Why Is Good Friday Called Good?
புனிதவெள்ளி ஏன் “புனிதமான” என்று அழைக்கப்படுகிறது?
22-01-2026
பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு
29-01-2026
Why Is Good Friday Called Good?
புனிதவெள்ளி ஏன் “புனிதமான” என்று அழைக்கப்படுகிறது?
22-01-2026
பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு
29-01-2026

எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே

All Truth Is God's Truth

நான் படித்த சில புத்தகங்கள் மட்டுமே என் மனதிலும் சிந்தனையிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதில் ஒன்று நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்தவை. அந்த புத்தகத்தின் தலைப்பு, “நவீன அறிவியலின் மனோதத்துவ அடித்தளங்கள்”, இந்த புத்தகம் என்னில் ஓர் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான காரணம், எல்லா அறிவியல் கோட்பாடுகளும் ஓர் குறிப்பிட்ட தத்துவ கொள்கைகளை தன்னில் கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்துக் கொள்வதின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. பெரும்பாலும் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையாக இருக்கும் தத்துவ கோட்பாடுகள் சதாராணமாக பார்க்கப்படுகிறது, ஒரு மேலோட்டமான அக்கறை கூட இதற்கு அளிக்கப்படுவதில்லை. ஆனால் எப்பொழுது அறிவியலுக்கும் இறையியலுக்கும் இடையில் கடுமையான விவாதம் எழும்புகிறதோ அப்பொழுது நாம் சற்று பின் சென்று அறிவியல் காலத்திற்கு முந்தைய காலத்தில் இருந்த அதன் அடிப்படைத் கோட்பாடுகளைப் பற்றி சில கேள்விகள் கேட்பது அவசியமானது. 

அறிவியல் என்ற வார்த்தைக்கான அர்த்தம், “அறிவு” என்பதாகும். அறிவு என்பது அனுபவ ரீதியான ஆராய்ச்சியின் எல்லைக்கு மட்டுமே பொருந்தும் என்பதைப் போன்ற பார்வையை நாம் கொண்டுள்ளோம். பொருள் சார்ந்த அறிவை மட்டும் அல்ல முறையான உண்மையையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் கணிதத்தை ஒரு உண்மையான அறிவியலாகக் கருத வேண்டும், ஏனெனில் கணிதம் அதன் முறையான பரிமாணத்தில் உண்மையான அறிவைத் தருகிறது. உண்மையில், அறிவியல் முன்னேற்றத்தின் வரலாற்றைப் பார்த்தால், புதிய முன்னேற்றங்களை உருவாக்கி புதிய முன்னுதாரணங்களைக் கொண்டு வந்த இயந்திரம் பெரும்பாலும் முறையான கணிதத்தின் இயந்திரமாகவே இருந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் பொருள்களையும் கணித வரை முறைகளையும் சார்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மக்கள் தொடர்ச்சியாக தங்கள் சொந்த பணிகளின் தத்துவம் சார்ந்த நிபந்தனைகளை எவ்வளவாக மெதுவாய் கடந்து செல்கிறார்கள் என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

கார்ல் சாகனின் தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்ட அவரது புகழ்பெற்ற புத்தகமான “காஸ்மோஸ்” என்ற தலைப்பில் பின்வரும் அறிக்கையை முன்வைக்கிறார்: “காஸ்மோஸ் என்பது பிரபஞ்சத்தின் அமைப்பைக் குறிக்கும் ஒரு கிரேக்க வார்த்தையாகும். இது ஒரு வகையில், ஒழுங்கின்மைக்கு எதிரானது. எல்லாம் ஒன்றோடொன்று ஆழமாக பிணைக்கப்பட்டிருப்பதைக் இது குறிக்கிறது.”  சாகனின் எவ்வித பாதிப்புமற்ற இந்த முழு விளக்கத்தின் வரையறையில், அறிவியலால் ஆராயப்படும் இந்த பிரபஞ்சம் ஓர் ஒழுங்கின் அமைப்புதான், அது ஒழுங்கின்மையானது அல்ல. காஸ்மோஸ் பற்றி அவர் கூறுகையில், “அனைத்தும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்திருப்பதை” குறிக்கிறார். இதுதான் அறிவியல் தேடுதலின் மகத்தான கோட்பாடு, அதாவது நாம் அறிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்கிற இந்த பிரபஞ்சமானது ஒத்திசைவான ஒன்றாகும். எல்லாவற்றிலும் ஓர் மறைமுகமான ஆழமான ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பிணைப்பு உள்ளது. இந்த ஒழுங்கான அமைப்புக்கு மாற்றாக சாகன் சுட்டிக்காட்டுவது, ஒழுங்கின்மையான அமைப்பாகும். அதாவது இந்த பிரபஞ்சத்தின் வேர் ஒழுங்கின்மையாக இருக்குமென்றால் முழு அறிவியல் கோட்பாடுகளும் சரிந்துவிடும். இந்த உலகம் குழப்பமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்பில்லாமலும் இருக்குமென்றால், பிறகு எவ்வித அறிவும் அங்கு சாத்தியமில்லை. முழுமையான ஒழுங்கின்மையின் கட்டமைப்புக்குள், ஓர் அணுவைப் பற்றி நுட்பமான துணுக்குகளைக் கூட நாம் புரிந்துக் கொள்ள முடியாது. எனவே எல்லாவற்றைப் பற்றிய விஞ்ஞானிகளின் ஒத்திசைவான, பகுத்தறிவு ஒழுங்கின் கோட்பாடுகள் அவர்களின் வெறும் கடமைக்கானதுதான். 

ஒரு அனுமானிக்கப்பட்ட ஒத்திசைவு பற்றிய இந்தக் கருத்து பண்டைய தத்துவ விசாரணையில் வேர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பண்டைய கிரேக்கர்கள் இறுதி உண்மையைத் தேடினர். பன்முகத்தன்மையிலிருந்து அர்த்தமுள்ள ஒற்றுமைக்கான ஒரு அடித்தளக் கொள்கையை அவர்கள் தேடினர். இந்த இறுதி ஒற்றுமையைத்தான் இறையியல் அறிவியல் வழங்குகிறது. இறையியல் அறிவியல் நவீன அறிவியலுக்குத் தேவையான கோட்பாடுகளை வழங்குகிறது. இதுதான் ஓர் முக்கிய தத்துவஞானி ஆண்டனி நாத்திகத்திலிருந்து தெய்வீகத்திற்கு மாறுவதற்கு வழிவகுத்தது – அதாவது, எந்தவொரு அறிவையும் சாத்தியமாக்குவதற்கு யதார்த்தத்திற்கு ஒரு ஒத்திசைவான அடித்தளத்தின் அத்தியாவசியத் தேவை அவசியம். இந்த இறுதி ஒத்திசைவை இந்த உலகின் தற்செயலால் வழங்க முடியாது. இதற்கு ஒரு ஆழ்நிலை ஒழுங்கு தேவை.

உண்மை அறியப்படவேண்டுமென்றால், அறிவியல் சாத்தியமாக வேண்டுமென்றால், நாம் அறிய தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஒத்திசைவான மெய்மை அங்கு இருக்கவேண்டும்.

இடைக்காலத்தில், முஸ்லிம் சிந்தனையாளர்கள் “ஒருங்கிணைந்த அரிஸ்டாட்டிலியனிசம்” என்று அழைத்த மறுமலர்ச்சியுடன் தத்துவத் துறையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அரிஸ்டாட்டிலிய தத்துவத்திற்கும் முஸ்லிம் இறையியலுக்கும் இடையில் ஒரு தொகுப்பை அடையும் முயற்சியில், இந்த சிந்தனையாளர்கள் “இரட்டை உண்மை கோட்பாடு” என்ற கருத்தை உருவாக்கினர். இரட்டை உண்மை கோட்பாடு, மதத்தில் உண்மையாக இருப்பது அறிவியலில் பொய்யாகவும், அறிவியலில் உண்மையாக இருப்பது அதே நேரத்தில் மதத்திலும் பொய்யாகவும் இருக்கலாம் என்று வாதிட்டது. அதை சமகால வகைகளாக மொழிபெயர்க்க, பின்வருமாறு கூறலாம்: அதாவது ஒரு கிறிஸ்தவராக, பிரபஞ்சம் ஒரு தெய்வீக படைத்தவரின் சித்தமான செயல் மூலம் உருவானது என்று நம்பி, அதே நேரத்தில் பிரபஞ்சம் ஒரு அண்ட தற்செயலாக தோன்றியது என்று நம்பலாம். தர்க்கத்தால் ஆராயப்பட்ட இந்த இரண்டு உண்மைகளும் முரண்பாடாகத் தோன்றும். இருப்பினும், இரட்டை உண்மை கோட்பாடு உண்மை முரண்பாடானது என்று கூறும், மேலும் இந்த முரண்பாடான கருத்துக்களை ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும். இந்த மாதிரியான அறிவுசார் ஸ்கிசோஃப்ரினியா நம் காலத்தில் அதிகமாக ஆதிக்கம் செய்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிரபஞ்சம் உருவாவதில் கடவுளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர் படைப்பாளராக  மாறினார் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் முற்றிலும் பொருந்தாதவை என்பதைக் காணத் தவறிவிடுகிறார்கள். 

இந்த கட்டத்தில் ஓர் கேள்வி எழுப்புகிறது, “நிஜத்தை புரிந்துக் கொள்ளும் நமது முயற்சியில் தர்க்கம் என்பது உண்மையில் தேவையா?” மீண்டும், நாம் ஒத்திசைவு மற்றும் பிரபஞ்சத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்றால், தர்க்கம் ஏதோவொன்றிற்காக மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் கணக்கிடப்பட வேண்டும். தாமஸ் அக்வினாஸ், இடைக்கால முஸ்லிம் தத்துவஞானிகளின் அரிஸ்டாட்டிலியனிசத்திற்கு இரட்டை உண்மைகளை கலப்பு கூறுகள் என்ற கருத்துடன் மாற்றுவதன் மூலம் பதிலளித்தார், இயற்கையையும் இரக்கத்தையும் அவர் வேறுபடுத்துகிறார் (அவற்றைப் பிரிக்கவில்லை, அவரது விமர்சகர்கள் பலர் குற்றம் சாட்டுவது போல). இயற்கை உலகத்தை ஆராய்வதில் இருந்து பகுத்தறிய முடியாத சிறப்பு வெளிப்பாடு மூலம் அறியக்கூடிய சில உண்மைகள் உள்ளன என்றும், அதே நேரத்தில் இயற்கையைப் பற்றிய ஆய்வில் இருந்து கற்றுக்கொள்ளப்பட்ட சில உண்மைகள் வேதத்தில் காணப்படவில்லை என்றும் அக்வினாஸ் கூறினார். மனித உடலின் சுற்றோட்ட அமைப்பு வேதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் காணவில்லை. அக்வினாஸ் சொல்ல வந்தது என்னவென்றால், கலப்பு கூறுகள் என்று சில உண்மைகள் உள்ளன, வேதாகமத்திலிருந்து அல்லது இயற்கையைப் பற்றிய ஆய்வு மூலம் அறியக்கூடிய உண்மைகள் அவைகள். அந்த கலப்புக் கட்டுரைகளில், படைப்பாளரின் இருத்தல் பற்றிய அறிவையும் அவர் அதில் சேர்த்துக் கொண்டார்.

நிச்சயமாக, அக்வினாஸ் தனது புகழ்பெற்ற முன்னோடியான அகஸ்டினுடன் உடன்பட்டு வாதிட்ட அடிப்படைக் கருத்து என்னவென்றால், அனைத்து உண்மையும் கடவுளின் உண்மை என்றும், அனைத்து உண்மையும் உச்சத்தில் சந்திக்கிறது என்றும். அறிவியல் மதத்திற்கு முரணாக இருந்தால், அல்லது மதம் அறிவியலுக்கு முரணாக இருந்தால், அவற்றில் குறைந்தபட்சம் ஒன்று தவறாக இருக்க வேண்டும். கலிலியோ நுண்ணோக்கியில் நாம் பார்த்தது போல், அறிவியல் சமூகம் வேதத்தை அல்ல, மாறாக வேதத்தின் சில விளக்கங்களை சரிசெய்த காலங்கள் வரலாற்றில் உள்ளன. மறுபுறம், வேதத்தின் வெளிப்பாடு ஆதாரமற்ற அறிவியல் கோட்பாடுகளுக்கு அறிவுசார் தடைகளாக செயல்பட முடியும். எப்படியிருந்தாலும், அறிவு சாத்தியம் என்றால், சாகன் கருதியது தொடர்ந்து கருதப்பட வேண்டும் – அதாவது, உண்மை அறியப்பட, அறிவியல் சாத்தியமாக, நாம் அறிய முற்படும் ஒரு ஒத்திசைவான யதார்த்தம் அங்கு இருக்க வேண்டும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கரிரி ஹான்
கரிரி ஹான்
கரிரி ஹான் என்பவர் லிகோனியர் ஊழியங்கள் மற்றும் டேபிள்டாக் இதழின் துணை ஆசிரியர் ஆவார். மேலும், இவர் ஒரு சான்றளிக்கப்பட்ட வேதாகம ஆலோசகரும் (certified biblical counselor) ஆவார். இவர் எழுதிய புத்தகம்: "லிம்பிங் ஹெவன்வர்ட்: விரிவான மற்றும் நாள்பட்ட துன்பத்தில் விசுவாசத்தால் வாழுதல்" (Limping Heavenward: Living by Faith in Comprehensive and Chronic Suffering) என்பதாகும்.