Is Human Nature Basically Good or Completely Sinful?

மனித இயல்பு அடிப்படையிலேயே நல்லதா அல்லது முழுவதும் பாவத்தில் உள்ளதா?

02-04-2026
Resolving Abortions Guilt

கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு

09-04-2026
Is Human Nature Basically Good or Completely Sinful?

மனித இயல்பு அடிப்படையிலேயே நல்லதா அல்லது முழுவதும் பாவத்தில் உள்ளதா?

02-04-2026
Resolving Abortions Guilt

கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு

09-04-2026

தேவ கோபம் என்றால் என்ன?

What Is the Wrath of God?

தேவ கோபம் என்பது கிறிஸ்துவின் மரணத்தினால் நீக்கப்படாத பாவங்களுக்கும் பாவிகளுக்கும் எதிராக நமது பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன் காண்பிக்கும் பதிலே ஆகும். அநேகர் தேவன் கோபமுள்ளவர் என்பதை நினைக்க விரும்பாதபோதிலும், துன்மார்க்கத்திற்கு எதிராகக் கர்த்தருடைய கோபம் வெளிப்படுவதை வேதாகமம் அடிக்கடி குறிப்பிடுகிறது. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டுமே, தேவன் அநீதியின் மீது கோபத்தைக் காட்டுகிறார் என்பதற்குப் போதுமான சாட்சிகளை அளிக்கின்றன.  (காண்க: உபாகமம் 9:8 ; 2 இராஜாக்கள் 23:26 ; சங்கீதம் 21:9; 90:11 ; ஏசாயா 13:9 ; மீகா 5:15 ; செப்பனியா 1:18 ; யோவான் 3:36 ; ரோமர் 1:18 ; எபேசியர் 5:6 ; வெளிப்படுத்தல் 16:1 ).

தேவ கோபமும் அவரது குணாதிசயங்களும்

தேவன் தமது தன்மையின் காரணமாக பாவத்தின் மீது தமது கோபத்தை நிறைவேற்றுகிறார். தேவன் நீதியும் நியாயமும் உள்ளவர் என்பதை வேதம் காண்பிக்கிறது. (உபாகமம் 32:4 ; தானியேல் 9:14 ; ரோமர் 1:17 ; வெளிப்படுத்தல் 15:3). அவர் பாவத்தையும் பாவிகளையும் தண்டிக்காவிட்டால், அவர் நீதியுள்ளவராகவும், நியாயமுள்ளவராகவும் இருக்க முடியாது. எனவே, பாவத்தின் மீது அவர் தமது கோபத்தைப் பொழிவது, அவருடைய நீதியான குணத்திற்கு முற்றிலும் ஏற்ற ஒன்றாகும். பாவிகள் தங்கள் குற்றங்களுக்குப் பரிகாரம் செய்தே ஆக வேண்டும், மேலும் தேவன் தம்முடைய நீதியான கோபத்தை நிறைவேற்றாமல் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது, அப்படிச் செய்தால் அவர் அநீதியுள்ளவராக ஆகிவிடுவார் (யாத்திராகமம் 34:6-9 ). தேவன் அன்பாக இருக்கிறார் ( 1 யோவான் 4:7-8 ), மேலும் அவர் நேசிக்கும் காரியங்களில் ஒன்று நீதியாகும் (சங்கீதம் 33:5 ). தேவன் பரிபூரணமானவர் என்பதால், நீதியின் மீதான அவருடைய அன்பு பரிபூரணமானதாக இருக்க வேண்டும்; அதன் விளைவாக, அவர் “துன்மார்க்கரின் வழியை” வெறுக்க வேண்டும் ( நீதிமொழிகள் 15:9 ; உபாகமம் 32:4- ஐயும் காண்க ).

பாவம் இல்லையென்றால் ஆண்டவர் கோபத்தைக் காண்பிக்க முடியாது, மேலும் பாவம் செய்யும் உயிரினங்கள் இல்லையென்றால் பாவம் காணப்படாது. எனவே பாவத்தால் வீழ்ச்சியுற்ற படைப்பு இல்லையேல் தேவ கோபம் வெளிப்படமுடியாது. இந்த காரணத்திற்காக, அநேக இறையியலாளர்கள் தேவ கோபத்தை ஒரு முழுமையான தெய்வீகப் பண்பாக அல்லாமல், ஒரு சார்பு தெய்வீகப் பண்பாக வகைப்படுத்தியுள்ளனர் . ஒரு முழுமையான தெய்வீகப் பண்பு என்பது, ஆண்டவர் எதையும் படைத்திருக்காவிட்டாலும் கூட எப்போதும் வெளிப்படும் அல்லது செயல்படுத்தப்படும் கடவுளின் ஒரு பண்பாகும். நித்தியத்தன்மை மற்றும் சர்வஞானம் போன்றவை முழுமையான தெய்வீகப் பண்புகளில் அடங்கும். கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் நித்தியமானவராகவும் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பார்.

தேவனுக்கு வெளியே அவர் தமது பண்புகளை தொடர்புபடுத்திக்கொள்ளுவதற்கு எவ்வித படைப்புகளும் இல்லையென்றால், அங்கு தேவனின் ஒருசில பண்புகள் வெளிப்படுவதில்லை. மேலே குறிப்பிட்டப்படி, தேவ கோபம் என்பது குறிப்பிட்ட காலத்தில் வெளிப்படும் சார்பு தெய்வீக பண்பாகும். ஏனெனில் பாவிகள் இல்லையென்றால், தெய்வீகக் கோபத்தின் வெளிப்பாடு இருக்காது. இருப்பினும், கோபம் (அல்லது வேறு எந்த சார்பு தெய்வீகப் பண்பும்) படைப்பின் காரணமாகக் கடவுள் பெறும் ஒன்று என்பதல்ல. கடவுள் இயல்பாகவே நல்லவராகவும் நீதியுள்ளவராகவும் இருப்பதால், பாவத்திற்குக் கோபத்துடன் பதிலளிக்கிறார். படைப்புகள் மாற்றமடைந்து பாவத்தில் காணப்படுவதால் தேவ கோபம் வெளிப்படுகிறது. பாவிகள் இயல்பாகவே நீதியுள்ள கடவுளின் முன் வரும்போது கோபத்தை அனுபவிக்கிறார்கள்; வீழ்ச்சியின் காரணத்தால் தேவன் ஓர் புதிய பண்பை தன்னில் உருவாக்குகிறார் என்பது இதன் அர்த்தமல்ல. காரணம், தேவன் ஒருபோதும் மாறாதவர் (மல்கியா 3:6).

கிறிஸ்துவில் பாவம் தண்டிக்கப்படுவதால், தேவன் தம்மை நீதியுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் வெளிப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவின் பாவநிவாரணம் என்பது தங்கள் பாவங்களிலிருந்து விலகி, இயேசுவை விசுவாசிக்கும்போது தேவன் இப்போது கோபத்தை தணிக்கிறவராகவும், தயவுள்ளவராகவும் இருக்கிறார் என்பதைக்குறிக்கிறது.

தேவ கோபத்தை அனுபவித்தல்

தேவனுடைய கோபம் கொடியது என்பதை வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. வேதாகமம் தேவனுடைய கோபத்தின் சுட்டெரிக்கும் அக்கினியைப் பற்றி அடிக்கடி பேசுகிறது ( யாத்திராகமம் 32:11 ; புலம்பல் 4:11 ). மேலும், தங்கள் பாவத்திலிருந்து கிறிஸ்துவிடம் ஒருபோதும் திரும்பாத பாவிகள் மீதுள்ள தேவனுடைய நித்திய கோபத்தின் இடத்தை அது ஒரு “அக்கினி கடல்” என்று கூட விவரிக்கிறது ( வெளிப்படுத்தல் 20:10).  ஏசாயா 66:24- ஐ மேற்கோள் காட்டி , நரகத்தில், “அவர்களுடைய புழு சாவதில்லை” என்று இயேசு கூறுகிறார் ( மாற்கு 9:42-49 ). இந்த உருவகத்தின் மூலம், நமது இரட்சகர் தேவனுடைய நியாயத்தீர்ப்பை, பாவியை முடிவில்லாமல், அழித்துப்போடும் ஒரு செயலாகச் சித்தரிக்கிறார். தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் “கர்த்தருடைய நாளில்” வரவிருக்கும் பெரும் அழிவையும் நாசமுடிவையும் பற்றிப் பேசுகிறார்கள்; இது வரலாற்றின் குறிப்பிட்ட தருணங்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு பொழியப்படுவதையும், காலத்தின் முடிவில் வரும் அவருடைய இறுதி நியாயத்தீர்ப்பையும் குறிக்கிறது (ஏசாயா 13:6 ; எசேக்கியேல் 30:3 ; யோவேல் 1:15 ; 2 பேதுரு 3:10 ). 

மேற்கூறிய விளக்கங்களின் காரணமாக, பலர் தேவனுடைய கோபம் என்பது வெறுமனே கண்கவர், அக்கினிமயமான நியாயத்தீர்ப்பின் வெளிப்பாடுகளை உருவகமாக மட்டுமே கொண்டது என்று நினைக்கக்கூடும். இருப்பினும், முக்கியமாக, அத்தகைய நியாயத்தீர்ப்பின் வெளிப்பாடுகள் உண்மையில், மிக முன்னதாகவே முதலில் ஊற்றப்பட்ட கோபத்தின் உச்சக்கட்டமாகும். ரோமர் 1:18–32 போன்ற வசனங்கள் , தேவன் தமது கோபத்தை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதில்லை, மாறாக காலப்போக்கில் நிறைவேற்றுகிறார் என்பதைக் குறிப்பிடுகின்றன. பவுல் நமக்குச் சொல்வது போல, அவருடைய கோபம் என்பது மக்களை அவர்களுடைய பாவத்திற்கு ஒப்புக்கொடுத்து, அதில் அவர்கள் இன்னும் ஆழமாகச் சிக்கிக்கொள்ள அனுமதிப்பதாகும். தேவன், மனந்திரும்பாத பாவிகளை அக்கினிமயமான நியாயத்தீர்ப்பினால் நசுக்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்கள் விரும்பும் பாவத்தில் ஈடுபட அடிக்கடி அனுமதிக்கிறார். தேவன் தமது கோபத்தில், மனந்திரும்பாதவர்களை அவர்களுடைய பாவத்திற்கு ஒப்புக்கொடுப்பார்.

தேவ கோபத்துக்கு கீழானவர்களுக்கான நம்பிக்கை 

பாவிகள் மீதான தேவ கோபம் ஊற்றப்படும் கடைசிநாள் ஒன்று உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, தேவன் இரக்கமுள்ளவரும் வரக்கூடிய அவரது உக்கிரத்திலிருந்து காப்பாற்றப்பட தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினவராகவும் இருக்கிறார் (1 தெச 1:10). தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பாவத்துக்கு எதிரான நீதியுள்ள தேவ கோபத்தின் தண்டனையை சுமக்க மனிதனாக பிறந்தார். கிறிஸ்துவின்மீது தேவன் தமது கோபத்தை ஊற்றுகிறார். இதன்மூலம் கிறிஸ்துவில் பாவம் தண்டிக்கப்படுவதால், தேவன் தம்மை நீதியுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் வெளிப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவின் பாவநிவாரணம் என்பது தங்கள் பாவங்களிலிருந்து விலகி, இயேசுவை விசுவாசிக்கும்போது தேவன் இப்போது கோபத்தை தணிக்கிறவராகவும், தயவுள்ளவராகவும் இருக்கிறார் என்பதைக்குறிக்கிறது. (ரோமர் 3:21-31). நீடிய பொறுமையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த தேவன் விரும்புகிறார் (மீகா 7:18), மேலும் இரட்சிப்பிற்காக கிறிஸ்துவில் மட்டுமே விசுவாசம் கொள்ளுகிற அனைவரையும் தேவ கோபத்திலிருந்து முற்றுமுடிய இரட்சிக்க வல்லவருமாயுமிருக்கிறார் (எபி 7;25).

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ராபர்ட் ரோத்வெல்

ராபர்ட் ரோத்வெல்

ரெவரெண்ட் ராபர்ட் ரோத்வெல், லிகோனியர் மினிஸ்ட்ரீஸின் மூத்த எழுத்தாளர், டேபிள்டாக் பத்திரிகையின் இணை ஆசிரியர் மற்றும் ஃப்ளோராவின் சான்ஃபோர்டில் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியில் வசிக்கும் துணைப் பேராசிரியர் ஆவார்.