Since God Is Sovereign, How Are Humans Free?
தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?
29-10-2024
Blessed Are the Pure in Heart, for They Shall See God
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
04-11-2024
Since God Is Sovereign, How Are Humans Free?
தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?
29-10-2024
Blessed Are the Pure in Heart, for They Shall See God
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
04-11-2024

கிறிஸ்து ஒரு தன்மையை உடையவரா அல்லது இரண்டு தன்மையை கொண்டவரா?

கி.பி. 451 ஆம் வருடத்தில் திருச்சபையால் மிகப்பெரிய ‘கல்தேயன் என்ற சிறப்புமிக்க ஆலோசனை கூட்டமானது’ (the great council of Chalcedon) கூட்டப்பட்டது. வரலாற்றில் எல்லா கிறிஸ்தவ சபைகளையும் ஒருங்கிணைந்து கூட்டப்பட்ட இந்த கூட்டமானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தினுடைய பலதரப்பட்ட விசுவாச கொள்கைகளை குறித்து விவாதம் செய்வதற்காக இந்த கூட்டமானது ஏற்படுத்தப்பட்டது.அதில் ‘ஒரே தன்மை'(monophysite) என்ற காரியத்தை குறித்து விவாதிக்கப்பட்டதே அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ‘monophysite’ என்ற வார்த்தையானது இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது. அதனுடைய முன்பகுதி ‘mono’ என்ற வார்த்தைக்கு ஒன்று என்று அர்த்தமாகும். இதனுடைய கடைசி பகுதியான ‘phusis’ என்பதற்கு ‘தன்மை’ என்றும் அர்த்தமாகும். ‘Monophusis’ அல்லது ‘monophysite’ என்ற வார்த்தைக்கு ‘ஒரே தன்மை'(one nature) என்று அர்த்தமாகும்.

இந்த ‘monophysite’, கிறிஸ்து தெய்வீகத்தன்மை மற்றும் மானுடத் தன்மை என்று இரண்டு தன்மைகளை கொண்டவராக இராமல் ஒரே ஒரு தன்மையை கொண்டவராகவே இருக்கிறார் என்று பறைசாற்றுகிறது. அந்த கிறிஸ்துவின் ஒரு தன்மையானது முழுமையான தெய்வீகத்தையோ அல்லது முழுமையான மானுட தன்மையையோ குறிக்கவில்லை என்றும் அறிவுறுத்துகிறது. இதை ஒவ்வொருவரும், தெய்வீகம் கலந்த மானுட தன்மையாகவோ அல்லது மானுடம் கலந்த தெய்வீக தன்மையாகவோ எண்ணி பல்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள். இதைப் பற்றிய வாதமானது இரண்டு காரணங்களால் நமக்கு ஆபத்தாகிவிட கூடும். ஒரு பக்கம் கிறிஸ்துவினுடைய முழுமையான தெய்வீகத்தை அது மறுதலிக்கிறதாயிருக்கிறது மற்றொரு பக்கம் கிறிஸ்துவினுடைய முழுமையான மானுட தன்மையையும் நிராகரிப்பதைப் போல் இருக்கிறது. இதற்கு எதிராக, ‘கல்தேயன் ஆலோசனை கூட்டமானது’ (the council of chalcedon), கிறிஸ்துவானவர் ‘vere home’, ‘vere duos’ அதாவது ‘முழு மனிதன்’ மற்றும் ‘முழு கடவுள்’ என்ற இரண்டு தன்மைகளையும் ஒரே நபராக தனக்குள்ளே கொண்டிருந்தார் என்று முழங்கியது.

கிறிஸ்துவின் மானுடத் தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையாகிய இவ்விரண்டுக்குமான ஒற்றுமையை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?. வேதாகமம் திரித்துவத்தினுடைய இரண்டாம் நபரான கிறிஸ்து, அவர் மனிதனாக இந்த பூமியில் பிறக்கும்பொழுது 100% மனிதானார் என்பதை தெளிவாக விளக்குகிறது. அவர் மாம்சத்தில் வெளிப்பட்டு, மனிதனானார் என்று சொல்லும்போது அவர் அந்த மானுட தன்மையை தெய்வீகமாக்கவில்லை என்றும் கூறுகிறது. அந்த மானுட தன்மையானது மானுடமாகவே இருக்கிறது.

‘கல்தேயன் ஆலோசனை கூட்டமானது’, கிறிஸ்துவினுடைய மானுடப் பிறப்பில் இருக்கும் ரகசியத்தை தெளிவுபடுத்தும் வண்ணமாய், அவர் இரண்டு தன்மைகளை உடையவர் என்றும் அவருக்குள் இருக்கும் அந்த இரண்டு தன்மைகளும் 100% பரிபூரணமாக அமைந்திருக்கிறது. அவற்றைக் குறித்து நாம் குழப்பமடையவோ அல்லது அவைகளை ஒன்றிணைக்கவோ அல்லது வேறுபடுத்தி பிரித்துப் பார்க்கவோ வேண்டியதில்லை என்றும் அறிவுறுத்துகிறது. ‘monophysites’ அமைப்பினர் கூறுவது போல இரண்டையும் ஒன்றாக இணைத்து, மாம்சீகத்தை தெய்வீகமாக்கவோ அல்லது தெய்வீகத்தை மானுடமாக்கவோ வேண்டியதில்லை. அதே சமயத்தில் அந்த இரண்டு தன்மைகளையும் பிரித்து பார்க்கவும் கூடாது. அவருடைய மானுட தன்மையும் தெய்வீகத் தன்மையும் எப்பொழுதும் எங்கேயும் இணைந்தே இருக்கிறது.

‘கல்தேயன் ஆலோசனையின்’ நான்கு எதிர்மறையான காரியங்கள் பின்வருமாறு; கிறிஸ்துவினுடைய ஒவ்வொரு தன்மையும் அதற்கான குணாதிசயத்தோடு அமைந்திருக்கிறது. அவர் தன்னுடைய தெய்வீகத்தை, தன்னுடைய மானுட பிறப்புக்கு உள்ளாக அடக்கி வைக்கவில்லை. அவருடைய தெய்வீக தன்மையான நித்தியமானவர், முடிவற்றவர், எல்லாம் அறிந்தவர், எங்கும் இருப்பவர், எல்லாவற்றையும் செய்ய வல்லமையுள்ளவர் போன்றவை அவருக்குள்ளாகவே அமைந்திருக்கிறது. இவைகள் அவர் தெய்வீக குணாதிசயங்களை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து மானுடத் தன்மையை எடுக்கும் பொழுது தன்னுடைய தெய்வீக தன்மையை அவர் விட்டுவிடவில்லை. அவருடைய மானுட தன்மையும் அதற்கு ஏற்ற குணாதிசயமான முடிவுள்ள, குறிப்பிட்ட இடத்திற்கு உட்பட்ட, எல்லைக்குட்பட்ட, குறைவுபட்ட, வல்லமையில் குறைவுபட்ட ஆகியவற்றோடு கூட அமைந்திருக்கிறது. கிறிஸ்துவினுடைய மானுட பிறப்பில், அவருடைய மானுடத்திற்கான எல்லா குணாதிசயங்களும் அவருக்குள்ளாகவே முழுமையாக அமைந்திருக்கிறது.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.