
பரிசுத்தமாகுதலை பற்றி அறிந்துக் கொள்ளவேண்டிய ஐந்து காரியங்கள்
11-02-2025
பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
18-02-2025தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.
இஸ்ரவேலின் ராஜாவான தாவீது, கோலியாத்துக்கு முன்பு காட்டிய வியக்கத்தக்க விசுவாசம் முதல், பத்சேபாளுக்கும் அவளுடைய கணவனுக்கும் எதிராக செய்த பயங்கரமான பாவங்கள், இதயப்பூர்வமான துதி மற்றும் மனந்திரும்புதலின் சங்கீதங்கள் வரை பல விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர். ஆனாலும் தாவீதைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
1. தாவீது ஒரு புறஜாதியிலிருந்து வந்தவர்.
தாவீது யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஈசாயின் மகன், ஆனால் அவரது வம்சாவளி முழுமயான யூதா சந்ததி அல்ல. இயேசுவைப் போலவே, அவருக்கும் அவரது குடும்ப வரலாற்றில் குறிப்பிடத்தக்க பாவிகள் இருந்தனர், மேலும் ஒரு புறஜாதியினரும் கூட இருந்தனர் (ஆதி. 38; ரூத் 4:17). அந்த புறஜாதிக்காரர் அவரது கொள்ளுப்பாட்டி ரூத், அந்த குறிப்பிடத்தக்க மோவாபியப் பெண், தனது யூத மாமியாராகிய நகோமியிடம் “உம்முடைடைய ஜனங்கள் என்னுடைய ஜனங்கள், உம்முடைடைய தேவன் என்னுடைய தேவன், என்று அறிவித்தார் (ரூத் 1:16). கடவுளின் பரலோக ராஜ்ஜியத்தின் மகத்துவம் “தூய்மையான யூத வம்சாவளிகளை” கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, அதேசமயம் அவர்களுடன் வெறுமனே இருப்பவர்களுக்கும் தேவனின் எந்தவித உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
2. தாவீது ஒரு எதிர்பாராத ராஜா.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் தனது உடல் தோற்றத்தால் தனித்து நின்றார் – சவுல் மிகவும் உயரமாக இருந்தார் (1 சாமு. 9:2) – ஆனால் தாவீது அதே வழியில் தனித்து நிற்கவில்லை. அவர் தனது தகப்பனாகிய ஈசாய்க்கு எட்டு மகன்களில் கடையானவர், மேலும் சாமுவேல் முதன்முதலில் சவுலின் இடத்தில் ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய ஈசாயின் வீட்டிற்கு வரும்போது, அது தாவீதின் மூத்த சகோதரர் எலியாப் தான் என்று அவர் உறுதியாக நம்பினார் (1 சாமு. 16:6). ஆனால் தேவன் உயரத்தையோ அல்லது வெளிப்புற தோற்றத்தையோ பார்க்க வேண்டாம் என்று அவரிடம் கூறினார், ஏனென்றால் அவர் உயரத்தின் அடிப்படையில் ராஜாக்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர் இதயத்தைப் பார்க்கிறார், மேலும் தாவீது மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார், ஏனெனில் அவர் “[தேவனின்] சொந்த இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக இருந்தார்.” (1 சாமு. 13:14). இருப்பினும், தேவன் ஆடுகளைப் பராமரிப்பதில் இருந்து தாவீதை அழைப்பதற்கு முன்பு, அவர் தகப்பனாகிய ஈசாய் தாவீதின் ஏழு சகோதரர்களையும் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து செல்லச் செய்தார் – தேவன் அவர்கள் எல்லோரையும் நிராகரித்து தாவீதை தெரிந்துகொண்டார். (1 சாமு. 16:10–13).
3. தாவீது ஒரு மேய்ப்பரின் இருதயத்தை கொண்டிருந்தார்.
சவுலின் படையில் ஒரு போர்வீரனாக மாறுவதற்கு முன்பு தாவீதின் தொழில் அவரது தந்தையின் ஆடுகளைப் பராமரிப்பதாகும். குறிப்பிடத்தக்க வகையில், அவர் தனது மந்தையைப் பாதுகாக்க சிங்கங்களையும் கரடிகளையும் கொன்றார், தூரத்திலிருந்து ஒரு கவணால் மட்டுமல்ல, சில சமயங்களில் அவற்றை “தாடியைப் பிடித்து” அடித்தும் பற்களை உடைத்தும் கொன்றார் (1 சாமு. 17:35). அவர் தனது மந்தையின் தேவைகளை உண்மையாக அறிந்ததாகவும், தனது ஆடுகளைப் பராமரிப்பதாகவும் வாழ்ந்தது, அவர் இஸ்ரவேல் மக்களை ஆளுகையுடன் பாதுக்காக சென்றபோதும் அது உண்மையாகவே இருந்தது (சங். 78:70–72). தாவீதின் மேய்க்கும் இதயமும் அனுபவமும், கடவுள் தம் ஆடுகளைப் பரிபூரணமாகப் பராமரிப்பதை அவருக்கு ஒரு சித்திரமாகக் காட்டியது, இதை தாவீது சங்கீதம் 23 இல் நெகிழ்ச்சியுடன் கவிதையாக பாடுகிறார். நாத்தான் தீர்க்கதரிசி, தாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தைப் பற்றி அவரை எதிர்கொண்டு எச்சரிக்கும்போது, ஒரு ஏழை மனிதன் மற்றும் அவனது சிறிய பெண்ஆட்டுக்குட்டியைப் பற்றிய ஒரு கதையைச் சொல்வதின் மூலம் அதை அவர் தாவீதின் இதயத்திற்குக் ஆழமான பாதிப்பாக கொண்டுவருகிறார் (2 சாமு. 12).
4. தாவீது சாலொமோனின் தேவாலயத்தைக் கட்ட முயன்றார்.
தாவீது இறுதியாக சவுலுக்கு போர்கள் முடிந்து எருசலேமில் ராஜாவாக குடியேறியவுடன், அவர் தான் கேதுருமர வீட்டில் சுகமாய் வசித்து வருகிறேன், ஆனால் கடவுளின் உடன்படிக்கைபெட்டி ஒரு எளிமையான கூடாரத்தில் மட்டுமே இருக்கிறதே என்பதை உணர்ந்து வருந்தினார். எனவே அவர் கடவுளுக்கு ஒரு வீட்டைக்கட்டத் தொடங்க சித்தம் கொண்டார், ஆனால் கடவுள் அவரைத் தடுத்தார். அதற்கு பதிலாக, கடவுள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதாகச் வாக்குகொடுத்தார். நிச்சயமாக வெளிப்புறமான வேறொரு ஆடம்பர வீடல்ல, மாறாக என்றென்றும் ஆட்சி செய்யும் ஒரு வல்லமையுள்ள ராஜரீக வம்சம் என்றார் (2 சாமு. 7:1–17). இவ்வாறு, தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுவது என்பது தாவீதின் மகன் சாலொமோனிடம் வந்தது. தாவீது ஒரு போர்வீரனாகவும், அதிக இரத்தத்தைச் சிந்தியவனாகவும் இருந்ததால், கடவுள் ஆலயத்தைக் கட்டுவதிலிருந்து தாவீதை தடுத்தார் என்பதை நாம் பின்னர் அறிகிறோம் (1 நாளா. 28:2–3). இருப்பினும், சாலொமோன் தேவாலயத்து வேலைகளைச்செய்ய தேவையான கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தாவீது தயார் செய்தார் (1 நாளா. 22:5).
5. தாவீது ஒரு பெரிய சிறப்பான குமாரனுக்காகக் காத்திருந்தார்.
ஒரு நித்திய வீட்டைப் பற்றிய கடவுளின் வாக்குறுதியை தாவீது மிகுந்த மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தேவனிடத்தில் பெற்றார் (2 சாமு. 7:18–29). தாவீது தனது சந்ததியினரில் ஒருவர் தனது ஆண்டவராகவும் இருப்பார் என்பதை புரிந்துகொண்டார், இதை அவர் சங்கீதம் 110 இல் வெளிப்படுத்துகிறார்: “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கும் வரைக்கும் நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.” மாம்சத்தின்படி தனது வருங்காலக் குமாரர்களில் ஒருவர் தனது “ஆண்டவராகவும்” (அவருடைய தேவனாகிய கர்த்தரைப் போன்று) இருப்பார், எனவே எந்தவொரு இயற்கையான மனுஷீக சந்ததியினரையும் விடவும் அவர் சிறப்பாக உயர்ந்தவர் என்பதை தாவீது புரிந்துகொண்டதற்கான சான்றாக இயேசு இந்த சங்கீதத்தை புதிய ஏற்பாட்டில் (மாற்கு 12:35–37) மேற்கோள் காட்டுகிறதை நாம் பார்க்கலாம்.
இந்தக் கட்டுரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 காரியங்கள் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


