Covenant Theology for Kids: A Beginner’s Guide

குழந்தைகளுக்கான உடன்படிக்கைக் இறையியல்: தொடக்கநிலை வழிகாட்டி

01-10-2026
Covenant Theology for Kids: A Beginner’s Guide

குழந்தைகளுக்கான உடன்படிக்கைக் இறையியல்: தொடக்கநிலை வழிகாட்டி

01-10-2026

சவாலான நேரங்களில் ஓர் தகப்பனின் வழிகள்

The Ways of a Father in Challenging Times

ஒரு தகப்பனாக இருப்பதென்பது சவால்கள் நிறைந்த ஒன்று. கடினமான காரியங்களில் ஒன்று, கிறிஸ்துவை மையமாக கொண்ட குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் விசுவாசத்தை விட்டு வழி விலகி அலைந்து திரியும் ஓர் மகன் அல்லது மகளை பார்ப்பதுதான். இத்தகைய சூழலில் நாம் எங்கு செல்வது?

நீதிமொழிகள் புத்தகம், இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்து செல்வதற்கான ஊக்கத்தையும் தெளிவையும் வழங்குகிறது. அது பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டது.

இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்: விவேகி நல்லாலோசனைகளை அடைந்து, 

(நீதிமொழிகள் 1:4-5).

தனது பிள்ளையின் நல்வாழ்விற்கான தகப்பனின் நம்பிக்கை என்னவென்றால், முதலாவது தெய்வீக புத்திமதிகளை சொல்வது தான். நீதிமொழிகளின் ஆரம்பம், புத்திமதிகளுக்கு செவி கொடுப்பதற்கு மகன் மற்றும் மகளை அழைக்கிறது (நீதி 1:8). “வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதற்கும்” (2:1), “போதகத்தை மறவாதபடிக்கும்” (3:1), “தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனிக்கவும்” (4:1), “ஞானத்தைக் கவனித்து புத்திக்கு செவியைச் சாய்க்கவும்” (5:1), “நீ உன்னை தப்புவித்துக்கொள்ளவும்” (6:3), “வார்த்தைகளை காத்து கட்டளைகளை பத்திரப்படுத்தவும்” (7:1) அழைப்பு விடுக்கிறது. அவர்களின் இதயங்களிலும் மனங்களிலும் வேதாகம சத்தியங்களைப் பதியவைக்க நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோமா?

தகப்பன்கள், வழிதவறி செல்லும் பிள்ளைகளின் நடத்தைகளை மிக கவனத்தோடு ஆராயவேண்டும். நீதிமொழிகள் மூன்று ஆபத்தான இருதயத்தின் நிலைகளைப் பற்றி பேசுகிறது: தேவனை மறக்கும் பேதைகள், தேவனை நிராகரிக்கும் நிந்தனைக்காரர்கள், தேவனை புறந்தள்ளும் மதியீனர்கள் (நீதி 1:22). இவர்கள் ஒவ்வொருவரும் படிப்படியாகக் கடின இருதயமுள்ளவர்களாகவும், ஆவிக்குரிய சத்தியத்திற்குச் செவிசாய்க்காதவர்களாகவும், உடனடி ஆபத்தில் இருப்பவர்களாகவும் ஆகிறார்கள். அவர்கள் எந்தக் சத்தத்துக்கு மிகவும் நெருக்கமாகச் செவிசாய்க்கிறார்கள் என்பதைப் பகுத்தறிவதே முக்கியம். அவர்கள் யாருடன் நடக்கிறார்கள், நிற்கிறார்கள் அல்லது அமர்கிறார்கள்?.

பேதைமைகள் எளிதாக வழிதவறக்கூடியவர்கள்; அவர்கள் சோதனையின் குரல்களுக்குச் செவிசாய்த்து, தீய சகவாசத்தால் எளிதில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். போதைகள் தங்கள் தெரிவுகளின் விளைவுகளைக் கண்டு, அந்தப் பழக்கங்களையும் நண்பர்களையும் விட்டுவிட வேண்டும் என்று ஞானம் உரக்கக் கூறுகிறது ( நீதிமொழிகள் 7:6-27 ). பரிகாசம் செய்பவன் அதிக அகங்காரம் உடையவன்; அவன் பாவத்தைப் பரிகசித்து, எல்லா தேவ ஆலோசனைகளையும் புறக்கணிக்கிறான். அவன் அழிவுக்கும், அவமானத்திற்கும், இழிவுக்கும் ஆளாகாதபடிக்கு, தன் தகப்பனின் கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடுக்கும்படி ஞானம் அவனுக்குச் சவால் விடுகிறது ( நீதிமொழிகள் 13:1 ). மூடன் தேவனை உறுதியாக நிராகரித்து, அவருடைய வார்த்தையை இகழ்கிறான். செவிகொடுப்பதில்லை என்பதால், அவன் தனக்குத்தானே அழிவைக் கொண்டுவருகிறான் என்றும், அவனுடைய முடிவு மரணமே என்றும் ஞானம் அத்தகையவனை எச்சரிக்கிறது. அன்புடன் சத்தியத்தை எப்படி (எவ்வளவு அடிக்கடி) பேசுவது என்பதை அறிய ஞானத்திற்காக ஜெபியுங்கள்.

தகப்பன்மார்கள் பின்பற்றுவதற்கு உற்சாகப்படுத்தும் பிற நடைமுறை வழிமுறைகள் என்னென்ன?

ஜெபம்

கிருபாசனத்துக்கு முன்பு தனது பிள்ளைகளை தொடர்ச்சியாக கொண்டு வருவதுதான் தகப்பனின் முதன்மையான மற்றும் உயர்வான சாதனமாகும். பல பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கொண்ட, அனுபவமிக்க போதகரும் தந்தையுமான ஜான் யேட்ஸ், தனது அனுபவத்திலிருந்து எழுதுகிறார்: “மிக விரைவாக, பிள்ளைகள் ஒரு மனிதனுக்கு அவனுடைய சொந்த வரம்புகளைப் பற்றியும், அவனிடம் எல்லா பதில்களும் இல்லை என்பதையும், அவன் ஒரு கணவனாகவும் தந்தையாகவும் அடிக்கடி தோல்வியடைகிறான் என்பதையும் கற்பிக்கத் தொடங்குகிறார்கள். . . . இது ஜெபம் எனப்படும் ஒரு முற்றிலும் புதிய வாழ்க்கை முறையின் தொடக்கமாகும்.” யேட்ஸ் மிகவும் உதவியான ஒரு வளத்தைப் பரிந்துரைக்கிறார்—ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் குறிப்பிட்ட தேவைகளையும் பதில்களையும் பதிவு செய்வதற்கான ஒரு ஜெபக் குறிப்பேடு. ஒரு தந்தையின் விடாமுயற்சியான ஜெபங்கள் மிகுந்த பலனளிக்கின்றன.

மனந்திரும்புதல் 

வழிதவறிய அல்லது பின்வாங்கும் ஒரு பிள்ளையின் ஆவிக்குரிய பயணத்தில் ஏற்படும் ஒரு முறிவு, தந்தையின் தவறாக இருக்கலாம். சமீபத்தில் நாம் அவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்று அவர்களிடம் கூறினோமா? ஒரு தந்தையாக நமது சொந்தப் பாவங்களை அவர்களிடம் தாழ்மையுடன் அறிக்கையிட்டோமா? கோபமான அல்லது புண்படுத்தும் வார்த்தைகளுக்காகவோ, அல்லது மெத்தனமான, சீரற்ற, அல்லது மிகவும் கடுமையான ஒழுக்கமுறைக்காகவோ உண்மையாக மன்னிப்புக் கேட்பதற்கு ஒருபோதும் தாமதமாகிவிடாது. உண்மையான ஆண்கள் மன்னிப்புக் கேட்க முதல் அடியை எடுத்து வைப்பார்கள்.

ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள். வழிதவறிச் சென்ற பிள்ளை எவ்வளவு தூரம் அனுமதிக்கிறானோ, அந்த அளவிற்கு ஒரு உண்மையான உறவை வளர்த்துக்கொள்ள அந்த ஞானமுள்ள தந்தை உறுதியுடன் முயல்கிறார்.

எந்தவொரு மனந்திரும்புதலின் அறிக்கையும் நேருக்கு நேர் தெரிவிப்பதே சிறந்தது. இருப்பினும், இணையவழி உரையாடல், தொலைபேசி அழைப்பு அல்லது எழுதப்பட்ட குறிப்பு (இறங்கு வரிசையில்) போன்றவையும் தேவைப்படலாம். அந்தக் குறிப்பு கையால் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும், ஏனெனில் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை விட, உங்கள் கையால் எழுதப்படும் தனிப்பட்ட குறிப்புகளுக்கு அதிக மதிப்பு உண்டு.

பொறுமை

1876-ல் ஒரு போதகர் கிறிஸ்தவக் குடும்பத்தைப் பற்றி ஆழ்ந்த கருத்துள்ள ஒரு புத்தகத்தை எழுதினார். அதில், தந்தையர்கள் தங்கள் மந்தையைப் பொறுமையுடன் வழிநடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்: “நோக்கம் சித்தத்தை உடைப்பதல்ல , மாறாக அதைப் பயிற்றுவிப்பதே ; வெளிப்புற சக்தியால் அதன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதல்ல, மாறாக அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளக் கற்பிப்பதே.” கட்டுக்கடங்காததைக் கட்டுப்படுத்தவும், பிள்ளையின் இதயத்தைத் தாக்குதலால் அல்ல, மாறாக ஒரு மென்மையான முற்றுகையால் கைப்பற்றவும், பெரும்பாலும் மெதுவாக நிகழும் கிருபையின் செயலுக்கு நேரம் கொடுங்கள்.

இனிமை

இதற்கிடையில், நச்சரிப்பவராகவோ அல்லது அரக்கத்தனமானவராகவோ இருக்காதீர்கள். உண்மையை தெளிவாகப் பேசுங்கள், ஆனால் பேசும் ஒவ்வொரு முறையும் அல்ல. கோபத்தை அல்ல, அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்; விரக்தியை அல்ல, பொறுமையைப் பயன்படுத்துங்கள். “பிதாக்களே, உங்கள் பிள்ளைகளுக்கு கோபமூட்டாதிருங்கள்; கர்த்தருடைய போதனையிலும் ஒழுக்கத்திலும் அவர்களை வளருங்கள்” ( எபேசியர் 6:4 ). முடிந்தபோதெல்லாம் ஒன்றாக வேடிக்கையான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் உறவை வலுவாக வைத்திருங்கள். வரவேற்கும் மனப்பான்மையையும், புதிய பிணைப்புகளை உருவாக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளையும், பகிரப்பட்ட அனுபவங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைவதையும் கர்த்தரிடம் கேளுங்கள்.

விடாமுயற்சி 

ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள். வழிதவறிச் சென்ற பிள்ளை எவ்வளவு தூரம் அனுமதிக்கிறானோ, அந்த அளவிற்கு ஒரு உண்மையான உறவை வளர்த்துக்கொள்ள அந்த ஞானமுள்ள தந்தை உறுதியுடன் முயல்கிறார். நிபந்தனையற்ற அன்பு, “நீ என்ன செய்திருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறுகிறது. இதற்கான சிறந்த உதாரணம் கிறிஸ்து பேசின இளையக்குமாரன்பற்றிய உவமையில் காணப்படுகிறது. நிராகரிக்கப்பட்ட தந்தை, தொலைந்து போன தன் மகனுக்காக இடைவிடாது விழித்திருந்து, அவன் திரும்புவதற்காக தினமும் அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் நொண்டியபடி வீட்டிற்கு வருவதைக் கண்டபோது, அவர் இரக்கப்பட்டு அவனை அணைத்துக்கொள்ள ஓடினார். அந்த இளைஞனின் வீணான சீரழிவை மன்னித்து, அவனை மீண்டும் குடும்பத்தில் வரவேற்றார், “அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்” ( லூக்கா 15:24 ). நீங்கள் எப்போதும் ஒரு விளக்கை எரியவிட்டுச் செல்வீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

கடைசியாக, தந்தையர்களே, உங்களையும் உங்கள் பிள்ளையையும் ஆண்டவரின் கரங்களில் ஒப்புக்கொடுங்கள். மீட்பு என்பது இறுதியில் அவருடைய செயல் மட்டுமே, மேலும் இரட்சிப்பதற்கு அவருடைய கரம் ஒருபோதும் குறுகிப்போனதில்லை.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கென்னத் விங்கேட்

கென்னத் விங்கேட்

கென்னத் பி. விங்கேட், தென் கரோலினாவின் கொலம்பியாவில் ஒரு வழக்கறிஞராகவும், ஃபர்ஸ்ட் பிரஸ்பிடேரியன் தேவாலயத்தின் மூப்பராகவும் இருக்கிறார். அவர் 'A Father's Gift: Lessons from Proverbs' மற்றும் ' Rich Grace in Poor Soil: Growing in the Master's Grip' ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார் .