5 Things You Should Know about Being a Parent
பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
18-02-2025
5 Things about Covenant Theology
உடன்படிக்கை இறையியல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
25-02-2025
5 Things You Should Know about Being a Parent
பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
18-02-2025
5 Things about Covenant Theology
உடன்படிக்கை இறையியல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
25-02-2025

திருமணத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

5 Things You Should Know about Marriage

திருமணத்தைப் பற்றி அதிகமாக கூறப்பட்ட நிலையில், அதன் அத்தியாவசியங்களை பற்றி நினைவுகூறுவது இன்றியமையாதது. நீங்கள் திருமணமானவர்களோ அல்லது ஆகாதவர்களோ, நீங்கள் திருமணத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய காரியங்களை ஐந்து கேள்விகளில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: யார்? என்ன? எப்பொழுது? எங்கே? மற்றும் ஏன்?.

1.யார்? திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், அவர்கள் இணைக்கப்படுவதற்கு தேவனால் ஏற்படுத்தப்பட்டதாகும். (ஆதி 2:24, மத்தேயு 19:4-5).

தேவனே திருமணத்தை உண்டாக்கினார். திருமணத்தில் நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறோமென்றால், அதற்கான அவரின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பது ஞானமாகும். மிக முக்கியமாக கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு திருமணம் என்பது ஒரே விசுவாசத்தை பகிர்ந்துகொள்வதாகும் (2 கொரி 6:14). சில நேரங்களில் ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்தவனல்லாதவரை திருமணம் செய்துகொள்கிறார். ஒன்று, ஒருவர் விசுவாசத்திற்கு வருகிறார் அல்லது மற்றொருவர் மெய்யான விசுவாசம் முதன்மையாக இல்லை என்பதை கூறுகிறார். சில நேரங்களில் இவ்விதமான விசுவாச முரண்பாடான திருமணத்தை தேவன் அனுமதித்திருந்தாலும் இவ்விதமான திருமணத்தில் தேவன் செயல்பட்டாலும், இத்தகைய திருமணத்தை செய்யக்கூடாது என்பதை தேவன் கட்டளையிடுகிறார். அவிசுவாசியை திருமணம் செய்ய விசுவாசி தெரிவுசெய்வானென்றால், அவன் கிறிஸ்துவை நோக்கி நடப்பதற்கு பதிலாக கிறிஸ்துவை விட்டு விலகி நடக்கிறார், பரிசுத்த ஆவியானவரோடு தன் நடைகளை காத்துக்கொள்வதை விட்டுவிட்டு ஆவியில் நடவாமல் இருக்கிறார் (கலாத்தியர் 5:16-19).

2.என்ன? திருமணம் என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் இருக்கும் ஐக்கியம். இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உறவை பிரதிபலிக்கிறது.

திருமணத்தில் இரு நபர்கள் தங்கள் பெற்றோர் குடும்பத்தை விட்டு, தங்களின் புதிய குடும்பத்தை துவங்குகிறார்கள். ஒரு கிறிஸ்தவ திருமணமானது கிறிஸ்துவுக்கும் அவரது மணவாட்டியாகிய திருச்சபைக்கும் இடையே உள்ள உறவை பிரதிபலிக்கிறது (எபே 5:32, 2 கொரி 11:2). எனவே, திருச்சபைக்கு தலைவராயிருக்கிற கிறிஸ்துவை மாதிரியாக பின்பற்றுவதற்கு கணவர்கள் கட்டளையிடப்படுள்ளார்கள். கிறிஸ்து தனது மணவாட்டிக்கு செய்ததுபோல, புருஷர்களும் தியாகத்தோடு, தங்கள் ஜீவனை கொடுக்கும் அளவிற்கு கூட தங்கள் மனைவிகளை நடத்த அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (எபே 5:25). அதே போல், திருச்சபை கிறிஸ்துவுக்கு கீழ்படிவதுபோல் மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (எபே 5;24). இந்த இரண்டு பொறுப்புகளும் மிகவும் அவசியமானது. கிறிஸ்துவுக்கும் அவரது சபைக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துவற்கு, கணவனும் மனைவியும் பெற்றுக்கொண்ட பொறுப்புகள் எவ்வளவு கனமும், கடமை நிறைந்ததுமாயிருக்கிறது.

3. எப்பொழுது? திருமணம் என்பது வாழ்நாள் முழுவதுமானது ஆனால் நித்தியத்துக்குரியதல்ல (மத் 22:30). 

திருமணம் என்பது இங்கு அநேகர் சொல்வதுபோல், “வாழ்விலும் தாழ்விலும், ஐசுவரியத்திலும் வறுமையிலும், சுகத்திலும் சுகவீனத்திலும், நீங்கள் வாழ்கிற வாழ்க்கை வரைக்குமானது” என்பது உண்மையே. வெறுமனே, இது நாம் நேசிப்பதாக உணரும் நேரங்களுக்கும், நேசிப்பது போல் உணரும் காலங்களுக்கும் மட்டும் ஆனதல்ல, திருமணம் முழு வாழ்க்கைக்குமானது. ஓர் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்காக தேவன் விவாகரத்தை அனுமதித்திருந்தாலும், ஒவ்வொரு தேவையில்லாத, எதிர்பாராத, அல்லது நியாயமற்ற காரியங்களுக்கும் விவாகரத்தை ஓர் தீர்வாக தொடரக்கூடாது. திருமணத்தில் பலவிதமான சவால்களை எதிர்கொள்வதற்கு, ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை புதுப்பிக்கவும், அதிகரிக்கவும், விவேகத்தோடு தேவனிடம் ஜெபிக்கவேண்டும் (மத்தேயு 7:7).  தேவன் இதுபோன்ற ஜெபங்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்து ஜெபிக்க வேண்டும் (1 யோவான் 5:14-15).

இதுபோன்ற ஜெபங்களுக்கு அடிப்படியான காரணம் நாம் இன்னும் பாவிகளாக இருக்கிறோம், இருப்பினும் நாம் நம்பிக்கை இழந்துபோவதற்கு இந்த பாவங்கள் காரணம் அல்ல. கிறிஸ்துவின் மாதிரியை நாம் பின்பற்றுகிறவர்களாக, ஒருவருக்கொருவர் தியாகத்தோடு அன்புகூறுவதற்கு ஆவியானவர் நமக்கு உதவிசெய்கிறார். பாவம் திருமணத்திற்கு தடையல்ல, மாறாக அதன் ஆதிக்கமே தடை. தேவன் தமது கிருபையினால், அன்பினாலே ஒருவரையொருவர் தாங்குவதற்கு அழைக்கிறார். ஞானமுள்ள தம்பதிகள் தங்களது வாழ்க்கை பூரணமான வாழ்க்கைக்கு சற்று குறைவாக இருப்பினும் அதை சரியாக கவனித்து, அதில் தேவனின் பல ஆசிர்வாதங்களுக்கு நன்றி சொல்லியும், தங்களுக்கு தேவன் உதவிசெய்யும்படியாகவும் ஜெபிப்பார்கள் (1 தெச 5:18).

நிச்சயமாக ஒருநாள், திருமணமானவர்களோ அல்லது தனிமையானவர்களோ அனைத்து விசுவாசிகளும், ஆட்டிக்குட்டியானவரோடு கல்யாண பந்தியில் முழுவதும் மகிழ்ச்சியடைந்து, கிறிஸ்துவுக்கும் அவரது சபைக்கும் இடையே பூரணமான திருமணத்தை பரலோகத்தில் என்றென்றும் நித்தியமாக அனுபவிப்பார்கள் (வெளி 19:6-9).

4. எங்கே? திருமணம் ஓர் புதிய குடும்பத்தையும் வீட்டையும் ஏற்படுத்துகிறது.

வேதம் சொல்வது போல், கணவனும் மனைவியும் “விட்டு…இசைந்திருப்பதற்கு” (ஆதி 2:24) தேவன் அவர்களை அழைக்கிறார். பெற்றொரிடம் இருந்த நமது முதன்மை கடமைகளை தனது துணையிடம் மாற்றுவது சவாலான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதற்கு, தம்பதிகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள இருப்பிட தொலைவு உதவியாக இருக்கும். திருமணமான தம்பதிகள் தொடர்ச்சியாக தங்களது பெற்றோரை கனப்படுத்துவதற்கு வேதம் கட்டளையிடுகிறது, ஆனால் கட்டாயமாக கீழ்படிவதற்கு கட்டளையிடப்படவில்லை (யாத் 20:12, எபே 6:2-3). தம்பதிகள் இந்த வித்தியாசங்களை கண்டு கொள்ளவேண்டும். திருமணமான தம்பதிகள் தங்களது பெற்றோர் அளிக்கும் ஆலோசனைகளை கவனித்து அதை வரவேற்கலாம், ஆனால் தனிப்பட்ட குடும்பமாக அவர்கள்தான் சொந்த முடிவுகளை எடுக்கவேண்டும். இவ்வாறுதான் தேவன் அவர்களை பார்க்கிறார் (ஆதி 2:24).

5. ஏன்? திருமணத்திற்கான நான்கு நோக்கங்களை தேவன் கொடுக்கிறார். திருமணமான தம்பதிகள் தேவன் வாய்ப்பளிக்கும் நேரத்தில் இந்த நான்கையும் நிறைவேற்றுவதின் மூலம் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள்.

1.பிள்ளை வளர்ப்பு. தேவனின் பராமரிப்பின் படி ஒரு சில தம்பதிகள் பிள்ளைகளை கொண்டிருக்க தடுக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதை வேதம் ஆசீர்வாதமாக பார்க்கிறது (சங்கீதம் 127:3-5, மல்கியா 2:15) மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை போதனையிலும் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் வளர்க்கவேண்டும் (எபே 6:4).

2.பாலியல் திருப்தி. திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதை தேவன் தடை செய்திருக்கிறார் (1 கொரி 7:2). தேவனிடமிருந்து வருகிற எந்த நன்மையான ஈவுகளைப் போல, உடலுறவும் திருமணத்துக்குள் அனுபவிக்கப்படவேண்டும்.

3.உலகத்துக்கும் திருச்சபைக்கும் ஆசீர்வாதமாயிருத்தல். இருநபர்களாகயிருக்கும் தம்பதிகள், தனிநபரை பார்க்கிலும் அதிகம். ஒருவர் செயல்படுவதை பார்க்கிலும் இருவரால் இன்னும் நன்றாக காரியங்களை செயல்படுத்தமுடியும் (பிர 4:9-12, மத் 20:28).

4.துணையாயிருத்தல். படைப்பில் தேவன் படைத்த எல்லாவற்றையும் நல்லது என்று கண்டார் (ஆதி 1:31), திருமணத்தையும் அவ்வாறே கண்டார். ஆனால் நல்லதல்ல என்று தேவன் கூறின ஒரே ஒரு காரியம் “தனிமையாயிருப்பது.” (ஆதி 2:18)

ஒரு காரியம் நினைவுக்கொள்ளவேண்டுமென்றால் அது இதுதான்: திருமணம் நல்லது. திருமணம் என்பது ஒருவரோடொருவர் தோழமையோடு துணையாய் இருப்பதற்கு தேவன் அளிக்கும் முக்கிய வழிமுறையாகும், இதில் நாம் தேவனின் மேன்மையான ஆசீர்வாதங்களை எதிர்ப்பார்த்து திருமணத்தில் தேவனை மகிமைப்படுத்துகையில் நாம் சரியானதை செய்கிறோம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

இ வி டிக்ஷோர்ன்
இ வி டிக்ஷோர்ன்
வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். Gospel shaped marriage என்ற புத்தகத்தின் துணை ஆசிரியராவார். Emily மற்றும் அவரது கணவர் Chad மற்றும் தங்களது ஐந்து பிள்ளைகளோடு, Charlotte வில் வசித்துவருகிறார்கள்.