லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
04-11-2025

கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்

இயேசுவின் பிறப்பைக் குறித்து சிந்திக்க சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி பார்ப்பது மட்டுமல்ல, நம்முடைய முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாள் இருந்த காலத்திற்கே முழுவதுமாகப் பின்னோக்கிச் நாம் செல்ல வேண்டும்.
30-10-2025

அன்பின் பிணைப்பு

நமது பாவங்கள் மூலமாக முதலில் நாம் கிறிஸ்துவை காயப்படுத்தாமல் இகழாமல், அவமானப்படுத்தாமல், நமது சகோதரரில் யாரும் நம்மால் காயப்படுத்தப்படவோ, வெறுக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, அவதிக்கப்படவோ அல்லது எந்த வகையிலும் புண்படுத்தப்படவோ முடியாது; கிறிஸ்துவுடன் ஒருமித்து நடவாமல் நம் சகோதரரோடு ஒருமித்து நடக்கமுடியாது; நமது சகோதரரை நேசியாமல் கிறிஸ்துவை நேசிக்க முடியாது; நமது சொந்த சரீரத்தை நாம் கவனித்துக் கொள்வது போலவே நம்முடைய சகோதரர்களின் சரீரங்களையும் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் அவர்கள் நம் சரீரத்தின் அவயவங்கள்; நமது சரீரத்தில் ஓரிடத்தில் ஏற்படும் வலியானது மற்ற எல்லா இடங்களிலும் உணர்வை ஏற்படுத்துவது போல, நமது சகோதரரில் ஒருவர் எந்தவொரு தீமையினால் பாதிக்கப்படும்போது நமது இரக்கத்தினால் அவர்கள் தொடப்பட்டிருக்கவேண்டும்.
28-10-2025

பிளவுபட்ட நமது இருதயத்திற்கான மருந்து 

ஒரு வயதான பெற்றோர் அல்லது நண்பர் இறக்கும்போது, ​​அவர்கள் நன்றாக இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று சென்றனரா என்ற கேள்வியை  அக்குடும்பத்தினரிடம் நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இறக்கும் தருவாயில் அவர்கள் பேசின கடைசி வார்த்தைகள் மிகவும் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன; அது இறுதி விடைபெறுதலாக மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைக்க வேண்டிய ஞானமுள்ள மற்றும்  அன்புக்குரிய வார்த்தைகளாக எண்ணப்படுகிறது.
23-10-2025

தேவனின் சுய வெளிப்பாடு

சோதோம் கொமோராவின் அழிவுக்கு முன்பு தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடந்த சந்திப்பைப் பற்றி நான் சமீபத்தில் யோசித்துக் கொண்டிருந்தபோது ஆச்சர்யமூட்டும் ஓர் உணர்வு ஏற்பட்டது.
21-10-2025

ஆத்தும இளைப்பாறுதல்

கிறிஸ்துவின் மிகவும் விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் ஒன்று, அவர் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலை அளிப்பவர் என்பதுவே. பிரசித்திபெற்ற திருச்சபை பிதாவான அகஸ்டின், "தேவனே, நீர் எங்களை உமக்காகவே உண்டாக்கினீர், எங்கள் இருதயங்கள் உம்மில் இளைப்பாறுதல் அடையும்வரை அதற்கு இளைப்பாறுதல் இல்லை" என்று தமது விசுவாச கோட்பாடு (The Confessions) என்ற நூலில் எழுதியிருக்கிறார். இந்த இளைப்பாறுதலின் தேவையைப் பற்றியே இயேசு இவ்விதமாக குறிப்பிடுகிறார்:
16-10-2025

கிறிஸ்தவ வாழ்வு

தேவனே வாழ்வின் ஆதாரமாயிருக்கிறார். வேதாகமத்தின் ஆரம்ப பக்கங்கள் ஜீவனைக் கொடுக்கும் தேவனின் வல்லமைக்கு சாட்சியளிக்கின்றன, குறிப்பாக ஆதாமின் நாசியில் அவர் ஜீவ சுவாசத்தை ஊதுவதை நாம் காண்கிறோம் (ஆதி 2:7). ஆதாமும் ஏவாளும் தேவனோடு உள்ள தங்களது ஐக்கியத்தின் மூலமாகவும் அவரது தயவுள்ள கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதின் மூலமாக பூரண வாழ்வை அனுபவிப்பதற்கு தேவன் அவர்களை படைத்தார்.
14-10-2025

அடங்காத பிள்ளையை நான் எப்படி கையாள்வது?

இளம் வயதினர் அல்லது  வளர்ந்த வாலிபர்களுடனான உறவுகளில் பிளவு ஏற்படுவதினால் நம் வாழ்வில் உண்டாகும் அனுபவம் வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய  தாக்கத்தை ஏற்படுத்துகிறதாயிருக்கிறது.  நமது மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வுகளும் கூட பல்ச இழப்புகளை  நினைவுபடுத்துகிறவையாக அமைந்து விடுகின்றன. இது பெற்றோர்களின் இதயத்தை உடைத்து, குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
09-10-2025

மன்னிப்பைப் பற்றி நமது பிள்ளைகளுக்கு கற்பித்தல்

பெற்றோர்கள் உவமைகளாக உள்ளனர். நமது வாழ்க்கையின் கதைகள் நமது குழந்தைகளுக்கு அநேக பாடங்களை கற்றுத் தருகிறது. நமது வாழ்வு கற்பிக்கின்ற நாம் நம்புகின்ற மாபெரும் சுவிசேஷ கதை என்னவென்றால் அது மன்னிப்பைப் பற்றியது. தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் மன்னிக்கிறார், மற்றும் தேவனுடைய மன்னிப்பின் உயிருள்ள சாட்சி நம்மில் உள்ள மன்னிக்கும் இருதயம், அது வெறுமனே மன்னிப்பைப் பெறுவது மாத்திரமல்ல அதைக் கொடுக்கவும் செய்யும். நாம் நமது பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தில் மன்னிப்பைப் பற்றி கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும், ஆனாலும் நமது வாழ்வின் மூலம் அவர்களுக்கு நாம் மன்னிப்பின் உவமைகளாக மாறவேண்டும். 
07-10-2025

உங்கள் சபையிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பு, சில வாலிபர்கள் கூட்டமாக  உற்சாகத்துடன், வலிமைமிக்கவர்களாக  எங்கள் திருச்சபைக்கு வந்தனர். எங்களுடைய "ஊழியங்கள்" தேவையுள்ளவர்களுக்கு எப்படி ஊழியத்தில் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது  என்பதை பற்றிய அதிகாரப்பூர்வமான வரைமுறைகள்  செய்யப்படாததால், அந்த வாலிபர்கள் அதை செய்ய  அறியாதிருந்தனர்.