How-Can-I-Be-a-Godly-Mom
கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?
04-09-2025
How-Can-I-Be-a-Godly-Dad
நான் ஒரு தேவபக்தியுள்ள தந்தையாக எப்படி இருக்க வேண்டும்? 
09-09-2025
How-Can-I-Be-a-Godly-Mom
கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?
04-09-2025
How-Can-I-Be-a-Godly-Dad
நான் ஒரு தேவபக்தியுள்ள தந்தையாக எப்படி இருக்க வேண்டும்? 
09-09-2025

ஏன் நான் திருச்சபைக்குச் செல்லவேண்டும்?

Why-Should-I-Go-to-Church

1.ஏனெனில், வேதம் இவற்றைக் கட்டளையிடுகிறது.

இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது மற்றும் அடிப்படையானது: ஏனெனில் வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது! எபிரெயர் 10 ல், சபைக்கூடுதல் என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நிருபத்தின் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு கூறுகிறார். காரணம், கிறிஸ்துவின் மீட்பின் பணியினால் தேவனுடைய பரிசுத்த இடத்தில் வந்து நிற்பதற்கு அவர்களும் நாமும் மாபெரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆசிரியர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டுகிறார், அங்கு பிரதான ஆசாரியர் மட்டுமே அதுவும் வருடம் ஒருமுறை மட்டும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியும். மாபெரும் ஆச்சரியம் என்னவென்றால், கிறிஸ்துவின் மரணத்தினால் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாகிய நாம் மகா பரிசுத்த தேவனிடம் வரமுடியும். திரைச்சீலை கிழிக்கப்பட்டது, நமது மகா பிரதான ஆசாரியர் நாம் பிதாவிடம் செல்வதற்கு நமக்காக வழியை உண்டாக்கியிருக்கிறார். 

எபிரெய ஆசிரியர் மூன்று பயன்பாடுகளை இங்கு கொடுக்கிறார், இவையனைத்தும் “கடவோம்” என்பதில் முடிவடைகிறது. இந்த மூன்றும் கடவுளுடைய மக்களின் கூடுகையைப் பற்றிக் கூறுகிறது.

  • “நாம் சேரக்கடவோம்” (எபி 10:22). வந்து, கிறிஸ்துவினால் சுத்திகரிக்கப்பட்டு மன்னிப்பைப் பெறுங்கள்.
  • “அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்.”

(எபிரேயர் 10:23). தைரியமாயிருங்கள், சோர்ந்துப்போகாதிருங்கள், இந்த நம்பிக்கையின் செய்தியைப் பற்றிக்கொள்ளுங்கள்.

  • “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.” (எபி 10:24). நீங்கள் தனிமையாக உங்களது கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியாது. நீங்கள் சபைக்கு வரும்போது மற்றவர்களை மையப்படுத்தி வாழ்கிறீர்கள்.

மேலும் ஆசிரியர், “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.”எபிரேயர் 10:25, என்று கட்டளையிடுகிறார். எபிரெய ஆசிரியர், நாம் சபைக்கு செல்வதை கிறிஸ்தவ வாழ்க்கைமுறையின் பிண்ணனியில் கூறுகிறார், இதைதான் ஒரு கிறிஸ்தவன் செய்கிறான். நாம் திருச்சபைக்கு செல்கிறோம் காரணம் இதுதான் நமக்கும் பிறருக்கும் நன்மையாகும். ஒன்றாக சந்திப்பது என்பது, எளிமையாக நமது நம்பிக்கையை இழக்கும் செய்யும் உலகில் நாம் முன்னானதை நாடி முன்னேற உதவிச் செய்கிறது. எபிரெயர் மற்றும் நம்முடைய பிரச்சனை என்னவென்றால் கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை அடையாளப்படுத்தவும் அதில் பங்குபெறுவதையும் நாம் தவிர்க்கிறோம். ஒரு கிறிஸ்தவன் சபைக்கு செல்லாமல் இருப்பது என்பது புதிய ஏற்பாட்டில் நினைத்துக்கூடப் பாரக்கமுடியாத ஒன்றாக உள்ளது.

1.ஏனெனில், வேதம் இவற்றைக் கட்டளையிடுகிறது.

நாம் சபைக்கு செல்வதற்கான காரணம், ஒன்று வேதம் கட்டளையிடுகிறது. இருப்பினும் இதற்கான மற்றுமொரு காரணம் மிக ஆழமாக செல்கிறது. நாம் திருச்சபைக்குச் செல்கிறோம், காரணம் தேவன் எப்படிப்பட்டவர் என்ற குணாதிசயங்கள். நமது ஆராதனைக்கும், போற்றுதலுக்கும் அவரே பாத்திரர். இந்த உலகில் நாம் இருப்பதற்கான காரணம், “அவரை மகிமைப்படுத்தவும், அவரில் களிகூறவுமே.” தேவன் தமது சிருஷ்டிகர், பராமரிக்கிறவர் மற்றும் மீட்பர். 

வெஸ்ட்மின்ஸ்டர் கேள்வி பதிலில் (Q/A 4): “தேவன் தனது இருத்தலில் முடிவற்றவராகவும், நித்தியமானவராகவும், மாறாதவராகவும், ஞானமுள்ளவராகவும், வல்லமை, பரிசுத்தம், நீதி, நன்மை மற்றும் உண்மையுள்ளவராகவும் இருக்கிறார்.” இந்த தேவனோடு உறவு கொள்வதற்கு யார் யார் அழைக்கப்படுகிறார்களோ அவர்கள் ஒன்றுக்கூடி அவரை ஆராதிப்பதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியாது. நாம் தேவனைத் தொழுதுக்கொள்ள சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம்.

தேவன் எப்படிப்பட்டவர் என்பதற்காக நாம் திருச்சபைக்குச் செல்கிறோம் ஆனால் அவர் நமக்காக என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதற்காகவும் நாம் செல்கிறோம். அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்குச் சொல்கிறார் “முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.”

1 பேதுரு 2:10. “அனைத்து ஜாதிகளிலிருந்தும் திரளான கூட்டங்களை” தேவன் தமக்கென்று அழைக்கிறார் (வெளி 7:9). வரலாற்று முழுவதுமாக தேவனுடைய மக்கள் அவருடைய நாமத்தைத் தொழுதுக்கொள்ளவும் ஒன்றாக ஆராதிக்கவும் ஒன்றுக்கூடுவதென்பது அவருடைய மக்களுக்கான அடையாளமாகும். இது ஆதியாகமம் 4 ன் இறுதியில் நடைபெறுவதை நாம் காண்கிறோம். “அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.” ஆதியாகமம் 4:26. இதேபோல் வேதத்தின் கடைசிப் பகுதி தேவனுடைய மக்கள் ஒன்றுக்கூடி ஆராதிப்பதில் முடிவடைகிறது. வெளிப்படுத்தல் 21 எல்லா பக்கத்திலும் வாசல்களை கொண்ட ஒரு நகரத்தைப்போன்ற மணவாட்டியை நமக்குக் காண்பிக்கிறது. இந்த ஆச்சரியமூட்டும் காட்சி, எல்லா இடங்கள் மற்றும் எல்லா காலங்களிலிருந்தும் தேவனுடைய மக்கள் ஒன்றுக்கூடி தங்கள் நடுவில் வாசமாயிருக்கும் தேவனை ஆராதிப்பதைக் காண்பிக்கிறது.

கர்த்தருடைய நாளில் எப்பொழுதெல்லாம் நாம் நமது சகோதர சகோதரிகளைச் சந்தித்து ஒன்றுக் கூடுகிறமோ, இது நித்திய நாளுக்கான ஓர் முன்னோட்டமாகும். நமது உள்ளூர் சபைகளில் மட்டுமல்ல, இவ்வுலகமெங்குமுள்ள தேவனுடைய மக்களுடனும், அதேபோல் பரலோகத்தில் வெற்றியடைந்த திருச்சபையோடும் தூதர்களோடும் நாம் கூடும்போது அந்த உண்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் நமது கூடுதல், நித்திய ஓய்வுநாளுக்காக நாம் ஏங்குவதை அதிகரிக்கவே. பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாளானது குறிப்பாக இளைப்பாறுதலுக்கென்று வகைப்படுத்தப்படுகிறது. கர்த்தருடைய நாளின் சாராம்சம் இன்றும் நிலைத்திருக்கிறது, அந்த நித்திய நாளை எதிர்நோக்கியிருப்பதற்கு நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில், கர்த்தருடைய நாளுக்கான மாற்றங்களில் ஒன்று என்னவென்றால், இது தொடர்ச்சியான ஆராதனையினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

3. ஏனெனில், இது சிறப்பான பாக்கியமும் ஆசீர்வாதமுமாகும்.

திருச்சபையாக நாம் கூடிவருதற்கு நமக்கு கிடைத்திருக்கும் பாக்கியத்தை நான் உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். தேவனை அவருடைய மக்களுடன் சேர்ந்து ஆராதிப்பதைத் தவிர மற்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது என்பது முழு முட்டாள்தனம். நீங்கள் தேவனுடைய மக்களோடு கூடிவராவிட்டால், நான்காவது கட்டளையை வேறு எவ்வாறு கடைபிடிப்பீர்கள்? இது திருச்சபைக்கு செல்வதை பேசுகிறதல்லவா; அற்புதமான உண்மை என்னவென்றால், நாம் சபைக்கு செல்ல முடியும் என்பதுதான்.

நீங்கள் உங்களது அனைத்து குற்ற உணர்வுகள், பயங்கள், மற்றும் கவலைகள் ஆகியவற்றோடும் நீங்கள் சபைக்கு வந்து மக்களோடு ஒன்றுக்கூடமுடியும். உங்களது பாரங்கள் மற்றும் பிரச்சனைகளோடே வாருங்கள். அநேக நேரங்களில் இந்த காரியங்களை வைத்து பிசாசானவன் உங்களை திருச்சபையிலிருந்து விலக்கி வைக்க முயற்சிப்பான், ஆனால் உங்களுக்கு தேவையான இடம் இதுதான். அவரது திருச்சபையில் தான், இயேசு பாவிகளை அழைத்து, இளைப்பாறுதலுக்கான ஓர் இடத்தை அளித்து, திருநியமங்கள் மற்றும் வேதத்தின் பிரசங்கத்தின் வழியாக நம்மை புதுப்பிக்கிறார். அவர் நம்மை வருந்தி அழைக்கிறார்: 

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் .” மத்தேயு 11:28-30.

ஆராதனைக்கான தேவனுடைய அழைப்பிற்கு செவிக்கொடுங்கள். அவரது துதிகளைப் பாடுங்கள். உங்களது பாவங்களை அறிக்கைச்செய்து அவரது மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களது சக விசுவாசிகளோடு சேர்ந்து ஜெபியுங்கள். காலங்காலமாக வாழ்ந்த பரிசுத்தவான்களோடு சேர்ந்து நீங்களும் உங்களது விசுவாசத்தை அறிக்கைச் செய்யுங்கள். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதைக் கேளுங்கள், மற்றும் திருமுழுக்கு மற்றும் திருவிருந்தில் சுவிசேஷததைக் காணுங்கள். இவைற்றையெல்லாம் நீங்கள் தனிநபராக செய்யமுடியாது. தேவனுடைய மக்கள் ஒன்றுக்கூடி வாழ்வதற்கென்று ஏற்படுத்தப்பட்டவர்கள். இப்படித்தான் அவர்கள் எப்போதும் இருந்தார்கள் இனிமேலும் இருப்பார்கள். நீங்கள் சபைக்கு வரும்பொழுது எங்கேயும் நீங்கள் பெறமுடியாத ஆசீர்வாதங்களை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறீர்கள்.

தேவனது திருச்சபை ஒன்றுக்கூடும்பொழுது, பிரத்யேகமாக அதை ஆசீர்வதிப்பேன் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். “ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.” மத்தேயு 18:20 என்று இயேசு வாக்களித்திருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல், அவிசுவாசி சபைக்கு வரும்பொழுது “அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும். அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான். “1 கொரிந்தியர் 14:25. என்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் தமது திருச்பையாகிய பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுவேன் என்று கூறுகிறார் (வெளி 2:1). ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமது மக்கள் கூடிவரும் போது கிறிஸ்து இவ்வாறே செய்கிறார்.

கிறிஸ்துவின் சபையில் அங்கத்தினராக இருப்பதைவிட வெறொன்றும் இவ்வுலகில் அருமையானது ஏதும் இல்லை.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பால் லேவி
பால் லேவி
ரெவரெண்ட் பால் லெவி, மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் சர்வதேச பிரஸ்பிடேரியன் தேவாலயத்தின் போதகர் ஆவார்.