
மோசேயைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய ஐந்து பிரதான காரியங்கள்
19-02-2026ரூத் யார்?
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ரூத்தை நன்கு அறிந்தவர்கள், ரூத் பழைய ஏற்பாட்டின் புத்தகத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராவார். பெரியவர்களாலும் சிறுவர்களாலும் அதிகமாக விரும்பி அறிந்திருக்கிற கதாபாத்திரம் ரூத். ரூத்தின் வாழ்க்கையை நாம் நன்கு அறிந்திருந்தாலும், விசுவாச வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்துவதற்கும் ரூத் யாரை சுட்டிக்காட்டுகிறளோ அந்த நம் இரட்சகரின் மீது நம் கண்களை வைப்பதற்கும் ரூத்தைப் பற்றி ஆழமாக நம் நினைவில் கொள்வது மிகவும் பயனுள்ளது.
ஓர் அந்நிய நாட்டவர்
ரூத்தைப் பற்றி நாம் அறிகிற முதல் காரியம் அவள் ஒரு மோவாபிய ஸ்தீரி, யூதாவின் பெத்லகேமிலிருந்து வந்த எலிமலேக்கு நகோமி ஆகியோரின் மகன்களில் ஒருவரை திருமணம் செய்தவள் (ரூத் 1:1-4). இது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. மோவாபியர் “தேவனுடைய சபைக்கு உட்படலாகாது” காரணம் தேவனுடைய மக்கள் எகிப்திலிருந்து வரும்போது அவர்களை மோவாபியர் பராமரிக்கவில்லை, அவர்களை சபிக்க பிலேயாமை கூலிக்காக வாங்கினார்கள் (உபா 23:3-5). எனவே அவர்களின் செழிப்பையும் சமாதானத்தையும் நாடுவதற்கு இஸ்ரவேல் மக்களை தேவன் தடை செய்தார் (உபா 23:6).
ஓர் விதவை
இரண்டாவது, ரூத்தின் புருஷன் மோவாபில் மரித்துப் போனான், பிள்ளைகளற்றவளாய் விதவையாக ரூத் காணப்பட்டாள் (ரூத் 1:5). தனது புருஷனை இழந்தது மாத்திரமல்ல, தனது மாமனார் மற்றும் கணவனின் சகோதரனின் மரணத்தினாலும் ரூத் துயரங்கொண்டாள். இவ்வித உபத்திரவத்தின் மத்தியில், தனது மாமியாரோடு துணையாக, பெத்லகேமில் பஞ்சம் ஒழிந்ததினால் தனது சொந்த நாட்டை விட்டு பெத்லகேமுக்கு சென்றாள் (ரூத் 1:6-7).
உண்மையுள்ள மருமகள்
மூன்றாவது, பெத்லகேமுக்கு செல்லும் வழியில் ரூத் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல நகோமியால் வற்புறுத்தப்பட்டபோது அதை ரூத் நிராகரித்தாள். முக்கியமாக, இன்னொரு மருமகள் தன் நாட்டிற்கு திரும்பினாள், ஆனால் ரூத் தன் மாமியாரைப் பற்றிக் கொண்டாள் (ரூத் 1:14). இது விலைமதிப்புக்க முடிவாகும், காரணம் ரூத்தை மீண்டும் திருமணம் செய்து கொடுக்க நகோமியிடம் வேறு மகன்கள் யாரும் இல்லை. ரூத் நகோமியோடே இருந்தாளென்றால், ரூத்தும் பிள்ளைகள் இல்லாத விதவையாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். இருப்பினும், “அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) என்று கூறினாள்.
விசுவாச ஸ்தீரி
பெத்லகேமுக்கு செல்லும் வழியில் ரூத் ஓர் விசுவாசத்தை அறிக்கையிட்டாள்: “உம்முடைய ஜனங்கள் என்னுடைய ஜனங்கள், உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” (ரூத் 1:16). அவளது இப்படிப்பட்ட அறிக்கை பின்வரும் நாட்களில் அவள் நடப்பித்த தேவபக்திக்குரிய காரியங்கள் மூலமாக நிருபிக்கப்பட்டது. விசுவாசத்தினாலே தனது மாமியாரையும் தன்னையும் போஷிப்பதற்கு ஆரம்பித்தாள்: “மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள். அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.”(ரூத் 2:2). விசுவாசத்தினாலே வயல்களில் அவள் கடினமாக உழைத்தாள் (ரூத் 2:7). போவாஸ் ரூத் அவளது மாமியாருக்காக செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டு அவளைப் பாராட்டி, இந்த வார்த்தைகளால் அவளை ஆசிர்வதித்தான்: “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.” (ரூத் 2:12). விசுவாசத்தினாலே ரூத், போவாஸை மணக்கும்படி கேட்கும் நகோமியின் திட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, தைரியமாக போவாஸை மணந்து கொள்ளும்படி கேட்க களத்திற்குச் சென்றாள் (ரூத் 3:1–13). விசுவாசத்தினாலே அவள், காரியம் சரியாகத் தீர்க்கப்படும் வரை ஞானமாக காத்திருந்தாள் (ரூத் 3:18).
ரூத்தின் விசுவாசத்தின் அறிக்கையையும், குணாதிசயத்தையும் நாம் சிந்திக்கையில், தேவனுடைய மக்களின் இரட்சகரான இயேசுவின் மீது கண்களை வைத்து நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கு தூண்டப்படுவோம்.
தெய்வீக மனைவி மற்றும் தாய்
ரூத் தன் வாழ்நாளில் ஏராளமான துன்பங்களை அனுபவித்திருந்தாலும், அவளுடைய நற்செயல்களுக்கும் உண்மைத்தன்மைக்கும் கர்த்தரிடம் பலனடைவார் என்று ஆசீர்வதித்த அதே மனிதனையே கர்த்தர் அவளுக்குக் பரிசளித்தார் (ரூத் 2:12). போவாஸ், அனைத்துக் காரியங்களையும் முறையாகத் தீர்த்துக் கொண்ட பிறகு, ரூத்தை தனது மனைவியாக சேர்த்துக் கொண்டார் (ரூத் 4:10). பெத்லகேமின் மூப்பர்களும் மக்களும் அவருக்கு ஒரு ஆசீர்வாதத்தை அறிவித்தனர்:
“உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக. நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.” (ரூத் 4:12).
போவாஸ் மற்றும் ரூத்துக்கு ஒரு மகனைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார் (ரூத் 4:13 ). குறிப்பிடத்தக்க வகையில், அந்த நகரத்தின் பெண்கள் அவரை “மீட்பர்” மற்றும் “வாழ்க்கையை மீட்டெடுப்பவர்” (ரூத் 4:14-15) என்று அழைத்தனர். அவருடைய பெயர் “இஸ்ரவேலில் புகழ் பெற வேண்டும்” என்று அவர்கள் ஜெபித்தனர் (ரூத் 4:14). அவர்கள் அவருக்கு “ஊழியக்காரன்” என்று பொருள்படும் ஓபேத் என்றும் பெயரிட்டனர் (ரூத் 4:17).
இயேசு கிறிஸ்துவின் வம்சம்
ரூத்தின் மகன் ஓபேத், “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனானான்” (ரூத் 4:17). இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியை நமக்கு சுட்டிக்காட்டுவதற்காக, ரூத்தின் புத்தகம் தாவீதின் வம்சாவளியை விவரிக்கிறது:
“ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு…சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான், போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்,ஓபேத் ஈசாயை பெற்றான்…ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்,தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான், .”
(மத்தேயு 1:1;5-6).
இயேசு போவாஸ் மற்றும் ஓபேதை விட பெரிய மீட்பரும் தாசனும் ஆவார். அவர் தாவீதை விட பெரிய ராஜா. அவர் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்:
“தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்,
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்.”
(சங்கீதம் 2:7-8)
ரூத்தின் விசுவாசத்தின் அறிக்கையையும் குணத்தையும் நாம் கருத்தில் கொள்ளும்போது, கடவுளுடைய மக்களின் மீட்பரும், “ஊழியம் கொள்ள அல்ல, ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்த” (மத். 20:28) இயேசுவின் மீது நம் கண்களை வைத்திருந்து, உண்மையுள்ளவர்களாக வாழ்வதற்கு நாம் உந்தப்படுவோம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


