
கிறிஸ்தவர்கள் மரணநிகழ்வில் துக்கமடைவது சரியா?
16-09-2025
அன்பான ஒருவரை இழக்கும்போது ஏற்படும் துயரம்
23-09-2025துன்பங்கள் மற்றும் சோதனைகள் வழியாக பிள்ளைகளை மேய்த்தல்
நமது பிள்ளைகள் சோதனைகளால் துன்பப்படுவதைப் பார்ப்பதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். தங்கள் சொந்த பிரச்சனைகளை சமாளிக்க தயராக இருக்கும் பெற்றோர்கள் கூட அநேக நேரங்களில் தங்களது பிள்ளைகளின் துன்பங்களில் தங்களை உதவியற்றவர்களாக உணருகிறார்கள். எனவே நமது பிள்ளைகளை சரியான முறையில் கடவுளுக்கு மகிமை செலுத்தும் வகையில் துன்பத்தின் மூலம் எவ்வாறு வழிநடத்துவது? நமது பிள்ளைகள் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும்போது அவர்களை ஆதரிக்க மூன்று வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அவர்களோடு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை அளியுங்கள்
பெற்றோர்களாகவும் பராமரிப்பாளர்களாகவும், நம்முடைய பிள்ளைகள் துன்பப்படுவதைக் காணும்போது, உடனடியான தீர்வை காணவேண்டும் என்பதே பெரும்பாலும் நம்முடைய அவசரமாக உள்ளது. சில நேரங்களில் உடனடியான தீர்வை காண முயலும் செயல்பாடு சரியானதும் அவசியமானதாகவும் இருந்தாலும், சோதனைகளை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பிரச்சனைகளை தீர்க்கும் நமது உத்திகளை விட நமது உண்மையுள்ள இருத்தல் அதிகம் தேவைப்படுகிறது. நமது சொந்த அனுபவங்களில் கொந்தளிப்பின் நேரங்களில் சில வேளைகளில் நமக்கு மிகவும் பிரியமான, உடனடியாக நம்மை திருத்த முயல அவசரப்படாமல் பொறுமையாக நம்முடன் அமர்ந்து, நாம் பாதுகாப்பாக உணரும் ஒரு நபரோடு இருப்பதின் மூலம் நாம் ஆறுதலையடைய விரும்புவோம். நமது பிள்ளைகளும் இத்தகைய அடைக்கலத்தைப் பெற ஏங்குகின்றனர், மேலும் பெற்றோர்களாக இருப்பதன் மிக உன்னதமான ஆசீர்வாதங்களில் ஒன்று, தேவனின் பராமரிக்கும் இந்த குணாதிசயத்தின் இந்த அம்சத்தை நமது வீடுகளில் பிரதிபலிக்கும் வாய்ப்பை பெறுவதாகும்.
பெற்றோர்களின் பணியை மேய்ப்பன் பணியோடு ஒப்பிடுகையில், ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளோடு தான் இருப்பதையே அந்த ஆடுகளுக்கான ஆறுதல் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வாரோ அதேபோல் நாமும் நமது பொறுப்புகளை உணரவேண்டும். அதேபோல், தேவனே நமது கன்மலையாகவும் அடைக்கலமாகவும் உள்ளார் (சங் 18:2) என்று காண்பிக்கையில் தேவனுடைய சமாதானத்தை வெளிப்படுத்துவதற்கான வழி அங்கு உண்டாகிறது. நமது பிள்ளைகளின் வாழ்வில் நெருக்கடியான நேரங்கள் வரும்போது, நாம் அவர்களோடு இருக்கிறோம் என்ற ஓர் நம்பிக்கையை அளிக்கையில் நமது ஆறுதலை காண்பிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நமது விரல்களை தூக்குவதற்கு முன்பாக, நமது பிள்ளைகளோடு நாம் உள்ளோம், அவர்களுக்காக இருக்கிறோம், இன்னும் அதிகமாக, தேவன் இருக்கிறார் என்பதை நமது இருத்தல் அங்கு வெளிப்படுத்தும். நெருக்கடியின் நேரங்களில், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்பதை நமது பிள்ளைகளுக்கு நினைவுப்படுத்த முடியும்.
ஞானமுள்ள மேய்ச்சலை செயல்படுத்துங்கள்
நம் பிள்ளைகளின் வாழ்க்கையில் நமது உண்மையுள்ள இருத்தலை காண்பிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதின் கூடுதல் நன்மை என்னவென்றால், சரியான நேரத்தில் எவ்வாறு தலையிடவேண்டும் என்பதை அறிய நம்மை தயார்படுத்துகிறது. ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை எந்தளவுக்கு அறிந்திருக்கிறானோ அவ்வளவு சிறப்பாக அவற்றைப் பராமரிக்கவும், பராமரிக்க ஆயத்தத்தோடும் இருப்பான். இந்த வாழ்க்கை கொடுக்கும் பல தடைகளில் உங்களது பிள்ளைகளுக்கு உதவும்போது இத்தகைய ஞானம் விலைமதிப்பற்றதாக இருக்கும்.
பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில், சமாதனத்துக்கும், ஆலோசனை சார்ந்த கவனிப்புக்கும் இடையிலான சமநிலையை பற்றி பவுல் பேசுகிறார்.
“உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”
(பிலிப்பியர் 4:5), “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல்…” (4:6), மற்றும் “ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.” என்று எவ்வாறு பிலிப்பியர் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதையும் கூறுகிறார்.
(பிலிப்பியர் 4:14). பவுலுக்கும் பிலிப்பியருக்கும், தாங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறின ஆறுதல் சரியான நேரத்தில் இரக்கம் மற்றும் அன்பின் செயல்களை செய்வதற்கு வழிவகுத்தது. நமது பிள்ளைகள், இயேசுவின் அற்புதமான ஒளியில் நாம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, இருளுக்கு அப்பால், பள்ளத்தாக்கின் மேலிருந்து கீழாக நோக்கிப் பார்க்க அவர்களுக்கு நாம் உதவும்போது, எவ்வளவு அமைதி கிடைக்கிறது.
ஒரு ஞானமுள்ள மேய்ப்பன், தனது நம்பிக்கையுள்ள இருத்தலை எப்பொழுது செயல்படுத்த முன்வரவேண்டும் என்பதை அறிவான். சில சமயங்களில் அது ஒரு காவலாளியாக இருப்பதைக்குறிக்கிறது, அதே நேரத்தில் முடிந்த அளவுக்கு நமது பிள்ளைகள் சவால்களை தாங்களாகவே சமாளிக்க இடம் கொடுக்கவேண்டும். சிலநேரங்களில் நேரடியான ஆதரவை வழங்கவேண்டும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நம் பிள்ளைகள் பிரச்சனைகள் மற்றும் சோதனைகளால் கடுமையாக அழுத்தப்படும்போது அவர்களின் சுமையைத் தாங்க நாம் துணையாக வருவதற்கான வழியைக் தேடவேண்டும் (கலா 6:2). ஒவ்வோரு சூழ்நிலையும் குழந்தையும் வேறுபட்டிருப்பதால் இதற்கென்று ஞானம் தேவை. இங்கு ஒரே மாதிரியான விளையாட்டு புத்தகம் இல்லை, எனவே ஒவ்வொரு பிள்ளையையும் சந்திக்க தெய்வீக ஞானம் தேவை. சோதனையின் தீவிரத்தையும் அதைக் கையாளும் ஓர் பிள்ளையின் திறனையும் நாம் அளவிடவேண்டும். ஞானம் என்பது சூழ்நிலைக்கேற்ப நமது ஈடுபாட்டை மாற்றியமைப்பதாகும்.
நம்பிக்கையின் எல்லைகளுக்குள் அவர்களை வழிநடத்துங்கள்
எவ்வித சோதனைகளிலும், நாம் எவ்வித ஆலோசனைகளினால் உதவினாலும், அவர்கள் எளிதில் குறுகிய சிந்தையில் விழுந்து போவதற்கான ஆபத்து உள்ளது. கடினமான நேரங்களில் நாம் நமது பிள்ளைகளோடு நடக்கையில், அநேக நேரங்களில் நமது மீட்பரை நோக்கி நமது கண்களை பதிப்பதை மறந்துப்போகுமளவுக்கு நமது பிரச்சனைகளில் மூழ்கி போவதற்கான வாய்ப்புகள் அநேகம். நம்மில் சிலர் இதை வேண்டுமென்றே செய்கிறோம்; பெரும்பாலும் நம் சுமைகள் நம்மை கடுமையாக அழுத்துகின்றன, குறிப்பாக நம் குழந்தைகள் பாதிக்கப்படும்போது நாம் மிகவும் திணறுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்துகிறோம் ஆனால் மாபெரும் நபரை நோக்கிப் பார்க்கத் தவறுகிறோம். நமது பிள்ளைகளும் இவ்விதமான குழப்பங்களை தங்களது நெருக்கமான நேரங்களில் அடைகிறார்கள், இதன் காரணமாக நமது மெய்யான நம்பிக்கை எங்கு உள்ளது என்பதை நாம் காண்பிக்க இது ஓர் வாய்ப்பாக நமக்கு உள்ளது. ஒரு மேய்ப்பன் நீர்ப்பாய்ச்சாலான இடத்தை நோக்கி தனது ஆடுகளை திருப்புவது போல, இருளின் பள்ளத்தாக்கில் நமது பிள்ளைகளோடு நடப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிற நாம் அவர்களின் கண்களை மேல் நோக்கி நாம் கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையை பார்ப்பதற்கு வழிநடத்துவதற்கான பொறுப்பை நாம் பெற்றிருக்கிறோம். அவர்களது சூழ்நிலை எந்தளவுக்கு அந்தகாரமுள்ளதாக இருந்தாலும் சரி, இந்த உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிற, அவருடைய நீதி நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாக சூரியரனைப்போல அதிக பிரகாசமாயிருக்கிற (நீதி 4:18) கிறிஸ்துவை அவர்கள் நோக்கிப் பார்க்கும்படி நம்மால் உதவமுடியும் (யோவான் 8:12).
நமது பிள்ளைகள் நாம் இயேசுவின் அற்புதமான ஒளியில் நாம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, இருளுக்கு அப்பால், பள்ளத்தாக்கின் மேலிருந்து கீழாக நோக்கிப் பார்க்க நாம் உதவும்போது, எவ்வளவு அமைதி கிடைக்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


