நீதிமானாக்கப்படுதலின் அடிப்படை போதுமான தகுதி
24-10-2024கிறிஸ்து ஒரு தன்மையை உடையவரா அல்லது இரண்டு தன்மையை கொண்டவரா?
31-10-2024தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?
தேவன் எல்லையில்லா மிகவும் சுதந்திரமுள்ளவராயிருக்கிறார். அவர் சர்வ இறையாண்மையுள்ளவர். அவரது இறையாண்மை பற்றி அடிக்கடி ஏற்படும் ஆட்சேபனை என்னவென்றால், தேவன் மெய்யாகவே சர்வ இறையாண்மையுள்ளவராக இருப்பாரென்றால் எவ்வாறு மனிதன் சுதந்திரமுள்ளவனாக இருக்க முடியாது என்பதுதான். வேதம் நமது மானுட நிலையை இரண்டு விதங்களில் விளக்கப்படுத்த சுதந்திரம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது: மனிதன் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் சுயமாக முடிவு எடுக்கும் சுதந்திரத்தையும், வீழ்ச்சியில் நாம் இழந்து போன நம்மை நமது மாம்சத்தின் தூண்டுதலுக்கு அடிமைகளாக மாற்றின ஒழுக்க சுதந்திரத்தையும் பற்றி வேதம் பேசுகிறது. எந்தவித வற்புறுத்தல் இல்லாததினால் மட்டுமல்ல, பாவத்திற்கான எந்தவித உள்ளார்ந்த உந்துதலும் இல்லாமலும் மனிதனால் சுயமாக தேர்ந்தெடுக்க முடியும் என்று மனிதநேயவாதிகள்(Humanists) நம்புகின்றனர். இவ்வித மனிதநேயவாதிகள் அல்லது மனித சுதந்திரத்தைப் பற்றிய உலகப்பிரகாரமான இவ்வித பார்வைக்கு எதிராக கிறிஸ்தவர்களாகிய நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.
தேவன் நம்மை தேர்ந்தெடுக்கும் திறன் உள்ள சித்தத்தோடே நம்மை படைத்திருக்கிறார் என்பதே கிறிஸ்தவனின் பார்வை. நாம் விருப்பங்களை உடைய படைப்புகள். ஆனால் படைப்பில் கொடுக்கப்பட்ட சித்தம் அது எல்லையுள்ளது. தேவனின் சுதந்திர சித்தமே நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது. இங்குதான் தேவனின் சர்வ இறையாண்மைக்கும் மனிதனின் சுதந்திரத்துக்கும் இடையே முரண்பாட்டிற்குள்ளாக நாம் செல்லுகிறோம். மனிதனின் சித்தம் தேவனின் சர்வ இறையாண்மையை தடுக்கிறது என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படியிருக்குமென்றால், மனிதனே சர்வ இறையாண்மையுள்ளவனாக இருப்பான் தேவன் அல்ல. சீர்திருத்த சத்தியங்கள், மனிதனுக்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் அவை தேவனின் சர்வ இறையாண்மையினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை போதிக்கிறது. தேவனின் இறையாண்மையுள்ள சுதந்திரம் நம்மை விட பெரிதாக இருப்பதினால், நம்முடைய சுதந்திரத்தினால் தேவனின் முடிவுகளை ஒருபோதும் ஆளுகை செய்யமுடியாது.
நமது குடும்ப அமைப்பு இதற்கான ஒப்புமையாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆளுகை செய்கிறார்கள். குழந்தைகள் சுதந்திரமுடையவர்களாய் இருப்பினும் பெற்றோர்கள் அதிக சுதந்திரமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். பெற்றோர்களின் சுதந்திரம் குழந்தைகளின் சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதுபோல் குழந்தைகள் பெற்றோரை கட்டுப்படுத்த முடியாது. நாம் தேவனின் குணாதிசயங்களை சிந்திக்கும்போது தேவன் முழுவதும் சுதந்திரமானவர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
தேவன் சர்வ இறையாண்மையுள்ளவர் என்று நாம் சொல்கையில், அவரின் இறையாண்மை என்பது சுதந்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று நாம் எண்ணினாலும் அவரது சுதந்திரத்தை பற்றியே நாம் பேசுகிறோம். தேவன் சுதந்திரமானவராக இருப்பவர். அவருக்கும் சித்தமுண்டு, அவரே தீர்மானிக்கிறவர். அவர் தனது சித்தத்தின்படி தீர்மானத்தை செயல்படுத்தும்போதெல்லாம் உயர்ந்த அதிகாரமுடைய சர்வ இறையாண்மையுள்ளவராகவே செயல்படுகிகிறார். அவரது சித்தமே மிகவும் சுதந்திரமானது. அவர் தன்னாட்சி அதிகாரமுடையவர். அவருக்கு அவர்தான் சட்டம்.
மனிதன் சுயாதீனத்தையும், எல்லையில்லா சுதந்திரத்தையும், ஒருவருக்கும் தான் கணக்கு ஒப்புவிக்காததையுமே விரும்புகிறான். இதுதான் ஆதியிலே வீழ்ச்சியிலும் நடந்த காரியம். சாத்தான், ஆதாமும் ஏவாளும் தங்கள் சுய அதிகாரத்தை அடைந்து கடவுளைப் போல மாறவும், அவர்கள் விரும்பியதை தண்டனையில்லாமல் செய்யவும் வஞ்சித்தான். ஆதாமும் ஏவாளும் எல்லா குற்றவுணர்விலிருந்தும், தேவனுக்கு கணக்கொப்புவிப்பதிலிருந்தும் சுதந்திரமாய் இருக்க சாத்தான் ஏதேன் தோட்டத்திலே தனிச்சுதந்திர போக்கை(Liberation movement) அறிமுகப்படுத்தினான். இருப்பினும், தேவன் மட்டுமே சர்வ அதிகாரமுள்ளவர்.
இந்த சிறிய கட்டுரை Truths We Confess என்ற ஆர். சி. ஸ்ப்ரௌவுலின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.