16-10-2025
தேவனே வாழ்வின் ஆதாரமாயிருக்கிறார். வேதாகமத்தின் ஆரம்ப பக்கங்கள் ஜீவனைக் கொடுக்கும் தேவனின் வல்லமைக்கு சாட்சியளிக்கின்றன, குறிப்பாக ஆதாமின் நாசியில் அவர் ஜீவ சுவாசத்தை ஊதுவதை நாம் காண்கிறோம் (ஆதி 2:7). ஆதாமும் ஏவாளும் தேவனோடு உள்ள தங்களது ஐக்கியத்தின் மூலமாகவும் அவரது தயவுள்ள கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதின் மூலமாக பூரண வாழ்வை அனுபவிப்பதற்கு தேவன் அவர்களை படைத்தார்.