Jonathan Cruse - What-Is-the-Fruit-of-the-Holy-Spirit
ஆவியின் கனி என்றால் என்ன? 
18-11-2025
Who Wrote the Bible?
வேதத்தை யார் எழுதியது? 
25-11-2025
Jonathan Cruse - What-Is-the-Fruit-of-the-Holy-Spirit
ஆவியின் கனி என்றால் என்ன? 
18-11-2025
Who Wrote the Bible?
வேதத்தை யார் எழுதியது? 
25-11-2025

கால்வினிசம் என்றால் என்ன?

What Is Calvinism?

கால்வினிசம் என்பது ஜான் கால்வினுக்கு பிடிக்காத மற்றும் பெரும்பாலும் தவறான புரிதலை ஏற்படுத்தும் ஓர் சொல்லாகும். கர்த்தருடைய பந்தியைப்ற்றிய சீர்திருத்த கோட்பாட்டிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்கு இந்த பதம் ஓர் அவமதிக்கும் வார்த்தையாக லூத்தரன்களிடமிருந்து வந்தது. எவ்வாறு மார்ட்டின் லூதர் லூத்தரன் என்ற பதத்தை எதிர்த்தாரோ அதேபோல் கால்வினும் கால்வினிசம் என்ற பதத்தை விரும்பவில்லையென்றாலும், இந்த வார்த்தை இன்றும் நிலைத்திருக்கிறது.

கால்வினிசம் என்பது வெறுமனே கால்வினின் இறையியலை விட அதிகமான காரியங்களை உள்ளடக்கியது. முதலாவதாக, கால்வினின் போதனைகளில் லூத்தர், உல்ரிச் சுவிங்கிலி ஆகியோரின் இறையியல்களும் காணப்பட்டது, மற்றும் கால்வினிசம் போதனைகளில் பிலிப் மெலாங்க்தான், மார்ட்டின் புயூசர், தியோடர் பெசா போன்ற இறையியலாளர்களும் பங்காற்றினர். எனவே இதை “சீர்திருத்த புரட்டஸ்தாந்தியல்” என்று அழைப்பது மிகவும் துல்லியமாக இருக்கும். இருப்பினும், கால்வினிசம் என்ற பதம் அறிமுகமானதாகவும், பரவலாகப் பயன்படுத்தப்படுவதாலும் இப்பொழுதும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இறையியல்

கால்வினிசக் கோட்பாட்டின் அத்தியாவசிய கூறுகளில், படைப்பில் கடவுளின் வல்லமை மற்றும் அவரது தெய்வீக பராமரிப்பில் நிரூபிக்கப்பட்ட அவரது இறையாண்மை, அனைத்து வாழ்க்கைக்கும் ஆதாரமாகவும் கட்டளையாகவும் உள்ள வேதத்தின் அதிகாரம், மற்றும் மனிதனின் வீழ்ச்சி மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் அடங்கும். கால்வினிசத்தின், கிறிஸ்தவ வாழ்க்கைக்கான நியாயப்பிரமாணத்தின் நிலையான செயல்பாட்டை வலியுறுத்துகிறது. கால்வினின் மனதில், பத்துக்கற்பனைகளான நியாயப்பிரமாணம் தொடர்ச்சியான செயல்படுத்தலாகவும், கிறிஸ்தவ வாழ்விற்கான நியதியாகவும் உள்ளது. பரிசுத்த ஆவியானவரின் தன்மை மற்றும் அவரது பணிகளில் முக்கியத்துவத்தை செலுத்தவதோடு, நீதிமானாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாகுதல் ஆகியவற்றை அழுத்தமாக போதித்தி அவற்றை வேறுபடுத்தி, இந்த இரண்டும் இன்றியமையாதவைகள் என்றும் மற்றும் பயபக்தியுள்ள வாழ்க்கை முறையையும், இரக்கத்துக்கான அர்ப்பணிப்பையும், மற்றும் நாம் நீதிமான்களாக்கப்பட தேவையான இரட்சிக்கும் விசுவாசத்தின் மெய்யான பிரதிபலிப்பாக நியாயம் மற்றும் நீதியை தொடரும் படி வலியுறுத்துகிறது.

கலாச்சார ரீதியாக, (திருச்சபைக்குள்) கால்வினிசம், வேத பிரசங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உருவ வழிபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வழிவகுத்தது, மேலும் (திருச்சபைக்கு வெளியே) கடவுளை ஆராதிப்பதற்கான ஒரு வழிமுறையாக கலை மற்றும் கலாச்சாரத்திற்கான உந்துதலை ஏற்படுத்தியது. கடவுளை அறிவதன் முக்கியத்துவத்தில் வார்த்தையின் மீது கவனம் செலுத்துவது பள்ளிகள், வீடுகள் மற்றும் திருச்சபைகளில் கால்வினிசம் “வாசிப்பு கலாச்சாரத்தை” ஏற்படுத்தியது, இது பல நூற்றாண்டுகளாக கால்வினிசத்தை பல ஞானவான்களுக்கு ஒரு இருப்பிடமாக மாற்றியது. அறிவியலுக்கான கால்வினிசத்தின் திறந்த தன்மை, படைப்பிலும் கடவுள் வெளிப்படுகிறார் என்ற கால்வினின் பார்வையில் இருந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி, கடவுளை அங்கீகரிப்பதற்கு பங்களிக்கிறது, மேலும் இந்தக் கண்ணோட்டம் கல்வியாளர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. 

 “இந்த உலகம் நமது வீடு அல்ல; நாம் வெறும் ஒரு வழிப்போக்கர்கள்” என்ற கூற்றில் பதிந்துள்ள சிந்தனை, தேசியவாதம் மற்றும் பொருள்முதல்வாதத்தின் செல்வாக்கைக் குறைத்து, வேலை மற்றும் சேவையின் நெறிமுறைகளைத் தூண்டுகிறது.”

கால்வினிச ஐந்து உபதேசங்கள் என்பது டச்சு பட்டணமான டாட்ரெக்டில் (1618-19) நடைபெற்ற சீர்திருத்த போதகர்கள் கவுன்சிலால் உருவாக்கப்பட்ட ஐந்து கோட்பாடுகளை குறிக்கிறது: மனிதனின் முழுமையான வீழ்ச்சி, நிபந்தனையற்ற தெரிந்தெடுப்பு, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான கிறிஸ்துவின் மரணம், தள்ளிவிடமுடியாத கிருபை, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி ஆகியவைகள். இந்த கிருபையின் உபதேசங்கள் TULIP என்ற சுருக்கத்தில் உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள L அநேக நேரங்களில் கிறிஸ்துவின் பரிகார பலி இதன் வல்லமையில் மட்டுப்படுத்தப்படுகிறது என்று தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதன் அர்த்தம் என்னவென்றால், கிறிஸ்து தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார் என்பதே மற்றும் யாருக்காக மரித்தாரோ அனைவருக்கும் பலனளித்து அவர்களை மீட்கிறது. இருப்பினும் பரிகாரபலியின் மூலமாக பலனடையும் எண்ணிக்கை குறிப்பிட்ட மக்களே. அவர்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டு மெய்யான இரட்சிக்கும் விசுவாசத்தைக் கொண்டிருப்பவர்கள். மிக முக்கியமாக, கால்வின் மற்றும் கால்வினிச உபதேசங்கள் வெறுமனே இந்த ஐந்து கொள்கைகள் மாத்திரமல்ல. இதற்கும் அப்பாற்பட்டது. உண்மையில் இதன் மையம் முன்குறித்தல் அல்ல மாறாக தேவனுடைய மகிமையே.

வாழ்க்கைமுறை

நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகுதல் மற்றும் திருச்சபை ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றின் மீதான கால்வினிச பார்வையானது, கால்வினிச உபதேசங்களை விசுவாசிக்கும் நபர்களின் வாழ்வில் வேதத்தினால் சீரமைக்கப்பட்ட வாழ்க்கை முறைமைக்கான வழியை ஏற்படுத்தியுள்ளது. வேதம் மட்டுமே என்ற கொள்கையும், பத்துக் கட்டளைகளின் தொடர் செயல்பாடும், பிரசங்கத்தின் முக்கியத்துவமும், சபை ஒழுங்குநடவடிக்கையின் அவசியத்தையும் மற்றும் சபை ஆளுமை மற்றும் அமைப்புகள் இடையிலான வேறுபாட்டை வலியுறுத்தும் ஒரு திருச்சபை ஒழுங்கை உருவாக்கியுள்ளன. வேதாகமத்தின் ஒற்றுமை தன்மையின் புரிதலானது, பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலரோடு திருச்சபையின் வலிமையான உறவை காண்பிக்கிறது. இந்த அடையாளம், பிரசங்கத்திலும், ஆராதனை முறையிலும், சங்கீத புத்தகத்தின் மீதான ஒரு விருப்பத்திலும் வெளிப்படுகிறது. இந்த சங்கீதங்களைப் பாடுவது, கால்வினிசத்தின் மற்றொரு சிறப்பியல்பாகும் காரணம் ஆவிக்குரிய பிரயாணத்தை கால்வினிசம் வலியுறுத்துகிறது.  “இந்த உலகம் நமது வீடு அல்ல; நாம் வெறும் ஒரு வழிப்போக்கர்கள்” என்ற கூற்றில் பதிந்துள்ள சிந்தனை, தேசியவாதம் மற்றும் பொருள்முதல்வாதத்தின் செல்வாக்கைக் குறைத்து, வேலை மற்றும் சேவையின் நெறிமுறைகளைத் தூண்டுகிறது.”

இதன் பரவல்

பதினாறாம் நூற்றாண்டில் கால்வினிசத்தின் பரவல், காலத்திலும் நோக்கத்திலும் கவர்ந்திழுக்க கூடிய ஒன்றாக இருந்தது என்று நியாயமாக நம்மால் கூறமுடியும். 

1554 ல், ஐரோப்பாவில் சுமார் அரை மில்லியன் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் இருந்தனர், ஆனால் 1600 ஆம் ஆண்டிலேயே சுமார் பத்து மில்லியன் பேர் இருந்தனர். தொடக்கத்திலிருந்தே, கால்வினிசம் சர்வதேச அளவில் வலுவாக ஓர் நோக்கத்தைக் கொண்டு, அன்றிலிருந்து அவ்வாறாகவே உள்ளது. இந்த விரைவான மற்றும் விரிவான பரவலுக்கான காரணிகள், எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெனீவாவில் உள்ள கால்வின் அகாடமி, ஹைடெல்பெர்க் மற்றும் லைடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமிருந்து இறையியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பயிற்சி பெற்ற பல சீர்திருத்த கல்வி நிறுவனங்களே ஆகும்.

கால்வினிசம் மேற்கத்திய சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் வட அமெரிக்கா, தூர கிழக்கு (இந்தோனேசியா, தென் கொரியா, ஜப்பான்) மற்றும் தென்னாப்பிரிக்காவில் திருச்சபை மற்றும் இறையியலின் வளர்ச்சிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்வினிசம் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பெரும் செல்வாக்கை செலுத்தியுள்ளது. உதாரணமாக, கால்வின், வட்டி விகித மீட்பைப் பற்றி வேதம் கூறும் உரிமையின் கோட்பாட்டை உருவாக்கினார், இது வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய உத்வேகத்தை அளித்தது. ஆனால் பல நூற்றாண்டுகளாக கால்வினிசம் முக்கியமாக திருச்சபை மற்றும் இறையியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர்ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஹெர்மன் செல்டர்ஹீயிஸ்
ஹெர்மன் செல்டர்ஹீயிஸ்
டாக்டர் ஹெர்மன் செல்டர்ஹுயிஸ் நெதர்லாந்தில் உள்ள அப்பெல்டோர்ன் இறையியல் பல்கலைக்கழகத்தில் திருச்சபை வரலாற்றுப் பேராசிரியராகவும், சீர்திருத்த ஆராய்ச்சி கூட்டமைப்பின் (REFORC) தலைவராகவும், ஐரோப்பிய மத அகாடமியின் தலைவராகவும் உள்ளார். ஜான் கால்வின்: எ பில்கிரிம்ஸ் லைஃப் மற்றும் மார்ட்டின் லூதர்: எ ஸ்பிரிச்சுவல் பயோகிராஃபி உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர்.