Reading-Hebrew-Poetry

பழைய ஏற்பாட்டில் கவிதைநடை புத்தகங்களை எவ்வாறு படிப்பது?

12-06-2025
How-to-Read-the-Prophets

தீர்க்கதரிசன புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது?

19-06-2025
Reading-Hebrew-Poetry

பழைய ஏற்பாட்டில் கவிதைநடை புத்தகங்களை எவ்வாறு படிப்பது?

12-06-2025
How-to-Read-the-Prophets

தீர்க்கதரிசன புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது?

19-06-2025

ஞான புத்தகங்களை வாசிப்பது எப்படி?

How-to-Read-Wisdom-Literature

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி. 9:10; யோபு 28:28; சங். 111:10; நீதி. 1:7 ஆகிய வேத பகுதிகளையும் பார்க்கவும்). காலங்காலமாகப் பல நுட்பமான கிறிஸ்தவரல்லாத தத்துவ ஞானிகள்  இருந்தபோதிலும், அனைத்து உண்மையான ஞானமும் இறுதியில் “மேலிருந்து” – அதாவது, திரித்துவ தேவனிடத்திலிருந்தே வருகிறது (எபே. 1:17; கொலோ. 2:3; யாக்கோபு 3:15, 17). ஒரே மெய்யான தேவனுக்கு பயந்து, அவரை தொழுது கொள்பவர்கள்  மட்டுமே உண்மையான ஞானத்தினுடைய பூரணத் தன்மையை கண்டடைய முடியும்.

ஆனால் இன்னும் கூடுதலாக சொல்ல  வேண்டியுள்ளது, ஏனெனில் எல்லா கிறிஸ்தவ விசுவாசிகளும் தங்கள் வாழ்க்கையில் ஞானத்தை வெளிப்படுத்துவதில்லை. உண்மையில், கிறிஸ்தவ விசுவாசிகள் பெரும்பாலும் முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் செயல்பட்டு, தங்களுக்கும் தேவனுடைய நாமத்துக்கும் அவ கீர்த்தியையே கொண்டு வருகிறார்கள் (எ.கா., எசே. 36:20; ரோமர் 2:24; 1 கொரி. 6:5; 1 கொரி. 15:34). ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால் அவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் என்று வேதாகமம் கூறுகிறது (யாக்கோபு 1:5). குறிப்பாக, நீதிமொழிகள், யோபு மற்றும் பிரசங்கி போன்ற பல்வேறு ஞானப் புத்தகங்களை பரிசுத்த ஆவியானவர் இந்த நோக்கத்திற்காகவே ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு கிறிஸ்தவன் ஞான புத்தகங்களை எப்படிப் பிரயோஜனமான விதத்தில்  வாசிக்க வேண்டும்?

    1. முதலில் நம்முடைய பார்வையில் நாம் ஞானவானாவது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

    முதலில், ஞான புத்தகங்களை வாசிக்கும் பாவியான மனிதர்கள்  “ஞானவானாக மாறுவது எளிது”என்று அவர்களுடைய பார்வையில் எண்ணுகிறதை பற்றி சற்று யோசிக்க வேண்டும். நீதிமொழிகள் புத்தகம் இந்த முக்கியமான பிரச்சினையைப் பற்றி அடிக்கடி பேசுகிறது (நீதி. 3:7; 12:15; 26:5; 28:11; ஏசா. 5:21). உண்மையில், “தன்னுடைய பார்வையில் தான் ஞானவான்” என்று எண்ணுகிற ஒருவன், ஒரு வேதாகம ரீதியிலான “மூடனை” விட மோசமான நிலையில் இருக்கிறான் (நீதி. 26:12). இந்த ஆத்தும நோயின் அறிகுறிகள் யாதெனில், தேவபக்தியுள்ள ஒருவரின் ஆலோசனையைக் கேட்க மறுப்பது (நீதி. 26:16) – குறிப்பாக பெற்றோர்களின் ஆலோசனையை நிராகரிப்பது (நீதி. 1:8; 4:1; 23:22; 30:17) – மற்றும் ஒவ்வொரு சம்பவங்களிலும் தன்னை உயர்த்தும்படியாய் நியாயப்படுத்துவது (பிரசங்கி 7:15–16) ஆகியவை அடங்கும். ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்த விசுவாசிகளுடன் உரையாடும்போது, அவர்களை விட இரட்டிப்பான மடங்கு தன்னை உயர்த்தி காண்பிக்கும்படியாய் செய்கிற சவாலான சூழ்நிலைகளை குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாறாக, கிறிஸ்தவர்கள் எப்போதும் கற்றுக்கொள்ளக்கூடிய மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

      2. ஞானத்தினுடைய பொதுவான வழிமுறைகளை உற்று நோக்குங்கள்.

      இரண்டாவதாக, உலகம் பொதுவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான பொதுவான வழித்தடங்களை கற்றுக்கொள்ள ஞான புத்தகங்களை ஒருவர் வாசிக்க வேண்டும், அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும். பொதுவாகச் சொல்லப்போனால், “கர்த்தருக்குப் பயந்து” நடப்பவர்களும், தேவனுடைய யோசனையை பின்பற்றி வாழ விரும்புகிறவர்களும் “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போல” (சங். 1:3)  செழித்தோங்குவார்கள். “வழக்கமான ஞானம்” என்ற சொல் சில சமயங்களில் அவமானமாக கருதப்படுகிறது.

       ஆனால் உண்மையில், வேதாகமம் அத்தகைய ஞானத்தின் ஒரு பெரிய களஞ்சியத்தைக் தேவனுடைய ஜனங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்க்கும்படியாகவே எழுதப்பட்டிருக்கிறது. இந்த உலகின் ஒவ்வொரு நிகழ்வுகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான பொதுவான விதிமுறைகள் தங்களுக்கு அல்ல என்று பெருமைப்பட்டுக்கொண்டு அதை புறக்கணிப்பதை விட, அத்தகைய வழக்கமான ஞானத்தைக் கூர்ந்து கவனிப்பது வாசிப்பவர்களுக்கு தகுதியாயிருக்கும்.  உதாரணமாக, திருச்சபையில் பொதுவாக கூடி வரும் ஆராதனையை நிராகரித்து ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடியும் என்று நினைக்கும் கிறிஸ்தவர்கள்,  வேதாகமம் வலியுறுத்தக்கூடிய சத்தியங்களை இழப்பது மட்டுமல்ல, கிறிஸ்துவின் நாமத்தில் சபையாக கூடி வரும் போது , எண்ணற்ற ஆசீர்வாதத்தை அனுபவித்த எண்ணற்ற விசுவாசிகளின் ஞானத்தின் மூலமாக கற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களையும் இழந்து போகிறார்கள்(மத்தேயு 18:20).

        3. “ஞான வழிமுறைகளுக்கான” விதிவிலக்குகளைக் கவனியுங்கள்.

        மூன்றாவதாக, ஒருவர் ஞான புத்தகங்களை வாசிக்கும் போது , அந்த “ஞான வழிமுறைகளுக்கான” குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளையும் கவனிக்க வேண்டும்.  இது பகுத்தறிவிற்கான அவசியத்தையும் தொடர்ந்து தேவனை சார்ந்து இருக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. யோபின் அனுபவமும், பிரசங்கி புத்தகத்தில் அடிக்கடி  சொல்லப்படும் சத்தியங்களும், பொதுவான வழக்காமான ஞான வழிமுறைகள் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் பொருந்தி போகாது என்பதற்கு சான்றுகளாகும். இவ்வாறு, சில சமயங்களில், நீதிமான்கள் செழித்தோங்குவதற்கு  பதிலாகப் பாடுபடுகிறவர்களாய் இருக்கிறார்கள்.  துன்மார்க்கர்கள் உபத்திரவப்படுவதற்கு பதிலாக செழித்தோங்குகிறார்கள். புதிய ஏற்பாட்டிலிருந்து  சில உதாரணத்தைக் குறிப்பிடலாம். சில கடுமையான சூழ்நிலைகளில் விசுவாசிகள் திருமணம் செய்யாமலிருப்பது நல்லது  (1 கொரி. 7:25-26) என்று வேதாகமம் சொல்லுகிறதை பார்க்கலாம். இருப்பினும் பொதுவாக, பெரும்பாலான விசுவாசிகள் “ஏற்றத் துணையை” தேர்ந்தெடுத்து,  குடும்பத்தை நடத்தவும், பூமியை ஞானமாய் ஆட்சி செய்யவும் வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறது (ஆதி. 1:26-30; ஆதி. 2:18-25). பொதுவான ஞான வழிமுறைகளுக்கு விதிவிலக்குகள் உண்டு என்பதை கருத்தில்கொள்வதன் மூலம், விசுவாசி ஒவ்வொரு காரியத்தையும் அதனுடைய சூழ்நிலையின் அடிப்படையில், ஜெபத்துடன், தேவனுடைய ஞானத்தையும், பகுத்தறிவையும் பெற்று,  எவ்வாறு அவருடைய மகிமைக்காக, சிறப்பாகச் செயல்பட கூடும் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

          4. எவ்வாறு பகுத்தறிவையும், கர்த்தரைச் சார்ந்திருப்பதையும் பயிற்சி செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

          நான்காவதாக, ஒருவர் ஞான புத்தங்களை வாசித்து, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எது “சிறந்தது” அல்லது “மிகச் சிறந்தது” என்பதை எவ்வாறு பகுத்தறிவுடன் தேர்ந்தெடுப்பது  என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் அப்படியல்லாமல் இது மட்டுமே “சரியானது” அல்லது “தவறானது” என்று செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. வேதாகமம் உண்மையில் எது சரி அல்லது எது தவறு, என்றும் எது கட்டளையிடப்பட்டது அல்லது தடைசெய்யப்பட்டது என்பதையும் குறித்த பல முழுமையான வழிமுறைகளை வழங்குகிறது. ஆனாலும் வாழ்க்கையில் பல முடிவுகள் எது சரி அல்லது தவறு, என்பதை அறிந்து கொள்வதையும்  தாண்டிச் செல்கின்றன. உதாரணமாக, “கர்த்தருக்குள்” திருமணம் செய்ய வேண்டும் என்ற வேதவசனத்தின் முக்கியதுவத்தை (1 கொரி. 7:39; 2 கொரி. 6:14 ஒப்பிடுக) அறிந்த  விசுவாசிக்கு, ஒரு வாழ்க்கை துணையைத் தேர்வு செய்ய இன்னும் பல சாத்தியமான விருப்பங்களும் உள்ளன. ஒரு கிறிஸ்தவன் தனக்கு எந்தப் பொருத்தமான வாழ்க்கைத் துணை சிறந்தது  என்பதை அறிந்து கொள்ள ஞானமும், பகுத்தறிவும் அவனுக்கு தேவையாயிருக்கிறது. அதுபோல வாழ்க்கையின் மற்ற பல முடிவுகளிலும் (கல்வி, வேலை, தங்கும் இடம் போன்றவை) இதுவே சரி அல்லது தவறு என்று சிந்திப்பதையும் கடந்து மற்றும் பல மாற்று நல்ல வழிமுறைகளும் உள்ளன. ஆனால் பல்வேறு “நல்ல, சிறந்த மற்றும் மிகச் சிறந்த” என்று வகைப்படுத்தக்கூடிய பல வாய்ப்புகளும் உள்ளன. தேவன் விசுவாசிகளுக்கு, வேதத்தில், பெரிய ஞான போதனைகளை கொடுத்தது மட்டுமல்ல அதை தாழ்மையுடன் கேட்பவர்களுக்கு அத்தகைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை கொடுப்பதாகவும் வாக்குப் பண்ணியிருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய்  இருக்கக்கடவோம் (லூக்கா 11:13).

          இந்தக் கட்டுரை  Hermeneutics (வேதாகம விளக்கக் கலை) தொகுப்பின் ஒரு பகுதி.

          இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

          மேக்ஸ் ரோக்லேண்ட்

          மேக்ஸ் ரோக்லேண்ட்

          டாக்டர் மேக்ஸ் F. ரோக்லேண்ட், அவர்கள் ரோஸ் ஹில் பிரஸ்பைடிரியன் திருச்சபையின் மூத்த ஊழியராகவும், கொலம்பியா, எஸ்.சி.யில் உள்ள எர்ஸ்கைன் இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டின் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.