09-09-2025
இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது மற்றும் அடிப்படையானது: ஏனெனில் வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது! எபிரெயர் 10 ல், சபைக்கூடுதல் என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நிருபத்தின் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு கூறுகிறார். காரணம், கிறிஸ்துவின் மீட்பின் பணியினால் தேவனுடைய பரிசுத்த இடத்தில் வந்து நிற்பதற்கு அவர்களும் நாமும் மாபெரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

