குழந்தையின் பிறப்பை தீர்மானிக்கும் உரிமை என்றால் என்ன?
22-10-2024
Since God Is Sovereign, How Are Humans Free?
தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?
29-10-2024
குழந்தையின் பிறப்பை தீர்மானிக்கும் உரிமை என்றால் என்ன?
22-10-2024
Since God Is Sovereign, How Are Humans Free?
தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?
29-10-2024

நீதிமானாக்கப்படுதலின்  அடிப்படை போதுமான தகுதி

The Instrumental Cause of Justification

குழந்தையின் பிறப்பை தீர்மானிக்கும் உரிமை என்பதின் பொருள் என்ன? ஒரு பெண் தான் தனிப்பட்ட முறையில் கருக்கலைப்பு செய்யமாட்டேன் ஆனால் மற்றொருவர் அதை செய்யும் அவரின் உரிமையை நிராகரிக்க விரும்பமாட்டேன் என்று சொல்வாரென்றால், கருக்கலைப்பு பற்றி எந்த நிலையில் இவர் இருப்பார்? ஒருவேளை இந்த பெண் முடிந்தவரை அநேக குழந்தைகளை பெற விரும்புகிறாள் அதேசமயத்தில் தேவையற்ற கர்ப்பத்தையும் விரும்புவதில்லை. ஒருவேளை இவர் கருவை உயிருள்ள மனிதன் என்று நினைப்பார் அல்லது கருவின் நிலையை அறியாமலும் இருப்பார். ஒருவேளை இவர், கருவை உயிருள்ள மனிதன் என்பதை நம்புவார், ஆனால் இதைப்பற்றி வேறொருவர் மீது திணிப்பதை விரும்பமாட்டார். இங்குதான் கருக்கலைப்பின் உரிமை நிலையின் மையத்தை நாம் அடைகிறோம். சரியான உரிமையை தேர்ந்தெடுப்பது நமது உரிமையா? தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கும் தார்மீக உரிமை நமக்கு உள்ளதா? பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் இவை.

எல்லா சட்டங்களும் ஒருவரின் விருப்பங்களை கட்டுப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது. இதுதான் சட்டங்களின் தன்மை. சட்டத்தின் மூலம் மற்ற நபர்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த விரும்பவில்லையென்றால், நாம் சட்டமியற்றுவதை நிறுத்திவிட்டு வாக்களிப்பதையும் நிறுத்த வேண்டும். பெரும்பாலான மக்கள் விரும்பும் அவர்களின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அது மெய்யான சுதந்திரம் அல்ல. எந்த மனிதனும் தனக்கான பூரணமான சட்டமாக அவனாகவே இருக்கமுடியாது. சட்டத்தினாலும் சமூகத்தினாலும் இயலாத தூய சார்பியல் அற நெறிமுறைகளை நாம் வாங்குவதற்கு தயாராக இல்லையென்றால், தனிமனிதனின் தன்னாட்சி என்ற கருத்திலிருந்து காற்றைப்போல விலகி ஓடவேண்டும். குழந்தையை பெற்றெடுக்கும் உரிமையை தீர்மானிக்கும் ஆதரவாளார்கள் தங்களின் தனிப்பட்ட சொத்து உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை எதிர்ப்பார்களா என்பதில் ஆச்சரியமடைகிறேன். ஒருவரின் வீட்டில் நுழைந்து தொலைக்காட்சியைத் திருடும் திருடனுக்கு அந்த பொருளை திருட எதாவது தேர்ந்தெடுக்கும் தார்மீக உரிமை உள்ளதா? ஒருவன் ஒரு பெண்ணை கற்பழிப்பதற்கு எதாவது தேர்ந்தெடுக்கும் உரிமை அதன்மீது அவனுக்கு உள்ளதா? இந்த உதாரணங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரமே ஒரு முழுமையான உரிமை அல்ல என்பதற்கான ஆணித்தரமான உதாரணங்கள்.

தேர்ந்தெடுக்கும் உரிமை எந்த எல்லையில் வந்து முடிவடைவேண்டும்? மற்றொரு நபர் வாழ்க்கையின் மறுக்கமுடியாத உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது எனது தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஓங்கியிருக்கம்போது அங்குதான் முடிவடைகிறது என் நம்புகிறேன். பிறக்காத எந்த குழந்தைக்கும் அதன் அழிவை தேர்ந்தெடுக்கவோ அல்லது மறுக்கவோ உரிமை இல்லை. உண்மையில், மற்றவர்கள் கூறுவதுபோல் மனிதனுக்கான மிக ஆபத்தான இடம் தாயின் கருப்பையில் தான் உள்ளது. கோடிக்கணக்கான பிறக்காத குழந்தைகளுக்கு தாயின் கருப்பைதான் மரணத்தின் சிறைச்சாலையாக உள்ளது. இந்த கருப்பையில் உள்ள கைதிகள் எந்த வித விசாரணையும் கடைசி ஆசையும் இல்லாமல் கொல்லப்படுகிறார்கள். இந்த கைதிகள் தங்களது சரீரத்தின் ஒவ்வொரு அங்கமாக உயிரோடு வெட்டப்படுகிறார்கள். இந்த விளக்கங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளதா? இது நமது உணர்ச்சிகளை தூண்டி கோபப்படுத்துகிறதா? இல்லை. இவைகள் பொய்யானதாக இருந்தால் மட்டுமே நம்மை துக்கப்படுத்தும்.

தேர்ந்தெடுக்கும் உரிமை அது எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் ஒரு மனித வாழ்வை அழிக்கும் உரிமையை அது தன்னில் கொண்டிருக்காது. இது ஒரு குழந்தையின் வாழ்வை சிதைப்பதை போல நீதியையும் சிதைப்பதாகும்.

தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விலைமதிப்புமிக்கதாய் இருக்க காரணம் என்ன? “எனக்கு சுதந்திரத்தை தாருங்கள் அல்லது மரணத்தைத் தாருங்கள்” என்று பேட்ரிக் ஹென்றியை சொல்ல எது தூண்டியது? நிச்சயமாக நாம் சில சுய தீர்மானங்களை விரும்புகிறோம். வெளிப்புற வற்புறுத்தல்களின் கீழ் வாழ்வது வெறுக்கத்தக்கது. நாம் சிந்திக்கும் ஆற்றலுடைய படைப்புகள், தெரிவு செய்யும் நமது சுதந்திரங்களை நாம் மதிக்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்படுவதை வெறுக்கிறோம், ஆனாலும் கொடுமையான ஓர் சிறையில் கூட அங்கிருக்கும் கைதியின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்படுவதில்லை.

தேர்ந்தெடுக்கும் இந்த சுய உரிமையின் கொள்கைதான் ஒவ்வொரு கருக்கலைப்பு செய்யப்பட்ட பிறவாத குழைந்தகளுக்கும் மறுக்கப்படுகிறது. என்னை கருக்கலைப்பு செய்வதா அல்லது பெற்றெடுக்க வேண்டுமா என்ற எனது தாயின் முடிவில் எனது பங்கு ஏதும் இல்லை. என் முழு வாழ்க்கையும் எனது தாயின் கையிலேயே உள்ளது. ஒருவேளை அவர் என்னை கருக்கலைப்பு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் நான் பிறப்பதற்கு முன்னரே என் வாழ்க்கை அழிக்கப்பட்டிருக்கும். நீங்களும் நானும் உண்மையான மனிதர்கள். ஒருகாலத்தில் நமது விலையேறப்பெற்ற உரிமைகளை பயன்படுத்த நாம் பெலனற்றவராகளாயிருந்தோம். ஒருகாலத்தில் நமது உயிர் காப்பற்றப்படுவதற்கு பிறரின் விருப்பங்களை சார்ந்திருந்தோம்.

கருவில் உள்ள குழந்தையை பெற்றெடுப்பதா அல்லது வேண்டாமா என்ற உரிமைகளைப் பற்றிய இரண்டாவது கேள்வி, குழந்தையின் வாழ்வைப் பற்றி எப்பொழுது முடிவு செய்வது என்பதுதான். ( காரணம் இது பாலிய ஒழுக்கத்தை உள்ளடக்கியிருப்பதால், பிரபலமற்ற விவாதமாக உள்ளது). குழந்தையை பெற்றெடுக்கலாமா அல்லது களைத்துவிடலாமா என தெரிந்தெடுக்கும் நேரம் குழந்தை உருவான பிறகோ அல்லது அது வளர ஆரம்பித்த பிறகோ அல்ல. கற்பழிப்பு நிகழ்வுகளை தவிர கருத்தடை சாதனங்களோடோ அல்லது அவைகள் இல்லாமலேயோ உடலுறவு கொள்வது என்பது இன்னும் தேர்ந்தெடுக்கும் உரிமையாகவே உள்ளது. நாம் செய்யும் தேர்ந்தெடுப்புகள் அது உடலுறவு சம்பந்தப்பட்டதோ அல்லது எதுவாக இருப்பினும் அவைகள் எப்போதும் விளைவுகளை ஏற்படுத்தும். நமது தெரிவுகளுக்கு நாமே பொறுப்பு என்பதுதான் நெறிமுறை சட்டத்தின் கோட்பாடாகும்.

நாம் உடலுறவு கொள்கையில், ஒருவேளை இன்னொரு ஜீவனை உருவாக்குவதற்கான நோக்கமோ விருப்பமோ நமக்கு இல்லாமல் இருக்கலாம். எவ்வாறாயினும், உடலுறவே சந்ததியின் பெருக்கத்தை துவங்கி, பிள்ளைகள் உருவாகச் செய்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே குழந்தைகளை பெற்றெடுக்கவோ அல்லது அழிக்கவோ மனிதனுக்கு உரிமை உண்டு என்ற இந்த முடிவை கையாள்வதற்கான பொறுப்பான தார்மீக ஒழுங்கு சந்ததிகளை அழிப்பது அல்ல.

இந்த செய்தி ஆர். சி. ஸ்ப்ரௌல் அவர்களின் Abortion என்ற புத்தகத்திலிருந்து எடுத்ததாகும்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.