கிறிஸ்தவர்களின் பொதுவான போராட்டங்கள்
10-03-2026மெய்யாகவே தேவன் அக்கறைக் கொள்கிறாரா?
விரக்தியின் ஆழத்திலோ அல்லது பதட்டத்தின் உச்சத்திலோ, விசுவாசிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த இதயங்களில் கடவுள் உண்மையிலேயே தங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறாரா என்று யோசிப்பார்கள். ஒருவேளை அது நீங்கள் என்றால், உங்களுக்கான நற்செய்தி உள்ளது.
ஒரு பொதுவான கேள்வி
முதலாவது நீங்கள் மட்டும் இந்த கேள்வியை கேட்கவில்லை. அநேக நாட்களாக விசுவாசிகள் இந்த கேள்வியை கேட்டிருக்கின்றனர். தேவனுடைய மக்கள் மிதிக்கப்படுவதையும், நெருக்கப்படுவதையும் பார்த்த ஆபகூக் இவ்வாறு ஜெபிக்கிறார்,
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! (ஆபகூக் 1:2, 1:3,13).
பெரும்பாலும் சங்கீதக்காரர்கள் அவர்களின் இடுக்கண்களுக்கு பதில் கிடைக்காதது போல தோன்றும்போது, தேவனின் பராமரிப்பை கேள்வி கேட்டு தேவன் எழுந்திருக்கும்படி அவரிடம் கெஞ்சினார்கள் (சங் 35:23; 44:23). தேவன் ஒருபோதும் உறங்குவதிவ்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் கூட, அவர்களது துன்பங்களில் நடுவில் அவரது அமைதிக்காக்கும் ஞானம், மெய்யாகவே தேவன் அக்கறைக் கொள்கிறாரா என்று அவர்களை சந்தேகப்படச்செய்தது.
இவ்விதமான போராட்டம் பழைய ஏற்பாட்டில் மட்டும் அல்ல, விரக்தியின் நடுவில் சீஷர்கள் இயேசுவைப் பார்த்து, “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்கு கவலையில்லையா?” என்று கேட்டனர் (மாற்கு 10:40). நேரங்களையும் சூழ்நிலைகளையும் தாண்டி, தேவன் நமது பாடுகளில் தலையிட்டு நாம் நினைப்பதைப்போல் அதை நீக்கவில்லையென்றால் அங்கு அவரது பராமரிப்பைக் குறித்த கேள்விகள் விசுவாசிகளிடம் எழும்புகின்றன.
அற்புதமான பதில்
இரண்டாவது, தேவன் உங்கள் மீது அக்கறைக் கொள்கிறாரா என்று ஆச்சரியப்பட அவர் உங்களை விட்டு விடுவதில்லை. உங்கள் மீதான பராமரிப்பை நீங்கள் ஆழமாக புரிந்துக் கொள்ளும் வண்ணமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்: தமது நேச குமாரனை நமக்காக அனுப்பினார். யோவான் சுவிசேஷத்தில் மிகத்தெளிவாக இதைக்கூறுகிறார். “தேவன் தமது ஒரேபேறான குமாரனை தந்தருளி உலகத்தில் உன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). இதன் அர்த்தம், இந்த பாவத்தில் நோய்ப் பட்ட இந்த உலகத்தில் காணப்படும் விரக்தி, வலி, வேதனை ஆகியவற்றை இயேசு அறிந்திருக்கிறார் மற்றும் உங்கள் மீது அவர் இரக்கம் கொள்ள போதுமானவர் என்பதை காண்பிக்கிறது (எபி 4:15).
வரலாறு முழுவதுமாக விசுவாசிகள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இன்னும் அதிகமாக, தேவனுடைய அக்கறை பரிசுத்த ஆவியானவரின் செய்ல்பாட்டின் மூலமாக இப்போதும் வெளிப்படுகிறது. ஆவியானவரை இயேசு வாக்களிக்கும்போது, நம்மை விட்டு நீங்காத “மற்றொரு தேற்றரவாளன்” என்று கூறுகிறார் (யோவான் 14:16). சோர்ந்து போன வழிவிலகி போன மனித நண்பர்களை போல் அல்லாமல், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுடனே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் ஒருபோதும் ஓய்வெடுக்கவோ, ஒருபோதும் விலகிச் செல்லவோ, உங்களை ஒருபோதும் கைவிடவோ மாட்டார். இது கடவுள் உங்களுக்கு அளித்த அடிப்படை உடன்படிக்கையின் நிறைவேற்றமாகும்: “நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதில்லை” ( உபாகமம் 31:8 ; எபிரெயர் 13:5 ). நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், கைவிடப்பட்டிருக்கிறீர்கள், கடவுளின் கவனிப்பின் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்று உங்கள் உணர்ச்சிகள் உங்களுக்குச் சொல்லும்போது, இதுவே உண்மையாகும்.
பாடுகள் தேவனின் பராமரிப்புக்கு நேராக நடத்துகிறது
இறுதியாக, கடவுளின் பராமரிப்பு என்பது துன்பத்தையும் விரக்தியையும் தவிர்ப்பது என்று அர்த்தமல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். மாறாக, அவருடைய பராமரிப்பு என்பது நீங்கள் அதைத் தாங்கிக் கொள்வீர்கள், அதன் வழியாகவும் வளருவீர்கள் என்பதாகும். இது உள்ளுணர்விற்கு முரணாகத் தோன்றலாம். ஆனாலும், துன்பம் நம்மை அழிப்பதற்குப் பதிலாக, உறுதியையும், குணத்தையும், நம்பிக்கையையும் உருவாக்குகிறது என்று கடவுள் நமக்குச் சொல்கிறார் ( ரோமர் 5:3–5).
சில துன்பங்கள் நம் பிதாவிடமிருந்து அன்பான சிட்சையாக வருகின்றன, இது நமது நன்மைக்காகவே நோக்கமாகக் கொண்டது ( எபி. 12:7–11 ), அதாவது நமது துன்பம் அது சிட்சையாக இருந்தாலும் கூட கடவுள் நம்மை கைவிடப்பட்டதற்கான அறிகுறி அல்ல, மாறாக அவரது அக்கறையின் அறிகுறியாகும்.
மற்ற துன்பங்கள் கிறிஸ்துவின் ஜீவனோடு பங்கு கொள்ள நமக்கு உதவுகின்றன. பவுல் தைரியமாக நாம் “கிறிஸ்துவுடன் மகிமைப்படும்படிக்கு அவரோடு பாடுபட்டால், கிறிஸ்துவோடு சேர்ந்து ஆளுவோம்” என்று அறிவிக்கிறார் ( ரோமர் 8:17 ). கிறிஸ்துவும் கூட துன்பத்தின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் ( எபி. 5:8 ). நாம் அவரைப் போல ஆக வேண்டுமென்றால், அதே கரங்களால் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சுமையாக இருப்பதற்குப் பதிலாக, இது ஒரு பரிசு, நமது இரட்சகரின் அனுபவங்களில் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் இந்த சிட்சை.
முடிவுரை
கடவுள் உங்கள் வாழ்வில் அக்கறை காட்டுகிறாரா என்று நீங்கள் சந்தேகிக்கத் தூண்டப்படும்போது, சிலுவையை நோக்கிப் பாருங்கள். அங்கு, கடவுளின் அன்பு முழுமையாகக் காட்டப்படுகிறது. இவ்வளவு அதிக விலை கொடுத்த பிறகும் அவர் தனது மக்களைக் கைவிட மாட்டார், உண்மையில் கைவிடமாட்டார் . முதலில் அவர் தனது மக்களைப் பற்றி, உங்களைப் பற்றி மிகவும் அக்கறை கொள்ளாவிட்டால், அவர் இவ்வளவு அதிக விலை கொடுக்க மாட்டார் . உங்கள் துன்பம் கடவுள் தனது தயவைத் திரும்பப் பெற்றதற்கான அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, அது உங்களில் அவர் தொடர்ந்து செய்யும் செயலின் சான்றாக இருக்கிறது.
தைரியமாக இருங்கள். சந்தேகங்கள் வந்து உங்கள் விசுவாசம் பலவீனமாக உள்ளது என்று உணரும்போது தேவன் உங்களை கைவிட மாட்டார். ஒரு நாள் இந்த சோதனையை நீங்கள் சகித்து அமைதியான இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் சிலுவையைப் பற்றி கொண்டதினால் அல்ல, மாறாக அவருடைய ஆணிகளால் காயப்பட்ட கரங்களின் வல்லமை உங்களைத் தாங்கி உங்களை பாதுகாத்து பலப்படுத்தி ஒருபோதும் உங்களை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இருப்பதை காண்பீர்கள்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.
