What Promise Did Jesus Give Before His Ascension?

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன் அளித்த வாக்குறுதி என்ன?

23-04-2026
What Promise Did Jesus Give Before His Ascension?

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன் அளித்த வாக்குறுதி என்ன?

23-04-2026

கிறிஸ்துவுக்குள்” இருப்பது என்றால் என்ன?

What Does It Mean to Be In Christ?

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். 
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.” (எபேசியர் 1:3-14).

உங்கள் விசுவாசத்தை குறித்து பிறர் விசாரிக்கும் பொழுது நீங்கள் அதை எவ்வாறு விளக்கப்படுத்துவீர்கள்? இந்தக் கேள்விக்கு ஒரு வேளை நீங்கள், நான் ஒரு பிரிஸ்ப்பிட்டேரியன் அல்லது பாப்திஸ்து அல்லது எபிஸ்காப்லியன் என்று சொல்வீர்களா? அல்லது எளிமையாக நான் ஒரு கிறிஸ்தவன் என்று பதில் அளிப்பீர்களா? 

புதிய ஏற்பாட்டுக் காலத்து விசுவாசிகளிடம் தங்களைப் பற்றி விவரிக்கச் சொன்னால், அவர்கள் ஒருபோதும், “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று பதிலளிக்க மாட்டார்கள் என்பதை நம்மில் பலரும் யோசிப்பதில்லை. உண்மையில், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர் என்ற வார்த்தை மூன்று முறை மட்டுமே வருகிறது. அந்தியோகியாவில் சீஷர்கள் முதன்முதலில் “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர் ( அப் 11:26 ). மேலும், தனது முதல் நிருபத்தில், சீமோன் பேதுரு ஒருவரின் பாடுகளைப் பற்றி பேசும்போது “ஒரு கிறிஸ்தவரைப்” பற்றிப் பேசுகிறார் ( 1 பேதுரு 4:16 ).

17 ஆம் நூற்றாண்டில் தூய்மைவாதிகள் என்ற வார்த்தை எதிரிகளால் எவ்வாறு உருவாக்கப்பட்டததோ, அதேபோல மேற்கண்ட வேதத்தின் மூன்று சூழல்களிலும் நாம் பார்க்கும் போது, ஒருவேளை கிறிஸ்தவன் என்ற வார்த்தை இழிவானதாகவும், வெறுக்கப்படுகிற வார்த்தையாகவும் சுவிசேஷத்தை எதிர்ப்பவர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். “அடிப்படைவாதி” என்ற சொல் எவ்வாறு இன்றைக்கு உமிழப்படுகிறதோ அதேபோல கிறிஸ்தவன் என்ற வார்த்தையும் வெறுப்பு சொற்களாக ஆதி காலத்தில் புழக்கத்தில் காணப்பட்டது. லூக்கா சுவிசேஷகன் அப்போஸ்தலர் நடபடிகளில் சீஷர் என்ற சொல்லை பயன்படுத்துவதிலோ (அப் 6:1 இன்னும் பல) அல்லது சில சமயங்களில் விசுவாசிகளை “மார்க்கத்தை பின்பற்றுபவர்கள்” (அப் 9:2,22:4) என்று விவரிப்பதிலோ ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர்கள் “நானே வழி” (யோவான் 14:6) என்று சொன்னவரை பின்பற்றினார்கள்.

ஆனால், நீங்கள் பவுலிடம், “உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டால், அவருடைய பதில் அநேகமாக மேற்கூறியவற்றில் ஒன்றாக இருந்திருக்காது, மாறாக, “நான் கிறிஸ்துவுக்குள் ஒரு மனிதன்” என்பதாகவே இருந்திருக்கும்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களென்றால், உங்களது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மெய்யாகவே இதுதான் உங்களது அடையாளம்: “கிறிஸ்துவுக்குள்ளான” ஆண் அல்லது பெண்.

நான் ஒரு இளம் வாலிபனாக இருந்தபோது, 2 கொரிந்தியர் 12:1-10 வசனத்தை வாசித்தது எனக்கு நினைவிருக்கிறது. அந்த வசனத்தில் பவுல், தான் பெற்ற அசாதாரணமான வெளிப்பாடுகளையும், பெருமையிலிருந்து தன்னைக் காத்த சரீரத்தில் இருந்த முள்ளையும் பற்றிப் பேசுகிறார். அந்த வசனத்தை அறிமுகப்படுத்தும்போது, தேவனுடைய அற்புதத்தையும் கிருபையையும் பற்றிய அசாதாரணமான வெளிப்பாடுகளைப் பெற்றிருந்த “கிறிஸ்துவுக்குள் ஒரு மனிதனை” தனக்கு ஒருமுறை தெரிந்திருந்ததாக அவர் கூறுகிறார்; அந்த வெளிப்பாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்ததால், அவற்றை மற்றவர்களுக்கு விவரிப்பது முறையற்றது என்று அவர் உணர்ந்தார். “பவுல் பேசும் இந்த ‘கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதன்’ யார்?” என்று நான் வியந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை என் சிந்தனை மந்தமாக இருந்திருக்கலாம், ஆனால் அந்தப் பதில் எனக்கு மெதுவாகவே புலப்பட்டது: பவுல் தன்னைப் பற்றியே பேசுகிறார்! இதுவே அவர் தன்னை விவரிக்கும் அடிப்படை வழியாகும், ஏனெனில் இதுவே அவர் தன்னைப் பற்றி சிந்திக்கும் அடிப்படை வழியாகும். அவர் “கிறிஸ்துவுக்குள் ஒரு மனிதன்.”

“கிறிஸ்துவுக்குள்” என்ற வார்த்தையையும், அவற்றுக்கு இணையான சொற்றொடர்களையும் (உதாரணமாக, “அவரில்”) உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், பவுலின் பதின்மூன்று கடிதங்களைக் கொண்ட உங்கள் வேதாகமத்தில் உள்ள சுமார் அறுபது பக்கங்களை விரைவாகப் புரட்டிப் பாருங்கள். “கிறிஸ்துவுக்குள்” என்ற வார்த்தையையோ அல்லது அதன் வேறு பதங்களையோ எண்பதுக்கும் மேற்பட்ட முறை நீங்கள் காண்பீர்கள். அதற்கு இணையான சொற்றொடர்களான “கர்த்தருக்குள்” (அல்லது சில சமயங்களில் “கர்த்தராகிய இயேசுவில்”) என்பவை அந்த எண்ணிக்கையை விட ஏறக்குறைய இருமடங்காக உள்ளன.

இதை நீங்கள் இதற்கு முன் கவனித்ததில்லை என்றால், பவுல் இந்த சொற்றொடர்களை எவ்வளவு அடிக்கடி பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படக்கூடும், மேலும் இதுவரை எப்படி இவற்றின் மீது அதிக கவனம் செலுத்தாமல் நான் இருந்திருக்கிறேன் என்றும் வியப்பீர்கள். ஆயினும் ஒரு கிறிஸ்தவராக இருப்பதின் அர்த்தத்தை விவரிப்பதற்கான பவுல் தெரிந்து கொண்ட ஓர் அடிப்படை வழிமுறையின் இந்த சிறிய சொற்றொடரின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் பல ஆண்டுகளாக ஏன் பல பத்தாண்டுகளாக கூட நீங்கள் பவுலின் நிருபங்களை படித்திருப்பீர்கள். 

கிறிஸ்துவுக்குள் என்ற வார்த்தையில் “கிறிஸ்து” மற்றும் “அவரில்” என்பதை நாம் கவனிக்க வேண்டும், இதுவே இந்த சிறு கட்டுரையின் மையக் கருத்தாக இருக்கின்றன. இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள் இதுவரை படித்ததிலேயே இந்த வார்த்தையை பற்றிய மிக நீண்ட விளக்கம் இதுதான் என்று நினைத்தால் அது தவறில்லை. ஆனாலும் இந்த சிறிய கட்டுரை கிறிஸ்துவுக்குள் என்ற இந்த செழிப்பான மற்றும் அற்புதமான கோட்பாட்டின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தொட்டுச் செல்லும். “கிறிஸ்துவுக்குள்” இருத்தல் என்பதின் அர்த்தம் என்ன என்பதை பல்வேறு வேதாகம கோணங்களில் இருந்து காண இது உங்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களென்றால், உங்களது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மெய்யாகவே இதுதான் உங்களது அடையாளம்: “கிறிஸ்துவுக்குள்ளான” ஆண் அல்லது பெண்.

புதிய ஏற்பாட்டு அறிஞர் ஒருவர், ‘தி காட்பாதர்’ திரைப்படத்தில் ‘மாஃபியா’ என்ற வார்த்தை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, ஆனாலும் அதுவே அத்திரைப்படம் முழுவதின் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல, “கிறிஸ்துவுக்குள்” என்ற இந்தக் குறிப்பிட்ட சொற்றொடர் பயன்படுத்தப்படாதபோதும், அதன் அர்த்தம், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் எல்லாவற்றிற்கும் அடிப்படையானதாக இருக்கிறது. அதற்கும் மேலாக, தனிப்பட்ட விசுவாசியையோ அல்லது ஒரு முழு சபையையோ கலக்கமடையச் செய்யும் பல பிரச்சினைகளுக்கு இதுவே தீர்வாகவும் இருக்கிறது.

“கிறிஸ்துவுக்குள்” இருப்பது என்றால் என்ன என்பதை புதிய ஏற்பாடு விளக்கவில்லை. இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்கான சிறப்பான வழி, இந்த வார்த்தைக்குள் அடங்கி இருக்கக்கூடிய சத்தியங்களை பேசும் வெவ்வேறு வேத பகுதியில் இருந்து நாம் அதை தியானிப்பதே ஆகும். இங்கு நமது முதன்மையான பணி என்னவென்றால் கிறிஸ்துவுக்குள் இருப்பதின் முக்கியத்துவத்தோடு நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான். இதை செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பவுல் எழுதிய எபேசியர் நிருபத்தின் முதலாம் அதிகாரத்தில் உள்ள சத்தியத்தை தியானிப்பதுதான்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

சின்க்ளேர் பி. பெர்குசன்

சின்க்ளேர் பி. பெர்குசன்

டாக்டர்.சின்கிளர் B.பெர்குஷன் அவர்கள் லிகொனர் ஊழியங்களின் துணைத்தலைவராக மற்றும் இறையியல் ஆசிரியராக இருக்கிறார். சீர்திருத்த இறையியில் கல்லூரியில் முறைபடுத்தப்பட்ட இறையியல் பாடத்தின் முதன்மை பேராசிரியராக இருக்கிறார். லிகொனர் ஊழியங்களின் பல்வேறு இறையியல் பாடங்களின் தொடர் போதக ஆசிரியராக இருக்கிறார், அதில் கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் (Union with Christ) என்ற பாடமும் முதன்மையானது. அநேக நல்ல இறையியல் புத்தகங்களை எழுதியுள்ளார், குறிப்பாக முழுமையான கிறிஸ்து (The Whole Christ,) , பக்தியுள்ள தேவனின் திருச்சபை (Devoted to God's Church) ஆகியவையும் இதில் அடங்கும்.