
மீகா புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரதான காரியங்கள்
15-05-2025
எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்
22-05-2025வெளிப்படுத்தின விசேஷம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

டென்னிஸ் ஜான்சன்
குழப்பமானது. சர்ச்சைக்குரியது. கடினமானது. அச்சுறுத்தக்கூடியது. இது போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்தின விசேஷம் உங்கள் சிந்தனைக்கு கொண்டுவந்ததென்றால், இது நீங்கள் மட்டுமல்ல. இருப்பினும், வெளிப்படுத்தலுக்கான தேவனின் நோக்கம், மறைப்பது அல்ல மாறாக வெளிகாட்டுவது, துவண்டு போகச் செய்ய அல்ல மாறாக உற்சாகப்படுத்துவதற்கு. இந்த புத்தகம் இதை வாசிப்பவர்களுக்கு ஆசீர்வாதங்களை வாக்களிக்கிறது. “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.” (வெளிப்படுத்தினத விசேஷம் 1:3).
முதல் நூற்றாண்டின் சபைகளுக்கு முதன்முதலில் வெளிப்படுத்தின விசேஷம் அனுப்பப்பட்ட காட்சியை கற்பனை செய்துப் பாருங்கள்: ஒரு போதகர் நின்று தனக்கு கொடுக்கப்பட்ட சுருளை சத்தம்போட்டு வாசிக்கிறார், அனைவரும் அதை கவனிக்கிறார்கள். அவர்கள் சத்தத்ததோடு வாசிக்கப்படும் இவற்றை கேட்டு, இதன் சத்தியத்தை தனது இருதயத்துக்குள் எடுத்துச்செல்வதின்மூலம், இப்புத்தகத்தின் செய்தியையும் ஆசீர்வாதங்களையும் எளிமையாக அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். எனவே நம்மாலும் இது போன்று முடியும். இவ்வித ஆசீர்வாதங்களை பெறவேண்டுமெனில் இவ்வேதப்புத்தகத்தைப் பற்றி மூன்று காரியங்கள் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.
1.வெளிப்படுத்தின விசேஷம், வன்முறையால் நிறைந்த உலகத்தில் ஆட்டுக்குட்டியானவரின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
முதலாவது வசனம்தான் இப்புத்தகத்தின் தலைப்பு. “இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்.” (1:1). வெளிப்படுத்தலுக்கான கிரேக்க பதம் (apocalypse – திறந்து காண்பித்தல்). நமது வாழ்வின் மேலோட்ட தோற்றம் மற்றும் உலக வரலாறு ஆகியவற்றின் மூலம் அவற்றின் பின்னால் உள்ள மைய காரணத்தை உணர்ந்து அவற்றின் மூலம் விளக்கத்தை பெற இது அவசியம். வெறுமனே இவ்வுலகில் காணப்படும் மேலோட்டமான அறிகுறிகளாகிய யுத்தங்கள், சுற்றுச்சூழல் பேரழிவுகள், பொருளாதார சீர்கேடு, பஞ்சம் மற்றும் பட்டினி, வியாதி மற்றும் மரணங்கள் ஆகியவற்றை பார்ப்பதில் மூலம் மட்டும் இந்த உலகம் ஏன் இந்தளவுக்கு கட்டுப்பாடு இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறியமுடியாது. மாறாக இவற்றிற்கு பின்னால் உள்ள எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற இறையாண்மையுள்ள தேவனை கண்டு அவரே “பழைய பாம்பின் மீதும், வலுசர்ப்பத்தின் மீதும், பிசாசு என்கிற சாத்தான் மீதும்” (12:9, 20:2) அதிகாரமுள்ளவர் என்பதை பார்க்கும்போதுதான் நம்மை சுற்றியுள்ள துன்பங்களையும், இரகசியங்களையும் விளங்கிக்கொள்ளமுடியும்.
இரண்டு விதங்களில் இப்புத்தகம் “இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாக” உள்ளது: இயேசுவே வெளிப்படுத்தும் காரணராகவும், வெளிப்படுத்தலின் நோக்கமாகவும் உள்ளார். முதலாவது, சம்பவிக்க வேண்டிய காரியங்களை தேவன் தமது குமாரனுக்கு ஒப்புவிக்கிறார், பிறகு குமாரன் தனது ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்துகிறார். (வெளி 1:1).
4 மற்றும் 5 வது அதிகாரத்தில் சிங்காசனத்திலிருந்து, தேவன் கிறிஸ்துவுக்கு கொடுக்கும் முத்திரிக்கப்பட்ட புஸ்தகச்சுருளை ஆட்டுக்குட்டியானவர் வாங்குவதின் மூலம் இக்காட்சி காண்பிக்கப்படுகிறது. அதற்கு பிறகு ஒவ்வொரு முத்திரையாக உடைக்கப்பட்டு வரலாற்றில் வெளிப்படும் நிகழ்வுகளை ஆளுகை செய்கிறார். ஆட்டுக்குட்டியானவர் “சகல கோத்திரங்களிலும், பாஷைகளிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலும் இருந்து மக்களை தேவனுக்கென்று மீட்க” மரணத்தைத் தாங்கி வெற்றி பெற்றதால், ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே தேவனின் திட்டங்களை வெளிப்படுத்தவும் செயல்படுத்தவும் பாத்திரமானவர் ( வெளி. 5:5-10 ).
இரண்டாவது, வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவையும் வெளிப்படுத்துகிறது. வெறுமனே மீட்பின் பாடுகள் மூலமாக வெற்றிச்சிறந்த ஆட்டுக்குட்டி மட்டுமல்ல; பூமியில் அவரது சபைகளுக்கு நடுவில் உலாவி, அவற்றின் ஆத்தும ஆரோக்கியத்தை ஆராய்ந்து உறுதியாய் நிற்பவற்றிற்கு ஆசீர்வாதத்தை அருளும் மனுஷகுமாரனாகவும் கிறிஸ்து உள்ளார் (வெளி 1:1-10, 2-3). இயேசு ஆதியிலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஸ்தீரியின் வித்தாகவும், (ஆதி 3:15) தனது பிறப்பில் பழைய பாம்பாகிய சாத்தானால் அச்சுறத்தப்பட்டும், தேவனின் சிங்காசனத்திற்கு உயர்த்தப்பட்டவராகவும் இருக்கிறார். (வெளி 12:1-6). அவரது இரத்தம் நமக்கு எதிராக சாட்சியிடும் சாட்சிகளை நிராகரித்து குற்றம்சாட்டுபவரை வானத்திலிருந்து துரத்தியது (12:7-17). இயேசுவே, வான சேனைகளின் அதிபதியாக, பழைய பாம்பையும், அவனுடைய தூதர்களையும், அவற்றின் பொய்களை நம்பும் அனைவரையும் அழிப்பதற்கு மீண்டும் வருகிறார் (19:15-21). பரலோகத்தின் தூதர்கள், பரிசுத்தவான்கள் மற்றும் அனைத்துப் படைப்புகளாலும், இயேசு பிதாவோடும் அவரது ஆவியானவரோடும் ஆராதிக்கப்படத்தக்கவராய் ஆராதனையின் மையமாக இருக்கிறார் (5:9-14, 11:15-18, 14:2-5, 15:3-4, 19:1-8, 21:2-4, 22-24, 22:3-5).
உலகில் பாவத்தின் நச்சுத்தன்மை வாய்ந்த இவ்வுலகின் காரியங்கள் வெறித்தனமாக ஓடுவதன் கொடூரமான யதார்த்தங்களை வெளிப்படுத்தலின் தரிசனங்கள் சித்தரிப்பதால், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மோதல்களைப் போல அந்தக் குழப்பக் காட்சிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் நாம் “மரங்களை” (மனிதனின் பாவம் மற்றும் அது தூண்டும் தேவனின் கோபத்தின் காட்சிகள்) மையமாகக் கொண்டிருந்தால், வெளிப்படுத்தலின் “காடாகிய” இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தையும் இரக்கத்தையும் நாம் இழந்து விடுவோம்.
2. வெளிப்படுத்தின விசேஷம், பழைய ஏற்பாட்டில் வேரூன்றப்பட்ட “உருவக வார்த்தைகளோடு” பேசுகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் அதன் செய்தியை சத்தமாக வாசிப்பதைக் கேட்பதைப் போன்ற ஒரு சொற்றொடர் வடிவில் பேசுகிறது: தெளிவான காட்சிகள் நம் சிந்தனைகளில் அழியாமல் பதிந்திருக்கும். வேதாகமம் முழுவதும், மேன்மையான பேச்சாளாராகிய தேவன் சில காட்சிகளை காண்பிக்கிறார்: மேய்ப்பன், பாறை, கோட்டை, அக்கினி, கணவன் மற்றும் பல. உருவகங்கள் நிறைந்த சொப்பனங்கள் மூலம் கர்த்தர் யோசேப்பு மற்றும் தானியேல் மூலமாகவும் தனது திட்டங்களை வெளிப்படுத்துகிறார் ( ஆதி. 37, 41 ; தானி. 2, 7 ). ஏசாயா, எசேக்கியேல் மற்றும் சகரியா போன்ற தீர்க்கதரிசிகளுக்கு, கர்த்தர் திரைக்குப் பின்னால், தனது பரலோக நீதிமன்ற அறைக்குள்ளிருந்து ஒரு காட்சியைக் கொடுக்கிறார், இதனால் அவர்கள் தனது மக்களுக்கான தேவனது செய்தியை தெளிவான உருவகங்களில் பார்ப்பதற்கும் அதே போல் வார்த்தைகளில் கேட்பதற்கும் உதவுகிறார். வெளிப்படுத்தலின் உருவகங்களிலும், தேவன் எப்போதும் செய்ததைச் செய்கிறார்.
வெளிப்படுத்தலின் அடையாளங்களை புரிந்துக்கொள்வதற்கு, காட்சியின் வார்த்தைகளை நமக்கு விளக்கப்படுத்தும் ஓர் அகராதி புத்தகம் நமக்கு தேவை. அந்த விளக்கவுரை என்னவென்றால், நூற்றாண்டுகளாக தேவனால் எழுதி நமக்கு கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாடுதான். பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் தனிநபர் மற்றும் நிகழ்வுகள் (படைப்பு, சர்ப்பம், யாத்திராகமம், மோசே , எலியா மற்றும் பல) போன்றவைகளும் அதேபோல் இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனஙகளும்தான், வெளிப்படுத்தின விசேத்தின் உருவகங்களை திறக்கும் சாவிகளாக உள்ளன. ஏனெனில், இயேசு கிறிஸ்து முதல் நூற்றாண்டின் சபைகளுக்கும் இருபத்தோரு நூற்றாண்டின் சபைகளுக்கும் பேசுகிறார், எல்லா தலைமுறைகளிலும் அவரது அனைத்து மக்களும் புரிந்துக்கொள்வதற்கு ஓர் இலக்கண நடைமுறையை பயன்படுத்துகிறார் அதுதான்: “பழைய ஏற்பாட்டின் மீட்பின் நிகழ்வுகளும் தீர்க்கதரிசன உருவகங்களும்.”
3. பாடுகள், புறந்தள்ளுதல், ஏமாற்றுதல், உலக திருப்தி ஆகியவற்றின் மூலம் பிசாசின் தாக்குதல்களுக்கு கீழாக இருக்கும் விசுவாசத்தையும், உண்மையையும் கொண்டுள்ள கிறிஸ்தவர்களை பாதுகாப்பதே இப்புத்தகத்திற்கான கிறிஸ்துவின் நோக்கமாகும்.
விவாதங்களை தூண்டிவிடுவதில் வெளிப்படுத்தல் பெயர் பெற்றது. காலத்தை நிர்ணயிப்பதற்கு எதிராக கிறிஸ்து எச்சரிக்கிறார், நமது பலத்திற்கும் அறிவிற்கும் அப்பால் உள்ள தேவனின் ஆதீன திட்டங்களை நம்மால் அறிய முடியும் என்பதுபோல், இன்றைய அநேக கிறிஸ்தவ கூடுகைகள், யோவானின் தரிசனங்கள் இன்றைய காலத்தோடு எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதைப் பற்றி வாதிட்டுக்கொண்டிருக்கின்றன. கடைசி காலங்களைப் பற்றிய நமது விவாதங்களுக்கு வெடிமருந்தை செலுத்துவதற்கு பதிலாக, மிகவும் முக்கியத்துவமும் நடைமுறை நோக்கங்களுக்காகவும் இப்புத்தகத்தை இயேசு கிறிஸ்து கொடுக்கிறார்: “பிசாசின் தாக்குதலுக்கு கீழாக உள்ள தமது சபையை அதிலிருந்து கிறிஸ்து பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்கிறார்.” என்பதே அந்த நோக்கம்.
சாத்தானின் தந்திரங்களை கண்டறிந்து எதிராளியின் தாக்குதலை எதிர்கொண்டு நாம் பாதுகாக்கப்பட வெளிப்படுத்தல் நம்மை எச்சரிக்கிறது. பயங்கரமான உபத்திரவங்களும், சமுதாய புறக்கணிப்புகளும் கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தை விட்டு விலகச்செய்கிறது. திருச்சபை, கள்ளப்போதகர்களால் வஞ்சிக்கப்பட்டு, உலக செல்வத்தில் திருப்தியடைந்து உலகத்தோடு ஒத்துப்போகும் (வெளி 2-3). யோவானின் தரிசனம் இத்தகைய தாக்குதல்களின் ஆயுதங்களுக்கு உருவங்களை கொடுக்கிறது: மிருகம், கள்ள தீர்க்கதரிசிகள், விபச்சாரி (வெளி 13,17).
ஆசியாவின் ஏழு சபைகளும், வரலாற்றில் உள்ள சபைகளுக்கான ஓர் பிரதிநிதித்துவமாகும். சாத்தானின் கொடிய தந்திரங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாறுவேடங்களை அணிந்துக்கொள்கின்றன. அவனது தாக்குதல்கள் எந்த வடிவில் வந்தாலும் அவன் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டான் (12:7-13, 20:1-3). எனவே, புதிய வானத்திலும் புதிய பூமியிலும் அவருடைய பிரசன்னத்தின் ஆசீர்வாதத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறவர்களாக, அவருடைய வார்த்தையை பற்றிக்கொள்வதற்கான ஞானத்தையும், தைரியத்தையும், உண்மையையும் நம்மில் அதிகரிப்பதற்காகவே வெற்றிச் சிறந்த ஆட்டுக்குட்டியானவர் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை நமக்கு கொடுத்தார் (1:3, 22:7, 14).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.