Jesus Is the New Temple

இயேசுவே புதிய தேவாலயம்

24-09-2026
Covenant Theology for Kids: A Beginner’s Guide

குழந்தைகளுக்கான உடன்படிக்கைக் இறையியல்: தொடக்கநிலை வழிகாட்டி

01-10-2026
Jesus Is the New Temple

இயேசுவே புதிய தேவாலயம்

24-09-2026
Covenant Theology for Kids: A Beginner’s Guide

குழந்தைகளுக்கான உடன்படிக்கைக் இறையியல்: தொடக்கநிலை வழிகாட்டி

01-10-2026

தேவனுடைய வார்த்தையை கேட்பவர்களின் 6 வகைகள் 

6 Kinds of Hearers of God’s Word

பலவிதமான தகவல்களால் நிரம்பிய இந்த உலகில் எண்ணற்ற குரல்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்கின்றன. ஆனாலும் இந்த சத்தங்களுக்கு மத்தியில் தேவனுடைய வார்த்தையை விட இன்றியமையாத வார்த்தைகள் வேறு எதுவும் இல்லை அதைத்தான் சங்கீதக்காரன், “என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” என்கிறார் (சங் 119:103). இதன் வெளிச்சத்தில் யாக்கோபு 1:22-25 ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: தேவனுடைய வார்த்தைக்கு நாம் எவ்வாறு பதில் அளிக்கிறோம்? ஒரு மணி செவி கொடுத்து விட்டு நம் செல்கிறோமா? அல்லது அதை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோமா?

“அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” (யாக்கோபு 1:22) என்று யாக்கோபு அறிவுறுத்துகிறார். அவர் கேட்பதை குறைத்து மதிப்பிடவில்லை மாறாக “தீவிரமாக கேட்கும் படிக்கு” தமது வாசகர்களை உந்துகிறார் (யாக் 1;19).  இருப்பினும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பது மட்டுமே உண்மையான ஆன்மீகம் என்று நினைப்பவர்களின் ஆபத்தான சுய-ஏமாற்றத்தை யாக்கோபு அம்பலப்படுத்துகிறார். உண்மையான விசுவாசம், நாம் கேட்கும் சத்தியத்தினாலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையில், செயலில் வெளிப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார் ( யாக்கோபு 2:14-17 ).

கேட்பவரை மட்டும், கண்ணாடியில் தன் குறைகளைக் கவனித்தபின், தான் கண்டதை மறந்துவிட்டுச் சென்றுவிடும் ஒரு மனிதனுக்கு யாக்கோபு ஒப்பிடுகிறார் ( யாக்கோபு 1:23-24 ). தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைப் பின்பற்றாமல் இருப்பதன் துயரமான முட்டாள்தனத்தை இந்த உவமை வலிமையாக விளக்குகிறது. இந்த விஷயத்தில், அந்தக் கண்ணாடி தேவனுடைய வார்த்தையே ஆகும். அது நமது பாவத்தை வெளிப்படுத்துகிறது, நமது உண்மையான ஆவிக்குரிய நிலையை வெளிப்படுத்துகிறது, மேலும் நம்மை மன்னிக்கவும் எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கவும் வல்லவரான கிறிஸ்துவிடம் நம்மை வழிநடத்துகிறது. வார்த்தையைக் கேட்டுவிட்டு, மனந்திரும்புதலுக்கும் விசுவாசத்திற்கும் அது விடுக்கும் அழைப்பைப் புறக்கணிப்பது, அது வழங்கும் கிருபையை அலட்சியம் செய்து, நமது பாவத்தில் மாறாமல் இருப்பதாகும்.

யாக்கோபின் எச்சரிக்கை நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க அழைக்கிறது. நாம் எத்தகைய கேட்பவர்களாக இருக்கிறோம்? தேவனுடைய வார்த்தைக்கு வெவ்வேறு விதமாகப் பதிலளிக்கும் ஆறு வகையான கேட்பவர்கள் இதோ:

1.திரு. குருடர்

கேட்கிறவர் கண்ணாடியில் தங்களை பார்க்கிறார், ஆனாலும் அவரின் ஆவிக்குரிய குருட்டுத்தனத்தினால் தெளிவாக பார்க்க முடியாது. இவர் வேதத்தை வாசித்தாலும் தியானித்தாலும் பாவத்தை தேவன் எவ்வாறு விளக்குகிறார் என்பதை அறிந்து கொள்வதில் தோற்றுப் போகிறார். நல்லதை தீமை என்றும் தீமையை நல்லது என்றும் அழைக்கிறார் (ஏசாயா 5:20). இவரது வாழ்வு தொடர்ச்சியான பாவ பழக்கத்தால் நிறைந்திருக்கும், ஆயினும் அவருடைய வாழ்க்கையை ஆளுகை செய்யும் இவ்விதமான பாவத்தின் போக்கினால் அவர் எவ்வித பாதிப்புறாமலும இருக்கிறார். சத்தியத்திற்கு அவருடைய கண்களை திறக்க பரிசுத்த ஆவியானவரின் மறுபிறப்பு அளிக்கும் கிரியையே அவருக்கு தேவை.

2. திருமதி. பயந்தவர்

அவளிடம் குறைகள் இருக்கிறது என்பது அவளுக்கு தெரியும், ஆயினும் அவர்களை எதிர்கொள்ள அஞ்சுகிறாள். தவறான நோயறிதலுக்குப் பயந்து மருத்துவரைத் தவிர்ப்பவரைப் போல, பயந்துபோன அந்தத் திருமதி, தேவ வார்த்தையின் உணர்த்துதலை எதிர்க்கிறாள். மனந்திரும்புதலின் விலையை எதிர்கொள்ள அவள் விரும்பவில்லை. ஆயினும், உண்மையான விடுதலை தவிர்ப்பதினால் வருவதில்லை, மாறாக நமது பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, மனந்திரும்புதலோடும் விசுவாசத்தோடும் கிறிஸ்துவிடம் திரும்புவதனாலேயே வருகிறது.

3. திரு. சுயநீதிக்காரன்

அவன் தன் குறைகளைக் காண்கிறான், ஆனால் அவற்றை நியாயப்படுத்துகிறான். தன் ஒழுக்க நெறிகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டு, அவன் திருத்தப்படுவதை எதிர்க்கிறான். கேள்வி கேட்கப்படும்போது, “நான் மாற வேண்டியதில்லை—மற்றவர்கள்தான் மாற வேண்டும்” என்று கூறி, அவன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறான். அவனது சுயநீதி, இரக்கத்திற்கான அவனது ஆழமான தேவையை அவன் காணாதவாறு அவனைக் குருடாக்குகிறது. இயேசுவின் உவமையில் வரும் பரிசேயனைப் போல அவன் இருக்கிறான்; அவன், “தேவனே, நான் கொள்ளைக்காரர், அநீதியாளர், விபசாரக்காரர், அல்லது இந்த வரி வசூலிப்பவனைப் போல இராதபடிக்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் வாரத்தில் இருமுறை உபவாசம் இருக்கிறேன்; நான் சம்பாதிக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன்” ( லூக்கா 18:11-12 ) என்று ஜெபித்தான். பக்தியுள்ளவனாகத் தோன்றினாலும், அவனது இதயம் பெருமையும் மனந்திரும்பாத தன்மையும் கொண்டிருந்தது. தாம் நீதிமான்களை அல்ல, பாவிகளை மனந்திரும்ப அழைக்கவே வந்ததாக இயேசு நமக்கு நினைவூட்டுகிறார் ( லூக்கா 5:32 ).

4. செல்வி. அவநம்பிக்கை

அவள் கண்ணாடியில் தன்னைப் பார்க்கிறாள், தன் குறைகளை ஒத்துக்கொள்கிறாள், ஆனால் அவைகள் எல்லாம் சுத்திகரிக்கப்படமுடியாத ஒன்று என்று அவநம்பிக்கையாக நினைக்கிறாள். இரக்கத்துக்காக தேவனிடம் திரும்புவதற்கு பதிலாக, தனது துன்பத்திலும் விரக்தியிலும் கிடந்து, “நான் மன்னிக்கப்படுவதற்கு மிகவும் பாவியானவள்” என்று சொல்லிக்கொள்கிறாள். செல்வி. அவநம்பிக்கைக்கு சுவிசேஷம் தேவையாய் இருக்கிறது. ராபர்ட் முர்ரே மெக்செய்ன் இவ்வாறு குறிப்பிடுகிறார், “ஒவ்வொரு முறையும் உங்களை நீங்கள் பார்க்கையில், பத்துமுறை கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.” மனந்திரும்பி விசுவாசிக்கின்ற மோசமான பாவிகளுக்கும் கிறிஸ்துவில் முழுமையான மன்னிப்பு உண்டு.

5. திரு. அறைகுறை

1 சாமுவேல் 15 ல் உள்ள சவுலைப் போல, இவர் ஒரு சில காரியங்களில் கீழ்ப்படிவார். அமலேக்கியரை முற்றுமாக அழிப்பதற்காக சவுலுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது, ஆனால் அவன் முழுவதும் அழிக்காமல் சிறந்த கால்நடைகளையும், ஆகாக் ராஜைவையும் விட்டு வைத்தான். பலிசெலுத்துவதற்கென்றே அவைகள் தேவை என்று தன்னை நியாயப்படுத்தினான். ஆனால் சாமுவேல் தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார், “பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமமானது” (1 சாமு 15:22). திரு. அறைகுறை என்பவர் தேவன் கூறுகிற சிலவற்றை மட்டுமே செய்வார் எல்லாவற்றையும் அல்ல. இருப்பினும் அறைகுறை கீழ்ப்படிதலும் ஓர் கீழ்ப்படியாமையாகும். மெய்யாக வேதத்துக்குச் செவி கொடுக்கும் நபர் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாக அர்ப்பணிப்பார், தனது வசதிக்கேற்ப சில பகுதிகளுக்கு மட்டும் அல்ல.

6. திருமதி. ஞானம்

இவரே உண்மையான கேட்பவர். வேதமாகிய கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன் குறைகளைக் கண்டு, அவள் மனந்திரும்பி தேவனிடம் திரும்பி, கிறிஸ்துவின் மூலம் சுத்திகரிப்பை நாடுகிறாள். இயேசுவின் உவமையில் வரும் வரி வசூலிப்பவரைப் போல, அவள், “தேவனே, பாவியான என்மீது இரக்கமாயிரும்!” என்று ஜெபிக்கிறாள் ( லூக்கா 18:13 ). அப்படிப்பட்ட ஒருவர் “தன் செயல்களில் ஆசீர்வதிக்கப்படுவார்” என்று யாக்கோபு கூறுகிறார் ( யாக்கோபு 1:25 ). அவளுடைய வாழ்க்கை , சங்கீதம் 1- ல் நீரோடைகளின் அருகே நடப்பட்ட மரத்தின் அடையாளங்களைத் தாங்கியுள்ளது — அது கனி தருவதாகவும் நிலைத்திருப்பதாகவும் இருக்கிறது.

உங்களை நீங்களே கருத்தில் கொள்ளுங்கள்

ஆகவே, நீங்கள் எத்தகைய கேட்பவர்? நினைவில் கொள்ளுங்கள், தேவனுடைய ஆசீர்வாதம் கேட்டுக் கீழ்ப்படிகிறவர்கள் மீது தங்கியிருக்கிறது. கீழ்ப்படிதல் இரட்சிப்பைப் பெற்றுத்தரும் என்பதற்காக அல்ல, மாறாக அது தேவனுடைய கிருபையால் உண்மையாகவே மாற்றப்பட்ட இருதயத்திலிருந்து வெளிப்படுவதால்தான். அப்படியானால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பவராக இருப்பது என்பது, வெறுமனே கவனமாகக் கேட்பது அல்லது வேதாகம சத்தியத்தை அறிவுப்பூர்வமாக உறுதிப்படுத்துவது மட்டுமல்ல. அது, வார்த்தையைத் தாழ்மையுடன் பெற்றுக்கொண்டு, அது நம்மை ஆராய அனுமதித்து, விசுவாசத்துடன் அதற்குக் கீழ்ப்படிவதாகும். அது, அவருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் கர்த்தருடன் நடப்பதாகும். பழைய கீதம் சொல்வது போல:

நம்பிக் கீழ்ப்படியுங்கள், ஏனெனில் இயேசுவில் மகிழ்ச்சியாக இருக்க, நம்பிக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழி இல்லை .

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பிரையன் நஜாஃபோர்

பிரையன் நஜாஃபோர்

பிலிப்பைன்ஸில் பிறந்த அமெரிக்க போதகரான டாக்டர் பிரையன் ஜி. நஜாப்ஃபோர், பியூரிட்டன் சீர்திருத்த இறையியல் செமினரியில் இருந்து இறையியல் முதுகலைப் பட்டத்தையும் (ThM), அப்பெல்டோர்ன் இறையியல் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டத்தையும் (PhD) பெற்றுள்ளார். அவர் 2001 முதல் நற்செய்தி ஊழியராகப் பணியாற்றி வருகிறார்; பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் போதகப் பணி அனுபவம் பெற்றவர். அவர் ஒன்ராறியோவின் ஜோர்டானில் உள்ள ஹெரிடேஜ் சீர்திருத்த சபையின் போதகராக இருக்கிறார்; அங்கு அவர் தனது மனைவி சாரா மற்றும் அவர்களது ஐந்து பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவர் ' நற்செய்தியால் உந்தப்பட்ட நாவு ' (The Gospel-Driven Tongue) மற்றும் 'கடவுளின் வார்த்தையைக் கேட்பவர்' (A Hearer of God's Word ) உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார் .