புரட்டஸ்தந்துகளின் கொள்கைகளில் மிக பிரதானமான தவறான கொள்கை எது?
28-11-2024ஆதியாகமத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
09-12-2024ஏன் வேலை செய்கிறீர்கள்?
“ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும், நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும், நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். “
நமது வேலையில் இருந்து நாம் மகிழ்ச்சியையும், மனதிருப்தியையும், அர்த்தத்தையும் பெற்றுக் கொள்கிறோம். தேவனால் கொடுக்கப்பட்ட தாலந்துகளையும், அவரின் வளங்களையும் நாம் அங்கீகரித்து பிறகு நாம் வேலைக்கு செல்கிறோம். பிறகு நாம் திருப்தியடைகிறோம். திராட்சரசம் நமது இருதயத்தை மகிழ்ச்சியாக்குகிறது (வச 15). நமது படைப்புகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
இந்த உணர்ச்சிகள் அனைத்தும் நமது வேலையின் மூலம் வரும் விளைவாகும். ஆனால் இவற்றில் எதுவும், நமது வேலையின் பிரதான நோக்கமோ அல்லது பிரதான இலக்கோ அல்ல. வசனம் 31 ல் நமது வேலையின் பிரதான நோக்கத்தை சங்கீதக்காரன் கூறுகிறார்: “கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்.” நமது வேலைக்கு ஓர் நோக்கம் உள்ளது. நாம் யாருடைய சாயலில் படைக்கப்பட்டோமோ அவரை நோக்கி நமது வேலை நம்மை கொண்டு செல்கிறது. நாம் வேலை செய்கிறவர்களாக தேவனுக்கு மகிமையை செலுத்துகிறோம். நம் வேலை செய்யும் போது தேவன் நம்மில் மகிழ்ச்சி அடைகிறார். நாம் எதற்காக வேலை செய்கிறோம் என்பதற்கான நமது பதிலில் நாம் தடுமாறி இருக்கிறோம்.
சங்கீதம் 104 ல் இல்லாத ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா? இதில் தேவ ஆலயத்தைக்குறித்தோ, தேவாலய பாடகர்களைக்குறித்தோ, ஆசாரியர் மற்றும் அவர்கள் பணிகளை குறித்தோ எந்தவிதமான குறிப்புகளும் இல்லை. விவசாயம் செய்வதற்கான குறிப்பு இங்கு உள்ளது. திராட்சை ரசத்தை தயாரிப்பதற்கான குறிப்பு இங்கு உள்ளது. மனிதன் வேலை செய்வதற்கான குறிப்பு இங்கு உள்ளது. கப்பலை கட்டுவதற்கான குறிப்பு இங்கு உள்ளது. தேவனுக்கு மகிமை உண்டாவதற்கே “சமுத்திரத்திலே கப்பல்கள் ஓடுகிறது.”