ஆதியாகமத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
09-12-2024உபாகமம் புத்தகத்தை குறித்து அறிந்துக் கொள்ளவேண்டிய மூன்று காரியங்கள்
18-12-2024லேவியராகமம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
ஸ்காட் ரெட்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனின் முழு ஆலோசனையின் கீழாக அமருவதற்கு நாடவேண்டும். அதாவது, வேத வார்த்தைகளின் முழு விளக்கத்தையும் தியானிக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடையும் வண்ணமாக இயல்பாகவே நாம் அனைவரும் வேதாகமத்தில் சில புத்தகங்கள் மீது ஈர்க்கப்பட்டு அதை விரும்பி வாசிப்போம். இன்னும் சொல்லப்போனால் சில புத்தகங்களை நாம் வாசிக்க விரும்புவதேயில்லை. வேதத்தில் அநேகரால் பொதுவாக நிராகரிக்கப்படும் புத்தகம் என்னவென்றால் அது லேவியராகமம். ஐந்து ஆகமங்களுக்கு (Pentateuch) நடுவில் இப்புத்தகம் இருக்கிறது, அநேக நவீன வாசகர்களுக்கு வேலியராமம் புத்தகத்தை புரிந்துக்கொள்வது கடினமாக உள்ளது. இருப்பினும், இஸ்ரவேலின் ஆசரிப்புக்கூடார நிகழ்ச்சிகளின் மீதான ஆர்வம் தெளிவற்றதாக இருந்தாலும் இந்த புத்தகம் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது என்பதை நாம் தவறவிடக்கூடாது.
எனவே, ஒவ்வொரு வேத வாசிப்பாளரும் லேவியராகமத்தைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய மூன்று காரியங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
1.தேவன் தமது மக்களை சந்திக்கும் மாபெரும் முடிவுக்கு செல்கிறார்.
வேதம் சொல்வது போல் தேவனின் கூடாரம் என்பது என்னவென்றால், அது தேவனுடைய வீடு. இது அவருடைய பரிசுத்த ஸ்தலம், அவருடைய அரண்மனை, அவர் தனது மக்களை வரவேற்கும் இடம் (யாத் 25:8-9). தேவனுடைய வீடு, அவரின் குணாதிசயத்தையும், பரிசுத்தம், மகிமை, பூரண நீதி மற்றும் அவர் படைத்தவர் என்பதையும் பிரதிபலிக்கிறது. எனவே, கூடாரத்தில் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும்
ராஜாவை சந்திப்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய ஆயத்தம் இல்லாமல், அந்த சந்திப்பை நிறைவேற்றும் நம்பிக்கையை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. லேவியராகமம், எந்த வித வீழ்ச்சியும், நமது இயலாமையும் நம்மைவிட்டு தேவனை விலக்கமுடியாது என்பதை நினைவுப்படுத்துகிறது. அவருடனான ஐக்கியத்தில் வாழ்வதற்கே அவர் நம்மை படைத்திருக்கிறார் மற்றும் அந்த ஐக்கியத்திற்காக அவரது சித்தம் இறங்கிவந்துள்ளது. ஒப்புரவாகுதலுக்கும், மீட்பிற்குமான அவரது சித்தமே வேதத்தின் முழு மீட்பின் வரலாற்றின் நிகழ்ச்சிக்கான பின்னணியாகும்.
2.தேவன் நமது மக்கள் எவ்விதம் தன்னை சந்திக்கவேண்டும் என்பதை கூறுகிறார்.
லேவியராகமத்தை நாம் வாசிக்கையில் நாம் காண்கிற மற்றொரு காரியம் என்னவென்றால், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்குமான நிபந்தனைகளில் மோசே எவ்வாறு மிக கவனமாக இருக்கிறார் என்பதுதான். ஆராதனைக்குரியவர் யார் என்பதைப்பற்றியும் எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்பதிலும் எந்தளவுக்கு தேவன் கவனமுள்ளவராக இருக்கிறார் என்பதை இஸ்ரவேலரின் ஆராதனை வெளிப்படுத்துகிறது. தேவன் வெறுமனே அன்பான எண்ணங்களையும், கீழ்ப்படிதலையும், விக்கிரகாராதனையை வெறுப்பதை மட்டும் அவர் எதிர்பார்க்கவில்லை. வெறுமனே அவர்களின் விருப்பத்தின்படி ஆராதிப்பதற்காக இஸ்ரவேலர்கள் அழைக்கப்படவில்லை, மாறாக அவர்கள் தங்களின் ஆராதனை முறைமையை அவரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப உள்ளவாறு அழைக்கப்படுகிறார்கள். லேவியராகமத்தின் கட்டளைகளான பலிகளுக்கான நிபந்தனைகள், நேரம் மற்றும் நாட்கள், மற்றும் பண்டிகைகள் இவையனைத்தும், இஸ்ரவேலர்களின் ஆராதனையும் வாழ்க்கையும் படைத்தவரின் தீர்மானத்தின் படி இருக்க அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி பேசுகிறது. நாம் தேவ சாயலில் படைக்கப்பட்டதினால் நமது ஆராதனை அனைத்தும் அவரது கட்டளைகளினால் வழிநடத்தப்படவேண்டுமே ஒழிய மற்ற வழிகளினால் அல்ல.
3.மீட்பின் திட்டத்திற்கான தேவனின் நோக்கத்தை பலிகள் கூறுகின்றன.
ஏதேன் தோட்டத்தில் எப்பொழுது மனிதன் வீழ்ச்சியுற்றானோ, அப்பொழுதே தேவனோடு உள்ள நமது உறவு ஒட்டு மொத்த மனுக்குலத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முறிக்கப்பட்டது. எனவே நாம் தேவனுடைய பிரசன்னத்தில் நுழையவேண்டுமென்றால் நாம் சுத்திகரிக்கப்பட்டு அவரின் பிரசன்னத்திற்கு ஏற்றவாறு தூய்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். தேவனின் பரிசுத்தம், மனிதனின் பரிசுத்தத்தோடு பொருந்தவேண்டும். எனவே, லேவியராகமம் நமக்கு கூறுவதென்னவென்றால், கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலங்கள் யார் தங்களை கூடாரப்பணிக்காக சிறப்பாக தூய்மைப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அவைகள் ஒதுக்கப்பட்டுள்ளது: ஆசாரியர்கள், பிரதானமாக பிரதான ஆசாரியர்கள் (லேவி 16:1-5, 21).
தேவனுடனான மனிதனுடைய உறவு மிக மோசமாக மாற்றப்பட்டுள்ள வழிகளை பலிகளின் அமைப்பு காண்பிக்கிறது. தேவன் மீட்பின் பணியின் மூலமாக தனது மக்களை விடுவிக்க சித்தங்கொள்கிறார் என்பதை பல வழிகளில் ஒவ்வொரு பலியும் நமக்கு காண்பிக்கிறது. சர்வாங்க தகனபலி (லேவி 1:2-17, 6:8-13), முழுவதுமாக மிருகத்தை தகனித்து தேவனுக்கு முன்பாக மனிதனின் பாவங்களை மூடப்படவும் அல்லது நிவிர்த்தி செய்யவும் செலுத்தப்படுகிறது. போஜனபலி (லேவி 2:1-16, 6:14-23) நன்றியறிதலுக்காவும், காணிக்கைகாவும், ஒரு ராஜாவுடனான ஐக்கியத்திற்காக செலுத்தும் பரிசைப்போன்று இப்பலி செலுத்தப்படுகிறது. சமாதான பலி (லேவி 3:1-17, 7:11-21) ஆராதனை செலுத்துகிற மக்களுக்கும் ஆசாரியர்களுக்கும் அந்த பலி பகிர்ந்தளிக்கப்பட்டு, சீரமைக்கப்படும் உறவிற்காக இப்பலி செலுத்தப்படுகிறது. பாவநிவாரண பலி (லேவி 4:1-5:13, 6:24-30) விசுவாசிகளுக்கு பாவத்தின் அசுத்தங்களை காண்பித்து பரிசுத்தமாகுதலின் அவசியத்தை காண்பிக்கும்படி செலுத்தப்படுகிறது. குற்றநிவாரண பலி (லேவி 5:14-6:7, 7:1-10) தேவன் மற்றும் மனிதனின் உறவு முழுமையடைவதற்கு தடையாய் உள்ள நமது கடன்களை மன்னிப்பதற்கு இப்பலி செலுத்தப்படுகிறது.
இந்த ஐந்து பலிகளில் ஒவ்வொரு பலியும் மனிதனுக்கான தேவனின் மீட்பின் திட்டத்தின் வெவ்வேறு கோணங்களை எடுத்துக்காட்டுகின்றன. பலிகளின் அவசியத்தை காண்பிக்கிற, தகனபலி மற்றும் லேவி 16:1-34 ல் சொல்லப்பட்ட வருஷம் ஒருமுறை அநுசரிக்கப்படும் அந்த நாளை (The Day of Atonement) பற்றிய வேதப்பகுதிகளுக்கு அடிக்கடி நமது கவனங்கள் செல்கின்றன. ஆனால், கிறிஸ்து நம்மை தேவனுக்கு முன்பாக மீட்டெடுத்து அவரிடம் செல்வதற்கான வழியை உண்டாக்குகிறார் (யோவான் 14:6) என்பதை பற்றிய மேன்மையான சத்தியங்களால் நமது ஆராதனை ஆழமுள்ளதாக மாறமுடியும். நமது ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற கிறிஸ்துவுக்குள் அவரது பணியின் மூலம் நமது பாவங்கள் நிவிர்த்தியாக்கப்பட்டும், ராஜாவோடு நமது ஐக்கியம் புதுப்பிக்கப்பட்டும், சக விசுவாசிகளோடு நமது விருந்து பகிர்ந்தளிக்கப்பட்டும், நமது அசுத்தங்கள் நீக்கப்பட்டும், நமது கடன் தீர்க்கப்பட்டும் உள்ளது . நமது பிரதான ஆசாரியர் நமது மீட்பிற்காக அனைத்து ஆசீர்வாதங்களையும் முழுமைப்படுத்துவற்காக நமக்காக பரிந்துபேசுகிறார் என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும் (எபிரெயர் 10:1-18).
இந்த சிறிய கட்டுரை Every Book of the Bible: 3 Things to know என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.