுகிறது. சிலுவையின் காட்சி, நாம் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்படாவிட்டாலும், நாம் இன்னும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர நம்மை கட்டாயப்படுத்துகிறது. நமது மரணத்தை மறுக்க நாம் எவ்வளவு முயன்றாலும், வாழ்க்கையின் பலவீனத்தையும், அதன் முடிவுக்கு முழுமையாகத் தயாராக இருக்க முடியாத நமது இயலாமையையும் ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு, மரணத்தின் எதிர்பாராத அச்சுறுத்தலைப் போல வேறு எதுவும் இல்லை. நம்மைப் படைத்த தேவன் நம்மிடம் நேர்மையாக இருந்தது போல, நாமும் நம்மிடம் நேர்மையாக இருக்க வேண்டும்: “பாவத்தின் சம்பளம் மரணம்” ( ரோமர் 6:23 ). இதில், கிறிஸ்துவின் மரணத்தில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் “ [தேவன்]; நாம் அவரில் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை, நமக்காகப் பாவமாக்கினார்” ( 2 கொரிந்தியர் 5:21).

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

மெரிடித் லீ மையர்ஸ்

மெரிடித் லீ மையர்ஸ்

மெரிடித் லீ மையர்ஸ், லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் மற்றும் டேபிள்டாக் இதழின் வலைத்தள ஆசிரியர் ஆவார் . மேலும் இவர், தென் கரோலினாவின் கொலம்பியாவில் உள்ள எர்ஸ்கைன் இறையியல் செமினரியின் பட்டதாரியும் ஆவார்.