உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?
12-09-2024
3 வகையான சமயசட்ட ஒழுக்கவியல்
13-09-2024
உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?
12-09-2024
3 வகையான சமயசட்ட ஒழுக்கவியல்
13-09-2024

உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?

xr:d:DAFXk0WDSFg:25,j:45162075609,t:23011320

மனித வாழ்வின் உன்னதநிலை என்பது வேதத்தில் படைப்பிலேயே வேரூன்றி அடித்தளமாக அமைந்துள்ளது. மனிதனின் உருவாக்கம் இப்பிரபஞ்ச விபத்தாக பார்க்கப்படாமல், மாறாக நித்திய தேவனால் நேர்த்தியாக படைக்கப்பட்ட சிருஷ்டியாகவே அவன் இருக்கிறான். மனிதனின் கண்ணியம் அது தேவனிடமிருந்து வந்தது. மனிதன் ஓர் எல்லைக்குள் குழுவாகவும் பிறரை சார்ந்து வாழும் படைப்பாகவும் அவனது சிருஷ்டிகரால் மதிப்புள்ளவனாக ஏற்படுத்தப்பட்டவனாகவும் இருக்கிறான். 

ஆதியமாகத்தில் உள்ள படைப்பின் காரியங்கள் மனித வாழ்வின் உன்னதநிலையின் கட்டமைப்பை காண்பிக்கிறது:

“பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”

(ஆதியாகமம் 1: 26-27)

மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்டதுதான் அவனை மற்ற எல்லா படைப்புகளிலிருந்தும் வேறுபடுத்தி காண்பிக்கிறது. மனிதனில் உள்ள தேவசாயல் மற்றும் அவரது ரூபத்தின் முத்திரை தேவனையும் மனிதனையும் தனித்துவமாக இணைக்கிறது. மனிதனை தேவனைப் போல் பார்ப்பதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் படைத்தவரோடு உள்ள தனித்துவமான உறவில் மனிதனின் கண்ணியமும் மரியாதையும் அடங்கியுள்ளது.

மனிதன் தூய்மையானவனாக இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் அவன் இன்னும் மனிதனாகவே இருக்கிறான். நாம் மனிதர்களாக இருக்கும் வரைக்கும் தேவசாயல் உள்ளவர்களாகவே இருக்கிறோம். நாம் இன்னும் மேன்மையான படைப்புகளாகவே இருக்கிறோம். நாம் மதிக்கத்தக்கவர்களாக இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் தேவசாயலில் படைக்கப்பட்ட நம்மிடம் இன்னும் அந்த மதிப்பும் மேன்மையும் உள்ளது. இது வேதம் கூறும் மீட்பின் செய்தியாகும். தாம் படைத்த இந்த படைப்புகளைத் தான் தேவன் மீட்பதற்கு சித்தங்கொள்ளுகிறார். 

பின்வருவனவற்றோடு சேர்த்து இன்னும் அநேக பழைய ஏற்பாட்டின் வசனங்கள் படைப்பில் மனித வாழ்வின் உன்னதநிலையை குறித்துப் பேசுகிறது:

“தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார். சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.”

(யோபு 33:4)

“கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” 

(சங்கீதம் 100:3)

“மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ? 

தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! 

இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள், என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். 

நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன், என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.”

(ஏசாயா 45:9-12)

“இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.”

(ஏசாயா 64:8)

மனித வாழ்வின் உன்னதநிலையை குறித்து கிறிஸ்துவும் பழைய ஏற்பாட்டிலிருந்து மிக முக்கிய போதனைகளை அளித்திருக்கிறார்:

“கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.”

(மத்தேயு 5:21-22)

மனித வாழ்வின் உன்னதநிலையை குறித்து நமது புரிதலுக்கு கிறிஸ்துவின் வார்த்தைகள் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தவை. இயேசு இங்கு பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தை விளக்கப்படுத்துகிறார். பத்து கட்டளைகளை குறித்து மிகவும் குறுகிய தவறான புரிதல்களை கொண்டிருந்த யூத மதத்தலைவர்களிடம் கிறிஸ்து பேசிக்கொண்டிருக்கிறார். நியாயப்பிரமாணத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்ட அம்சங்களை மட்டும் தாங்கள் கடைபிடிப்பதின் மூலம் , தங்கள் நற்கிரியைகளைக்காக தங்களை தாங்களே பாராட்டிக்கொள்ள முடியும் என்று கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த நியாயப்பிரமாணவாதிகள்(Legalists) நம்பிக்கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் நியாயப்பிரமாணத்தின் மெய்யான விளக்கங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள தவறினர். எவைகளை நியாயப்பிரமாணம் தெளிவாக சொல்லவில்லையோ கிறிஸ்துவின் பார்வையில், அவைகள் தெளிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. 

விபச்சாரத்திற்கு எதிரான கிறிஸ்துவின் எச்சரிப்பில் நியாயப்பிரமாணத்தின் தரம் காணப்படுகிறது:

“விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறஎவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” 

(மத்தேயு 5:27-28)

இங்கு கிறிஸ்து, ஒரு நபர் வெறுமனே உடல்ரீதியாக விபச்சாரம் செய்யால் இருப்பது மட்டும் அவர் நியாயப்பிரமாணமத்திற்கு கீழ்ப்படிகிறார் என்று அர்த்தமல்ல என்பதை விளக்குகிறார். விபச்சாரத்தைக் குறித்த கட்டளை மிகவும் சிக்கலான ஒன்று. விபச்சாரத்தில் உடல்ரீதியாக ஈடுபடுவது மட்டுமல்ல, மாறாக இச்சை மற்றும் காமம் போன்ற காரியங்களுக்குள் காணப்படும் அனைத்தும் விபச்சாரத்துக்குள்ளாகவே அடங்கும். இச்சையை இருதயத்தின் விபச்சாரம் என்று இயேசு கூறுகிறார்.

நியாயப்பிரமாணம் வெறுமனே ஒரு சில தவறான நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் மட்டும் தடை செய்யவில்லை. அதன் தாக்கங்கள் மூலம் சில நேர்மறையான நடத்தைகளையும், செயல்பாடுகளையும் எதிர்பார்க்கிறது. அதாவது, விபச்சாரம் தடைச்செய்யப்பட்டால், அங்கு ஒழுக்கமுள்ள கற்பையும், தூய்மையையும் பத்து கட்டளைகள் எதிர்பார்க்கிறது.

கொலை செய்யாதிருப்பாயாக என்ற கட்டளையில் கிறிஸ்துவினால் வகுக்கப்பட்ட இந்த முறைகளை நாம் கவனிக்கும் போது, ஒருபுறம் எதிர்மறையாக நாம் கொலை சம்பந்தப்பட்ட அனைத்து செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பதையும் மறுபுறம் நாம் நேர்மறையாக உயிரை காப்பாற்றவும், மேம்படுத்தவும், கவனித்துக்கொள்ளவும் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். எல்லா விதத்திலும் நாம் கொலை செய்வதை தவிர்க்க வேண்டும். அதேவேளை, வாழ்க்கையை காப்பாற்றவும், மேம்படுத்தவும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்.

எவ்வாறு இச்சையை விபச்சாரத்தின் அம்சமாக கிறிஸ்து பார்க்கிறாரோ, அவ்வாறே நியாயமில்லாத கோபத்தையும், பிறருக்கு விரோதமான தூஷணத்தையும் கொலையாகவே பார்க்கிறார். இச்சை இருதயத்தின் விபச்சாரமாக இருப்பது போல நியாயமில்லா கோபமும், தூஷணமும் இருதயத்தின் கொலையாகவே இருக்கிறது.

இச்சை, தூஷணம் போன்ற காரியங்களைப் பற்றி பேசுவதற்கு பத்துக் கட்டளைகளின் அம்சங்களை விரிவுப்படுத்துவதின் மூலம், ஒரு நபரின் மீது இருக்கும் பாலிய இச்சையானது, சட்டவிரோத உடலுறுவின் பாவத்திற்கு சமமானது என்று இயேசு இங்கு அர்த்தப்படுத்தவில்லை. அதேபோல் தூஷணமும் கொலையைப்போல் பாவம் என்றும் இயேசு கூறவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்றால், கொலை செய்யாதிருப்பாயாக என்ற கட்டளை, சக மனிதனை அநியாயமாய் காயப்படுத்தும் எந்த செயலுக்கும் எதிராக உள்ள கட்டளையையும் உள்ளடக்கியுள்ளது.

கருக்கொலைப் பிரச்சனைக்கு இவை அனைத்தும் எவ்வாறு பொருந்தும்? மனித வாழ்வின் உன்னதநிலையை குறித்த மற்றொரு வலுவான காரியத்தை கிறிஸ்துவின் பிரசங்கத்தில் நாம் பார்க்கிறோம். கோபம் மற்றும் தூஷணம் போன்ற இருதயத்தின் கொலையை “வழிவகுக்கும்” கொலை என்று கூறலாம். ஏனெனில், நமது இருதயத்தில் மறைந்திருக்கும் கோபமும் தூஷணமும் வெளிப்படையாக ஒருவரைக் கொலை செய்வதற்கு நேராக கூட்டிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. நிச்சயமாக, கோபமும் தூஷணமும் நம்மை எப்பொழுதும் கொலைக்கு நேராக வழிநடத்தாவிடினும், அவைகளையும் வேதம் தடை செய்கிறது. அவைகள் எதற்கு நேராக நம்மை வழிநடத்தும் என்பதற்காக அல்ல, மாறாக தேவ சாயலில் படைக்கப்பட்ட மனித வாழ்விற்கு அவைகள் என்ன தீங்கு விளைவிக்கும் என்பதற்காகவே.

கருக்கொலையோடு மனித வாழ்வின் உன்னதநிலையை நாம் சிந்திக்கையில், துல்லியமான ஆனால் அவசியமான தொடர்பை அவற்றோடு நாம் ஏற்படுத்துகிறோம். ஒரு கருவை மெய்யாகவே அது உயிரோடு இருக்கும் ஒரு மனிதன் என்பதை நிரூபிக்க முடியாவிட்டாலும் அது ஒரு ஜீவனுள்ள மனிதன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் சொல்லப்போனால், கரு ஓர் வளரும் மனிதன். அது உயிரற்ற உறைந்த நிலையில் இல்லாமல் ஆற்றல்மிக்க வளர்ச்சியில் உள்ளது. எந்த வித குறுக்கீடும் எதிர்பார விபத்தும் இல்லாதவரை அது நிச்சயமாக ஒரு முழுமையான உண்மையான மனிதனாக மாறும். கிறிஸ்து, கொலைக்கு எதிரான கட்டளையை வெறுமனே கொலை செய்வதற்காக மட்டும் பார்க்காமல், அவை உண்மையான கொலைக்கு நேராக வழிநடத்தும் இருதய கொலையாகவும் பார்க்கிறார். மனித உயிரை கொல்லும் “வழிவகுக்கும்” கொலை வேதத்திற்கு விரோதமானது என்பதை போதிக்கிறார். அப்படியானால், ஒரு கருவின் வாழ்க்கையை அழிக்கும் கொலையினால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?

பிறக்கப்போகும் ஒரு மனிதனை கருவிலேயே அழிக்கும் கொலையானது , பிறந்து வளர்ந்த ஒரு மனிதனை கொல்லுவதற்கு சமமாக பார்க்கப்படவில்லையென்றாலும், அவைகள் அழிக்கப்படுமுன் அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் கவனத்தோடு ஆராய்வதற்கு அவைகள் இரண்டும் ஒன்றாகவே இருக்கிறது. கொலையைப் பற்றிய கட்டளையின் இந்த அம்சம் கொலைக்கு எதிரான பரந்த சிக்கலான தடைக்குள் கருக்கொலையை முழுமையாக பேசவில்லையென்றாலும், இதைப்பற்றிய இரண்டாவது கோணம் தெளிவாக பேசுகிறது.

நியாயப்பிரமாணத்தின் எதிர்மறையான தடைகள் நம்மிடம் நேர்மறையான வேதப்பூர்வமான செயல்களை எதிர்ப்பார்க்கிறது. ஒரே நேரத்தில், விபச்சாரத்திற்கு எதிரான கட்டளை நம்மிடம் பரிசுத்த கற்பையும் தூய்மையையும் எதிர்பார்க்கிறது. அதேபோல், நியாயப்பிரமாணம் எப்பொழுது நேர்மறையான கீழ்படிதலை கட்டளையிடுகிறதோ, அதற்கு எதிர்மறையான கீழ்படியாமையையும் அப்போழுதே தடைசெய்கிறது. உதாரணமாக, தேவன் நாம் பணத்தைப்பற்றி நல்ல உக்கிராணக்காரணாக இருக்கவேண்டும் என்று கட்டளையிட்ட அதேவேளையில் ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடாது என்பதையும் கூறுகிறார். நன்றாக வேலை செய்து உழைக்கவேண்டும் என்ற நேர்மறையான கட்டளையானது, வேலையில் சோம்பேறிகளாக இருப்பதற்கு எதிர்மறையான தடையையும் தன்னில் கொண்டுள்ளது.

வளர்ந்த மனிதனையும், வளர இருக்கும் கருவையும் அழிக்கும் கொலைக்கு எதிரான எதிர்மறையான கட்டளையானது,  உயிரையும், வாழ்வையும் காப்பாற்றி பராமரிக்கிற நேர்மறையான அவசியத்தையும் தன்னில் கொண்டுள்ளது. கொலை செய்யாமல் இருப்பது வாழ்க்கையை மேம்படுதுவதாகும். இன்னும் பிறக்காத குழந்தையின் வாழ்க்கையை கருக்கொலை ஒருபோதும் மேம்படுத்தாது. கருக்கொலை, சந்ததிகளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லாதவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று சிலர் வாதிட்டாலும், கேள்வியாக இருக்கும் இன்னும் பிறவாத குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை அது ஒருபோதும் மேம்படுத்தாது.

மனித வாழ்வின் உன்னதநிலையின் மேன்மைகளை பற்றி வேதம் தொடர்ச்சியாக வலுமையான ஆதரவோடு போதித்துக்கொண்டே வருகிறது. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விதவைகள், ஆதரவற்ற அநாதைகள், ஊனமுற்றவர்கள் இவர்கள் அனைவரும் வேதத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். எனவே, கருக்கொலையைப்பற்றிய இந்த பிரச்சினையின் எந்த விவாதமும் வேதத்தின் இந்த சத்தியங்களுடன் சண்டைப்போடவேண்டும். எப்பொழுது ஒரு கருவின் அழிவும், அகற்றுதலும் மிகச் சாதாரணமாக நிகழ்கிறதோ அப்பொழுது ஒரு நிழல், படைப்பின் மணிமகுடமாக இருக்கும் மனித வாழ்வின் உன்னதநிலை மற்றும் கண்ணியத்தின் பரந்த பார்வையை இருண்டச்செய்கிறது.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.
ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.